Advertisment

2000 கோடி! எடப்பாடியிடம் கணக்கு கேட்கும் பா.ஜ.க!

eps-amitsha

மிழகத் தேர்தல்களம் அடுத்தகட்டமாக பண விநியோகத்துக்கு தயாராகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ஜ.க. தேர்தல் நிதியாக 2000 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. இந்த 2000 கோடி ரூபாய் பற்றிய கணக்கு வழக்குகளைத்தான் டெல்லிக்குச் சென்ற எடப்பாடி, அமித்ஷாவிடம் கொடுத்துள்ளார். 

Advertisment


எடப்பாடி மதுரையிலிருந்து டெல்லிக்கு அவசர அவசரமாக சென்றார். எப்பொழுதும் அவருடன் டெல்லிக்குப் பயணமாகும் தங்கமணி, வேலுமணி,  இல்லாமல் தனியாக அமித்ஷாவை சந்தித்தார். அவருடன் சென்னையைச் சேர்ந்த ஒரு மார்வாடி மட்டும் சென்றார். இந்த சந்திப்பில் அமித்ஷா, ஓ.பி.எஸ்., சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களை அ.தி.மு.க. அணிக்குள் கொண்டுவராதது பற்றி எடப் பாடியிடம் வருத்தப்பட்டார். “"எல்லாம் உங்களது விருப்பப்படியே  நடக்கிறது. இதில் தோல்வி வந்தால் நீங்கள்தான் பொறுப்பு'’எனச்சொன்னார் அமித்ஷா. பா.ஜ.க.விற்கு 55 தொகுதிகள். அதில் டி.டி.வி. உட்பட புது

மிழகத் தேர்தல்களம் அடுத்தகட்டமாக பண விநியோகத்துக்கு தயாராகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ஜ.க. தேர்தல் நிதியாக 2000 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. இந்த 2000 கோடி ரூபாய் பற்றிய கணக்கு வழக்குகளைத்தான் டெல்லிக்குச் சென்ற எடப்பாடி, அமித்ஷாவிடம் கொடுத்துள்ளார். 

Advertisment


எடப்பாடி மதுரையிலிருந்து டெல்லிக்கு அவசர அவசரமாக சென்றார். எப்பொழுதும் அவருடன் டெல்லிக்குப் பயணமாகும் தங்கமணி, வேலுமணி,  இல்லாமல் தனியாக அமித்ஷாவை சந்தித்தார். அவருடன் சென்னையைச் சேர்ந்த ஒரு மார்வாடி மட்டும் சென்றார். இந்த சந்திப்பில் அமித்ஷா, ஓ.பி.எஸ்., சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களை அ.தி.மு.க. அணிக்குள் கொண்டுவராதது பற்றி எடப் பாடியிடம் வருத்தப்பட்டார். “"எல்லாம் உங்களது விருப்பப்படியே  நடக்கிறது. இதில் தோல்வி வந்தால் நீங்கள்தான் பொறுப்பு'’எனச்சொன்னார் அமித்ஷா. பா.ஜ.க.விற்கு 55 தொகுதிகள். அதில் டி.டி.வி. உட்பட புதுக் கட்சிகளைப் பார்த்துக்கொள் ளுங்கள் என பேசி முடிக்கப் பட்டது. அ.தி. மு.க.விற்கு பா.ம.க. அன்பு மணி, பா.ம.க. ராமதாஸ் ஆகிய கட்சிகள் உட் பட சில கட்சி களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அளிக்கப்பட்டது. 

