ஆருத்ரா, ஹிஜாவ், ஐ.எப்.எஸ். ஆகிய நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பணம் பத்தாயிரம் கோடி மோசடியாக கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளைக்கு துணை போன அமர்பிரசாத் ரெட்டியும் அண்ணாமலையும் இன்னொரு மோசடி நிறுவனத்தின் கொள்ளைக்கு துணை போயிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் பெயர் சுரானா. அதன்மூலம் ஏமாற்றப்பட்ட பொதுமக்களின் பணம் பத்தாயிரத்து இருநூற்றி முப்பத்தெட்டு கோடி ரூபாய். மொத்தம் இருபதாயிரம் கோடி ரூபாய் கொள்ளைக்கு அண்ணாமலையும் அமர்பிரசாத்தும் துணைபுரிந்திருக்கிறார்கள் என அதிர்ச்சித் தகவல் பா.ஜ.க. வட்டாரங்களிலிருந்து வருகிறது.
ஆருத்ரா மோசடியில் போலீசின் பிடியில் சிக்கியிருக்கும் ஹரீஷ், அண்ணாமலைக்கும், அமர்பிரசாத்துக்கும், ஆருத்ரா மோசடிக்கும் என்ன தொடர்பு என தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டார். கைது செய்யப் பட்ட இன்னொரு குற்றவாளியான ரூபேஷ் அண்ணாமலைக்கும், ஆர்.கே. சுரேஷுக்கும் என்ன தொடர்பு, அமர்பிரசாத் ரெட்டி இதில் விளையாடிய மோசடி விளையாட்டு என்ன என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.
ரூபேஷ் சொல்வதை ஹரீஷிடமும், ஹரீஷ் சொல்வதை ரூபேஷிடமும் மாற்றி, மாற்றி விசாரித்து, அண்ணாமலை மற்றும் அமர்பிரசாத் ரெட்டிக்கு எதிராக பல பக்கங்கள் அடங்கிய சாட்சியங்களை போலீசார் தயார் செய் துள்ளனர். அமர் பிரசாத் ரெட்டி தொடர்பாக கிடைத்துள்ள விவரங்கள் அவரைக் கைது செய்ய போதுமானவை என்றாலும், பிரதமரின் தமிழக வருகைக்காக கைது நடவடிக்கைகளில் கொஞ்சம் இடைவெளி விட்டுக் காத்திருக்கிறார்கள் போலீசார். ஆருத்ரா வழக்கில் அமரும், அண்ணா மலையும் வசமாகச் சிக்குகிறார்கள் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
இந்தத் தகவல்களை டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது தம்பிதுரையும், எல்.முருகனும் அவரிடம் பகிர்ந்து கொண்டார்கள். தம்பித்துரை சொன்னதை பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அமித்ஷா, எல்.முருகன், அண்ணாமலை பற்றி புகார் வாசித்தபோது பொங்கி எழுந்துவிட்டார். "அண்ணாமலை போன்ற கிரிமினல்கள் பா.ஜ.க. தலைவ ராக வந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் எத்தனை கிரிமினல்களைக் கொண்டுவந்திருக்கிறீர்கள் தெரியுமா? பா.ஜ.க.வின் இன்றைய நிலைக்கு நீங்களும் ஒரு காரணம்'' என அமித்ஷா பொங்கியெழுந்துவிட்டார்.
அமர்பிரசாத்தின் மோசடிகளை ஆருத்ரா விவகாரத்தில் விசாரிக்க ஆரம்பித்த தமிழக போலீசார், ஆருத்ராவுக்கு முன்பே அண்ணாமலை யின் மோசடிகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட சுரானா கம்பெனி விவகா ரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். சவுக்கார்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்சந்த் சுரானாவுக்கு ‘சுரானா கம்பெனிகள்’ என இருபது கம்பெனிகள் இருக்கிறது. இந்த கம்பெனிகளின் பேரில் பத்தாயிரத்து இருநூற்றி முப்பத்தெட்டு கோடி ரூபாய் வங்கிக் கடனாகப் பெறப்பட்டுள்ளது. ஒரு பெயரில் கடன் வாங்கி, இன்னொரு கம்பெனி பெயரில் மாற்றி, போலியாக பில்களைத் தயாரித்து இந்த மொத்தத் தொகையும் சுருட்டப்பட்டுள்ளது.
கடன் கொடுத்த வங்கிகளுக்கு ஒரு ரூபாய் கூட திருப்பிக் கட்டப்பட வில்லை. இதில் முக்கியமானவர் ராகுல் தினேஷ் சுரானா. இவர் சவுக்கார் பேட்டையில் எந்தக் கணக்கும் இல்லா மல் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நானூறு கிலோ தங்கத்தை வைத்திருந்ததாக சி.பி.ஐ. இவரைப் பிடித்தது. இவரது வங்கி லாக்கர்களி லேயே அதை வைத்து சீல் வைத்து விட்டுச் சென்றது. சிறிது நாள் கழித்து வந்து பார்த்தபோது அதில் நூற்றி இருபது கிலோ தங்கம் காணவில்லை.
இது தொடர்பாக ராகுல் மீது சி.பி.ஐ. வழக்குகள் போட்டது. அத்துடன் இந்த வங்கி மோசடியும் சேரவே, மத்திய அமலாக்கத் துறை இவர் மீது வழக்குப் போட முயன்றது. இந்தத் தருணத்தில் ராகுல்தினேஷ் முப் பது கோடி ரூபாயை அமர் பிரசாத் ரெட்டிக்கு கொடுத் தார். அவருக்கு பா.ஜ.க.வின் மாநில இளைஞர் அணிப் பிரிவு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமலாக்கத் துறை ராகுல் தினேஷை கடந்த ஜூலை மாதம் கைது செய்தது. ராகுல்தினேஷ், அமர் பற்றியும் வினோஜ் பி.செல்வம் அண்ணாமலை பற்றியும் தனது வாக்குமூலத்தில் கூற, வினோஜ் வீட்டுக்கு கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில் இருக்கும் ராகுலுக்கு இதுவரை இரண்டு முறை ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ஆக, “இருபதாயிரம் கோடிக்கு மேல் மக்களை ஏமாற்றிய பணத்தில் கட்டிங் வாங்கி உள்ளார் அண்ணாமலை” என அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கிறார்கள் தமிழக போலீசார்.
இந்த ராகுலின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உயர் நீதி மன்ற நீதியரசர் கடந்த அக்டோபர் மாதம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளார். அதில் வங்கிக் கடன் பத்தாயிரம் கோடியை எப்படியெல்லாம் போலி கம்பெனிகள் மூலம் ஏமாற்றி இருக்கிறார் ராகுல்தினேஷ் என மிகத் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளார். ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா வழக்கில் அளித்த தீர்ப்பை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய நீதியரசர், சுரானா கம்பெனி செய்தது மன்னிக்க முடியாத குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நீதிபதியிடம் ராகுலின் ஜாமீன் அப்ளிகேஷன் வழக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது. அந்தத் தீர்ப்பில் மேலும் பல விசயங்களை நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா வெளிச்சம் போட்டுக் காட்டுவார். பா.ஜ.க.வின் நிர்வாகியாக இருந்த ஹரீஷ் மற்றும் ராகுல் ஆகியோரைப் பற்றி போலீசும் நீதி மன்றங்களும் அளிக்கும் தீர்ப்புகளை, நேர்மையைப் பற்றி அதிகம் பேசும் பா.ஜ.க. எப்படி எதிர்கொள்ளப் போகிறது? அதானி வங்கிக் கடன் களை எப்படி மோசடி செய்தாரோ அதே போல ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சுரானா மூலம் பா.ஜ.க. தலைவர்கள் தமிழகத்தில் மோசடி செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் பா.ஜக வட்டாரத்தினர்.