Advertisment

150 கோடி நிலம்! ஆட்டையைப் போட்ட அரசு ஊழியர்கள்!

ss

ரசு பணியில் உள்ளவர்களே போலி ஆவணங்களை தயாரித்து, 150 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தத் திட்டமிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Advertisment

land

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அவலப்பள்ளி கிராமத்திலுள்ள சர்வே எண்.544-ல் 8 ணீ ஏக்கர் நிலம் மேய்க்கால் புறம்போக்காக இருந்துள்ளது. 2000ஆம் ஆண்டு, தமிழக அரசு, அந்த நிலத்தில் 2 ணீ ஏக்கர் நிலத்தை வண்ணார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுத்துள்ளது. மீதமுள்ள இடம் மேய்க்கால் நிலமாகவே விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 8 ணீ ஏக்கர் நிலமும் கிருஷ்ணப்பா என்பவருக்கு சொந்தமானது போன்றும், இவரின் வாரிசு என 7 பேரும், இந்த ஏழு பேரின் வாரிசுக ளாகக் காட்டி மேலும் 8 பேர் என மொத்தம் 15 பேருக்கு சொந்தமான நிலம் என்பதாக போலிப்பட்டா உருவாக்கி, அதில் ஆட்சியர் உத்தரவு, பட்டா, எஸ்.எல்.ஆர். போலி வாரிசுச் சான்

ரசு பணியில் உள்ளவர்களே போலி ஆவணங்களை தயாரித்து, 150 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தத் திட்டமிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Advertisment

land

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அவலப்பள்ளி கிராமத்திலுள்ள சர்வே எண்.544-ல் 8 ணீ ஏக்கர் நிலம் மேய்க்கால் புறம்போக்காக இருந்துள்ளது. 2000ஆம் ஆண்டு, தமிழக அரசு, அந்த நிலத்தில் 2 ணீ ஏக்கர் நிலத்தை வண்ணார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுத்துள்ளது. மீதமுள்ள இடம் மேய்க்கால் நிலமாகவே விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 8 ணீ ஏக்கர் நிலமும் கிருஷ்ணப்பா என்பவருக்கு சொந்தமானது போன்றும், இவரின் வாரிசு என 7 பேரும், இந்த ஏழு பேரின் வாரிசுக ளாகக் காட்டி மேலும் 8 பேர் என மொத்தம் 15 பேருக்கு சொந்தமான நிலம் என்பதாக போலிப்பட்டா உருவாக்கி, அதில் ஆட்சியர் உத்தரவு, பட்டா, எஸ்.எல்.ஆர். போலி வாரிசுச் சான்றிதழ்கள் எனத் தயாரித்து, ஒசூரில் சார்பதி வாளர் அலுவலகத்தில் கடந்த 5ஆம் தேதி, சார்பதிவாளர் ஜெயசீலராணி பதிவு செய்துள்ளார்.

மொத்தமுள்ள 8 ணீ ஏக்கர் நிலமும் 1970ஆம் ஆண்டு கொடுத்தது போன்று பட்டாவில் உள்ளது. அந்த பட்டாவில் கொடுக்கப் பட்ட ஆண்டில் அப்போதைய ஆட்சிய ராக இருந்தவர் பி.சங்கரன். 1969ஆம் ஆண்டிலிருந்து 1971ஆம் ஆண்டுவரை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். ஆனால் அதே பட்டாவில் மாவட்ட ஆட்சியர் பெயர் சபரி என உள்ளது. இத னால் இவர்கள் தயாரித்திருப்பது போலிப் பட்டா என உறுதிசெய்துள்ளனர். மேலும் அதே பட்டா, 24.6.2000ஆம் ஆண்டு வண்ணார் சமூக மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சர்வே எண் 544, மேய்க்கால் புறம்போக்கு என உள்ளது. பிறகெப்படி இவர்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும்? இதுகுறித்து எவ்வித விசாரணையும் செய்யாமலே எப்படி பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்க முடியும்? மேலும், வாரிசு சான்றிதழும் இவர்களாகவே போலியாகத் தயாரித்துள்ளனர். பட்டா, வாரிசு சான்றிதழ் என அனைத்தையும் இவர்களாகவே தயாரித்து பத்திரப்பதிவு செய்துள்ளனர் என்பது வெட்டவெளிச் சமாகத் தெரியவந்துள்ளது. இதற்கு சார்பதிவாளர் பல கோடி பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது அந்த இடத்தை விற்பனை செய்வதற்காக சூர்யா முரளி, சந்திரசேகர் உள்ளிட்ட 15 பேரும் சத்தியனுக்கு பவர் கொடுத்துள்ளனர். இதில் மிக முக்கியமாக, மாநகராட்சி ஆணையரின் பி.ஏ.வாக உள்ள சூர்யா முரளி, அரசியல்வாதிகள், மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பெரும்பாலானோர் தங்களுக்கு தெரிந்தவர்களாக இருப்பதால், போலி ஆவணத்தை உருவாக்கி, அங்குள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

Advertisment

இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, "எங்களுக்கு அரசு கொடுத்த நிலத்திலிருந்து உடனே காலி செய்ய வேண்டுமென்றும், இங்கு பெரிய நிறுவனம் வரப்போவதாகவும் திடீரென எங்கள் பகுதியில் வந்து அது அனைத்தும் எங்களின் நிலம், உடனடியாக காலிசெய்ய வேண்டும் என்றும், இங்கு பெரிய நிறுவனம் வருவதாகவும் பேசியது கேட்டு பதறிப்போனோம். பின்னர் விசாரித்தபோது, அதுபோல் எதுவும் நடக்காதென்றும், எங்களை சும்மா மிரட்டியுள்ளார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததால் மக்கள் அமைதியாக இருந்தனர். பின்னர் அதிகாரிகளே விசாரித்துப் பார்த்தபோது தான் சார்பதிவாளர் பவர் கொடுத்துள்ள சம்பவம் கசிந்து, தற்போது பெரிதாக வெடித்துள்ளது'' என மக்கள் தெரிவித்தனர்.

land

ஓசூர் முழுவதும் இப்படித்தான் ஆட்கள் இல்லாத இடம், பஞ்சமி நிலம், ஏரி, குளம், குட்டை என அனைத்தையும் சார்பதிவாளர்களே பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதுகுறித்து உடனே முழுமையான விசா ரணைக்கு உத்தரவிட்டால் இதுபோல் பல இடங்கள் சிக்கும் எனக் குற்றம்சாட்டுகிறார்கள். இவ்விவகாரம் குறித்து சார்பதிவாளர் ஜெயசீலராணியிடம் கேட்டபோது, "நாங்கள் ஜி.பி. மட்டுமே போட்டுக்கொடுத்தோம். அதன்பிறகு அதனை கேன்சல் செய்துவிட்டோம்'' என்றவரிடம், "பவர் கொடுக்கும் போதே பத்திரத்தை சரிபார்க்காமல் எப்படி கொடுக்க முடி யும்?'' எனக் கேட்டதற்கும், "நீங்கள் கோடியில் பணம் பெற்ற தாகச் சொல்லப்படுகிறதே'' எனக் கேட்டதற்கும் எந்த பதிலும் சொல்லாமல் மழுப்பி தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரிடம் கேட்டபோது, "இது தொடர்பான புகார் எங்க ளுக்கு வந்தது. மாவட்ட சார்பதிவாளரிடம் விசாரித்தபோது 8 ஏக்கர் நிலத்திற்கான பவர் ஆஃப் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அது தொடர்பான விசாரணைக்குழு அமைத்து விசாரித்து வருகிறோம். மேலும், இதில் தொடர்புடைய போலி ஆவணம் தயாரித்தவர்களையும் போலீஸ் தரப்பு விசாரணை செய்து வருகிறது. கூடிய விரைவில் விசாரணை முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். வேலியே பயிரை மேய்வதுபோல், அரசு நிலத்தை அபகரிக்க சார்பதிவாளரே துணைபோவதை என்னவென்பது?

-சே

nkn210525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe