பகத்சிங் நினைவுநாளில் 2073 பேர் இரத்த தானம்!

ss

டந்த மார்ச் 23ஆம் தேதி, மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாளில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுக்க நடைபெற்ற இரத்த தான முகாமை அமைச்சர்கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

சென்னையில், வடசென்னை எண்ணூர் நெடுஞ்சாலையிலுள்ள இ.சி.ஐ. மேனிலைப் பள்ளி யில், இ

டந்த மார்ச் 23ஆம் தேதி, மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாளில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுக்க நடைபெற்ற இரத்த தான முகாமை அமைச்சர்கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

சென்னையில், வடசென்னை எண்ணூர் நெடுஞ்சாலையிலுள்ள இ.சி.ஐ. மேனிலைப் பள்ளி யில், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆ.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு, சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் தொடங்கிவைத்தார் கள். இதில் 189 பேர் இரத்த தானம் செய்தனர். மத்திய சென்னையில், கே.எம்.சி. மருத்துவமனையில் இளைஞர் பெருமன்ற மாவட்ட அமைப்பாளர் இம்ரான் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாமை, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் தொடங்கி வைத்தார்.

n

திருச்சி, தில்லை நகர் கி.ஆ.பெ.விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம். செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற முகாமை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் இளைஞர் பெரு மன்ற மாவட்ட செய லாளராக இரா.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற முகாமை சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தொடங்கிவைத்தார். திரு வண்ணாமலை செங்கம் தலைமை மருத்துவ மனையில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாமை, சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

திருப்பூரில், குமார் நகர் கருப்பராயன் கோவில் மண்டபத்தில் இளைஞர் பெருமன்ற மாநில துணை செயலாளர் எஸ் .தெய்வசிகாமணி, மாநகர் மாவட்ட செயலாளர் ஆ.அரவிந்த்குமார் தலைமையில் நடைபெற்ற முகாமை, நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் மாநகர மேயர் நா.தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட செயலாளர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற முகாமினை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுக்க சுமார் 40 இடங்களில், மொத்தம் 2073 பேர் இரத்த தானம் செய்துள்ளதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் க.பாரதி தெரிவித்தார்.

nkn290325
இதையும் படியுங்கள்
Subscribe