இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். அதன் மக்கள் தொகை 23.5 கோடி. கொரோனா மிகக் கொடூரமாக உத்தர பிரதேசத்தை வேட்டையாடிக்கொண்டிருக் கிறது. உண்மையான நிலவரம், அரசு அளிக்கும் புள்ளிவிவரங்களைத் தாண்டியிருக்கிறது என்கிறார்கள் உ.பி.யின் நிலவரத்தை உற்றுக் கவனித்துவரும் சிலர்.
இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்டிருந் தும் கொரோனா முதல் அலையின்போது அன்றைய உச்ச அளவான நாளொன்றுக்கு 7000 பேருக்கு கொரோனா தொற்று என்ற அளவை எட்ட கிட்டத்தட்ட ஆறுமாதம் எடுத்துக்கொண்டது உத்தரபிரதேசம். இரண்டாவது அலையிலோ 48 நாட்களில் 7,000 என்கிற எண்ணிக்கையை எட்டியது. அடுத்த நான்கு நாட்களில் 14,000-ஐ தொட்டது என்றால் உ.பி.யில் கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம். இன்றைய நிலவரப்படி உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தரவுகளைப் புரட்டினால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 15,80,980. இதில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் 13,59,676. இறந்தவர்கள் 16,646. சிகிச்சை பெற்று வருபவர்கள் 2,04,658. மே 12-ஆம் தேதி மட்டும் 18,64,594 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 20,436 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. நாளொன்றுக்கு 30,000-க்கு மேல் போன கொரோனா தொற்று, சரிந்துகொண்டிருப்பதாகக் கூறினாலும் உண்மை நிலவரம் அதில்லை என்கிறார்கள் உத்தரபிரதேசத்தை அறிந்தவர்கள்
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களி லுமே கொரோனா சோதனைகள் தேவையான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள் ளப்படும் சோதனைகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை முழுமையாக வெளிப்படுத்தப்படுவ தில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படு கின்றன. ஜெய் கிஷான் அந்தோலன் அமைப்பை நிறுவியவரும், டெல்லியில் நடைபெறும் விவசாயி கள் போராட்டத்தில் துடிப்பாகப் பங்குவகிப்பவரு மான யோகேந்திர ஜாதவ், உத்தரப்பிரதேச கொரோனா தொற்று மரணங்கள் குறித்து "தி பிரிண்ட் ஆன்லைன்' பத்திரிகையில், முன்வைக்கும் சித்திரம், அரசு சொல்லும் கணக்குகளிலிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டிருக்கிறது..
"நீங்கள் சந்திக்கும் இந்தியாவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த எவரொருவரிடமும் கடந்த ஐம்பது நாட்களில் உங்கள் கிராமத்தில் எத்தனைபேர் இறந்திருக்கிறார் எனக் கேளுங்கள். எதனால் இறந்தார் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படவேண்டாம். 1000-க்கு ஒருவர் என்பதைத் தாண்டினால் அது அதிகம். 1.5 என்ற விகிதத்தில் வந்தால் மிக அதிகம். 2 என்ற விகிதத்தைத் தாண்டினால் மிக மிக அதிகம்.
உ.பி.யின் வாரணாசி, உன்னாவோ, ரேபரேலி, பிரதாப்கார், மீரட்டை ஒட்டிய 14 கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம், நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். இந்த 14 கிராமங்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 33,600. ஐம்பது நாட்களில் இந்தக் கிராமங்களில் 101 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதை 1000 பேருக்கு எத்தனை மரணம் எனக் கணக்கிட்டால் 3.005 என்ற விகிதத்தில் வருகிறது. இயல்பாக நடப்பதைவிட மூன்று மடங்கு அதிகம்.
இதே கணக்கீட்டை மொத்த உத்தரபிரதேசத் துக்கும் பயன்படுத்திப் பார்த்தால், ஐம்பது நாள் காலகட்டத்தில் 4.7 லட்சம் அதிகபட்ச மரணம் நிகழ்ந்திருக்கவேண்டும். ஆனால் இதுவரை கொரோனாவால் உத்தரப்பிரதேசத்தில் இறந்தவர் களின் எண்ணிக்கையாகக் குறிப்பிடப்படுவது 16,646தான்.
கடந்த வருடம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சேர்த்து 2.5 லட்சம் பேர் மட்டுமே இறந்திருக்க... உத்தரப்பிரதேசத்தில் வெறும் சில ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாகத் தகவல் வந்தது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அமைந் துள்ள சுயேச்சையான மருத்துவ ஆராய்ச்சி அமைப் பான தி இன்ஸ்டிடியூட் பார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவால்யூஷன், கொரோனா இரண்டாவது அலையால், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி 1.7 லட்சம் முதல் 2.1 லட்சம் பேர் உத்தரபிரதேசத்தில் இறந்துபோயிருப்பார்கள் எனக் கணக்கிட்டுள்ளது
ஐ.ஹெச்.எம்.இ. இறப்புகளை மிகக்குறைத்தே மதிப்பிட்டிருக்கிறது. நாம் கணக்கிட்ட சர்வே படி 1000-க்கு 3.0 என்ற அளவில் அல்லாமல் 2.5 சத விகிதம் என்ற விகிதத்தில் வைத்துக் கணக்கிட்டா லும் ஆகஸ்ட் மாத முடிவில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 7 லட்சம் பேர் இறந்துபோயிருப்பர்''’ என கூறுகிறார் யோகேந்திர ஜாதவ். ஆனால் இத்தகைய விமர்சனங்களோ, புள்ளிவிவரங்களோ, யூகங்களோ வெளியாவதை உத்தரப்பிரதேச அரசு விரும்ப வில்லை.
"ஊர் வாயை மூட உலை மூடி இல்லை' என்பது பழமொழி. கொரோனா இரண்டாவது அலையின்போது, ஊர்வாயை கைது பயத்தாலும், வழக்குகளாலும் மூட பிரம்மப் பிரயத்தனப்பட்டு வருகிறார் யோகி.
இந்நிலையில்தான் பீகாரும் உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு எல்லையும் சந்திக்கும் இடத்தில் கங்கை யில் நூற்றுக்கணக்கான பிணங்கள் கண்டெடுக்கப் பட்டன. இவை கொரோனா நோயாளிகளின் பிணங்கள் என்ற சந்தேகங்களும் எழுந்தன.
அந்த சந்தேகம் தீரும்முன்னே உத்தரப்பிர தேசத்தின் உன்னாவோ பகுதியில் கங்கைக் கரையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் புதைக்கப்பட்டிருக் கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பி யுள்ளது. பதேபூர், ரேபரேலி, ஹாஜிபூர் என கங்கைக் கரை முழுக்க பிணங்களாக வெளிப்பட்டு உத்தரப் பிரதேசத்தையே அதிரவைத்திருக்கின்றன. இவற் றில் அழுக ஆரம்பித்துள்ள பிணங்களும் அடக்கம்.
கொரோனாவின் ஆரம்பகட்டத்தில் 2 அல்லது 3 பிணங்கள் மட்டும் வந்துகொண்டிருந்த தாகவும், நாளாக ஆக 10 அல்லது 12 பிணங்கள்கூட வர ஆரம்பித்த தாகவும் உன்னாவோ பகுதி யில் வசிப்பவர்கள் தெரி வித்துள்ளனர்.
மாவட்ட நீதிபதியான ரவீந்தர் குமார், “"ஆற்றின் கரையிலிருந்து சற்றுத் தொலைவில் கூட பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் குழு கண்டறிந்துள்ளது. இந்தப் பகுதி முழுவதும் புதைக்கப்பட்ட உடல்களைக் கண்டறிய தேடல் முடுக்கிவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு உத்தர விட்டுள்ளேன். விசாரணையின் முடிவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்''’என்கிறார்.
பக்ஸர் காட் அருகே வசிக்கும் மக்கள் விறகு வாங்கவோ, முறைப்படியான நெருப்பிலிடும் சடங்குகள் செய்யவோ வசதியில்லாத மக்கள், வேறுவழியின்றி இறந்தவர்களை ஆற்றங்கரையில் புதைத்துவிடுவதாகக் குறிப்பிடுகின்றனர். சமீபத்திய புயல், மழை மேலோட்டமாகப் புதைக்கப்பட்ட பிணங்களை அப்பட்டமாக்கிவிட்டது.
இப்படி சுமார் 300 பிணங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து பீகார் மற்றும் உத்தரப்பிரதேச அரசுகளுக்கு நான்கு வாரங்களுக்குள் அறிக்கையளிக்கும்படி மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கங்கை நதிக்கரையோரம் காட்டும் கணக்கை உத்தரபிரதேசம் முழுமைக்கும் பொருத்திப் பார்த் தால், யோகேந்திர ஜாதவின் கணக்குக்கு நெருக்க மாக வரும்போல் இருக்கிறது. "ஒரு மணி நேரத்துக்கு 200-க்கும் அதிகமான உயிர்கள் பலியாகின்றன' என் கிறார்கள் உண்மை அறிந்தவர்கள். உத்தரப்பிரதேச அரசு மறைத்ததை கங்காதேவி காட்டிக்கொடுக் கிறாள்.
குஜராத் பலிகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்!
மோடி ஆட்சி செய்த குஜராத்தில் இப் போதும் பா.ஜ.க அரசுதான். அது ஒரு மிகப்பெரிய இக்கட்டில் சிக்கிக்கொண்டுள்ளது. குஜ ராத்தில் கொரோனாவால் இறந்தவர் களின் எண்ணிக்கையை குஜராத் அரசு இருட்டடிப்புச் செய்வதை திவ்யபாஸ் கர் எனும் இதழில் வெட்ட வெளிச்சமாக்கி யுள்ளார் பத்திரிகையாளர் தீபக் பட்டேல்.
குஜராத் மாநிலத்தில் இவ்வருடம் மார்ச் 1 முதல் மே 10 வரை 1,23,000 பேருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. போன வருடம் இதே 71 நாட்களில் வெறும் 58,000 பேருக்குத்தான் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதாவது போன வருடத்தைவிட இந்த வருடம் 65,085 பேர் அதிகமாக இறந்திருக்கின்றனர். ஆனால் மார்ச் 1- மே 10 (2021) காலகட்டத்தில் 4218 பேர்தான் கொரோனாவால் இறந்துள்ளனர் என்கிறது குஜராத் அரசு. ராஜ்கோட் மாவட்டத்தில் இந்த 71 நாட்களில் 2020-ல் தரப்பட்ட இறப்புச் சான்றிதழ் 2583. இந்த ஆண்டு அதே 71 நாட்களில் 10,878. இதில் கொரோனாவால் இறந்தவர்கள் என அரசு கூறும் கணக்கு வெறும் 288 பேர்.
இப்படியே அகமதாபாத்தில் கடந்த வருடம் இறந்தவர்கள் 7,786. இந்த வருடம் 13,593. கொரோனாவால் இறந்தவர்களாக அரசு கூறுவது 2,126. சூரத்தில் கடந்த வருடம் இறந்தவர்கள் 2,769. இந்த வருடம் இறந்தவர்கள் 8,851. கொரோனாவால் இறந்தவர்களென அரசு கூறுவது 1,074. இப்படி மாவட்டவாரியாக கடந்த வருடம் இந்த வருடம் இறந்தவர்களைப் பட்டியலிட்டிருக்கிறார் தீபக் பட்டேல்.
மாவட்டவாரியாகப் பட்டியல் போட்டது மட்டும் இல்லாமல் செய்தித்தாள்களில் வரும் அஞ்சலி விளம்பரங்கள், கிராம அளவிலான இறப்புச் செய்திகள் எனச் சேகரித்து அரசின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார். பெரும்பாலான கொரோனா மரணங்கள் ஜலதோஷம், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் என அரசே ஏய்த்திருப் பதை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார். இதேபோல் மாநிலத்துக்கு ஒரு தீபக் பட்டேல் வேலை செய்திருந்தால், இந்தியாவின் அசல் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை கிடைத் திருக்கும்.