10வது பொதுத் தேர்வு! ஆன்லைன் வகுப்பு! கல்வியாளர்கள் எதிர்ப்பு!

tt

பேரிடரால் விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கும் சூழலில் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதி இல்லாத ஏழை எளிய மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்திலுள்ள, மத்தியப் பாடத்திட்டப் (சி.பி.எஸ்.இ./ ஐ.சி.எஸ்.இ.) பள்ளிகள் உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகள் இணையதள வழியாக வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்தத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அரசுப் பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளி களும் இத்தகைய வகுப்பு நடத்துவதை அரசு அனுமதிக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி பெற்றோரை இணையதள வகுப்பிற்கானக் கருவிகளைப் பெற்றுத் தர வற்புறுத்தக் கூடாது.

oo

அதையும் மீறி, பேரிடர் காலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் கட்டா யப்படுத்தி இணைய வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துவது குழந்தைகள் உரிமை மீறல்’என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பியுள்ள பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர

பேரிடரால் விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கும் சூழலில் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதி இல்லாத ஏழை எளிய மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்திலுள்ள, மத்தியப் பாடத்திட்டப் (சி.பி.எஸ்.இ./ ஐ.சி.எஸ்.இ.) பள்ளிகள் உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகள் இணையதள வழியாக வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்தத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அரசுப் பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளி களும் இத்தகைய வகுப்பு நடத்துவதை அரசு அனுமதிக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி பெற்றோரை இணையதள வகுப்பிற்கானக் கருவிகளைப் பெற்றுத் தர வற்புறுத்தக் கூடாது.

oo

அதையும் மீறி, பேரிடர் காலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் கட்டா யப்படுத்தி இணைய வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துவது குழந்தைகள் உரிமை மீறல்’என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பியுள்ள பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் நாம் பேசியபோது, ""தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. இணையதள வகுப்பு என்பது அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பைத் தராது. பாகுபாடு உடையது. காரணம், நமது நாட்டில் 49 சதவீத மக்கள்தான் இணைய வசதியை பயன்படுத்திக்கொண்டிருக் கிறார்கள். ஒரு நல்வாழ்வு அரசு அனைத்து மாணவர்களின் நலன் சார்ந்துதான் முடிவுகள் எடுக்க வேண்டுமே தவிர, வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தட்டுமே என்று சிலருக்கு மட்டுமே இருக்கக்கூடிய வாய்ப்பைக்கொண்டு அறிவிக்கக் கூடாது. இதனால், வசதியில்லாத மாணவர் களுக்கு மன உளைச்சலைத்தான் ஏற்படுத்தும். இணையதள வகுப்பறை என்பது கற்றலுக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், வகுப்பறைக் கற்றலுக்கு மாற்றாக இதைக் கருத இயலாது. அதனால், இணையதள வழியில் வகுப்பு நடத்தப்படுவதைப் பாடத்திட்ட வேலை நாளாகவோ நேரமா கவோ அங்கீகரிக்க இயலாது என அரசு திட்டவட்டமாக அறி விக்க வேண்டும்'' என்கிறவர், பத்தாம் வகுப்பு தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு தமிழக அரசிடமிருந்து திட்ட வட்டமான அறிவிப்பு வராததால் பெற்றோரும் குழந்தைகளும் பதட்டத்துக்கு ஆளாகியிருப்பது குறித்தும் பேசினார்.

""பல்வேறு சூழலில் இருந்து மீண்டும் பள்ளிக்கு வர இருக்கும் குழந்தைகளின் மன நிலை அச்சத்திலும், பதட் டத்திலும் இருக்கும். அதனால், நேரடியாகத் தேர்வு மையத்திற்கு வரச் சொல்வது ஒரு நியாயமற்ற நடவடிக்கை. எப்போது ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டுப் பள்ளிகள் திறக்கப்படு கிறதோ, அதிலிருந்து குறைந்தது 15 வேலை நாட்கள் வகுப்பு நடந்த பின்பே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் இறுதித் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் பள்ளி திறந்த பின் குறைந்தது 10 நாட்களுக்குப் பிறகு தேர்வு நடத்த வேண்டும். பதினொன்றாம் வகுப்பிற்கானப் பொதுத் தேர்வில் இறுதியாக நடக்க இருந்த ஒரு தேர்வு மட்டும் நடக்கவில்லை. பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் கல்லூரி சேர்க்கைக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்று ஏற்கனவே அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. சுகாதாரப் பேரிடர் உரு வாக்கியுள்ள அசாதாரண சூழலைக் கணக்கில் எடுத்து நடக்க வேண்டிய குறிப்பிட்ட அந்த ஒரு தேர்வை மட்டும் ரத்து செய்யலாம். அத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து பன்னிரெண்டாம் வகுப்பில் அமரச் செய்யலாம்'' என்று கோரிக்கை வைக்கிறார்.

aa

குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடும் தோழமை அமைப்பின் தலைவர் தேவநேயன் நம்மிடம், “ ""ஆன்லைன் வகுப்பு நடத்துவது, பள்ளி நடத்தாமலேயே தேர்வு நடத்துவது எல்லாம் மிகப்பெரிய அநீதி. குழந்தை உரிமை மீறல். அதாவது, நம்முடைய சமூக அமைப்பு ஒரே சமமானது அல்ல. சென்னை யில் உட்கார்ந்துகொண்டு கிராமப்புற குழந்தைகளை ஒரேமாதிரி பார்க்கக்கூடாது. கொரோனாவால் வேலை, சோறு கொடுக்க முடியல. சென்னைக்கு வெளியே லட்சக்கணக்கான குடும்பங்கள் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்படி ஆன்லைனில் படிக்கமுடியும்? அரசாங்கமே இதுபோன்ற தவறான அறிவிப்புகளால் இடைநிற்றலை அதி கரித்து குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், குழந்தைத் திருமணங்களை உருவாக்கிவிடக்கூடாது'' என்று எச்சரிக்கிறார்.

ஒவ்வொரு, இணைய நிறுவனங்களின் இணைய சேவையும் மாறுபடும். அதனால், சென்னையின் நடை பாதை மற்றும் ஏழை எளிய, கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளை தேர்வுகளையும் நடத்தக்கூடாது என்பதே கல்வியாளர்கள் பொது மக்களின் கருத்து.

ஊரடங்கு என்ற பெயரில் முடக்கப்பட்டதால் அரசுப் பள்ளி யில் படிக்கும் ஏழை மாணவர்களின் பெற்றோர் வருமானமின்றி தவிக் கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத் திற்கான வசதியையும் செய்யாமல், மாணவர்களுக்கான சத்துணவும் வழங்காமல் 50 நாட்களாக வஞ் சித்த அரசு, இப்போது அந்த ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ந் தேதி முதல் நடைபெறும் என அவசரம் காட்டுவது, அடிப் படை அறிவோ-அறமோ இல்லாத செயல்பாடு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

- மனோசௌந்தர்

nkn130520
இதையும் படியுங்கள்
Subscribe