Advertisment

அரசியல் களத்தை அதிர வைத்த 20% இடஒதுக்கீடு! -பா.ம.க. Vs வன்னியர் அமைப்புகள்!

pmkprotest

ண்மையில் சென்னை இப்படி ஒரு திடீர் போராட்டக் களத்தை சந்திக்கவில்லை. வன்னியர் சமூகத்திற்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்த தொடர் போராட்டத்தின் முதல் நாளான டிசம்பர் 1 அன்று பொதுமக்கள் மிரண்டு போகும் வகையில் பஸ் போக்குவரத்தையும் ரயில் போக்குவரத்தையும் பா.ம.க.வினர் நெருக்கடிக்கு உள்ளாக்கினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி வாகனங்களில் படையெடுத்த பா.ம.க.வினரை போலீஸ் மறித்த நிலையில், ரயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

Advertisment

pmk

முதல்வர் எடப்பாடிக்கு தொடர்ச்சியான தகவல்களை காவல்துறையும் உளவுத்துறையும் தந்து கொண்டிருந்த நிலையில், ’வாருங்கள் பேசுவோம்’ என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணியை எடப்பாடி அழைக்க, தலைமைச் செயலகத்தில் அவரை சந்தித்தார் அன்புமணி. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சகிதம் கோட்டைக்கு வந்த அவரை, பல நிமிடங்கள் காத்திருக்க வைத்து அதன்பிறகு சந்தித்த எடப்பாடி, இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார். நல்ல முடிவை அறிவிப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார் என ஊடகங்களிடம் அன்புமணி சொன்னார்.

Advertisment

இடஒதுக்கீடு தொடர்பாக ஜாதிரீதியான கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் தேவைப்படுவ தால், அதற்காக பிரத்யேக ஆணை யம் அமைக்கப்படும் என்று எடப்பாடியிடமிருந்து பின்னர் அறிவிப்பு வந்தது. இதுதான் நல்ல முடிவா என பா.ம.க தரப்பில் ஷாக் ஏற்பட்டது. அரசியல் விமர்சகர்களோ, ’பா.ம.க.வின் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அறிவிப்

ண்மையில் சென்னை இப்படி ஒரு திடீர் போராட்டக் களத்தை சந்திக்கவில்லை. வன்னியர் சமூகத்திற்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்த தொடர் போராட்டத்தின் முதல் நாளான டிசம்பர் 1 அன்று பொதுமக்கள் மிரண்டு போகும் வகையில் பஸ் போக்குவரத்தையும் ரயில் போக்குவரத்தையும் பா.ம.க.வினர் நெருக்கடிக்கு உள்ளாக்கினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி வாகனங்களில் படையெடுத்த பா.ம.க.வினரை போலீஸ் மறித்த நிலையில், ரயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

Advertisment

pmk

முதல்வர் எடப்பாடிக்கு தொடர்ச்சியான தகவல்களை காவல்துறையும் உளவுத்துறையும் தந்து கொண்டிருந்த நிலையில், ’வாருங்கள் பேசுவோம்’ என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணியை எடப்பாடி அழைக்க, தலைமைச் செயலகத்தில் அவரை சந்தித்தார் அன்புமணி. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சகிதம் கோட்டைக்கு வந்த அவரை, பல நிமிடங்கள் காத்திருக்க வைத்து அதன்பிறகு சந்தித்த எடப்பாடி, இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார். நல்ல முடிவை அறிவிப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார் என ஊடகங்களிடம் அன்புமணி சொன்னார்.

Advertisment

இடஒதுக்கீடு தொடர்பாக ஜாதிரீதியான கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் தேவைப்படுவ தால், அதற்காக பிரத்யேக ஆணை யம் அமைக்கப்படும் என்று எடப்பாடியிடமிருந்து பின்னர் அறிவிப்பு வந்தது. இதுதான் நல்ல முடிவா என பா.ம.க தரப்பில் ஷாக் ஏற்பட்டது. அரசியல் விமர்சகர்களோ, ’பா.ம.க.வின் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அறிவிப்பு வெளியிட்டால், மாற்று சமூகத்தினரின் ஆதரவை இழக்க வேண்டியதிருக்கும் என்றும், அதன்பின் ஒவ்வொரு சாதியும் இப்படி கிளம்பினால் அதனை சமாளிப்பது கடினம் எனவும் உணர்ந்திருக்கிறார் எடப்பாடி. அதே சமயத்தில், வன்னியர் சமூகத்தின் கோரிக்கையை நிராகரித்து நேரடியாக பகைத்துக் கொள்வது தேர்தல் காலத்திற்கு ஏற்றதல்ல எனக் கவனமாக கையாண்டுள்ளார் எடப்பாடி என்கின்றனர்.

இதற்கிடையே, எடப்பாடி யின் அழைப்பை ஏற்று அவரை சந்திக்க அன்புமணி சென்றதை ஏற்காத பா.ம.க.வினர், பல இடங்களில் போராட்டத்திலிருந்து விலகி சென்று விட்டனர். இது குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட பா.ம.க.வின் முக்கிய மாநில நிர்வாகி ஒருவர், ""கோரிக்கை ஏற்கும்வரை தொடர் போராட்டம் என்றுதான் டாக்டர் அறிவித்திருந் தார். தனிப்பட்ட முறையில் எடப்பாடி அழைத் ததை ஏற்று அன்புமணி சென்றிருக்க கூடாது. களத்திற்கு எடப்பாடியை அன்புமணி அழைத்திருக்க வேண்டும் அல்லது பேசலாம் வாருங்கள் என வெளிப் படையாக எடப்பாடியை சொல்ல வைத்திருக்க வேண்டும். இது எதுவும் இல்லாமல் சந்திப்பு நடந்ததால், அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறதோ என தோன்றுகிறது. அதனால்தான் போராட்ட களத்திலிருந்து தொண்டர்கள் விலகிச் சென்றனர்'' என்கிறார்கள்.

pmk

பா.ம.க.வின் போராட்டத்தை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உற்று கவனித்து வருகின்றன. திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நம்மிடம், ""சமூகநீதியை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தவர் கலைஞர். அதனால்தான். பிற்படுத்தப்பட்ட வகுப் பினரில் வன்னியர் சமூகத்தினரைப்போல சமூகத் தில் பின்தங்கிய பிற சாதிகளையும் இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என வகைப் படுத்தி 20 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி னார். அந்த இடஒதுக்கீட்டின் பலன்கள், மிக பிற்படுத்தப்பட்டோரில் மெஜாரிட்டியான வன்னியர் சமூகத்தினருக்கே அதிகம் கிடைத்தன.

அப்படியிருக்கையில், ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தாமல் தனி இட ஒதுக்கீடு சாத்தியமில்லை. அதனை நடத்தச் சொல்லி திமுக குரல் கொடுத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் இதுகுறித்து நான் அழுத்தமாக பேசியிருக்கிறேன்'' என்கிறார்.

pmkprotest

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வரும் வன்னியர் சத்திரியர் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர் சி.ஆர்.ராஜ னிடம் பேசியபோது, ""69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், தனி ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. போராடுவது போகாத ஊருக்கு வழி சொல்வது போலாகும். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு கேட்பதுதான் ஆரோக்கியமானது. பட்டியலினத்தவர்களில் எஸ்.சி. அருந்ததியர் என்றும், பிற்படுத்தப்பட்டவர்களில் பி.சி. முஸ்லீம் என்றும் கலைஞர் கொடுத்த உள் இட ஒதுக் கீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் தனி இட இதுக்கீட்டை கொண்டுவர முடியாது. முந்தைய காலக்கட்டத்தில் ஜனார்த்தனன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன், வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என பரிந்துரைத்திருக்கிறது. எங்கள் சங்கத்தின் சார்பில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து இதனை நிறைவேற்ற வலியுறுத்தியிருக் கிறோம். அமைச்சர் சி.வி.சண்முகம் இது குறித்து முயற்சித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், இதனை அதிமுக அரசு நிறைவேற்றினால் பாமகவும் தாங்களும் காணாமல் போய்விடுவோம் என பயந்துதான் தனி ஒதுக்கீடு என குழப்பத்தை ஏற்படுத்துகிறார் டாக்டர் ராமதாஸ்.

2006 சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக இருந்தது. தேர்தல் முடிவுகளில் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்க வில்லை.அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி, தனது சம்மந்தியான டாக்டர் ராமதாசை சந்தித்து, ""கலைஞரிடம் கூட்டணி ஆட்சியையும், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டையும் வலியுறுத்துங்கள். காங்கிரசின் கருத்தை கலைஞர் கேட்டால் உங்கள் கருத்தை ஆதரித்தே பேசுகிறேன். நிச்சயம் தனி ஒதுக்கீடு கிடைக்கும்'' என வலியுறுத்தினார். அதற்கு சம்மதித்த ராமதாஸ், கிருஷ்ண சாமி தனது வீட்டுக்கு வருவதற்குள், திமுக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு என அறிவித்து விட்டார். இவ்வளவுதான் ராமதாஸின் அக்கறை.

விக்கிரவண்டி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கு வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னபோது, போகாத ஊருக்கு ஸ்டாலின் வழி சொல்கிறார். தனி இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என குற்றம்சாட்டிய ராமதாஸ், தற்போது போராடுவது எந்த வகையில் சாத்தியம்? வன்னியர் நல வாரியத்திடம் தனது கல்வி அறக்கட்டளை சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும், சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை அதிமுகவிடம் பெற வேண்டியும், தேர்தல் நிதியை பெறவுமான அரசியல் பேரங்களை முன்வைத்தே எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்'' என்கிறார் ஆவேசமாக.

இந்த நிலையில், பாமகவின் செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் கே.பாலுவிடம் நாம் பேசியபோது, ""ஒவ்வொரு சாதியும் அதன் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்பதே உண்மையான சமூக நீதி என்பதை 40 ஆண்டுகாலமாக வலியுறுத்தி, வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என அதற்காக சமரசமின்றி போராடி வருபவர் அய்யா ராமதாஸ். 20 சதவீத இட ஒதுக்கீட்டை எங்களுக்கு தந்த போது வன்னியர் களோடு 108 சாதிகளை இணைத்தார் கலைஞர். அந்த இட ஒதுக்கீடு அமலான 1989-லிருந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பலன் பெற்றவர்களின் பட்டியலை வெளி யிடுங்கள் என அய்யா கோரிக்கை வைத்தார். ஆனால், அதனை வெளியிட ஆட்சியாளர்கள் தயாரில்லை.

அதனால், தமிழகத்தின் பெரும்பான்மை சமூகத்தில் 25 முதல் 28 சதவீதத்துடன் முதன்மை சமூக மாக இருக்கும் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்; சாதி வாரி கணக் கெடுப்பு பிறகு அதற்கேற்ப முடிவு செய்யலாம் என நியாயமான கோரிக்கை வைக்கிறது பாமக. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சாத்தியம் என்பதும், எடப்பாடி அரசின் ஆணையம் அமைத்தல் என்ற முடிவும் வன்னியர்களின் சமூக நீதியை புறந்தள்ளவும், காலம் தாழ்த்துவதற்கானதுமான அரசியல் சதி., பாமக மீதான குற்றச்ச்சாட்டுகள் விமர்சனங்கள் அனைத்தும் காழ்ப்புணர்வு அரசியலே'' என்கிறார் ஆவேசமாக.

இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் உள் இடஒதுக்கீட்டை வழங்குவோம் என சொல்ல வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் பாமகவுக்கு எதிரான வன்னியர் சமூக தலைவர்கள்.

-.இரா.இளையசெல்வன்

nkn051220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe