"சுமார் 2.33 லட்சம் வாக் காளர்கள், நெல்லை மாவட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு!" என்று நெல்லை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சுகுமார் திடீரென அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 01 அன்று நடந்த அனைத்துக்கட்சிகளின் கூட் டத்தில் அறிவித்திருக்கிறார். அவரின் இந்த ஷாக் ட்ரீட் மெண்டால் மாவட்டத்தி லுள்ள வாக்காளர்களும், அர சியல் கட்சிகளும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளில் 2.33 லட்சம் வாக்காளர்கள் நீக் கப்படலாமென்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவித்து அதிர்ச்சி யளித்துள்ளார். அவரது அறிவிப்பின்படி, நெல்லை சட்டமன்றத் தொகுதியில் 47,598(15.56%) பேரும், அம்பையில் 46,461(17.83%) பேரும், பாளையில் 36,213 (12.94%) பேரும், நாங்குநேரியில் 57,567(19.29%) பேரும், ராதாபுரத்தில் 45,625 (16.67%) பேருமாக மொத்தம் 2,33,464 பேர் நீக்கப்பட வாய்ப்பென்ற ஆட்சியர், இதுவரை 97.98% வாக்காளர்களின் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது என்றும் தெரிவித்திருக் கிறார்.
நெல்லை மாவட்டத்தில், கண்டுபிடிக்க இயலாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந் தவர்கள், இறந்தவர்கள், இரட் டைப்பதிவு கொண்டவர்கள் என்று நீக்கப்படவுள்ள மொத்த வாக்காளர்களின் விபரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங் கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பிட்டுப் பார்த்து நீக்கத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென்று தெரிவித்ததுதான் சந்தேகப்பட வைக்கிறது என்கிறார்கள்.
இதுதொடர்பாக நெல்லை டவுன் பகுதி 24வது வார்டு வாக்குச்சாவடி பூத் கமிட்டி முகவர்கள் கூறுகையில், "இந்த வார்டு 7,900 வாக்காளர்களைக் கொண்டது. நாங்கள் மேற் கொண்ட தீவிர விசாரணையில், 900 வாக்காளர்கள் கண்டுபிடிக்க இயலாதவர்கள். 1300 வாக்காளர் கள் வீடு மாறிச்சென்றவர்கள். பொதுவாக நெல்லை, பாளை தொகுதியில், அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர் கள் மிகுதி. பணி மாறுதல்கள் அதிகமுண்டு. அதேபோல் கூலி வேலை செய்யும் மக்கள், வேலைக்கு சென்றால் இரவில் தான் திரும்புவார்கள். இப்படி யானவர்கள் விடுபட்டதுதான் இந்த 1300 பேர். இவர்களில் 400 பேர்களிடம் படிவத்தை கொடுத்து நிரப்பிவாங்கி, பி.எல். ஓ.க்களிடம் சமர்ப்பித்திருக் கிறோம். மற்றவர்களையும் விரை வில் அடையாளம் காண்போம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/08/sira-2025-12-08-17-00-13.jpg)
அம்பை தொகுதியிலுள்ளது மாஞ்சோலை எஸ்டேட். அங் குள்ள தனியார் தேயிலை நிறு வனம் மூடப்பட்டுவிட்டதால் நூற்றுக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், அரசின் உதவியோடு பல்வேறு பகுதியில் குடியமர்ந்திருக்கிறார் கள். இந்நிலையில் மணிமுத்தாறு பேரூராட்சி அ.தி.மு.க. நிர்வாகி களான அம்பை ஒ.செ. விஜய பாலாஜி, ந.செ.க்களான சேரன் மகாதேவியின் பழனிகுமார், மணிமுத்தாறு ராமையா உள்ளிட்ட அ.தி.மு.க.வினர், 26.11.2025 அன்று நெல்லை கலெக்டரிடம் இதுதொடர்பாக மனு கொடுத்திருக்கிறார்கள்.
அந்த மனுவில் "மாஞ் சோலையிலுள்ள 98, 99, 100, 101 மற்றும் 102 உள்ளிட்ட ஐந்து வாக்குச்சாவடிகளை நீக்க வேண்டும். அந்தச் சாவடிகள் 1,980 வாக்காளர்களைக் கொண் டது. குத்தகைக் காலம் முடிந்ததால் அவர்கள் வெளி யேற்றப்பட்டு, பாப் பன்குளம், ரெட்டி யார்பட்டி, அகஸ் தியர்பட்டி என அருகிலுள்ள ஏரியா வில் குடிபோய் விட்டார்கள். ஆனால் அவர் களுக்கு எஸ்.ஐ.ஆர். படிவங் களை விநியோகம் செய்துள்ளது. அந்த விண்ணப்பங்களின் பூர்த்தி செய்யப்பட்ட 890 வாக்காளர் கள் தேர்தல் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. அதனால் இந்த வாக்குச் சாவடிகளையும், இணையதள வாக்குப் பதிவு களையும் நீக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வினரின் இத் திட்டத்தையறிந்து சுதாரித்த மாஞ்சோலை தி.மு.க.வின் அத்தனை பூத் கமிட்டி முக வர்களும் பூத் கமிட்டி தலைவ ரான தி.மு.க.வின் ஸ்டாலின் தலைமையில் அந்தத் தொழிலாளர் குடும்பங்களின் அத்தனை எஸ்.ஐ.ஆர். படிவங்களையும் முறையான அனுமதியுடன் பெற்ற வர்கள், அந்தக் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ள அத்தனை பகுதி களுக்கும் சென்று, படிவங்களை பூர்த்தி செய்து பி.எல்.ஓ.க் களிடம் சமர்ப்பித் திருக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/08/sirb-2025-12-08-17-00-28.jpg)
தொழிலாளர்களின் வாக்குரிமையை மீட்டிருக்கிறார்கள் தி.மு.க. பூத் கமிட்டியினர். அ.தி.மு.க.வினரின் இந்த வாக்குப்பறிப்பு நடவடிக்கை அப்பகுதி மக்களிடம் அதிருப்தியைக் கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட சி.பி.எம்.மின் மா.செ. ஸ்ரீராம், "இப்படி அவசர கோலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்வதே தவறு. 97.98 சதவிகிதம் வாக்காளர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கலெக்டர் சொல்லியுள்ளார். மாவட்டம் முழுவதிலும் 2.33 லட்சம் வாக்காளர்கள் விடுபடுகிறார் கள் என்கிறார். கண்டுபிடிக்க முடியாதவர்கள்னு சொல்றதுல பாளை தொகுதியில் 37,000 வாக்காளர்கள் விடுபடுறாக. அதுல 15,000 இறப்பு, இரட்டை வாக்கு என்றால் அதுபோக 20,000 பேர் கண்டுபிடிக்க முடியாதவங்கன்னு சொல்றாக. வேறிடம் மாறிச்சென்றவர்களை கண்டுபிடிக்கவேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. அதைவிடுத்து அவர்களை நீக்குவது ஜன நாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம்'' என்றார் அழுத்தமாக.
வாக்காளர்களின் வரைவுப் பட்டியல் வெளியீட்டு நாளான டிசம்பர் 14-ல் தேர்தல் கமிசனை புயலும், சூறாவளியும் சேர்ந்தே தாக்கலாம்.
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/sir-2025-12-08-17-00-03.jpg)