12 லட்சம் தபால் ஓட்டு! அ.தி.மு.க.வின் கொல்லைப் புறக் கணக்கு

dd

"2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வீட்டிலிருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கலாம். தேர்தல் நேரத்தில் அத்தியாவசியப் பணியில் இருப்போரும் தபால் மூலம் வாக்களிக்கலாம்' என்கிற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, எதிர்க்கட்சிகள் மத்தியில் சூறாவளியைக் கிளப்பியிருக்கிறது.

postalvote

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவல் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களும் தபால் வாக்குகளை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதியோர் -மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டுகளைப் பயன்படுத்தி ஆளுந்தரப்பினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக தி.மு.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேர் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள். தபால் ஓட்டு மூலம் இவர்களை அரசு அதிகாரிகள் துணையுடன் தனக்கு சாதகமாக்க முயற்சிக்கும் அ.தி.மு.க., நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையும் "மாற்றுத்திறனாளிகள்' எனக் குறிப்பிட்டு, தபால் வாக்குகளால் தங்களுக்கு சாதகமாக்கலாம் எனத் திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளது. அதிகாரத்தின் துணை யுடன் ஆளுந்தரப்பு முறைகேடு செய்வதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்யும் புகாரில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை அறிய களமிறங்கினோம்.

மதுரை திருமங்கலத்துக்கு அருகேயுள்ள ஒரு வி.ஏ.ஓ அலுவலகத்துக்குச் சென்றபோது, ஊர்த்தலையாரியும் அலுவலகத்திற்குள் நுழைந் தார். வி.ஏ.ஓ.விடம் அவர், ""சார் நம்ம கிராமத் திலுள்ள 80 வ

"2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வீட்டிலிருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கலாம். தேர்தல் நேரத்தில் அத்தியாவசியப் பணியில் இருப்போரும் தபால் மூலம் வாக்களிக்கலாம்' என்கிற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, எதிர்க்கட்சிகள் மத்தியில் சூறாவளியைக் கிளப்பியிருக்கிறது.

postalvote

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவல் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களும் தபால் வாக்குகளை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதியோர் -மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டுகளைப் பயன்படுத்தி ஆளுந்தரப்பினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக தி.மு.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேர் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள். தபால் ஓட்டு மூலம் இவர்களை அரசு அதிகாரிகள் துணையுடன் தனக்கு சாதகமாக்க முயற்சிக்கும் அ.தி.மு.க., நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையும் "மாற்றுத்திறனாளிகள்' எனக் குறிப்பிட்டு, தபால் வாக்குகளால் தங்களுக்கு சாதகமாக்கலாம் எனத் திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளது. அதிகாரத்தின் துணை யுடன் ஆளுந்தரப்பு முறைகேடு செய்வதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்யும் புகாரில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை அறிய களமிறங்கினோம்.

மதுரை திருமங்கலத்துக்கு அருகேயுள்ள ஒரு வி.ஏ.ஓ அலுவலகத்துக்குச் சென்றபோது, ஊர்த்தலையாரியும் அலுவலகத்திற்குள் நுழைந் தார். வி.ஏ.ஓ.விடம் அவர், ""சார் நம்ம கிராமத் திலுள்ள 80 வயதைக் கடந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்குச் சென்று 12டி படிவத்தில் கையெழுத்தும், கைநாட்டும் வாங்கிட்டேன். அடுத்து என்ன பண்ணணும் சார்?'' என்று கேட்க, ""சரிபா, எல்லாத் தையும் எடுத்து வை'' எனக்கூறிவிட்டு அவரை அனுப்பினார்.

தலையாரி சென்றபிறகு வி.ஏ.ஓவிடம், ""என்ன சார் நடக்கிறது?'' என்றோம். ""எல்லாம் தேர்தல் கமிஷன் உத்தரவுப் படிதான் செய்கிறோம். 12டி படிவத்தில், 80 வயதைக் கடந்த முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளி களின் பட்டியல், பூத் வாரியாக அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு வந்துவிட்டது. பட்டியலில் உள்ளவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு 80 வயது பூர்த்தியடைந்தததையோ, மாற்றுத்திறனாளி என்பதையோ உறுதி செய்து, தபால் வாக்குச் சீட்டு அளிக்குமாறு அவர் களின் கோரிக்கையுடன் கையெழுத்து வாங்கச் சொல்லி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இப்போது அந்த வேலையைத்தான் செய்கிறோம். 10 பேர்கள் வரை வாங்கிக் கொடுத்தால் தலையாரிக்கு 200 ரூபாய் கமிஷனாக வந்துவிடும்'' என்றார்.

postalvote

அதோடு, ""சார் என்னைக் காட்டிக்கொடுக்க மாட்டீர்களென்றால் ஒன்று சொல்கிறேன்'' என்ற வேண்டுகோளோடு, ""கிராம நிர்வாக அலுவலர்கள், சத்துணவுப் பணியாளர்கள், தலையாரிகள் அடங்கிய குழு ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, முதியோர்களைப் பராமரிப்பவர்களின் கைகளில் தலைக்கு ரூ.2000 கொடுத்து, வெறும் கையெழுத்து மட்டும் வாங்கிவருகிறார்கள். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஓட்டுச்சீட்டு, அந்தந்த தாலுகாவிற்கு வந்து அது எங்களிடம் பிரித்துக் கொடுக்கப்படும். அதை ஏற்கனவே கையெழுத்து வாங்கிய படிவத்தில் வைத்து, இங்குள்ள தேர்தல் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு ஆளும்தரப்பிற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு, அதை மாவட்டத் தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். இதுகுறித்து லோக்கல் அ.தி.மு.க.வினரிடம் கூட தெரிவிக்கக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளது.

இது எதிர்க் கட்சிகளுக்குத் தெரிந்து விட்டதால் கோர்ட்டுக்குப் போய்விட்டார்கள். தற்போது இதில் மாற்றம் செய்துள்ளார்கள். அதன் படி, 12டி படிவத்தை தேர்தல் அலுவலகத்திற்கு முன்ன தாகவே அனுப்பி விடவேண்டும். முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வீட்டில் தபால் ஓட்டுப் போடும்போது தேர்தல் அதிகாரிகள் நேரில்வந்து வாக்காளர்களிடம் அதற்கான வாக்குச்சீட்டைக் கொடுத்து, வாக்குப்பதிவு செய்வதை வீடியோ எடுக்கவேண்டும் என்று அறிவிப்பு வர... தற்போது தலையாரி 12டி படிவத்தைக் கொடுக்கும்போதே postalvoteபணப் பட்டுவாடாவையும் முடிக்குமாறு வாய்மொழி உத்தரவு வந்துள்ளது.

தமிழகத்திலுள்ள மொத்த வாக்காளர்களில், 80 வயது கடந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே 10% பேர் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில்தான் ஆட்சியைத் தக்க வைத்தது அ.தி.மு.க அரசு. இம்முறை 10% வாக்காளர்களின் தபால் ஓட்டு மூலம் எதிர்க்கட்சியினரின் வெற்றியை ஆளுங்கட்சியால் முறைகேடாகத் தடுத்திட முடியும்"" என்றார்.

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவிக்கையில், ""பூர்த்தி செய்யப்பட்ட 12டி படிவத்தை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலு வலர்களிடம் மார்ச் 16-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்த பட்டியல், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படவுள்ளது. வரும் 28-ம் தேதி, தபால் வாக்களிப்பவர்களின் வீட்டுக்கே சென்று வழங்கப்படும். வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர், மைக்ரோ அப்சர்வர் மற்றும் வீடியோகிராபர்கள் அடங்கிய குழுவினர் முன்னிலையில் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, வாக்களித்த பின் வாக்குச்சீட்டுகள் திரும்பப் பெறப்படும். இவையனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும். இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பேயில்லை''’என்றார்.

உயர்நீதிமன்றமும் தபால் வாக்களிக்கும் முதியோர் -மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் பட்டியலை தி.முக.. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவேண்டும் என உத்தரவிட்டிருப்பது, ஆளுங்கட்சியின் வெற்றிக்கணக்கிற்கு லேசாக பிரேக் போட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஹக்கீம் இதுகுறித்து கூறுகையில், ""என்னதான் வீடியோ பதிவு எடுத்தாலும், முன்னதாகவே பணப் பட்டுவாடா நடப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு அதிகமுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தினால்தான் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும். பீகாரில் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறும் வாய்ப்பு 99% இருந்தும், மிகக்குறைவான வாக்கு வித்தி யாசத்துடன் அதிக இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றதன் பின்னணி இதுதான்'' என்றார்.

postalvote

தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ் நம்மிடம், “""கொரோனா கால பாதுகாப்பை முன்னிட்டு இதுவரை நடைமுறையில் இல்லாத இப்படிப்பட்ட தபால்ஓட்டு முறையைக் கொண்டுவந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 80 வயது முதியவரின் தபால்ஓட்டு அவரது வீட்டில் பதிவு செய்யப் படும்போது, அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரின் ஏஜெண்டுகளும் உடனிருக்கலாம் என்றும், தேர்தல் ஆணையத்தின் சார்பிலான அலுவலர்கள், வீடியோகிராபர்கள் ஆகியோரும் உடனிருக்கலாம் எனத் தெரிவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையே 15 முதல் 20 வரை வரும். இத்தனை பேர் முதியவர்களைச் சுற்றி இருப்பதே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்கு நேர் எதிரானது. அதுபோல, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுப்பவர்களும் தபால்ஓட்டு போடலாம் என்கிறது தேர்தல் ஆணையம். மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களிடம் இது சாத்தியமா? இப்படி பல குழப்பங்கள் இதில் உள்ளன. அதுமட்டுமின்றி, வீட்டுக்கு வந்து பதிவு செய்யப்படும் தபால் வாக்குகள் சரியான முறையில் -உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு செல்லப்படுமா என்ற சந்தேகமும் இருப்பதால், நீதிமன்றத்தை நாடினோம்''’என்றார்.

எதிர்த்தரப்புக்கு விழும் தபால்ஓட்டுகளை தேர்தல் அலுவலர்களைக் கொண்டு நிராகரித்து, முடிவுகளையே மாற்றும் ஆளுந்தரப்பின் நடவடிக்கையை கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் மக்கள் பார்த்தனர். அதேநேரம், தேர்தல் அலுவலர் துணையுடன் ஆளுந்தரப்புக்கு சாதகமாக தபால் ஓட்டுகளைக் கையாள்வதில் இம்முறை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முனைப்பாக செயல்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், 80 வயது வாக்காளர்களிடம், தபால் ஓட்டுகளைத் தவிர்த்து நேரடியாக வாக்களிக்குமாறு தி.மு.க. தரப்பில் பூத்வாரியாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 16-ந் தேதியுடன் தபால் ஓட்டுக்கானப் படிவத்தை கோரும் கால அவகாசம் நிறைவடைந்துவிட்டது. தமிழகம் தழுவிய அளவில் 1 லட்சத்திற்கோ அதற்கு குறைவாகவோ முதியோர் தபால் ஓட்டுகள் பதிவானால் தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எண்ணிக்கை அதிகமானால் நெருக்கடிதான். அசந்தால் ஆட்டை யைப் போட ஆளும்தரப்பு காத்திருக்கையில், அசால்ட்டா இருந்தா பீகார் நிலைமைதான் தமிழகத்திற்கும்.

- கவுதமன்

nkn200321
இதையும் படியுங்கள்
Subscribe