திருச்சியில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி காலை தில்லைநகர் பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றிவரும் அருண்பாபு (36) என்பவரை சில மர்ம நபர்கள் ஓடவிட்டு வெட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் சில வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினார்.
யார் இந்த அருண்? ஏன் இவரை வெட்டினார்கள் என்று விசாரித்ததில், அப்பாவுக்கும் மகளுக்கும் இடைப்பட்ட சொத்துத் தகராறு விவகாரம் வெளிவந்தது.
திருச்சி தில்லைநகரிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் அருண்பாபு மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு உடற்பயிற்சி செய்வதற்காக வந்த திருச்சி செவன்ஹில்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பாலன் என்பவரின் மகள் சரண்யா (36) உடன் பழக்கமானதில், சரண்யாவுக்கு பாடிகார்டு ஆகி யுள்ளார் அருண்.
அருண்மீதான தாக்குதலுக்கான காரணம் குறித்து சரண்யாவே நம்மிடம் கூறு கிறார். "எனக்கு 2000-ம் ஆண் டில், 16 வய திலேயே எனது உறவுக்காரரான பத்ரி நாராயணன் என்பவருடன் திருமணம் நடந்தது. 5 ஆண்டுகள் மட்டுமே அவர் என்னுடன் வாழ்ந்துவிட்டு பிரிந்து சென்றார். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். திருச்சியில் பல அபார்ட்மெண்டுகள் என் பெயரில் உள்ளன. அப்பாவின் உதவியாளராகப் பணியாற்றும் கவிதாவோடு அப்பாவுக்கு இருந்த நெருங்கிய தொடர்புதான் பிரச்சினைகளுக்கு தொடக்கப் புள்ளி. அப்பாவின் மூலம் கவிதாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த ஆண் குழந்தைக்கு அப்பாவின் சொத்துக்கள் சேர்வதற்கு, அப்பாவின் ஒரே வாரிசான நான் இடையூறாக இருப்பதால் என்னை ஒழித்துக்கட்ட ப்ளான் பண்ணினார்கள்.
கொலை செய்வதற்குப் பதிலாக என்னை மனநலம் பாதிக்கப்பட்டவராகக் காட்டுவதற்காக, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் என்னை மனநல மருத்துவமனையில் சேர்க்க முயன்றபோது அருணிடம் நான் தெரிவிக்க, அதிலிருந்து தப்பினேன். உடனே அருணின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்த அப்பா, அவரது செல்வாக்கின் மூலம் அருணைக் கைது செய்ய வைத்தார். அருணை மீட்பதற்காக அப்பாவிடம் பேசியபோது, "உனக்கும் இந்த சொத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி கொடுத்து விடு' என்று கேட்டார். நான் பதிலுக்கு "எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள், நான் எழுதி கொடுத்துவிட்டு போகிறேன்' என்று சொன்னேன். அடுத்து, திருச்சி வியாபாரிகள் சங்க பிரமுகர் மூலம் என்னைச் சரிகட்டப் பார்த்தார், முடியவில்லை.
பின்னர் 2019, டிசம்பர் மாதம் 29-ம் தேதி, என் வீட்டினுள் அப்பாவுடன் சேர்ந்து அத்துமீறி நுழைந்த சிலர், வலுக்கட்டாயமாக எனக்கு கழுத்திலும், கைகளிலும் மயக்க ஊசி போட்டு திருச்சி தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநலக் காப்பகத்தில் சேர்த்தனர். அங்கேயே 5 நாட்கள்வரை என்னை அடித்து மிரட்டி சிறைவைத்து, போதைக்கு அடிமையானதாக என்மீது கதை கட்டினார் அப்பா. பின்னர் அங்கிருந்து மீண்டாலும், மீண்டும் 2020 ஜனவரி 7 முதல் செப்டம்பர் 10-ம் தேதிவரை பெங்களுர் கடம்பம்ஸ் என்ற மனநலக் காப்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தேன். என் நிலையறிந்து மருத்துவர்கள் உதவியதால் அங்கிருந்து வெளியேறினேன். பின்னர் என்னை மனநல ஆலோசகர் ஷாலினி என்பவரிடம் அப்பா அழைத்துச்சென்றார். என்னை கொடுமைப்படுத்துவது அறிந்து அப்பாவைக் கடுமையாகத் திட்டி அனுப்பினார். ஷாலினி. அவரது செல்நம்பரை என்னிடம் கொடுத்து, உதவி தேவையென்றால் அழைக்கும்படி கூறினார்.
எனக்கு கடுமையான பாதுகாப்பைப் போட்டிருந்த நிலையில், அப்பாவுக்குத் தெரியாமல் மீண்டும் டாக்டர் ஷாலினியைச் சந்திக்கச் சென்றேன். இதைத் தெரிந்துகொண்ட அப்பா, வீட்டிலுள்ள நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக என்மீது போலீசில் புகாரளிக்க, வழக்கறி ஞர் உதவியோடு காவல் நிலையத்துக்கு வந்த என்னை, ஆய்வாளர் தயாளன், அப்பாவுடன் அனுப்பாமல், காஜாமலையிலுள்ள பெண்கள் விடுதியில் தங்கவைத்தார். பின்னர் அங்கிருந்து 5 நாட்களில் சென்னைக்குச் சென்றுவிட்டேன். இப்படியாக பிரச்சினை தொடர்ந்ததில், கடந்த 23-ம் தேதி, அப்பாவின் தூண்டுதலில் அருண்பாபு மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட் டது. உயிர்தப்பிய அருண், 57 தையல்கள் போடப்பட்டு ஓய்விலிருக்கிறார்'' என்றார்.
தற்போது, அருண்பாபுவை வெட்ட வந்த 5 பேர் கொண்ட கும்பல் மீதும் சரண்யாவின் தந்தை பாலன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முகமது சைப், பார்த்திபன், அரவிந்தன் உள் ளிட்ட 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதுகுறித்து செவன் ஹில்ஸ் பாலன் வட்டாரத்தில் விசாரித்த போது, பாலன் இப்பிரச்சனை யை காவல் நிலையத்துக்குக் கொண்டுபோன போதெல்லாம் அருண்பாபு, லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும், இறுதியில் 50 லட்சம் வரை அருண்பாபு கேட்ட தாகவும் கூறுகிறார்கள்.
இன்னொருபுறம், தன்னுடைய 200 கோடி ரூபாய் சொத்துக்கும் ஒரே வாரிசான மகள் சரண்யா, பிரிந்து வாழ்ந்தாலும் பரவா யில்லை, விவாகரத்து வாங்கி வேறொரு திருமணம் செய்து சொத்து வெளியே போயிடக்கூடாது என்பதில் பாலன் கவனமாய் இருந் திருக்கிறார். அருண் பாபுவையும் தீர்த்துக் கட்ட முடிவெடுத் தார். இவ்வழக்கில் தலைமறைவாகி யுள்ள பாலனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக நுண்ணறிவுபிரிவு உதவி ஆணையர் தெரிவித்தார்.