Advertisment

19 ஆயிரம் அரசு மருத்துவர்கள்! ஊதிய கோரிக்கை நிறைவேறுமா?

11

ரசு மருத்துவர்கள், தங்கள் ஊதியத்தை உயர்த்த அரசுக்கு ஆணை யிட வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இதற்கு பதிலளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதி மன்றம். இந்நிலையில் சம்பள விவகாரத்தில் சமாதானமாகிவிட்டது என அமைச்சர் பதிலளித்தது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

Advertisment

ss

2022-ல் தேசிய மருத்துவ ஆணைய மானது, ஒவ்வொரு மாநில அரசும், தங்களுக்கு கீழ் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ்க்கு இணை

ரசு மருத்துவர்கள், தங்கள் ஊதியத்தை உயர்த்த அரசுக்கு ஆணை யிட வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இதற்கு பதிலளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதி மன்றம். இந்நிலையில் சம்பள விவகாரத்தில் சமாதானமாகிவிட்டது என அமைச்சர் பதிலளித்தது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

Advertisment

ss

2022-ல் தேசிய மருத்துவ ஆணைய மானது, ஒவ்வொரு மாநில அரசும், தங்களுக்கு கீழ் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ்க்கு இணையான ஊதியத்தை தரவேண்டு மென்று அறிவுறுத்தியுள்ளது. இதுவரை தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் அதை அமல்படுத்தவில்லை. 2009-ல் கலைஞர் ஆட்சியிலிருந்தபோது, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பள உயர்வு வழங்கும் வகையில் அரசாணை 354 வெளியிட்டார். அந்த அரசாணையின்படி, பஆஈட எனப்படும் காலம் சார்ந்த ஊதியம் வழிவகை செய்யப்பட்டது. அந்த அரசாணையை அமல் படுத்தவேண்டுமென்று 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிடமும், 2017-ல் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியிடமும் மருத்துவ சங்கங்கள் முறையிட்டன. ஆனாலும் அந்த அரசாணையை அமல்படுத்தவில்லை. 2021-ல் முதலமைச்சரான ஸ்டாலின், கலைஞரின் அரசாணை 356-ஐ ரத்து செய்துவிட்டு, புதிதாக அரசாணை 293-ஐ வெளியிடச்செய்தார். இந்த அரசாணை, ஊதியப்படிகளை உயர்த்தியது. ஆனால் தங்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு தான் தேவை, ஊதியப்படி உயர்வல்ல என்று குமுறலில் உள்ளனர் மருத்துவர்கள்.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட் டக்குழுத் தலைவர் பெருமாள்பிள்ளை நம்மிடம், "அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டுமென்று நீதிமன்றத்தை அணுகியபோது, ஊதியக் கோரிக்கை யை 6 வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 6 மாதங் கள் கடந்த பின்னர், அரசாணை 354-ஐ அமல் படுத்த முடியாதென்று அரசு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தோம். 8 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை தீர்வு காணப்பட்டுவிட்டதாக அமைச்சர் மா.சு. சொல்வது, 19 ஆயிரம் அரசு மருத்துவர்களின் தலையில் இடி விழுந்தது போலுள்ளது. எய்ம்ஸ் மற்றும் மற்ற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் பெறும் ஊதியத்தைவிட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, தமி ழகத்திலுள்ள உயர்சிறப்பு மருத்துவர்கள் வாங்கு கிறார்கள். தமிழ்நாட்டில் 21 வருடம் பணியாற்றி னால் பெறும் சம்பளத்தை, அவர்களோ 10வது ஆண்டு பணிக்காலத்திலேயே பெறுகிறார்கள். இந்த முரண்பாட்டைக் களைய கலைஞர் எடுத்த முயற்சி நிறைவேறவேயில்லை'' என்றார்.

கோர்ட்டில் தமிழக அரசு சாதகமான பதிலை தாக்கல் செய்யும் என அரசு மருத்துவர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.

nkn301024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe