இந்தியாவில் ஜமீன்தாரி நில ஒழிப்புச் சட்டத்தின் மூலம் 30 ஏக்கருக்கு அதிகமாக உள்ள நிலங்கள் மீட்கப்பட்டன. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் 1970-களில் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஒரு குடும்பத்தினர் 15 ஏக்கருக்கு மேல் வைத்திருக்க முடியாது. கூடுதல் நிலங்கள் உபரி நிலங்களாக வகைப்படுத்தப் பட்டு அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதன்படி நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை கலைஞர் அரசு எடுத்தபோது நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 11 பெரிய எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்தும், 80 சிறிய எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்தும் சுமார் 35,000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு, அரசு நிலங்களாயின. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே ஜமீன்தாரர்களுக்கு குத்தகைப் பணம் கொடுத்து வந்ததால், அதே குத்தகைத் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 1977-ல் வழக்குத் தொடர்ந்த தனியார் எஸ்டேட் நிறுவன முதலாளிகள், "அரசின் நடவடிக்கை எங்க ளுக்குப் பொருந்தாது. எங்களுக்கு பட்டா வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்'” என்று வாதிடுகின்றனர். இதனை நிராகரித்த உச்சநீதிமன் றம்,” "உங்களுக்கு பட்டா கொடுக்க முடியாது. அரசு நிலம் என்ப தால் அதனை விற்கவோ, அடமானம் வைக்கவோ, பெயரை மாற்றவோ கூடாது. அரசுக்கு முறை யாக குத்தகைத் தொகை கட்டவேண்டும்''’ என எச்சரிக்கை செய்து உத்தர விட்டது.
மேலும், அந்த உத்தர வின்படி, எஸ்டேட் நிறுவன முதலாளிகளிடமிருந்து உறுதி மொழியை அப்போதே எழுதி வாங்கவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதன்படி 1977-ல் அந்த உறுதி மொழியை எஸ்டேட் நிறு வனங்கள் எழுதிக் கொடுத் துள்ளன. அப்படி உறுதி மொழி கொடுத்த 11 பெரிய எஸ்டேட் நிறுவனங்களில் குன்னூரில் உள்ள நான் சச் (சர்ய் நன்ஸ்ரீட்) கம்பெனியும் ஒன்று. இந்த நிறுவனத்தின் முதலாளியான கபூர் ஒரு மார்வாடி.
நான் சச் நிறுவனத்தின் மற்றொரு எஸ்டேட்டான மகாவீர் ப்ளாண்டேசன் நிறுவனத்திற்கு தம்மிடமிருந்த அரசின் குத்தகை நிலம் 6,000 ஏக்கர் நிலத்தை விற்றுவிடுகிறார் கபூர். கூடலூரை அடுத்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நடுவட்டம் பகுதியைச் சுற்றியுள்ள 3,500 ஏக்கர் நிலங்களை ஏ-பார்ட் என்றும், கூடலூர் பகுதியில் இருக்கும் 2,500 ஏக்கர் நிலங்களை பி-பார்ட் என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து இந்த அரசு சொத்துக்களை நான் சச் நிறுவனத்திடமிருந்து வாங்குகிறார் மகாவீர் ப்ளாண்டேசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான மார்வாடி சைலேஷ் பன்சாலி. இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப் பட்டுள்ள அரசு நிலங்களுக்கான சேல் டீடுளை மகாவீர் ப்ளாண்டேஷனுக்கு கொடுக்கிறது நான் சச் நிறுவனம்.
இப்படி விற்கப்பட்டுள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த 6,000 ஏக்கர் நிலங்களை, 1979-ல் கேரளாவில் கொச்சின் பகுதியில் இருக்கும் யூனியன் வங்கியில், நிறுவனத்தின் பிசினெஸுக்காக அடமானம் வைத்து சுமார் 10 கோடி ரூபாயை கடனாக வாங்குகிறது மகாவீர் ப்ளாண்டேஷன். இந்த நிலையில், கடனை முறையாக அடைக்காத தால் கேரளா கடன் வசூலிப்புத் தீர்ப்பாயத்தில் (ரெக்கவரி டிரிபியூனல்) வழக்குப் போடுகிறது யூனியன் வங்கி. அதன் விசாரணை முடிவில், 10 கோடியே 22 லட்சத்து 83 ஆயிரத்து 983 ரூபாயை யும், 21.5 சதவீத வட்டியுடன் வசூலிக்க 13.9.2001-ல் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடுகிறது தீர்ப்பாயம்.
அதனை மகாவீர் நிறுவனம் கட்டாததால் பி-பார்ட்டிலுள்ள 2,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி விற்பனை செய்ய வங்கிக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதாவது தமிழக அரசின் நிலத்தை கேரள மாநில ரெக்கவரி டிரிபியூனல் ஜப்தி செய்ய உத்தரவிடுகிறது. இந்த விவகாரத்தை அப்போதைய நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாகம், மூடி மறைத்ததுடன், அன்றைக்கிருந்த கூடலூர் தாசில்தார், தமிழக அரசின் நிலத்தை விற்பனை செய்வதிலிருந்து விலக்களிக்கக் கோரி மனு செய்கிறார். ஆனால், விலக்களிக்க முடியாது என 11.02.2003-ல் ஆணையிடுகிறது தீர்ப்பாயம். வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு மேலதிக நட வடிக்கைகளை எடுக்காமல் பார்த்துக் கொள்கிறது மகாவீர் நிறுவனம். இதனால் ரெக்கவரி பிரச்சனை இன்னமும் அப்படியே நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.
இந்தநிலையில், சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசின் இந்த சொத்துக்களை சென்னையிலுள்ள கொடாக் மகேந்திரா வங்கியில் அடமானம் வைத்து 80 கோடி ரூபாய் கடன் வாங்குகிறார் மகாவீர் நிறுவனத்தின் எம்.டி. சைலேஷ் பன்சாலி. இந்த கடனையும் திருப்பிச் செலுத்தாததால் சொத்துக்கள் மூழ்கிவிடுகின்றன. இதனையடுத்து, சென்னையிலுள்ள கடன் வசூலிப்புத் தீர்ப்பாயத்தில் முறையிடுகிறது கொடாக் மகேந்திரா வங்கி. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ”இந்த சொத்தின் மீது மகாவீர் ப்ளாண்டேசனுக்கு ஒரு புல் பூண்டு கூட எந்த உரிமையும் இல்லை. அசையும், அசையாச் சொத்துக்கள் அனைத்தும் வங்கிக்கு சொந்தமான வை” என கடந்த 2021 ஜூலையில் தீர்ப்பளிக்கிறது.
இதனையடுத்து மீண்டும் அதிர்ச்சியடைந்த நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாகம், கேரளா ரெக்கவரி டிரிபியுனல் எடுத்த நடவடிக்கையை எப்படி மூடி மறைக்க முயற்சித்ததோ அதே பாணியில் சென்னை ரெக்கவரி டிரிபியூனல் உத்தரவையும் கையாண்டிருக்கிறது. ஆனால், கொடாக் மகேந்திரா வங்கி நிர்வாகம் அசைந்து கொடுக்க மறுத்ததுடன், கொடுக்கப்பட்ட கடன் தொகைக்காக அடமானம் வைக்கப்பட்ட அரசு சொத்தை தனதாக்கிக்கொள்ள கூடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு தீர்ப்பாயத்தின் உத்தரவைக் காட்டி வில்லங்க சான்றிதழில் (ஈ.சி.) தனது பெயரைப் பதிவு செய்ய கடந்த டிசம்பரில் நடவடிக்கை எடுக்கிறது. அதன்படி பதிவும் செய்யப்படுகிறது.
வழக்கம்போல இந்த விவகாரத்தையும் நீலகிரி கலெக்டர் அலுவலகம், கூடலூர் தாசில்தார் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம் மூடி மறைக்கின்றன. ஆனால், இந்த விவகாரம் தொடர்பான சில புகார்கள் தமிழக சட்டப் பேரவையின் பொதுக் கணக்குக் கமிட்டிக்கு செல்ல, கமிட்டியின் சேர்மன் செல்வப்பெருந்தகை தலைமையில் வேல்முருகன், ஜவாஹிருல்லா, சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நீலகிரி கலெக்டர் அலுவலகம் மற்றும் சம்பந்தப் பட்ட நடுவட்டம், கூடலூர் பகுதிகளில் கடந்த டிசம்பர் 29-ந் தேதி ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் போது, நீலகிரி கலெக்டர் அம்ரீத் மற்றும் வருவாய்த்துறை பணியாளர் களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அப்போது கேரளா மற்றும் சென்னை வங்கிகளில் மகாவீர் நிறுவனம் பெற்ற கடன்களுக்காக அரசு சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்ட விவகாரத்தை ஆதாரங்களுடன் கண்டறிந்ததுடன், அதனை மீட்க அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பற்றியும், 1970-களில் இருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகை 1,650 கோடி ரூபாய் கட்டப்படாமல் தமிழக அரசை தனியார் எஸ்டேட் நிறுவனங்கள் ஏமாற்றி வந்திருப்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தது பொதுக் கணக்குக் கமிட்டி.
நடப்பு நிதியாண்டின் மானியக் கோரிக்கை களை நிறைவேற்றுவதற்கான கூட்டத் தொடர் வருகிற 6-ந்தேதி கூடுகிறது. அப்போது இந்த விவகாரம் பூதாகரமாகும் என தெரிகிறது.
இது குறித்து கோட்டையிலுள்ள வருவாய்த் துறை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது,”அரசுக்கு குத்தகைத் தொகையை முறை யாகச் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோதே அந்தத் தொகையை வசூலிக்க நீலகிரி மாவட்ட கலெக்டர் உட்பட மாவட்ட வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் அரசு சொத்துக்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். கேரள வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்தபோது அந்த சொத்து கடன் கேட்பவரின் சொத்துக்கள்தானா என்பதை ஆராய விரும்பாமல் கடனைத் தந்துள்ளது.
மகாவீர் ப்ளாண்டேச னின் முதலாளிக்கு விசுவாச மாக அரசு அதிகாரிகள் இருந்ததால் தமிழக அரசு சொத்துக்களை கேரள ரெக்கவரி டிரிபியூனல் கபளீகரம் செய்ய முயற்சித்து வருகிறது.
தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறுத்திவைக்க கேரள ரெக்கவரி தீர்ப்பாயத்தில் கூடலூர் தாசில்தார் கெஞ்சியபோதாவது, அரசு நிலத்தை அடமானம் வைத்த குற்றத்துக்காக மகாவீர் நிறுவன உரிமையாளர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நீலகிரி கலெக்டர் அலுவலகம் குற்றவியல் நடவடிக்கை எடுத்திருந்தால், அரசு சொத்துக்களை மீண்டும் ஒரு வங்கியில் (கொடாக் மகேந்திரா) அடமானம் வைக்க மகாவீர் நிறுவனத்துக்கு துணிச்சல் வந்திருக்காது.
நீலகிரி மாவட்டத்தில் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.க்களாகவும், கலெக்டராகவும் வருபவர்கள் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் என அனைவருமே மகாவீர் நிறுவனத்துக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போதைய தி.மு.க. அரசின் தலைமைக்கும் தெரியவந்திருக்கிறது. இருந்தும் நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அறிகுறியும் கடந்த 3 மாதங்களாகத் தெரியவில்லை. மூடி மறைக்கவே உயரதிகாரிகளும் நினைக்கின்றனர்.
இந்தநிலையில், அரசு சொத்துக்கள் கொடாக் மகேந்திரா வங்கிக்கு சொந்தமானது என பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகியிருப்பதிலிருந்து தனது சொத்தினை எப்படி தமிழக அரசு மீட்கப் போகிறது? அரசு சொத்துக்களை தனது சொத்து எனக் காட்டி கடன் பெற்ற நிறுவனத்தின் மீதும், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை? நடவடிக்கை எடுக்கத் தடையாக இருப்பது எது?
ஒரு கம்பெனி மட்டுமே மோசடி செய்த குத்தகைத் தொகை ரூ.1,650 கோடி. மீதமுள்ள 10 பெரிய எஸ்டேட்டுகள், 80 சிறிய எஸ்டேட்டுகள் அனைத்தையும் ஆய்வு செய்தால் இன்னும் பல ஆயிரம் கோடிகள் என குத்தகைத் தொகையில் நடந்துள்ள மோசடிகள் அம்பலத்துக்கு வரும். தவிர, மகாவீர் நிறுவனத்தால் வளைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசு சொத்துக்களின் மதிப்பும் லட்சம் கோடிகளைத் தாண்டும்.
கடந்த ஆட்சியின் மோசமான நிதி நிலையைச் சுட்டிக்காட்டும் தி.மு.க. அரசு, இத்தகைய மோசடிகள் மீது ஆக்ஷன் எடுத்தாலே தமிழக அரசின் கஜானா நிரம்பும் என்று சுட்டிக் காட்டுகின்றனர் கோட்டை அதிகாரிகள்.
இதுகுறித்து தற்போதைய நீலகிரி கலெக்டர் அம்ரீத்திடம் கேட்டபோது, "மகாவீர் நிறுவனம் உட்பட குத்தகை பாக்கி வைத்துள்ள நிறுவனங் களிடமிருந்து அதனை வசூலிப்பதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நிறைய வழக்குகள் இருப்பதால் அதனையெல்லாம் முடித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருக்கும் அரசு சொத்துக்களை மீட்கவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசாங் கத்தை யார் ஏமாற்றினாலும் தண்டிக்கப்படு வார்கள். கடந்த காலங்களில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்கு என்னிடம் பதில் இல்லை''‘என்கிறார் அழுத்தமாக.