2 கோடி உறுப்பினர்... 200 தொகுதி வெற்றி சாத்தியமா? - வெதும்பும் பாகமுகவர்கள்

uday

 

தி.மு.க. சார்பில் வடக்கு மண்டலத்தி லுள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பி.எல்.2 பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13ஆம் தேதி திருவண்ணா மலையில் நடைபெற்றது. 

11,000-க்கும் மேலான பி.எல்.ஏ.2, பி.டி.ஏ. நிர்வாகிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு வருகைதந்து பேசிய துணைமுதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி, “"தி.மு.க. ஏன் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், அடிமை அ.தி.மு.க. -பா.ஜ.க. ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காகவே நமது தலைவர் 10 நாட்களுக்கு முன்பு "ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பை அறிவித்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கின்ற 30% வாக்காளர்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டுமென்பது இந்த முன்னெடுப்பின் இலக்கு. இந்தியாவிலேயே எந்தவொரு இயக்கத்திலும் இல்லாத வகையில் இந்த முன்னெடுப்பின் மூலம் பூத் டிஜிட்டல் ஏஜென்டுகள் செயல்பட்டு வருகிறீர்கள். ஓரணியில் தமிழ்நாடு என்ற மிகப்பெரிய இலக்கை அடைந்து விட்டோம் என்றால், வரும் தேர்தலில் நமது வெற்றியில்

 

தி.மு.க. சார்பில் வடக்கு மண்டலத்தி லுள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பி.எல்.2 பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13ஆம் தேதி திருவண்ணா மலையில் நடைபெற்றது. 

11,000-க்கும் மேலான பி.எல்.ஏ.2, பி.டி.ஏ. நிர்வாகிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு வருகைதந்து பேசிய துணைமுதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி, “"தி.மு.க. ஏன் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், அடிமை அ.தி.மு.க. -பா.ஜ.க. ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காகவே நமது தலைவர் 10 நாட்களுக்கு முன்பு "ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பை அறிவித்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கின்ற 30% வாக்காளர்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டுமென்பது இந்த முன்னெடுப்பின் இலக்கு. இந்தியாவிலேயே எந்தவொரு இயக்கத்திலும் இல்லாத வகையில் இந்த முன்னெடுப்பின் மூலம் பூத் டிஜிட்டல் ஏஜென்டுகள் செயல்பட்டு வருகிறீர்கள். ஓரணியில் தமிழ்நாடு என்ற மிகப்பெரிய இலக்கை அடைந்து விட்டோம் என்றால், வரும் தேர்தலில் நமது வெற்றியில் 50% உறுதி''” என்றார். 

கூட்டத்துக்கு வந்திருந்த பாக முகவர்கள் மற்றும் தமிழ்நாடு முழுக்கவுள்ள பாக முகவர்களிடம் இதுகுறித்து பேசினோம், சிலதொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அதேநேரத் தில் பல தொகுதிகளில் இந்தப் பணி தொய்வாக நடக் கிறது. கிராமப்புறங்களைவிட நகர் பகுதிகளில், குறிப் பாக தலைநகரான சென்னையிலேயே தொய்வு இருக் கிறது. தி.மு.க.வின் கோட்டையாக வுள்ள சென்னை யில் ஐந்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொய்வு. அதேபோல் திருவாரூர், விழுப்புரம், சேலம் உட்பட சில மாவட்டங்களில் சில தொகுதிகளிலும் தொய்வு தான். தி.மு.க. எப்போது வெற்றிபெற்றது என நினைவி லில்லாத கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கையில் லீடிங் காட்டியுள்ளார்கள். 

தொய்வுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்கிறார்கள் தொகுதிப் பொறுப்பாளர்கள். அதாவது, பல தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்தபோது, பூத் கமிட்டிகளில் நியமிக்கப்பட்ட 10 பேரில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களையே நியமித்தார்கள். அதேபோல் அந்த பத்து பேரில் பி.எல்.2வாக ஒருவரையும், தி.மு.க. ஐடி விங்கிலிருந்து பூத்துக்கு ஒருவரை பி.டி.ஏ.வாக நியமிக்கச் சொன்னபோது உறவினர்கள், படிக்காதவர்களை நியமித்து பட்டியல் தந்துள்ளார்கள். படித்த இளைஞர்கள் வந்தால் தங்கள் அதிகாரம் போய்விடும் என கீழ்மட்ட அளவில் மூத்த நிர்வாகிகள் சிலர் அப்படி செய்துள்ளார்கள். ஓரணியில் தமிழ்நாடு அறிவித்து டிஜிட்டல் ஆப் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தத் துவங்கியதும் டம்மியாக பட்டியல் தந்தவர்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டு 10 நாட்களாகிறது, பல பூத்களில் பூஜ்ஜியம் சேர்க்கைதான். இதனை சென்னையில் மானிட்டரிங் செய்கிறார்கள். அவர்கள் மா.செ.வை தொடர்புகொண்டு கேட்டபோதுதான், இந்த தில்லாலங்கடி வேலை தெரியவந்தது. 

இரண்டாவது காரணம், ஓரணியில் தமிழ்நாடு பணி தொடங்கியதும் பி.எல்.ஏ2-வில் உள்ளவர் களுக்கு சில மா.செ.க்கள் டேப், செல்போன், செலவுக்கு பணமெல்லாம் தந்தார்கள். இந்த திட்டத் தில், முக்கிய பணியே பி.டி.ஏ.வாக (பூத் டேட்டா ஏஜென்ட்) நியமிக்கப்பட்டவர்க்குதான். அவர் தான் பி.எல்.சி. டீமோடு சேர்ந்து ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களின் மொபைல் எண் வாங்கி, அவர்களுக்கு வரும் ஓ.டி.பி. எண் வாங்கி உறுப்பினர் சேர்க்கை, கோரிக்கை பதிவு போன்றவற்றைச் செய்கிறோம். பெரும்பாலான மாவட்டங்களில் பி.டி.ஏ.வுக்கு சிங்கிள் பைசாகூட தரவில்லை. நீங்க ஐ.டி. விங்தானே? உங்களுக்கு எதுக்கு பணம்?னு கேட்கறாங்க. பி.எல்.ஏ.2 பொறுப்பில் இருப்பவரும் கட்சிக்காரர்தான். அவருக்கு மட்டும் எதற்கு நிதி தரவேண்டும் எனக் கேட்டால், பதிலில்லை. பி.டி.ஏ.வுக்கு சாப்பாடுகூட வாங்கித் தர மறுக் கிறார்கள், பின் எப்படி அவர்கள் வேலை செய் வார்கள். இதையெல்லாம் கண்காணிக்கவேண் டிய மா.செ.க்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பல தொகுதிகளில் கண்டுகொள்ளவில்லை. 

கோவை, கரூரில் பாக முகவர்களை கவனிப்பதுபோல் பி.டி.ஏ. ஓரணியில் தமிழ்நாடு பணியைக் கண்காணிக்க மாவட்ட அளவில், தொகுதி அளவில் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்களை பக்காவாக கவனிக்கின்றனர். வடக்கு மண்டலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு தொகுதி ஒருங்கிணைப்பாளருக்கு 25,000 ரூபாய் நிதியும், பி.டி.ஏ.வுக்கு 2000 என தரப்பட்டுள்ளது. தற்போது 234 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் 1.2 லட்சத்துக்கு மேலான உறுப்பினர்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளது. வடக்கு மண்டலத்திலுள்ள வேறுசில தொகுதிகளிலும், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளருக்கு என எந்த நிதியும் வழங்கவில்லை. பின் அவர்கள் எப்படி தீவிரமாக வேலைசெய்வார்கள்?''’எனக் கேள்வியெழுப்பினார்கள். 

உறுப்பினர் சேர்க்கையில் பின்தங்கியுள்ள சில தொகுதி நிர்வாகிகளிடம் பேசியபோது, “"ஒரு நாளைக்கு 20 முதல் 30 குடும்பத்தைச் சந்தித்து அவர்களுக்கு அரசின் நலத்திட்டங் களை விளக்கி, அவர்களை கட்சியில் இணைய வைக்கமுடியும், அதற்குமேல் சாத்தியமில்லை. மற்ற தொகுதிகளைவிட பின்தங்கியதுபோல் இருக்கிறோம், நாங்கள் சேர்ப்பதெல்லாம் நிலையான, உறுதியான உறுப்பினர்கள்''’ என் கிறார்கள். "இதில் தலைமை இன்னும் தீவிர கவனம் செலுத்தவேண்டும் அப்போதுதான் தலைவர் விரும்பும் 2 கோடி உறுப்பினர்கள், சின்னவர் சொல்லும் 200 தொகுதி வெல்வது நடக்கும்' என்கிறார்கள் கட்சியின் நலன் விரும்பிகள். 

நடைமுறைச் சிக்கல்களை கட்சித் தலைமை சரி செய்யுமா?

 

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn160725
இதையும் படியுங்கள்
Subscribe