தர்மபுரி மாவட்டம், மோளையனூர் பஞ்சாயத் தின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ஏற்கனவே ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கார் முன்பு தீக்குளிக்க தன்னை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தூண்டியதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக மற்றொரு மனுவை சென்னை உயர்நீதி மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ளார்.
அதில், "உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், தன்னுடைய பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துகளைக் குவித்துள்ளார். பினாமி பெயரிலும் சொத்துகளை வாங்கியுள் ளார். அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தநிலையில்... மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ். துரைசாமி ஆஜராகி வாதிட் டார். அரசுத் தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழ கன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாருக்கு முகாந் திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்ப கட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். எனவே, பதிலளிக்க 4 வாரம் அவகாசம் வேண்டும்’என்றார். இதை ஏற்றுக்கொண்டு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
2016-ல் 2.4 கோடியாக இருந்த முன்னாள் அமைச்சரின் சொத்து மதிப்பு 2021-ல் 19.27 கோடியாக காட்டப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண் டில் மட்டுமே 670 சதவீதம் முறைகேடாக சொத்து சேர்த்துள்ளார் என குற்றம்சாட்டப் பட்டுள்ள நிலையில்... லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் விசாரணையில் 1500 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதை முன்வைத்து விசாரிக்கத் தொடங்கிய போது, அவருடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் மற்ற நம்பிக்கையான பினாமிகளிட மும் சொத்துக்கள் இருந்தாலும். "இதை முழுமை யாக கட்டுக்கோப்பாக பார்த்து கே.பி.யிடம் கணக்கை ஒப்படைப்பது ரைட்டும், லெப்டுமாக திகழும் கேபி.யின் சொந்த மச்சான் செந்தில்தான்' என்கிறார்கள். அந்த வகையில் கல் குவாரியி லிருந்து, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பெட் ரோல் பங்க், லேண்ட் என பினாமி பெயரிலுள்ள சொத்துக் கணக்குகள் என அவரது சொத்துப் பட்டியல் நீள்கிறது.
தர்மபுரி பாளையம்புதூரில் மலையை 200 அடிக்கு மேல் குடைந்து, ரூ 20 கோடி மதிப்பில் எம்.சாண்ட் கிரஸ்ஸர் கே.பி. மச்சான் மனைவி பெயரிலும், அங்குராஜ் பெயரிலும் நடந்து வருகிறது. அதை எடுத்துச்செல்ல கே.பி.ஏ. என்ற பெயர்ப் பலகையுடன் லாரிகள் ஓடுகின்றன. அதேபோல மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி நடுவிலுள்ள குப்பங்கரையில் குறைந்தபட்சமாக 100 ஏக்கர் பரப்பிலான 5 மலைகள், மாணிக்கம் மனைவி மல்லிகா பெயரிலும், அதற்கு மிக்ஸிங் செய்ய 10 மிக்ஸிங் லாரிகள் கே.பி. மகன் சசிகுமார் பெய ரிலும் அடிலம் ஊராட்சியில் இயங்கிவருகின்றன.
பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் ஆர்.எம்.சி. ரெடிமெட்ஸ் கிரஷ்ஷர் செந்தில் பெயரில் உள்ளது. இப்படி தர்மபுரி முழுவதுமுள்ள முன் னாள் அமைச்சரின் கல்குவாரிகளுக்கு இங்கிருந்த மைன்ஸ் அதிகாரி ஜெயபால் உடந்தையாக இருந்துள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் இவரை மாற்றி தற்போது விஜயலட்சுமியைக் கொண்டுவந்துள்ளனர். அவரும்கூட முன்னாள் அமைச்சருக்கு முழுமையாக விசுவாசியாகவே இருந்துவருகிறாராம். இந்த ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.300 கோடிக்குமேல் இருக்கும்.
தர்மபுரி விஜயமகால் எதிரிலுள்ள பெட் ரோல் பங்க் சத்தியநாராயணனுக்குச் சொந்த மானது. இது தர்மபுரியிலே முதல் பெட்ரோல் பங்கும்கூட. ரூ 20 கோடி மதிப்பிலான இந்த பெட்ரோல் பங்கை, அவர் கொடுக்கவேண்டிய குறைந்த பணத்திற்காக மிரட்டி, அமைச்சரின் மச்சான் செந்தில் பெயரில் மாற்றியுள்ளார். அதேபோல மொரப்பூர் சாலையிலும் பினாமி சரவணன் பெயரில் பெட்ரோல் பங்க் உள்ளது. காரியமங்கலம் பைபாஸ் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க், பி. மோட்டிப்பட்டி பெட்ரோல் பங்க் என ரூ 40 கோடி மதிப்பிலான பங்குகள் கே.பி.யினுடையவை.
அரூர் -திருப்பத்தூர் செல்லும் வழியில் பி.டி.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி, கல்வியியல் கல்லூரி என 60 ஏக்கரில் அ.தி.மு.க. அரூர் ஒன்றியச் செயலாளர், முன்னாள் அரசு வழக்கறிஞர் பசுபதியின் மனைவி பொன்மலர் பெயரிலுள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ.100 கோடி. ரூ.25 கோடி மதிப்பிலான பாலக்கோடு ராதா மெட்ரிக் பள்ளி பினாமி மாரியப்பன் பெயரிலுள்ளது. மூகாம்பிகை கலைக் கல்லூரி கே.பி.யின் பினாமியான கோவிந்தராஜு பெயரிலும், அதேபோல தானப்பா கவுண்டர் மெட்ரிக் பள்ளி கெரகடஹள்ளியில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.200 கோடி.
காரியமங்கலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அன்பு மருத்துவமனை கே.பி.யின் மாப்பிள்ளை ரவிசங்கர் பெயரிலுள்ளது. சர்வே எண் 4284/1, 284/2 என 300 ஏக்கரில் காரியமங்கலத்தில் பைஷஹள்ளி மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான பணி தொடங்கியுள்ளனர். இந்த இடத்தை தீபா, தீபக்குமார், வைஷ்ணவி என பல பேரில் பதிவு செய்து பிறகு 2020 பிப்ரவரி 5-ஆம் தேதி சந்திர மோகன் பெயரில் 5 பத்திரமாக ரிஜிஸ்டர் செய்துள்ள னர். இப்படி ஒட்டுமொத்தமாக ரூ.550 கோடி மதிப் பீட்டில் கே.பி.யின் சொத்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி நேதாஜி பஸ் ஸ்டாண்ட் ரோடு பகுதியில் அரை ஏக்கர் பரப்பில் சுற்றிச் சுவர் எழுப்பப்பட்ட கட்டடம், தர்மபுரி பேருந்து நிலையம் பின்புறமாக ஏ.வி. திரையரங்கு இருந்த அரசுக்குச் சொந்தமான இடத்தை லீஸுக்கு எடுத்ததும் கே.பி. அன்பழகனின் பினாமிகள்தான். மொரப்பூர் ரோடு சிவகுமார் பெயரில் ரூ.20 கோடி மதிப்பிலான 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதே சிவகுமார் மருமகன், மகன் பெயர்களில் மாட்டலம்பட்டி ஊராட்சியில் 84 ஏக்கர் நிலம் உள்ளது. பூலாப்பட்டி கிராமத்தில் ரவிசங்கர், சரவணன் பெயரில் 10 ஏக்கர் வீதமும், கிருஷ்ண கிரியில் கேஸ் ஏஜன்ஸி ரூ.25 கோடியிலும், சுமார் ரூ.30 கோடி மதிப்பில் செந்தில் மனைவி பெயரில் கொல்லஹள்ளி கிராமத்தில் 20 வீடுகளும் உள்ளன. சென்னை நுங்கம்பாக்கத் தில் சிவகுமார் பெயரில், ரூ.20 கோடியில் சொகுசு வீடு, கர்நாடகாவில் பினாமி பாபுலால் சேட்டு என்பவரிடம் ரூ.200 கோடி மதிப்பிலான உடைமைகள் உள்ளன. செந்தில்குமாரின் டெக்ஸ்டைல்ஸ் விரிவாக்கத்திற்கு கர்நாடகா மாநிலம் மைசூர் பாண்டே டிப்டூரில் ரூ.100 கோடி கொடுத்துள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் தர்மபுரி மாவட்ட வளர்ச்சி நிதி, பொது சுகா தாரப்பணி நிதி இவற்றில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தையுமே மருமகன் ரவிச் சந்திரன் பெயரிலே எடுத்துச் செய்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் வழக்கு தொடுத்த வரை கே.பி. ஆதரவாளர்கள் கடத்தி வைத் துள்ளதாகவும் ஆதாரங்களைக் கொடுத்துவிடும் படி மிரட்டிவருதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கல்வி உதவித்தொகையில் கையாடல் நடந்துள்ளதாக எழுந்த புகாரில் 52 கல்லூரிகளின் பெயர்கள் அடிபட... விஜிலன்ஸ் விசாரணை நடந்துவருகிறது. இந்தப் புகாரிலும் அப்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பெயர் அடிபடுகிறது.
வழக்கை விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ரூ.1500 கோடிக்கும் அதிகமான சொத்து விவரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் கசிந்துவரும் நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் அன்பழகனிடம் கேட்ட போது, "கிருஷ்ணமூர்த்தி என்பவர் சேர்மன் சீட் கொடுக்காத காரணத்தால், என்மேல் புகார் கொடுத்துள்ளார். அவரை நாங்கள் ஏன் கடத்தி வைக்கவேண்டும்? அளவுக்கு அதிகமாக சொத் துக்கள் இருக்கின்றது என்றால் லஞ்ச ஒழிப்புத் துறை அதை கையகப்படுத்திக் கொள்ளட்டும். இவையனைத்தும் என் மேலுள்ள காழ்ப் புணர்ச்சியின் பேரில் மேற்கொள்ளப்படும் செயல்கள்''” என்றார் ஒரே போடாக.