நவம்பர் 30ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சிவகங்கை மாவட்டம், நாச்சியார்புரம் காவல் எல்கைக்குட்பட்ட விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில், காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற (TN 39 N 0198) அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (TN 63 N 1776) அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி 11 உயிர் களை பலிகொண்டது. விபத்தில் காயமடைந்தவர் களை அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர் களும் மீட்டு 108 ஆம்பு
நவம்பர் 30ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சிவகங்கை மாவட்டம், நாச்சியார்புரம் காவல் எல்கைக்குட்பட்ட விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில், காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற (TN 39 N 0198) அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (TN 63 N 1776) அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி 11 உயிர் களை பலிகொண்டது. விபத்தில் காயமடைந்தவர் களை அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர் களும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை களுக்கு அனுப்பி வைத்தனர்.
"திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி இடையே விரிவாக்கம் செய்யப்படாத குறுகிய பழைய சாலையிலேயே வாகனங்கள் இன்றுவரை பயணிக் கின்றன. அச்சாலையானது, வளைவுகள் நிறைந்தும், ஆங்காங்கே குறுகலாகவும் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்றவண்ணம் உள் ளது. சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தபோது புதிதாக நான்கு வழிச் சாலை அமைக்கும் பணியை தொடங்கியது தேசிய நெடுஞ்சாலைத்துறை. ஆதலால் நமக்கெதற்கு இந்த வீண் செலவு என மாநில நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கத் திட்டத்தை கைவிட்டது. சுமார் நான்காண்டு காலமாகியும் நான்கு வழிச்சாலை திட்டம் முழுமை பெறவில்லை. அதே வேளையில் குறுகிய பாதையும் விரிவாக்கம் செய்யப்பட வில்லை. இதனாலேயே இந்த விபத்து நடந்துள்ளது. இத்தனை உயிர்களைப் பலி கொண்டுள்ளது'' என்கிறார் கும்மங்குடி பகுதியைச் சேர்ந்த ரவி சரவணன்.
விபத்து நடந்ததும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்தில் ஆஜராகி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி னர். இதே வேளையில், விபத்தில் பலியானவர் களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் அறிவித்துள்ளது தமிழக அரசு. சிவகங்கை அரசுப் பேருந்து விபத்தில் காயமடைந்து, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர் களை அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் பிரேம் நசீர் கூறுகையில், "அரசுப் பேருந்துகளில் தற்காலிக ஓட்டுநர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். தற்பொழுது இந்த விபத்தில் திண்டுக்கல் சென்ற அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சுதாகர் தற்காலிக ஓட்டுநரே. அனுபவமிருந்தால் இது நடந்திருக்காது. கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி மண்டலத்தில் 40 சதவீதம் தற்காலிக ஓட்டுநர்களே உள்ளனர். இந்த விபத்திற்கு இவர்களே காரணம்'' என்றார். விபத்துக்கான காரணங்களை புரிந்து கொண்டு தங்கள் செயல்பாடுகளை மறுசீராய்வு செய்யுமா மாநில நெடுஞ்சாலைத் துறையும், போக்குவரத்துத் துறையும்?
-நாகேந்திரன்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us