Advertisment

2 டிகிரி, 14 டிப்ளமோக்கள்! ஆட்டோ சங்கர் சகோதரரின் சிறை வாழ்க்கை!

ss

ட்டோ சங்கர் என்ற பெயர், 1980களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 6 கொலை தொடர்பாக ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஆட்டோ சங்கர் என்ற கௌரி சங்கரும், அவருக்கு துணையாக இருந்ததாக, அவரது உடன்பிறந்த தம்பி மோகன், தங்கை கணவரான எல்டின் என்ற ஆல்பர்ட் உள்ளிட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் அப்ரூவராகி விடுதலை பெற்றார்.

Advertisment

auto sankar

நீதிமன்ற விசாரணையில், ஆட்டோ சங்கர், எல்டின் மற்றும் சிவாஜி ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் சிவாஜிக்கு, மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆட்டோ சங்கர், 1995 ஏப்ரல் 27ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அடுத்த நாளில், அவரது தங்கை கணவர் எல்டின் தூக்கிலிடப்பட் டார். ஆட்டோ சங்கரின் தம்பி மோகன் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டதில் அவருக்கு 2005ஆம் ஆண்டில் மூன்று ஆயுள் தண்டனைக

ட்டோ சங்கர் என்ற பெயர், 1980களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 6 கொலை தொடர்பாக ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஆட்டோ சங்கர் என்ற கௌரி சங்கரும், அவருக்கு துணையாக இருந்ததாக, அவரது உடன்பிறந்த தம்பி மோகன், தங்கை கணவரான எல்டின் என்ற ஆல்பர்ட் உள்ளிட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் அப்ரூவராகி விடுதலை பெற்றார்.

Advertisment

auto sankar

நீதிமன்ற விசாரணையில், ஆட்டோ சங்கர், எல்டின் மற்றும் சிவாஜி ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் சிவாஜிக்கு, மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆட்டோ சங்கர், 1995 ஏப்ரல் 27ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அடுத்த நாளில், அவரது தங்கை கணவர் எல்டின் தூக்கிலிடப்பட் டார். ஆட்டோ சங்கரின் தம்பி மோகன் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டதில் அவருக்கு 2005ஆம் ஆண்டில் மூன்று ஆயுள் தண்டனைகளை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் விதித்தது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், தனது தண்டனைக் காலத்தில் சிறைச்சாலையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, நன்முறையில் நடந்துகொண்டதோடு, படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். அவர் இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டபோது 26 வயது. பி.காம் படிப்பை முழுமையாக முடிக்கா மல் இருந்தார். அவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனையை அனுபவிக்கும் சூழல். சிறைச்சாலையில், தான் முடிக்காமல்விட்ட பி.காம். டிகிரி படிப்பை முழுமையாகப் படித்துமுடித்து தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர் பி.ஏ. (வரலாறு) டிகிரியையும் அவர் படித்து முடித்திருக்கிறார்.

Advertisment

அவரது படிக்கும் ஆர்வம் காரணமாக, டி.சி.ஏ., டி.டி.பி., மல்ட்டிமீடியா, எர்ர்க் ஹய்க் சன்ற்ழ்ண்ஸ்ரீண்ஹய், ஈங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங் ண்ய் ஐன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள், உண்ல்ப்ர்ம்ஹ ண்ய் ஙங்ஸ்ரீட்ஹய்ண்ள்ம் உட்பட 14 டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளைப் படித்துமுடித் துள்ளார். சிறைச்சாலையில் அவர் படித்த அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞருக்கான டிகிரி படிப்பில், தேர்வெழுத சிறைக்கு வெளியே செல்ல அனுமதியில்லாததால் அப்படிப்பை முழுமை செய்ய முடியவில்லை. மேலும், யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, கிட்டத்தட்ட 250 வகை யோகா முறைகளைக் கற்றிருக்கிறார். அதோடு, சிறையிலேயே மற்ற கைதிகளுக்கு யோகா பயிற்சியும் அளித்துவந்துள்ளார்.

கிட்டத்தட்ட 18 ஆண்டு காலம் விசாரணைக் கைதியாக சிறையிலிருந்தவர், அதற்கடுத்து மேலும் 18 ஆண்டு காலம் ஆயுள் தண்டனைக் கைதியாக தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் இருந்திருக்கிறார். ஆயுள் தண்டனைக் காலத்தில்தான் பல்வேறு படிப்புகளை ஆர்வத்தோடு கற்றுத் தேறியிருக்கிறார். அவரது தண்டனைக் காலத்தில் மிகவும் ஒழுக்கத்தோடு சிறைச்சாலையில் இருந்த காரணத்தால், 40 முறை அவருக்கு பரோல் விடுப்பு கிடைத்திருக்கிறது. பரோலில் வெளிவந்த காலத்திலும் தினமும் இருமுறை கையெழுத்திடுவது, சமூகத்துக்கு எவ்வித அச்சுறுத்த லும் இல்லாமல் நடந்துகொள்வது என நல்லபடியாகவே இருந்திருக்கிறார்.

இந்நிலையில், தனக்கு 60 வயது கடந்து விட்டதைக் குறிப்பிட்டும், 36 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைபட்டிருப்பதைக் குறிப்பிட்டும், சிறைச்சாலையில் நன்முறையில் டிகிரி மற்றும் டிப்ளமோ கோர்ஸ்கள் பலவற்றை கற்றுத்தேர்ந்தது, 40 முறை எவ்விதப் பிரச்சனையுமின்றி பரோல் காலத்தில் செயல்பட்டது என அனைத்தையும் குறிப்பிட்டு, தன்னை நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யும்படி கேட்டு வழக்கு தொடர்ந் தார்.

இவரது நன்னடத்தையை பரிசீலித்த நீதிமன்றம், முதலில் அவருக்கு 2 மாத கால நீண்ட பரோல் விடுப்பினை எடுப்பதற்கு கடந்த 2024, பிப்ரவரியில் அனுமதி கொடுத்தது. அதன்பின் பரோலை அடுத்தடுத்து நீட்டிக்கவும் அனுமதித்தது. அதன்படி 5 முறை பரோலை நீட்டித்தவர், ஒருவழியாகக் கடந்த 2024, டிசம்பரில் விடுதலையாகி வெளிவந்தார். இதே வழக்கில் இவரோடு கைது செய்யப்பட்ட மற்றவர்கள், 10 ஆண்டு காலத்திலேயே சிறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு வெளிவந்த நிலையில், இவர் மட்டும் கிட்டத்தட்ட 36 ஆண்டு காலம் சிறையிலேயே கழித்திருக்கிறார். சிறைச்சாலை அவருக்கு புதிய நம்பிக்கையை, நல்வழியை காட்டியதால், கல்வி கற்பதில் முழு ஈடுபாட்டோடு இருந்து, புதிய மனிதராக வெளிவந்து, தற்போது தனது மனைவியோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதேபோல் அவரது பிள்ளைகள் மூவரும் திருமணமாகி நல்ல நிலையில் செட்டிலாகியிருக்கிறார்கள்!

nkn230425
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe