.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற. வாக்கி டாக்கி, சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதல் ஊழல் வழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. இதில் காவலர் தொடங்கி எஸ்பி வரையிலான 14 போலீஸ் அதிகாரிகளும், நான்கு நிறுவனங்களும் குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதியன்று, " காவல்துறைக்குத் தேவையான ரேடியோ, சி.சி.டி.வி. உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப உப கரணங்கள் வாங்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது. இதற்கான பணிகளை காவல்துறையின் தொழில் நுட்ப சேவை பிரிவு மேற்கொண்டது. உபகரணங் களை கொள்முதல் செய்ய பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக புகார் கள் உள்ளன. ஆகையால், இதனைக் கவனத்தில் கொண்டு உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும்''’என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், "அப்படியெல்லாம் நடைபெற வில்லை'' என அப்போதே மறுப்பு தெரிவித்திருந்தார் அன்றைய மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார்.

walki-talki

இதனால் கண்டும் காணாமல் இருக்க, மீண்டும் நவம்பர் மாதம் 13-ம் தேதியன்று "ஊழல் புகாருக்குள் ளான டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள காவல்துறை தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி.,யை அதே பதவியில் வைத்துக் கொண்டு, இந்த ஊழல் தொடர்பான அலுவலகக் கோப்புகளை பத்திரமாக வைத்திருந்த அமைச்சுப் பணியாளர் ராஜாசிங்கை மட்டும் திடீரென்று ராமநாதபுரத்திற்கு மாற்றியிருப்பது ஆதாரங்களை அழிக்கும் முதற்கட்ட முயற்சியோ என்ற வலுவான சந்தேகம் எழுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை தன்னுடைய நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும்'' என்று மீண்டும் வாக்கி டாக்கி ஊழலை மையப்படுத்தி அறிக்கை விட்டார் தி.மு.க. தலைவர். இதே வேளையில், ஆளுநரிடமும் புகாராக தெரிவிக்கப் பட்டது. புகாரினை தொடர்ந்து தி.மு.க. சார்பில் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர, வேறு வழியில்லாமல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதியன்று எஸ்பி அன்புச் செழியன் கூடுதல் எஸ்.பி.க்கள் ரமேஷ், உதயசங்கர் உள் ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான இடங் களில் சோதனையை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை.

"காவல்துறைக்கு பத்தாயிரம் வாக்கி டாக்கிகள் தேவை என்றும், ஒரு வாக்கி டாக்கி ரூ.47,560 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்ட நிலையில், ஒரு வாக்கி டாக்கி ரூ.2.08 லட்சம் என்ற விலை அளவில் வெறும் 4 ஆயிரம் வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்துள்ளது காவல்துறையி லுள்ள தொழில்நுட்பப்பிரிவு. அரசு நிர்ணயித்த தொகையைக் காட்டிலும் பல மடங்கு தொகை உயர்த்திக் கொடுக்கப்பட்டு ரூ.83.45 கோடி கொள்முதல் ஒப்பந்தம் செய்யப் பட்டதாக புகாரினைப் பெற்று விசாரணையை துவக்கினோம். தொடர் ஆவண சேகரிப்புக்கள் மூலமும், பெறப்பட்ட வாக்குமூலங் கள் மூலமும் இந்த வழக்கினைப் பதிவு செய்துள்ளோம்'' என்கின்ற னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

முதல் தகவல் அறிக்கையில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு களான 120(பி)- கூட்டுச்சதி, 465- போலி ஆவணம் பயன்படுத்துதல், 468- ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணம் தயாரித்தல், 471- போலி ஆவணத்தை உண்மை என உபயோ கப்படுத்துதல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு- 13(2) r/w 13(1) (c) & (d) and 7, 7(A), 15 r/w 13(1). உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளாக தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி.யான அன்புச் செழியன், ஏ.டி. எஸ்.பி.க்கள் ரமேஷ் மற்றும் உதயசங்கர், தொழில்நுட்ப பிரிவின் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. லதா, இன்ஸ்பெக்டர்களான மோகன், தமிழரசன், மாரியப்பன், மைதிலி, ஞானமுருகன், ஞானவேல் மற்றும் அஜிதா, எஸ்.ஐ.க்களான தனபால், ஆண்டனி முத்து தங்கராஜ் மற்றும் ஜெயந்த் உள்ளிட்ட போலீஸ் அதி காரிகளுடன் கொள்முதல் நிறுவனங் களான வி லிங்க் நிறுவனம் மற்றும் லுக்மேன் நிறுவனம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவரோ, "தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யின் அனுமதி இல்லாமலேயே தொழில் நுட்ப பிரிவு எஸ்.பி.யும் ஆய்வாளரும் சேர்ந்து லுக்மேன் எலக்ட்ரோ ப்ளாஸ்ட் நிறுவனத்தின் சி.சி.டி.வி.க்கள் 308 காவல் நிலையங் களில் நல்ல முறையில் இயங்கி வருவதாக உண்மைக்கு மாறான சான்றிதழை வழங்கி அதன் மூலம் ஊழல் செய்துள்ளனர். இது தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. அளித்த அறிக்கையின் மூலம் அம்பல மானது குறிப்பிடத்தக்கது'' என்கிறார்.

வாக்கி டாக்கி ஊழல் விவகாரத்தை பொறுத்தவரையில் இதில் தொடர்புடைய எஸ்.பி. அன்புச்செழியன் உள்ளிட்ட மற்ற அதிகாரி கள் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. எனினும், எஸ்.பி. அன்புச்செழியன் மட்டும் வண்டலூரில் உள்ள பயிற்சி அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற காவல்துறையினர் அனைவரும் தொடர்ந்து டி.ஜி.பி. அலு வலகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், காவல்துறையில் நடந்த இந்த முறைகேடு தொடர்பான முதல் தகவல் அறிக்கை இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment