தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய அரசு அமைந்து செயல்படத் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவரை தேர்ந்தெடுக்க மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்?
கே.எஸ்.அழகிரி: ஜனநாயக முறைப்படி நடக்கிறது. அதுதான் காரணம். தமிழகத்தில் வேறு எந்த கட்சியிலும் இப்படி நடப்பதில்லை. எங்கள் கட்சியில் மட்டும்தான் இரண்டு பார்வையாளர்கள் வந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி, அனைவ ரிடமும் கடிதம் பெற்று தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயக செயல். இதற்கு கால தாமதம் ஏற்படுவது இயற்கைதான்.
காங்கிரஸில் கோஷ்டிகள் உயிர்ப்புடன் இருப்பதைத்தானே இது காட்டுகிறது?
கே.எஸ்.அழகிரி: இல்லை... நான் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸில் எந்த ஒழுங்கீனச் செயலும் நடக்கவில்லை, கூச்சல் குழப்பங்கள் இல்லை. அ.தி.மு.க.வில் இரண்டு அணிகளுக்கிடையே வெளிப்படையாக பிரச்சினை நடந்தது. அதுபோல எங்கள் கட்சியில் இல்லை. முன்னெப்போதையும் விட இப்போது தமிழக காங்கிரஸ் கட்டுக்கோப்போடு இருக்கிறது. அதனால் தான் 72% வெற்றியை பெறமுடிந்தது.
மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதல்வர் பதவி ஏற்றிருக்கிறார். அவரது செயல்பாடுகள் எப்படி?
கே.எஸ்.அழகிரி: ஸ்டாலின், தனது ஒவ்வொரு அடியையும் அளந்து வைக்கிறார். அவரது தொடக்கம் மிகச்சிறப்பாக இருக்கிறது. இது தொடரும் என்று நம்புகிறேன்.
காமராஜர் ஆட்சி என்ற முழக்க மெல்லாம் ஓய்ந்துவிட்டதா?
கே.எஸ்.அழகிரி: நான் தலைவர் பதவியேற்றதிலிருந்து எங்கள் இலக்கு மீண்டும் காமராஜர் ஆட்ச

கே.எஸ்.அழகிரி: நான் தலைவர் பதவியேற்றதிலிருந்து எங்கள் இலக்கு மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பதைச் சொல்லி வருகிறேன். உட்கட்சிக் கூட்டங்களிலெல்லாம் அதை விவாதிக்கிறோம். இப்போது 18 இடங்களில் வென்றுள்ளோம். இறுதி இலக்கு மீண்டும் காமராஜர் ஆட்சி. அதற்காக உழைப்போம்.
கொரோனா பரவலைக் கட்டுப் படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் எப்படி?
கே.எஸ்.அழகிரி: மாநில அளவில் இந்த ஆட்சி ஒரு கைக்குழந்தை. இப்போது தான் பிறந்திருக்கிறது. ஒரு இளைஞனின் எழுச்சியை எதிர்பார்க்க முடியாது. ஆரம்பம் நன்றாக இருக்கிறது, இன்னும் செயல்படுவார்கள்.
ஆனால் மத்திய அரசு இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதில் மாபெரும் தோல்வியடைந்திருக்கிறது. முதல் அலை வந்தபோது அனுபவமில்லை என்று சொல்லலாம். இந்த ஓராண்டு அனுபவத்தில் எவ்வளவோ செய்தி ருக்கலாம். தவறிவிட்டது. உள்ளூர் மக்களுக்கு தடுப்பூசியில்லாதபோது ஆறு கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். இது கவனக்குறைவில்லை, அலட்சியம். வெற்றி பெற்றால் பேர் சொல்லிக்கொள்ளும் மோடி, தோல்விக்கும் பொறுப்பேற்க வேண்டும். தனக்கு சம்மந்தமே இல்லாததுபோல் நடந்துகொள்கிறார். நம்மிடம் பல சிறந்த பொதுத்துறை நிறுவனங் கள் இருக்கும்பொழுது, தன்னுடைய நண்பர்கள் இருவருக்கு தடுப்பூசி தயாரிக்கும் அனுமதியை அளித்தார். அவர்கள் இக்கட்டான நிலைமையில் கூடலாப நோக்கத்தோடு விலையை ஏற்றுகிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம்.
தமிழகத்தில் பா.ஜ.க. நான்கு இடங் களில் வென்று சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறது. பா.ஜ.க. தமிழகத்தில் வளர்கிறதா?
கே.எஸ்.அழகிரி: மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு தேசிய கட்சி, பணபலம் உள்ள ஒரு கட்சி, நான்கு இடங்களில் ஜெயித்ததை வளர்ச்சி என்று எப்படிச் சொல்ல முடியும்? காங்கிரஸ் நான்கு இடங்களில் வென்றிருந்தால், காங்கிரஸ் ஒழிந்துவிட்டது என்று சொல்வீர்கள். பா.ஜ.க. வுக்கு மட்டும் இதை வளர்ச்சி என்று எப்படி சொல்ல முடியும்?
கேரளாவில் காங்கிரஸை தோற்கடித்து கம்யூனிஸ்டுகள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி யிருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் ஒரு இடம்கூட காங்கிரசுக்கு கிடைக்க வில்லை. புதுச்சேரி யிலும் ஆட்சி யில்லை. தேசிய அளவில் காங் கிரஸ் தேய் கிறதா?
கே.எஸ்.அழகிரி: 1967-இல் காங்கிரஸ் பல மாநிலங்களில் தோல்வியடைந்தது. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் வென்றுள்ளோம். அன்னை சோனியாகாந்தியின் வழிகாட்டுதலில் பத்து ஆண்டுகள் ஆட்சி நடத்தினோம். இந்த இயக்கம்தான் தேசம் முழுவதும் கிராமங்கள் வரை பரவியுள்ள இயக்கம், அனைத்து மக்களுக் குமான இயக்கம். காங்கிரஸ் பேரியக்கம் ஒரு போதும் தேயாது. மீண்டும் வெற்றி பெறுவோம்.
தமிழக தேர்தலில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி?
கே.எஸ்.அழகிரி: நாம் தமிழர் மூன்றாவது இடம் என்பதே ஒரு பிழையான கணக்கு. 234 தொகுதிகளில் போட்டியிட்டு அவர்கள் இந்த வாக்கு சதவிகிதத்தை பெற்றிருக்கிறார்கள். நாங்கள் 25 தொகுதிகளில்தான் போட்டியிட் டோம். தி.மு.க.வே குறைவான தொகுதி களில்தான் போட்டியிட்டது. அதுபோல மக்கள் நீதி மய்யம், ஆரம்பத்தில் ஒரு மதச்சார்பற்ற கட்சியாக செயல்படும் என்ற நம்பிக்கையை அளித்தது. காலப்போக்கில் மதச்சார்பற்ற அணி யான எங்கள் அணியின் வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாக மாறியது. ஆனாலும் கமல்ஹாசன் என்ற நடிகரை பார்க்கக் கூடிய கூட்டம் வாக்கு களாக மாறவில்லை. தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு எப்போதுமே ஒரு கவனம் இருக்கும். அந்த இடத்துக்கு பலரும் வருவார்கள் போவார் கள். இவர்களும் அப்படித்தான். மற்றபடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமாட்டார்கள்.
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி, தமிழக கோவில்களை அரசிடம் இருந்து மீட்க வேண்டும் என்று ஒரு கோஷத்தை வைக்கிறார். அது சரியா?
கே.எஸ்.அழகிரி: கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் ஒடுக்கப்பட்டவர்கள் அங்கே நுழையமுடிந்தது. காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒரு தலித் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்து, கோவில்களில் பரிவட்டம் கட்டப்பட்டு முழு மரியாதையை பெற்றார். ஜக்கிக்கு இந்தப் புரட்சியும் தெரியாது, வரலாறும் தெரியாது.
எழுவர் விடுதலையை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்குக் கடிதம் அனுப்பியதில் உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். சோனியா காந்தியின் குடும்பம் அவர்களை மன்னித்தாலும் நீங்கள் எதிர்க்கக் காரணம் என்ன?
கே.எஸ்.அழகிரி: இப்போதும் சொல்கிறேன், அவர்களை நீதிமன்றம் விடுவித்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அரசியல் அழுத்தம் கொடுப்பது சரியல்ல. அப்படிப் பார்த்தால் அவர்கள் மட்டுமா தமிழர்கள்? தமிழக சிறைகளில் இருநூறுக்கும் மேற் பட்ட கைதிகள் இரு பத்தி ஐந்து ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா? இந்த ஏழு பேருக்குக் குரல் கொடுப்பவர்கள் ஏன் அவர்களுக்குக் கொடுப்பதில்லை?
பேரறிவாளன் போன்றோர் தங்கள் வயதில் பெரும்பகுதியை சிறையில் கழித்துவிட்டார்கள். ஆயுள் தண்டனையைத் தாண்டிய காலம் அது. அப்படியும் அவர்களை விடுவிக்கக்கூடாதா? இந்த விவகாரத்தில் காங்கிரஸின் குரல் மட்டும் தனியாக ஒலிப்பதேன்?
கே.எஸ்.அழகிரி: நியாயத்தை பேசும்போது தனியாக நின்றால் என்ன, கூட்டமாக நின்றால் என்ன? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 19 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டார்கள். அதை காங்கிரஸ் எதிர்க்க வில்லை. இவர்களை நீதி மன்றம் விடுவித்தால் ஏற்றுக் கொள்கிறோம். தமிழர்கள் என்பதற்காக வெல்லாம் விடுவிக்கக்கூடாது. தமிழர் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள எத்தனையோ பெரியவர்கள் உண்டு. இவர்களை ஏன் முன் னிலைப்படுத்தவேண்டும்?
முதல்வர் ஸ்டாலின் மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு முப்பது நாட்கள் விடுமுறை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். விடுதலை கோரி கடிதம் அனுப்பியுள்ளார். இதே முனைப்பு தொடர்ந்தால் கூட்டணியில் பாதிப்பு வருமா?
கே.எஸ்.அழகிரி: வராது... அவரவர் கருத்தை வெளிப்படுத்துகிறோம். திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே இதைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி செயல்படுகிறார்கள். எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. ஆனால் அது கூட்டணியை பாதிக்காது.
-சந்திப்பு: வசந்த்