Advertisment

எடப்பாடி முன்னிலையிலேயே நடிகர் விஜய்யுடன் பா.ஜ.க. கூட்டணிக்கு வாருங்கள் என ஒரு மினி பேச்சுவார்த்தையையும் அமித்ஷா நடத்தியுள்ளார். காங்கிரஸ் எங்களுடன் வரும் என விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வரவில்லையென்றால் அடுத்தது என்ன செய்வது என்பதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என விஜய் தரப்பிலிருந்து பேசியவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். பேச்சு வார்த்தையை முடித்த அமித்ஷா இரண்டு ஆப்சன்களில் ஆய்வு செய்துள்ளார். விஜய் வந்தால் எத்தனை தொகுதிகள் கொடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. 25 தொகுதிகள் வரை அவர்கள் கேட்கும் தொகுதிகளைத் தரலாம் என எடப்பாடியும் அமித்ஷாவும் முடிவு செய்தார்கள். இந்தமுறை ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை செலவுசெய்ய திட்டம் வகுக்கப்பட்டது. அதானி, அம்பானி, ஸ்டெர்லைட் மற்றும் ஒன்றிய அரசின் லிஸ்ட்டில் உள்ள கம்பெனிகள் என மொத்தம் 2000 கோடி எடப்பாடி கையில் வந்து சேர்ந்துவிட்டதா என அமித்ஷா செக் செய்தார். பணமெல்லாம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருவதற்கு முன்பே அந்தந்த தொகுதி களுக்கு போய் சேர்ந்துவிட வேண்டும் என்று பேசப்பட்டது. 

விதிமுறைகள் வந்துவிட்டால் இப்பொழுது ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க. மிக உஷாராகிவிடும். முன்பு கேரளாவின் பாலக்காட்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. அங்கு பண விநியோகம் செய்ய, அங்குள்ள கம்யூனிஸ்ட்கள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் கமிஷனிடம் போட்டுக்கொடுத்தது போல் தி.மு.க.வினர் செய்துவிடுவார்கள். அதனால் பணத்தை முன்கூட்டியே தொகுதிகளுக்கு அனுப்பிவிடவேண்டும் என அமித்ஷா அட்வைஸ் செய்தார். அதற்குப் பதிலளித்த எடப்பாடி இம்முறை மக்களுக்கு நலத்திட்ட பணிகள் மூலமாக பணத்தை தி.மு.க. வழங்கியுள்ளது. அதுபோல பெரிய கூட்டுறவு ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கும் டோக்கன்களை வழங்கலாம் என ஒரு யோசனை சொன்னார். ‘செய்வது எதுவோ அதை சரியாக செய்யுங்கள்’ என சொன்ன அமித்ஷா மேலும், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியிலுள்ள பெரிய சிக்கலே, காங்கிரஸ் கேரள தேர்தலுக்கு தி.மு.க.விடம் பணத்தை எதிர்பார்க்கிறது. தி.மு.க. கொடுக்க மறுக்கிறது. விஜய் கட்சியின் சார்பாக ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டின் மூலமாக பணம் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதான் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிப் பேச்சின் இழுபறிக்குக் காரணம் என அமித்ஷா விளக்கினார். ஒருவேளை தி.மு.க.வும் காங்கிரசும் முரண்பட்டுப் போய்விட்டால் விஜய் நம்முடன் வருவார். அப்படி வராவிட்டால் இந்த 2000 கோடியிலிருந்து விஜய்க்கு த.வெ.க.வின் தேர்தல் செலவுகளுக்கு என நீங்கள் பணம் கொடுங்கள். இந்தமுறை அவரது பிரச்சாரம் தி.மு.க.வுக்கு எதிராக பலமாக இருக்க வேண்டும். விஜய் தி.மு.க.வின் வாக்குகளைப் பிரிப்பார். அவர் பிரிக்கும் வாக்குகள்தான் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றியடைய செய்யும் வாக்குகள் என அமித்ஷா கூறியுள்ளார். 

அதேபோல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமைந்தவுடன் விஜய் தரப்புக்கு போன் செய்த எடப்பாடி, அவர் அ.தி.மு.க. கூட்டணிக்கு வருகிறாரா என செக் செய்தார். அத்துடன் விஜய் கட்சியின் தேர்தல் செலவுகளுக்கு அமித்ஷா சொன்னபடி பெரும் தொகை அளிப்பதாக உறுதியளித்தார். அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா ஆக முடியும் என தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி. ஆகமொத்தம் தமிழகத் தேர்தலில் மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கப்போகிறது. “"சாதாரணமாக எந்தக் கட்சி வேட்பாளரும் 20 கோடி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியாது. மொத்தத்தில் தொகுதிக்கு 50லிருந்து 150 கோடிவரை புழங்கும் பணக்காரத் தேர்தலே, வரும் தமிழக தேர்தல்' என்கிறார்கள்’அரசியல் பார்வையாளர்கள். 

eps-amitshabox

nkn070326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe