ரண்டாயிரம் ரூபாய் வாபஸ் பெறப்படும் என்கிற திடீர் அறிவிப்பு அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் அதிர வைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்தே, இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி மூலம் அறிவிக்கச் செய்திருக்கிறார் பிரதமர் மோடி!

கடந்த 2016, நவம்பர் 8-ந்தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கு கிறோம். அதற்கு பதிலாக புதியதாக 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்படும்''’என்றார்.

இந்தியா முழுவதும் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களிட மிருந்த 1000, 500 ரூபாய்களை மாற்றிக் கொள்ள வங்கிகளில் காத்துக் கிடந்தனர் சாமானியர்கள். பணத்தை மாற்றிக் கொள்வதில் மக்கள் பட்ட துயரங் களும், அவஸ்தைகளும் மிக மோச மானவை. நாடு அனுபவித்த அந்த கொடூரமான தாக்குதலை மக்கள் இன்னமும் மறந்துவிடவில்லை.

modi

Advertisment

1000, 500 ரூபாய் நோட்டுகளை அழித்துவிட்டு புதிதாக 2000, 500, 200 ரூபாய்களை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. இந்த 2000 ரூபாய் நோட்டுகளால் கறுப்பு பணப்பதுக்கல் நடக்காதா? என்று தேசமே அப்போது கேட்ட கேள்விக்கு இப்போது வரை பிரதமர் மோடியிடமிருந்து பதிலில்லை.

இந்த நிலையில்தான் தற்போது, "2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுகிறோம். இந்த மாதம் (மே) 23-ந்தேதியிலிருந்து செப்டம்பர் 30, 2023-ந் தேதிக்குள் தங்களிட மிருக்கும் 2000 ரூபாய்களை வங்கியில் கொடுத்து அதற்கு இணையான பணத்தை மாற்றிக் கொள்ளலாம்'’என்று திடீரென அறிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

திரும்பப் பெறப்படுகிறது என அறிவித் தாலும். 2000 ரூபாய் செல்லாதா? என்று மக்களிடம் பீதி கிளம்பியிருக்கிறது. இந்த அறிவிப்பினை கடுமையாக எதிர்க்கின்றன எதிர்க் கட்சிகள்.

டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரி வால், ‘’"முதலில் 2000 ரூபாய் நோட் டுக்களை கொண்டு வந்தபோது, ஊழல் களைத் தடுக்கும். கறுப்புப் பணம் ஒழியும் என்றனர். இப்போது 2000 ரூபாயை திரும்பப் பெறும்போது கறுப்புப்பணப் புழக்கத்தை தடுக்கும் என்கிறார்கள். அப்படியானால் இதுவரை கறுப்புப் பணத்தை இவர்கள் ஒழிக்கவில்லையா? அதனால்தான், பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று சொல் கிறோம்''”என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

dd

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,”"பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதே, பணப்பரிமாற்றத்துக்கு 2000 ரூபாய் நோட்டுகள் சரியானது அல்ல எனச் சொன்னோம். தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. 1000, 500 ரூபாய்களில் கறுப்புப்பணம் பதுக்கப்படுகிறது என்றனர். ஏன், 2000 ரூபாயில் பதுக்கமுடியாதா? என நாங்கள் கேட்டதற்கு பதில் இல்லை. சாமானிய மக்களிடம் 2000 ரூபாய் இல்லை. பெரும் தொழிலதிபர்களிடம் தான் இருக்கிறது. துக்ளக் தர்பாரை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு''’என்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘’"பண மதிப்பிழப்பு நட வடிக்கை முற்றிலும் தோல்வியடைந்தது. அந்த நட வடிக்கையால் மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக் கப்பட்டன. தற்போதைய இந்த நடவடிக்கையால் பொருளாதாரத்தின் மீது அடுத்த தாக்குதலை தொடங்கியிருக்கிறது மத்திய அரசு''’என்கிறார்.

பொருளாதார அறிஞர் ஆனந்த் சீனிவாச னிடம் நாம் பேசியபோது, "இப்படிப்பட்ட துன் புறுத்தல்களை நாட்டு மக்கள் மீது 5 ஆண்டு களுக்கு ஒருமுறை ஏவிக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டு மக்களுக்கு நேரடியாகச் சொன்ன அவர், 2000 ரூபாயை திரும்பப் பெறவிருப்பதை ஏன் மக்கள் முன் தோன்றிச் சொல்லவில்லை? இன்றைக்கு 2000 ரூபாய் வாபஸ் பெறுவதாக சொல்பவர்கள், நாளைக்கு 500 ரூபாய் செல்லாது எனச் சொல்ல மாட்டார்களா? இதெல்லாம் எங்கே போய் முடியப்போகிறதோ?

2000 ரூபாயை எதற்கு கொண்டுவர வேண்டும்? பிறகு எதற்கு வாபஸ் பெறவேண்டும்? கொண்டு வந்தபோதும் பதிலில்லை; திரும்பப் பெறுவதிலும் பதில் இல்லை. ஒரு ஏழை விவ சாயிக்கு செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு அவரது வீட்டிலிருந்து ஒரு 2000 ரூபாய் தாள் கிடைக்கிற தாக வைத்துக் கொள்வோம். அதனை வங்கியில் மாற்ற முடியுமா? முடியாது. அப்போ அந்த ஏழையின் நிலை என்ன? ஆக, 50 வருஷ மானாலும் தன்னிட முள்ள பணத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்காத பிரதமர், இந்திய பொருளாதாரத்தின்மீது தாக்குதல் நடத்துகிறார். பொருளாதாரத்துக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து முடிவு களும் ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் குறி வைத்தே தாக்குகின்றன. அரசியல் பின்னணிகளை கடந்து வேறு எதுவும் இந்த பிரச்சனையில் இல்லை''”என்கிறார் அழுத்தமாக.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நிதி மேலாண்மையில் ஆய்வு செய்துவருபவருமான கே.சந்திரசேகரனிடம் பேசியபோது, ‘"கறுப்புப் பணத்தை மீட்கவும், பயங்கரவாதத்துக்கு செல்லும் நிதியைத் தடுக்கவும், பொருளாதாரத்தில் பணப் புழக்கத்தைக் குறைக்கவும், கள்ள நோட்டுகளை தடுக்கவும்தான் பணமதிப்பிழப்பை செய்ததாக சொன்னார்கள். இந்த 4 நோக்கங்களும் நிறைவேறி யதா? இல்லை. எல்லாவற்றிலுமே தோல்விதான்.

Advertisment

dd

குறிப்பாக, பணப்புழக்கத்தை தடுத்தாலே பதுக்கல் ஒழியும் என்றார்கள். அந்த வகையில் கணக்கிட்டால், பணமதிப்பிழப்பின்போது இந்திய பொருளாதாரத்தில் ரொக்க பணமாக இருந்தது 17 லட்சத்து 74 ஆயிரம் கோடி. இன்றைக்கு இந்த பணப்புழக்கம் இரண்டு மடங்காக அதிகரித்து சுமார் 35 லட்சம் கோடியாக இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. மத்திய அரசின் புள்ளி விபரம் சொல்கிறது. ஆக, பணப்புழக்கத்தை இவர்களால் தடுக்க முடியவில்லை. 2000 ரூபாயை அறிமுகப்படுத்திய போதே, 2000 ரூபாயில்தான் கறுப்புப் பணத்தை எளிதாக பதுக்க முடியுமே? அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன? என்று காங்கிரஸ் கட்சியும் பொருளாதார நிபுணர்களும் கேட்டதற்கு வியாக்கியானம் செய்தார்களே தவிர பதில் இல்லை. தற்போது 2000 ரூபாய் வாபஸ் பெறுவதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம்''’என்கிறார் சந்திரசேகரன்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க.வில் உள்ள அறிவுஜீவிகளிடம் நாம் பேசியபோது, ’"இரண் டாயிரம் நோட்டுகளை அச்சிடுவதை 2018-லேயே நிறுத்தி விட்டது ரிசர்வ் வங்கி. அப்போது 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6 லட்சத்து 73 ஆயிரம் கோடி. கடந்த மார்ச் 31-ந் தேதியின் கணக்கீட்டின்படி புழக்கத் தில் உள்ள 2000 ரூபாய்களின் மதிப்பு 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி. இவைகள் பரிவர்த்தனைகளுக்காக வெளியே வருவதில்லை. காரணம், அந்த 3 லட்சத்து 62 ஆயிரம் கோடியும் சாமானிய மக்களிடம் இல்லை. பெரும் தொழிலதிபர்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் தான் கறுப்புப் பணமாகப் பதுங்கியிருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவில் இது அதிகம்.

இவைகளை வருகிற நாடாளுமன்றத் தேர் தலில் பயன்படுத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதாவது, ஆளும் கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சிகளும் ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுக்கவும், தேர்தல் செலவுகளை கவனிக்கவும்தான் 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டுள்ளன.

அந்த பணத்தை கைப்பற்றத்தான் 2000 ரூபாயை வாபஸ் பெறும் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பருக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இது செல்லாது என அறிவிக்கப்படும். அதனால் 4 மாதத்துக்குள் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை வந்த பிறகு அனைத்து வங்கிகளிலும் ஒருவருடைய ஆதார் எண், பான் எண், மொபைல் எண், முகவரி என அனைத்தும் சேமிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில், பதுக்கப் பட்ட பணம் மாற்றப்படும்போது, 2000 ரூபாயின் கூட்டு மதிப்பு 50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது கணக்கில் டெபாசிட் செய்யும் 2000 ரூபாயின் கூட்டு மதிப்பு 5 லட்சத்தைத் தாண்டினாலோ சம்பந்தப்பட்டவரின் விபரங்கள் அனைத்தும் வருமானவரித்துறைக்கு சென்று விடும்.

ff

உடனே அதிகாரிகள் கண்காணிக் கத் தொடங்குவார்கள். செப்டம்பர் 30-க்கு பிறகு வங்கிக் கணக்கில் வந்துள்ள வரவுகளின் கூட்டுத்தொகையையும், ஏற்கனவே உள்ள வருவாயையும் மதிப்பீடு செய்வார்கள். அதில் தவறுகள் இருந்தால் வருமானவரித்துறையும், மத்திய நிதித்துறையின் பொருளாதார புலனாய்வு பிரிவும் உங்கள் வீடு தேடி வரும். அப்போது தீவிர விசாரணைக்கு உட் படுத்தப்பட்டு கறுப்புப் பண தடுப்புச் சட்டத்தின் படி கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆக, இந்த விவகாரத்தில் கறுப்புப் பணத்தை கண்டறிந்து அதனை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பது (?), நாடாளுமன்ற தேர்தலில் கறுப்புப் பணத்தை செலவழித்து ஜெயிக்க நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு செக் வைப்பது என்கிற 2 விசயங்களுக்காகத்தான் 2000 ரூபாய் வாபஸ் அறிவிப்பு. அந்த வகையில் அக்டோபர் மாதத்திலிருந்து தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளம் என தென்மாநிலங்களில் அரசியல்வாதி கள் மற்றும் தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் மாஸ் ரெய்டு நடத்தத் திட்டமிடப்பட் டுள்ளது. தேர்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த கறுப்புப் பணத்தையும் மீட்பார் பிரதமர் மோடி''’ என்கிறார்கள் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு பேரிடியாக இறங்கவிருக்கிறது இந்த 2000 ரூபாய் வாபஸ் பெறும் திட்டம்!

___________

இறுதிச்சுற்று

ஆளுநரிடம் புகார்!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வாரம் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது தமிழகத்தை அதிரச் செய்தது. இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மே 22-ஆம் தேதி திங்கள்கிழமை பேரணிôயக சென்று சந்தித்து, தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போதைப்பொருள் புழக்கம், தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், தி.மு.க.வினரின் 30,000 கோடி ரூபாய் சொத்து குறித்தும் புகார் மனு அளித்துள்ளார்.

குற்றப்பத்திரிகை!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். அவர் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த காலத்தில், தன் வரு மானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவரது தொகுதி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்பதால், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி. அன்பழகன், மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்டு அவரது பெயரிலும், உறவினர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக 11 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதைக் கண்டறிந்தனர். எனினும் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகாமலே இருந்துவந்தது. இந்நிலையில் மே 22-ஆம் தேதி திங்களன்று, தர்மபுரி நீதிமன்றத் தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

-கீரன்

அப்துல் வகாப்புக்கு ஆப்பு!

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வு மான அப்துல்வகாப் மா.செ. பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வான டி.பி.எம்.மைதீன் கானை நியமித்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மேயராக தேர்ந்தெடுக் கப்பட்ட மேயர் சரவணன் தனக்கு ஒத்துவராததால் மேயரை மாற்றும் படி தனது ஆதரவு கவுன்சிலர் களைத் தூண்டிவிட்டுக் கடிதம் கொடுக்கச் செய்தார். பின், கவுன்சிலர்களை அறிவாலயம் அனுப்பி மேயரை மாற்றும்படி அவர்கள் மூலம் வலியுறுத்தச் செய்தார். அப்போதே இதுபோன்ற செயல்களை நிறுத்திக் கொள்ளும் படி மா.செ. அப்துல்வகாப்பை கட்சித்தலைமை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளதாம்.

அதன்பின்னரும் ஈரோடு தேர்தலின்போது கவுன்சிலர்களை ஈரோட்டில் அமைச்சர் கே.என் நேருவை சந்திக்கச் செய்து மேயர் மாற்றல் கோரிக்கையை வைத்தார். திருச்சிக்கும் கவுன்சிலர்களை அனுப்பி நேருவை மறுபடியும் சந்திக்க வைத்திருக்கிறார்.

நெல்லை பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி நயினார் நாகேந்திரன் வாங்கிய பெரிய மதிப்புள்ள நிலத்தின் முக்கிய வில்லங்கத்தை முடித்துக் கொடுத்தது எல்லாமும் தலை மையின் கவனத்துக்குப் போக அப்துல்வகாப் மா.செ. பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக் கிறார்.

அதேபோல மதுரை மாநகர தி.மு.க. பிரமுகரும். பி.டி.ஆர். ஆதரவாளருமான மிசா பாண்டியன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக் கிறார். (விரிவான செய்தி 18-ஆம் பக்கம்).

-பி.சிவன்