ந்தியாவிலேயே தூய்மையான நகரங்கள் என்ற பட்டியலில்,  தொடர்ந்து எட்டு ஆண்டு களாக முதலிடத்தை பிடித்துவரும் இந்தூர் நகரம், தற்போது பலராலும் விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கிறது. என்ன காரணம்?

Advertisment

மத்திய பிரதேசத்தை பா.ஜ.க. அரசு ஆண்டுவருகிறது. இம்மாநிலத்திலுள்ள இந்தூர் நகரிலுள்ள பாகீரத்புரா பகுதியில், நகராட்சி சார்பாக விநியோகிக்கப்படும் குடிநீரில், கடந்த          சில நாட்களாக கழிவுநீர் கலந்து வந்திருக்கிறது. இந்நிலையில்,  கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, இந்த குடிநீரைக் குடித்ததில் இப்பகுதியிலுள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. பலர், வாந்தி, கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Advertisment

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதுபோல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனைகளில் அட்மிட் ஆனதில், இதுவரை 14 பேர் வரை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். உயிரிழந்த வர்களில் 8 பெண்களும், ஆறு மாதக் குழந்தை ஆவ்யான் சாஹுவும் அடக்கம். விவகாரம் பெரிதா னதும், நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதாக அப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.

up1

ஆவ்யான் சாஹுவின் தந்தை கூறுகையில், "டிசம்பர் 26 அன்று, ஆவ்யான் சாஹுக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பக்கத்திலிருந்த மருத்துவ ரிடம் அழைத்துச் சென்றோம். ஆனால் மருந்து கொடுத்தும் உடல்நலம் சரியாகவில்லை. வயிற்றுப்போக்கு தொடர்ந்த நிலையில், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி மாலையில் உடல்நிலை மோசமாகவும் மீண்டும் மருத்துவரிடம் அழைத்துச்சென்றோம். பரிசோதித்த மருத்துவரோ, ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறினார். எங்கள் மகன் ஆவ்யான் எங்களைவிட்டுப் பிரிந்து விட்டான். இனியும் இதுபோல் யாருக்கும் நடக்கக் கூடாது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Advertisment

இதுகுறித்த விசாரணையில், அப்பகுதியில் குடிநீர் குழாய்க்கு மேலாக கழிவு நீர்க்குழாய் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த கழிவு நீர்க்குழாய் பாதுகாப்பான முறையில் கட்டப்படவில்லை. எனவே கழிவு நீர் கசிந்து, குடிநீர்க்குழாயினுள் புகுந்திருக்கிறது. இந்த நீரையே தொடர்ச்சியாக அருந்தியதில் ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியிலிருக்கும் சுமார் 2,700 வீடுகளில் அரசு மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாகக்கூறி, ஒரு துணைப் பொறியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு, குடிநீர் வழங்கல் துறையை சேர்ந்த இரண்டு உயரதிகாரி கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வளவு பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுள்ள இந்தூர் நகரமானது, ஒன்றிய அரசின் 'சுவச் சுவேஷான்' திட்டத்தின் கீழ், கடந்த 8 ஆண்டு களாகத் தொடர்ச்சியாக, இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மோசமான கழிவு நீர், குடிநீர் கட்டமைப்பை கொண்டுள்ள நகரத்தை எப்படி தூய்மை நகரமென்று அறிவித்தார் கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

up2

சம்பவம் நடந்துள்ள சட்டமன்றத் தொகுதியில் தான் பா.ஜ.க.வை சேர்ந்த நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா வெற்றிபெற்றுள்ளார். ஓர் அமைச்சரின் தொகுதியிலேயே இவ்வளவு பெரிய அசம்பா விதம் நடந்துள்ளது கடுமையான விமர்சனத் துக்குள்ளாகியிருக்கிறது. பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருக்கும் மக்களை மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் இதுவரை இந்திய பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கா மல் மவுனம் காத்துவருவதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர் சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்தூரில் விநியோ கிக்கப்பட்டது தண்ணீர் அல்ல, விஷம். அரசு நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. துர்நாற்றம் வீசும் தண்ணீர் குறித்து மக்கள் பலமுறை புகாரளித்தபோதும், புகார்கள் மீது நட வடிக்கை எடுக்கவில்லை. குடிநீரில் கழிவுநீர் எவ்வாறு கலந்தது? சரியான நேரத்தில் கழிவுநீர் விநியோகம் ஏன் நிறுத்தப்பட வில்லை? இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலில்லை. பா.ஜ.க.வின் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் அலட்சியமான நிர்வாகமே முழுப்பொறுப்பு. ஏழைகள் இறக்கும் போதெல்லாம், பிரதமர் மோடி வழக்கம் போல் மவுனமாக இருக்கிறார்'' எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.