மதுரையின் அடையாளங்களில் ஒன்றான யாதவா கல்லூரி தொடர்பாக, கடந்த இரணடு மாதங்களாக மதுரை நகரெங்கும் "16 கோடி எங்கே? கொள்ளைபோகிறது யாதவர் சமுதாயத்தின் சொத்து! பின்னணியில் அமைச்சர்கள்! பேராசிரியர்கள், நிர்வாகிகள் நீக்கம் ஏன்? திவாலாகும் நிலையில் கல்லூரி! அரசே முழு விசாரணை தொடங்கு!' என்ற போஸ்டர்கள் நகரெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சர் ஒருவரின் சம்பந்தியான கே.பி.எஸ். நவநீதகிருஷ்ணனுக்கும், ஜெ. காலத்து அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்குமிடையே, யாதவா கல்லூரி நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை, நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்நிலையில், மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம், யாதவா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் கல்லூரி செயற்குழு உறுப்பினர்களான வழக்கறிஞர் கோபி, வழக்கறிஞர் கேசவன் தலைமையில் புகார் கொடுத்தனர். இவ்விவகாரம் குறித்து கல்லூரியின் செயற்குழு உறுப்பினரான குணசேகரனிடம் பேசினோம்.
"1962-ல், யாதவா கல்லூரி கல்வி நிதி சங்கம் என்று ஆரம்பிக்கப்பட்டது. மதுரை, இராமநாத புரம், சிவகங்கை, முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் கோனார் சமுதாய இளைஞர்களை உயர் கல்வியின் பக்கம் திரும்பவைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டு, 1968ல் முதல்வராக இருந்த அண்ணா அடிக்கல் நாட்டினார். அடுத்து வந்த கலைஞர், யாதவா கல்லூரியை நடைமுறைக்கு கொண்டு வர உறுதுணையாக இருந்தார். யாதவா கல்வி நிதி சங்கத்தின் செயலாளராக நாகேந்திர கண்ணன் இருந்தார். அவருக்கு பிறகு, 2003-ல் தி.மு.க.வை சேர்ந்த ஏ.ஆர்.சந்திரன் பொறுப்புக்கு வர, 2007-ல் அவர் மறைவுக்கு பிறகு 2008-ல் நான்தான் யாதவா கல்வி நிதி சங்க செயலாளர் என்று, பதிவுத்துறை மற
மதுரையின் அடையாளங்களில் ஒன்றான யாதவா கல்லூரி தொடர்பாக, கடந்த இரணடு மாதங்களாக மதுரை நகரெங்கும் "16 கோடி எங்கே? கொள்ளைபோகிறது யாதவர் சமுதாயத்தின் சொத்து! பின்னணியில் அமைச்சர்கள்! பேராசிரியர்கள், நிர்வாகிகள் நீக்கம் ஏன்? திவாலாகும் நிலையில் கல்லூரி! அரசே முழு விசாரணை தொடங்கு!' என்ற போஸ்டர்கள் நகரெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சர் ஒருவரின் சம்பந்தியான கே.பி.எஸ். நவநீதகிருஷ்ணனுக்கும், ஜெ. காலத்து அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்குமிடையே, யாதவா கல்லூரி நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை, நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்நிலையில், மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம், யாதவா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் கல்லூரி செயற்குழு உறுப்பினர்களான வழக்கறிஞர் கோபி, வழக்கறிஞர் கேசவன் தலைமையில் புகார் கொடுத்தனர். இவ்விவகாரம் குறித்து கல்லூரியின் செயற்குழு உறுப்பினரான குணசேகரனிடம் பேசினோம்.
"1962-ல், யாதவா கல்லூரி கல்வி நிதி சங்கம் என்று ஆரம்பிக்கப்பட்டது. மதுரை, இராமநாத புரம், சிவகங்கை, முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் கோனார் சமுதாய இளைஞர்களை உயர் கல்வியின் பக்கம் திரும்பவைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டு, 1968ல் முதல்வராக இருந்த அண்ணா அடிக்கல் நாட்டினார். அடுத்து வந்த கலைஞர், யாதவா கல்லூரியை நடைமுறைக்கு கொண்டு வர உறுதுணையாக இருந்தார். யாதவா கல்வி நிதி சங்கத்தின் செயலாளராக நாகேந்திர கண்ணன் இருந்தார். அவருக்கு பிறகு, 2003-ல் தி.மு.க.வை சேர்ந்த ஏ.ஆர்.சந்திரன் பொறுப்புக்கு வர, 2007-ல் அவர் மறைவுக்கு பிறகு 2008-ல் நான்தான் யாதவா கல்வி நிதி சங்க செயலாளர் என்று, பதிவுத்துறை மற்றும் அரசு ஆணையை காண்பித்து அமைச்சர் ஒருவரின் சம்பந்தியான கே.பி.எஸ் நவநீதகிருஷ்ணன் பதவியேற்றார்.
இதை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் நந்தகோபால், கல்வி நிதி தொடர்பாக நாகேந்திர கண்ணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கு விசாரணையில், யாதவா கல்லூரியில் செயலாளராக இருப்பது சட்டவிரோதமானது என்று 2013-ல் தீர்ப்பு வர, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் கே.பி.எஸ் .நவநீதகிருஷ்ணன்.
இதுகுறித்து விசாரிக்க, சிறப்பு அதிகாரி சில்பா சதீஷ் குமாரை நீதிமன்றம் நியமித்தது. அவர் மீதும் பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளைக்கூற, ஓய்வுபெற்ற நீதிபதி இராஜேஸ்வரனை நியமித்தது நீதிமன்றம். அவர் யாதவர் கல்வி நிதி சங்கத்தை கலைத்துவிட்டு புதிதாக தேர்தலை அறிவித்தார். அதில் அமைச்சரின் சம்பந்தி அணி வெற்றிபெற்று நிர்வாகத்தை நடத்திவரும் நிலையில், கல்லூரியின் செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், பொருளாளர் கிருஷ்ணவேல் ஆகியோரிடம், "கல்லூரியின் நிரந்தர வைப்பு நிதி 16 கோடி எங்கே? கணக்கில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறதே?'' என்று செயற்குழு உறுப்பினர்களான சிவராமகிருஷ்ணனும், மணிசெல்வமும் கேள்வியெழுப்ப, பிரச்சனை பூதாகரமானது. இதனைத் தொடர்ந்து மொத்தக் கணக்கையும் பொதுக்குழுவில் வைக்க வேண்டுமென்று உறுப்பினர்கள் கேள்வியெழுப்ப, அதனையடுத்து, செயற்குழுவிலுள்ள 5 பேரை நீக்கி உத்தரவிடப்பட்டது. குழப்பங்கள் தொடர, கல்லூரி பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் என 35 பேரை நீக்கி நோட்டீஸ் அனுப்ப, தற்போது அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
யாதவ மக்களின் நிதியை சுருட்டியது மட்டுமல்லாமல், எங்களை போன்ற செயற்குழு உறுப்பினர்களையும், கல்லூரி பேராசிரியர்களையும் அமைச்சரின் ஆட்கள் மிரட்டுகின்றனர். தற்போது யாதவா கல்லூரி மொத்தமாக முடங்கியுள்ளது. இதற்கு முழுமுதற்காரணம் கே.பி.எஸ். மற்றும் ஆர்.வி.என்.கண்ணன், கிருஷ்ணவேல் ஆகியோர்தான். யாதவர் சமூகம் பெரும்பாடுபட்டு கொண்டுவந்த கல்லூரியை மீட்காமல் ஓயமாட்டோம்'' என்றார்.
20 வருடங்களாக கல்லூரியில் வேலை செய்யும் ஊழியர் கருணாநிதி, "செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் ஒரு அ.தி.மு.க. வெறியர். என் பெயர் கருணாநிதி என்பதாலயே என்னை பெயர் சொல்லி ஒருமை யில் அழைப்பார். கல்லூரி பொங்கல் விழாவில் நான் தி.மு.க. கரை வேட்டி கட்டி வந்ததில் பிரச் சனையாகி, என்னை அவருக்கு பிடிக்காது. இப்ப திடீரென கல்லூரியில் நிதிப் பற்றாக்குறை எனக்காரணம் கூறி என்னை நீக்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். என்னைப்போல் கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணிபுரியும் 35 பேரை திடீரென எந்த காரணமும் சொல்லாமல் நீக்கியிருக்கிறார்கள். எல்லோருக்கும் 50 வயதிற்கு மேலாகிறது. வேறெங்கும் சேரமுடியாத நிலையில் திக்கற்று நிற்கிறார்கள். நியாயம் கேட்டால், "நீங்களெல்லாம் உங்க அமைச்சரிடம் (ஜெ. காலத்து அமைச்சர்) போய் கேளுங்கடா' என்று ஒருமையில் பேசுகிறார். ஆனால் கே.பி.எஸ்ஸோ, அவரது சம்பந்தியான அமைச்சரோ, தமிழ்நாடு யாதவா கல்வி நிதி சங்கத்திலோ, யாதவா கல்லூரியிலோ உறுப்பினராகக்கூட இல்லை என்பதுதான் டுவிஸ்ட்டே!.
யாதவா கல்வி நிதி சங்கத்தில் ஜெ. காலத்து அமைச்சர் ஆரம்பத்திலிருந்தே உறுப்பினர். இதுவரை கல்லூரி நிர்வாகத்தில் தலையிட்ட தில்லை. ஆனால் அந்த அமைச்சர், கே.பி.எஸ். நவநீதகிருஷ்ணனை வைத்து கல்லூரியில் ஆதிக்கம் செலுத்தி, கல்லூரிப் பேராசிரியர்கள், நிர்வாகிகளை நீக்கியதோடு, 16 கோடி கல்வி
நிதியை சுருட்டியிருக்கிறார்கள். மேலும், மாணவர்களிடம் கல்விக் கட்டணத்திற்கு இதுவரை கணக்கே காட்டியதில்லை. எங்கள் சங்க பைலிலாவின்படி நிரந்தர வைப்பு நிதியை எக்காரணத்தைக் கொண்டும் எடுக்கக்கூடாது. அதிலிருந்து வரும் வட்டியைத்தான் செலவு செய்யவேண்டும். இப்படி ஊழல் மேல் ஊழல் செய்து கல்லூரியை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டார்கள்'' என்றார்.
துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், "16 கோடியை இந்த நான்கு மாதத்தில் சுருட்டி யிருக்கிறார்கள். அதற்கு கணக்கு கேட்டதற்கு யானைக்கு அல்வா வாங்கினோம் என்று சொல்வதுபோல் கல்லூரிக் கட்டடம் கட்டினோம் என்று சிறுசிறு கட்டடங்கள் மூன்றை காட்டுகிறார்கள். அதுவும் இன்னும் முடிவுறாமல் பாதியில் நிற்கிறது. பொதுக்குழு, செயற் குழுவில் அதற்கான சரியான கணக்கை எழுத்துப்பூர்வமாகக் காட்டி, நிர்வாகத்திலுள்ள 11 பேரை ஒப்புதல் கையெழுத்து கேட்க, உடனே 11 பேர்களில் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், சிவராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், கண்ணன், மணிசெல்வம் ஆகிய 5 பேரை நீக்கி உத்தரவிடுகிறார்கள்.
பொதுக்குழு உறுப்பினர்கள் 2,200 பேரை கூட்டித்தான் இவர்களை நீக்க முடியும். அப்படி பொதுக்குழுவை கூட்டினால் இந்த 16 கோடிக்கு கணக்கு காட்டவேண்டும். அது முடியாத வேலை. எனவே ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி எங்களை மிரட்டி, அவர்களின் ஊழலுக்கு அடிபணியவைக்கப் பார்க்கிறார்கள். ஏற்கெனவே 2009-ல் கல்லூரி ஆவணங்களை திருடிக் கொண்டு போய்விட்டார் கே.பி.எஸ்.நவநீத கிருஷ்ணன். அவர் 2013-ல் அதற்காக நீக்கப்பட்டவர். இதை இப்படியே விடமாட்டோம். யாதவ சொந்தங்களைத் திரட்டி, தமிழ்நாட்டளவில் பெரும் போராட்டத்தை முன்னெடுப் போம்" என்றார்
இதுதொடர்பாக, கே.பி.எஸ்.நவநீதகிருஷ்ண னை தொடர்புகொண்டால் லைனுக்கு வரவேயில்லை. அவர் சார்பாக, யாதவா கல்லூரியின் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் கூறுகையில், "தற்போது கல்லூரி நிதிப்பற்றாக்குறையில் இருக்கிறது. வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நிரந்தர ஊழியர்கள் இல்லை. சுயநிதிக் கல்லூரியின் கீழ் வேலையில் சேர்க்கப்பட்டவர்கள். நான் கே.பி.எஸ்.நவநீதகிருஷ்ணன் அணியில் நின்று வெற்றி பெற்றவன். அவர் தி.மு.க. அமைச்சரின் சம்பந்திதான். ஆனால் அதற்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு புரியவில்லை. கல்லூரியில் 23 கோடிவரை நிதி இருந்தது. அதில் 16 கோடியை மட்டும் கல்லூரி வளர்ச்சிக்காக எடுத்திருக்கிறோம். அதுவும் அனைவரின் ஒப்புதலோடுதான்'' என்றவரிடம், "பைலிலா படி எடுக்கக்கூடாதே?' எனக் கேட்கவும், "ஏற்கெனவே கல்லூரியில் செயலாளராக இருந்தவர்கள் நிரந்தர வைப்பு நிதியை கல்லூரி வளர்ச்சிக்காக எடுத்துச் செலவிட்டிருக் கிறார்கள். இவர்கள் எங்களுக்கெதிராக பொய்ப்புகார் பெட்டிஷனை போட்டதால் தற்போது ஒன்றிய அரசின் யு.ஜி.சி. அமைப்பு எங்கள் கல்லூரிக்கு நிதி கொடுப்பதையே நிறுத்தியுள்ளது. நான் எந்த கட்சியும் கிடையாது. அந்த கருணாநிதி சொல்வது பொய்''’என்று முடித்துக்கொண்டார்.
தமிழ்நாடு யாதவா கல்வி நிதி சங்கமும், யாதவா கல்லூரியும், யாதவர் சமூக மக்களின் நிதியில் உருவானது. இந்த நிதியில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான வர்களும் இதே சமூகத்தை சேர்ந்தவர்களே. அண்ணா தொடங்கிவைத்தபோது அதற்கு துணைநின்ற நாகேந்திர கண்ணனின் வாரிசுகளே கே.பி.எஸ்.நவநீதகிருஷ்ணன் அணிக்கு எதிராக வழக்கு போட்டிருப்பதும், இதில் தி.மு.க. அமைச்சர்களின் பெயர்கள் உருள்வதும், தென் மாவட் டத்தில் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு வேட்டு வைத்து விடுமோ என எண்ணத்தோன்றுகிறது என்கிறார்கள் அச்சமூகத்து பெரியவர்கள்.