துரையை சேர்ந்த அ.தி.மு.க. மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு தனது அபார்ட்மெண்டில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்ததை நோட்டமிட்ட கும்பல், மொத்த பணத்தையும் லாக்கரிலிருந்து கடந்த ஜூன் 22ஆம் தேதி கொள்ளையடித்து சென்ற விவகாரம் ரவிக்குமார் என்பவரின் சமூக வலைத்தளப் பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரம் நக்கீரனில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் பூதாகரமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தும் இதுகுறித்து மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு  அதிகாரப்பூர்வமாக போலீசில் 

புகாரளிக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாஜியின் நெருங்கிய உறவினரும் அவரது பினாமியென்று சொல்லப்படுபவருமான ஜெயசந்திரனை, கொள்ளை நடந்த அபார்ட்மெண்ட் வீட்டின் உரிமையாளராகக் காண்பித்து, ரூபாய் 42 லட்சம் கொள்ளைபோனதாக அவர்மூலம் புகார் கொடுக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்டதாக பிரகாஷ், யோகேஷ், விவேக் ஆனந்த மற்றும் செல்லூர் ராஜுவின் கார் டிரைவர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்து, அதிகாலை 6 மணியளவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பத்திரிகைகளுக்கு தெரிவிக்காமல் அவசரஅவசரமாக சிறையிலடைத்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், அ.தி.மு.க.வின் நிர்வாகி ஒருவர் நம்மிடம், "சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நாளில் முருக பக்தர்கள் மாநாட்டில் செல்லூர் ராஜுவோடு கடம்பூர் ராஜு, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட இருக்கும்போது இந்த சம்பவம் குறித்து அவருக்கு போன் வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதே அருகிலிருந்த அ.தி.மு.க. மாஜி அமைச்சர்களிடம்  விசயத்தை சொல்லாமல் எங்களின் எதிரி கட்சியான தி.மு.க.வின் முக்கிய தலைவர்களிடம் விசயத்தை கொண்டு சென்றது ஏன்? என்று அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி, செல்லூர் ராஜூவிடம் விசாரித்திருக்கிறார். அதற்கு அவரோ, "இல்ல தலைவரே, போலீஸில் புகார் கொடுத்தேன், அவ்வளவுதான். தி.மு.க.வில் யாரையும் போய் பார்க்கவில்லை. மற்றபடி இவ்வளவு பணம் என்று பத்திரிகையில் வருவதெல்லாம் பொய்' என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, "அப்புறம் ஏன் தி.மு.க. அமைச்சரிடம் உதவி கேட்டு கெஞ்சியிருக்கிற? எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? அப்போதே ஏன் என்னிடம் விசயத்தை சொல்ல வில்லை? உன் புத்தி ஏன் இப்படி போகுது? உன்னை ஏதோ பெரிசா நினைத்திருந்தேன், இல்லயில்ல நான் வெறும் தெர்மாகூல்தான் என்பதை நிரூபிச்சிட்ட. என்னை சமாதானம் செய்ய இங்க வந்திடாத' என்று ஆவேசமாக போனை கட் செய்திருக்கிறார். 

sellur1

இந்நிலையில், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக இறந்தவரின் வீட்டிற்கு அ.தி.மு.க. சார்பில் ஆறுதல் சொல்வதற்கு ஆர்.பி. உதயகுமாரும், ராஜன் செல்லப்பா வும் செல்லும்படி மேலிடத்தி லிருந்து கட்டளை வர, அவர் களோ, "தலைவரே செல்லூராரை யும்...' என்று இழுக்க, வேண்டவே வேண்டாமென்று பதில் வந்தி ருக்கிறது. அடுத்து நடந்த போராட்டத்திலும் செல்லூர் ராஜூ கலந்துகொள்ளவில்லை. இதை சமாளிக்கத்தான் அன்றைய தினம் செல்லூர் ராஜு பேட்டி கொடுத்திருக்கிறார். கொள்ளை தொடர்பாக கைது செய்யபட்ட செல்லூர் ராஜுவின் 'முன்னாள் டிரைவர்' சுரேஷ் என்று எப்.ஐ. ஆரில் சொல்லப்படுவது முற்றிலும் பொய். அவர் கைதாகும் வரை அவருக்கு ஆஸ்தான டிரைவ ராகவே இருந்தார். மேலும், முதலில் 10 நபர்கள் என்று செய்தி வந்தது. ஆனால் கைதானது 4 நபர்கள் மட்டுமே. மற்ற நபர்களை எஃப்.ஐ.ஆரிலிருந்து எடுத்ததாக சொல்லப்படு கிறது. தற்போதைய நிலவரப்படி செல்லூர் ராஜுவை அ.தி.மு.க. தலைமை ஓரங்கட்டத் தயாராகி வருகிறது என்பது மட்டும் தெரிகிறது. மேலும், தி.மு.க.விடம், இதுதான் என் மொத்த கையிருப்பு, அ.தி.மு.க.வில் நிலைமை சரியில்லை. நான் தி.மு.க.விற்குகூட வந்துவிடு கிறேன், என் பணத்தை மீட்டுக் கொடுங்கள். என்னுடன் இருந்த வர்களே எனக்கு மோசம் செய்து விட்டார்கள்'' என்று கெஞ்சிய பிறகுதான் ஆளும் தரப்பு முழுக்க களத்தி லிறங்கி முக்கால் பணத்தை திருப்பியிருக்கிறது என்கிறார் கள். ஒன்று மட்டும் தெரி கிறது, இந்த கொள்ளை சம் பவத்திற்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அவரை கொஞ்சம் தள்ளிவைத்துத்தான் பார்க்கத் தொடங்கியிருக்கு. அவரும் தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.விற்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை'' என்றார்.  

இதுகுறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நம்மிடம், "தற்போது பிடித்திருக்கும் தொகை 42 லட்சம் என்று கணக்கு காண்பிப்பது, ஈ.டி., வருமான வரித் துறைக்கு இந்த வழக்கு போய்விடக்கூடாது என்பதற்காகக்த்தான் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.  பிடிபட்ட நபர்கள் மிகக்குறைவாகவே காட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சில முக்கிய தலைகள் ஈடுபட்டிருப்பார்கள் என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கைதின் மூலம் செல்லூர் ராஜுவின் பெரிய பணம் கொள்ளையடிக்கப் பட்டது உண்மை எனத் தெரிய வருகிறது. இதில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்திருக்கிறார் கள். மேலும் பா.ஜ.க.வினர் சிலரும் ஈடுபட்டிருக்க லாமென்று கூறப்படு கிறது. ஆனால் அவர் களை, பா.ஜ.க.வின் முக்கிய தலைகள், ஈ.டி. ரெய்டு, வருமான வரித்துறை ரெய்டு ஆகியவற்றை காண்பித்து மிரட்டி, சமரசம் பேசி எஃப்.ஐ.ஆரிலிருந்து நீக்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன. 

Advertisment

முருகன் மாநாடு நடந்தபோது செல்லூர் ராஜு யார் யாரிடம் பேசினார், ஆளும் தரப்பு முக்கிய தலைகள் யாரெல்லாம் அவரிடம் பேசினார்கள், பா.ஜ.க. தலைவர்கள், சில முக்கிய காவல்துறை உயரதிகாரிகள் யாரெல்லாம் பேசினார்கள், பா.ஜ.க. வழக்கறிஞர்களைக் காப் பாற்ற பா.ஜ.க.வின் பெருந் தலைகளுடன் அன்று யாரிடம் பேசி பேரம் நடந்தது என்பதெல்லாம் கால் ரெக்கார்டை பார்த்தால் முழுவதும் தெரியவரும். பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகி களின் கால் ரெக்கார்டுகளை முழுமையாக எடுத்து விசாரிக்க வேண்டும். இதில் முறையான விசாரணை நடத்தி முழு உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். செல்லூர் ராஜுடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது? காவல்துறை அதிகாரிகள் யார் யாரெல்லாம் இதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்று முதல்வர் தனி விசாரணைக்குழு அமைத்து முழு விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சி மாஜி அமைச்சரை அரவணைக்க காரணம் என்ன என்று ஆளும் தரப்பின் மீது மக்களின் சந்தேகப்பார்வை விழ இந்த சம்பவம் காரணமாகிவிடும்'' என்றார்.

தி.மு.க. செல்லூராரை அரவணைப்பதை பார்த்தால், முதலில் அ.தி.மு.க.வில் தொகுதி மாறப் போகிறார் என்ற செய்திதான் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கட்சியே மாறப்போகிறார் என்று இந்த சம்பவத்திற்கு பிறகு பேசப்படுவது மதுரையில்  மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.