Advertisment

11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு! மனம் குளிர வைத்த மலேசிய பிரதமரின் அறிவிப்புகள்! -சி.மகேந்திரன்

dd

வ்வொன்றுக்கும் ஒரு தொடக்கம் இருப்பதைப் போல, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கும் ஒரு தொடக்கக் கதை இருக்கிறது. எல்லீஸ் கால்டுவெல் போன்றவர்களின் ஆய்வுகள்தான் தமிழ், திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழி என்பதையும், சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்தது என்பதை பொய்யுரை என்றும் நிரூபித்தன.

Advertisment

இதன் பின்னர்தான் தமிழின் தொன்மையை, உலகம் தெரிந்துகொள்ளத் தொடங் கியது. இதைப் போலவே இரண்டாம்கட்ட முயற்சியாக அறுபதுகளில் தனிநாயகம் அடிகளால் இந்த ஆராய்ச்சிச் சிந்தனை முன்னெடுக்கப்பட்டது என்றால் அது மிகையானது அல்ல.

dd

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவனாகயிருந்த காலத்திலேயே, அடிகளார் உலக ஒப்பீட்டு ஆய்வுகள் குறித்த சிந்தனையை தொடங்கியிருந் தார். பிற்காலத்தில் தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பொறுப்பிலிருந்த வி.ஐ.சுப்ரமணியம், யுனோஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றிய செம்மொழி போராட்ட நாயகன் மணவை முஸ்தபா போன்றவர்கள், அவரோடு அன்று இணைந்து பணியாற்றியவர்கள். 1961ஆம் ஆண்டில் டெல்லி மாநாடு ஒன்றில் செழுமையடைந்து, மலேயாவில் முதல் மாநாடு நடக்கக் காரணமாக அமைந்தது.

Advertisment

1966ஆம் ஆண்டு. மலேயாப் பல்கலைகழத்தில் அடிகளார் பேராச

வ்வொன்றுக்கும் ஒரு தொடக்கம் இருப்பதைப் போல, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கும் ஒரு தொடக்கக் கதை இருக்கிறது. எல்லீஸ் கால்டுவெல் போன்றவர்களின் ஆய்வுகள்தான் தமிழ், திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழி என்பதையும், சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்தது என்பதை பொய்யுரை என்றும் நிரூபித்தன.

Advertisment

இதன் பின்னர்தான் தமிழின் தொன்மையை, உலகம் தெரிந்துகொள்ளத் தொடங் கியது. இதைப் போலவே இரண்டாம்கட்ட முயற்சியாக அறுபதுகளில் தனிநாயகம் அடிகளால் இந்த ஆராய்ச்சிச் சிந்தனை முன்னெடுக்கப்பட்டது என்றால் அது மிகையானது அல்ல.

dd

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவனாகயிருந்த காலத்திலேயே, அடிகளார் உலக ஒப்பீட்டு ஆய்வுகள் குறித்த சிந்தனையை தொடங்கியிருந் தார். பிற்காலத்தில் தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பொறுப்பிலிருந்த வி.ஐ.சுப்ரமணியம், யுனோஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றிய செம்மொழி போராட்ட நாயகன் மணவை முஸ்தபா போன்றவர்கள், அவரோடு அன்று இணைந்து பணியாற்றியவர்கள். 1961ஆம் ஆண்டில் டெல்லி மாநாடு ஒன்றில் செழுமையடைந்து, மலேயாவில் முதல் மாநாடு நடக்கக் காரணமாக அமைந்தது.

Advertisment

1966ஆம் ஆண்டு. மலேயாப் பல்கலைகழத்தில் அடிகளார் பேராசிரியராகப் பொறுப் பேற்றிருந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநாட்டை கோலாலம்பூர் மலேயா பல்கலைக் கழகத்தில் நடத்தினார். உலகின் பல தமிழறிஞர்கள் இதில் பங்கேற்றனர் அன்றைய பிரதமர் துங் அப்துல் ரஹ்மான் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தமிழ் கல்சர் என்ற ஆங்கிலக் காலாண்டிதழும் தொடங் கப் பெற்றது. இப்பொழுது நடை பெற்ற 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், இதே மலேயா பல் கலைக்கழகத்தில் மேனாள் பிரதமர் துங் அப்துல் ரஹ்மான் அரங்கில்தான் நடைபெற்றது. இன்றைய பிரதமர் டத்தோ ஸ்ரீஅன்வர் இப்ராஹிம் தொடங்கி வைத்தார்.

இன்றைய மலேயாப் பிரதமருக்கு, வேறு யாருக்கும் அமையாத அரசியல் பாதை அமைந்திருந்தது. இவர் தனது விட்டுக் கொடுக்காத உறுதியான இயல்பால் 13 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்றவர். கிராமப் பகுதியில் ஒரு எளியக் குடும்பத்தில் பிறந்த இவர் தந்தையார், ஒரு மருத்துவமனையில் சுமை தூக்குபவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். மலாய் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் அன்வர். இதனால் இவரது மாநாட்டு உரை இலக்கியம், தமிழ்மொழியின் மீது அக்கறை கொண்டதாக இருந்தது.

11

நல்ல ஆங்கிலத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினார். அறிவிப்புக்கள் ஒவ்வொன்றாக வெளியிட, அரங்கு நிறைந்த மக்கள் கரவொலி மாமன்றத்தை அதிர வைத்தது. பிரதமர், மாநாட் டிற்கு ஒரு கோடி ரூபாய், மலாய் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர்ச்சிக்கு இரண்டு கோடி ரூபாய், தமிழ் பள்ளிகள் வளர்ச்சிக்கு 2 கோடி என்றார். தமிழ் மொழியின் செவ்விலக்கியங்கள் அனைத்தும் மலாயா மொழியில் மொழிபெயர்க்கப்படும் என்றார். எப்பொழுதும எதிலும் உற்சாகம் கொண்டவராகக் காணப்படும் நக்கீரன் ஆசிரியர் தம்பி கோபால் அருகில் இருந்தார். அவர் என்னைப் பார்த்தார். அவரை நான் பார்த்தேன். எங்கள் இருவரின் உற்சாகமும் அதன் எல்லையைத் தொட்டுக்கொண் டிருந்தது.

அன்வர் இப்ராஹிம் தலைமையில் அமைந்த அரசு, தன்னை ‘ஒற்றுமை அரசு’ என்று அழைத்துக் கொள்கிறது. யாருமே பெரும்பான்மை பெற முடியாததால், எல்லாக் கட்சி களையும் இணைத்து ஒரு தேசிய அரசை உருவாக்கு தற்கு இவர் முயற்சித் தார் . சில கட்சிகள் பங் கேற்க மறுத்து விட்டன. ஒற்றுமை அரசின் மூலம் புறக்கணிக்கப் பட்டிருந்த தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்து வேன் என்ற உறுதியை மாநாட்டில் அளித்துள்ளார்.

மாநாட்டில் ஆய்வரங்கங்கள் சிறப் புடன் செயல்பட்டன. மொத்தம் 1200 ஆய்வறிஞர்கள் கலந்துகொண்டார்கள். தமிழ்நாடு இதில் அதிக எண்ணிக்கை. 460 பேர். சிங்கப்பூரிலிருந்து 80-க்கும் அதிக மானவர்கள் பங்கேற்றிருந்தார்கள். உலகம் முழுவதிலிருந்தும் 60 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் மாநாட் டில் கலந்துகொண்ட னர்.

11

சித்த மருத்துவம் பற்றி 70 ஆய்வு அறிக் கைகள் வாசிக்கப் பட்டன. இது பெருந் தொற்றுக்குப் பின்னர் ஏற்பட்ட புதிய தேடலாகும். இலக்கியம், இணையம், சுற்றுச் சூழல் என்று பல துறை சார் அறிஞர்கள் அரங்குகளில் பங் கேற்றனர்.

மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, தொல் திருமாவளவன், நக்கீரன் கோபால், வைகைச் செல்வம், செந்திலதிபன், தோழர்கள் பாலபாரதி, மதுக்கூர் ராமலிங்கம், சுப.வீரபாண்டியன் ஜவஹிருல்லா, வேல் முருகன், பழ.கருப்பையா, பெ.மணியரசன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். புகழ்மிகுந்த கல்வெட்டு கீழடி ஆய்வாளர் அமர்நாத் சிறந்த ஆய்வு ஒன்றை வழங்கினார்.

மாநாட்டில் மற்றொரு முக்கியமான செய்தி, தமிழக அரசின் பல்துறைகளில் துறைச் செயலாளராகப் பணியாற்றிய உயர் அதிகாரி, நேர்மையாளர் என்று பெயர் பெற்ற நிர்மலா அவர்கள், நெசவாளர் வாழ்வைப் பற்றிய ஒரு ஆய்வு அறிக்கையை முன்வைத்தார். கைத்தறித் துறையில் தலைமைப் பொறுப்பிலிருந்த இவர், ஒரு பட்டுச்சேலையை ஆய்வரங்கில் காட்டினார். அதில் 1330 குறள்களும் பொறிக்கப்பட்டிருந்தது. நிறைவு விழாவில் இணையத்தின் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய உரை ஒளிபரப்பப்பட்டது.

dd

மாநாட்டின் தலைவர் மாரிமுத்து, செயலாளர் நந்தன் மாசிலாமணி ஆகிய இருவரும் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றாலும், இவ்வளவு பெரிய பணியை ஒருங் கிணைத்து சிறப்பாக செய்து முடித்திருக்கும் நந்தன் மாசிலாமணிக்கு என்னுடைய பாராட்டு களை தெரிவித்துக் கொள்கிறேன்.

11

மாநாட்டில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு. மலேயா பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆய்வுத் துறையைச் சார்ந்த பேராசிரியர் டாக்டர் ராஜேந்திரன் ஆற்றிய உரை அனை வரையும் முகம் சுளிக்க வைத்தது. ‘தமிழ்நாட்டில் இருந்து வந்த குப்பைகள் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்’ தோழர் பாலபாரதி மேடையிலேயே தனது எதிர்ப்பை அவரிடமே தெரிவித்தார். இவரும் தனிநாயகம் அடிகள் பணியாற்றிய துறையில் இப்பொழுது பணி யாற்றுவதாகத் தெரிகிறது. முதல்நாள் பேசிய தமிழகத் தலைவர்களின் பேச்சை தவறாகப் புரிந்துகொண்ட இவர், ஒரு உலக மாநாட்டில், தான் என்ன பேசுகிறோம் என்பதை அறியாம லேயே, தரக்குறைவாக பேசத் தொடங்கி விட்டார். தமிழ்நாட்டு மக்களுக்கும், மலேயா பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான நேயத்தை அவருடைய உரை சேதப்படுத்திவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

nkn290723
இதையும் படியுங்கள்
Subscribe