மிழக அரசின் விளம் பரங்களை பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் விளம்பர ஏஜென்ஸிகள் மூலம் கொடுத்து வருகிறது தமிழக செய்தித்துறை. இதற்காக ஒவ்வொரு வருடமும் பல நூறு கோடிகள் ஒதுக்கப்படு கின்றன. அரசின் அந்த விளம் பரங்களை மாஜி மந்திரி வேலு மணிக்கு நெருக்கமான விளம்பர நிறுவனத்துக்கே அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தற்போது சர்ச்சை கள் வெடிக்கின்றன.

Advertisment

இதுகுறித்து கோட்டையில் விசாரித்தபோது, ‘"அரசின் திட் டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லவும், முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி உட்பட அரசு சார்பில் நடத்தப்படும் அத்தனை நிகழ்ச்சிகளையும் மக்களுக்கு தெரியப் படுத்தவும் அரசு சார்பில் விளம்பரம் செய்யப்படுகிறது.

Advertisment

dd

இதற்காக கடந்த நிதியாண்டில் கொடுக்கப்பட்ட 127 அரசு விளம்பரங் களுக்காக கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களில் மட்டும் விளம்பர ஏஜென்சிகளுக்கு ரிலீஸ் செய்யப்பட்ட தொகை 24 கோடியே 78 லட்சத்து 84 ஆயிரத்து 826 ரூபாய்.

இதில், கே.எஸ்.ஸ்மார்ட் என்ற நிறுவனத்துக்கு மட்டுமே அதிக அளவில் விளம்பரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் இந்த நிறு வனத்துக்காக ரிலீஸ் செய்யப் பட்ட தொகை 61 லட்சத்து 36 ஆயிரத்து 224 ரூபாய்.

அதேபோல, கடந்த பிப்ரவரியில் 2 கோடியே 84 லட்சத்து, 98 ஆயிரத்து 796 ரூபாயும் (மொத்தம் 12 விளம்பரங்கள்), மார்ச் மாதத்தில் 7 கோடியே 50 லட்சத்து 37 ஆயிரத்து 721 ரூபாயும் (மொத்தம் 33 விளம்பரங்கள்) கே.எஸ்.ஸ்மார்ட் நிறுவனத்துக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொடுக்கப்பட்ட 64 விளம்பரங்களில், கே.எஸ். ஸ்மார்ட் மற்றும் கே.எஸ். ஸ்மார்ட் சொலுயூசன்ஸ் நிறுவனத்துக்காக மட்டும் 33 விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன. ஆக, கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனத்துக்காக 10 கோடியே 96 லட்சத்து 72 ஆயிரத்து 741 ரூபாய் விளம்பரக் கட்டணமாக கொடுத்திருக்கிறது செய்தித்துறை.

dd

கடந்த நிதியாண்டின் இறுதியிலான இந்த 3 மாதத்தில் அரசு விளம்பரங் களுக்காக கொடுக்கப்பட்டதோ 24 கோடி ரூபாய். இதில், சுமார் 11 கோடி ரூபாய் கே.எஸ். ஸ்மார்ட்டிற்கு மட்டுமே தந்துள்ளனர்.

இந்த கே.எஸ்.ஸ்மார்ட் நிறுவனம் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் மகன் அசோக் அன்பரசன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹரிஹரனின் மகன் சுஷ்மித் ஆகியோர் இணைந்து நடத்தும் நிறுவனம். தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. நிறுவனத்தை உயர்த்திப் பிடிக்கிறது செய்தித்துறை. இந்த விளம்பர விவகாரங் களில் விஜிலென்ஸ் என்கொயரி நடத்தி னால் இன்னும் பல வில்லங்கம் பூதாகர மாகும்''”என்கிறது கோட்டை வட்டாரம்.

இதுகுறித்து கருத்தறிய துறையின் இயக்குநர் மோகன் ஐ.ஏ.எஸ்.சை தொடர்புகொண்டபோது, அவர் முதல்வருடன் ஜப்பான் பயணத்தில் இருப்பதால் தொடர்பு கிடைக்கவில்லை. கூடுதல் இயக்குநர் சிவ.சரவணனை தொடர்பு கொண்டபோது,”"எல்லா விளம்பர ஏஜென்சிகளுக்கும் விளம்பரங் கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எந்த ஒரு நிறுவனத்துக்கும் சலுகை காட்டவில்லை. காழ்ப்புணர்ச்சியால் சிலர் பொய்களைப் பரப்புகிறார்கள்'' என்கிறார்.

Advertisment