எடப்பாடி ஆட்சியின் ஆயுள் காலம் இன்னும் 2 வருடங்களுக்கு இருந்தாலும் அதுவரை நீடிக்குமா என்பதில் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்குமே நம்பிக்கை இல்லை. அதனால் ஒவ்வொரு நாளும் போனஸ் நாள்தான் என நினைத்து கோடிகளை குவிப்பதிலும் சொத்துக்களை சேர்ப்பதிலும் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. பெருந்தலைகள்.
அந்த வகையில் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலத்தை கபளீகரம் செய்ய அமைச்சரிடம் பேரம் நடத்தியிருக்கிறார்கள் அ.தி.மு.க.வின் பவர்ஃபுல் எம்.எல்.ஏ.க்கள் இருவர். அவர்களுக்காக சீனியர் அமைச்சர் ஒருவர் கோதாவில் குதிக்க, பஞ்சாயத்து தற்போது எடப்பாடி வரை சென்றிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் வேலூரில் முகாமிட்டிருந்தாலும் இந்த விவகாரம்தான் கோட்டையிலும் அ.தி.மு.க.விலும் செம ஹாட் !
தமிழக பால்வளத்துறையின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்துக்கு பல இடங்களில் சொத்துக்கள் உண்டு. இந்த சொத்துக்களை அபகரிக்க ஆளும்கட்சி அரசியல்வாதிகள் முயற்சிப்பதும் பிறகு தடுக்கப்படுவதும் அடிக்கடி நடக்கும். அந்த வகையில், சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மெகா மார்ட் அருகில் ஆவினுக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலம் காலியாக இருக்கிறது. ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த 13 ஏக்கர் காலி நிலத்தின் மீது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நீண்ட நாட்களாக ஆசை! இந்த நிலத்தை அபகரிக்க தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.நகர் சத்யாவும், விருகை ரவியும் களத்தில் இறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது

இது குறித்து நம்மிடம் பேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ""தமிழகம் முழுவதும் 17 மாவட்ட பால் ஒன்றியங்கள் இருக்கின்றன. இவை அனைத்துமே ஆவின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இவற்றுக்கு சொந்தமாக பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. அந்த வகையில் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு சொந்தமானதுதான், சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையிலுள்ள 13 ஏக்கர் காலி நிலம்.
இந்த நிலத்தை காலியாக வைத்திருக் கக்கூடாது; தங்களின் சொந்த பயன்பாட்டுக்கு ஆவின் நிறுவனம் பயன்படுத்த வேண்டும் என நீண்ட வருடங்களாகவே அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது ஒன்றியம். நிலம் காலியாக இருந்தால் அதனை அரசியல்வாதிகள் அபகரிக்க துடிப்பார்கள் என்பதாலேயே அந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால், அரசும் சரி ஆவின் நிறுவனமும் சரி இதில் அக்கறை காட்டவில்லை.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடிக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கும் வலதுகரமாக இருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.நகர் சத்யாவும், விருகை ரவியும் இந்த 13 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்து பேசியுள்ளனர். அதாவது, நீண்ட வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருக் கும் அந்த நிலத்தை தங்களுக்கு 99 வருட குத்தகைக்கு தருமாறு கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் 30 சி தருவதாகவும் பேரம் பேசியுள்ளனர். ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், அமைச்சர் வேலுமணி மூலமாக ராஜேந்திர பாலாஜிக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது. வேலூர் தேர்தல் முடிந்ததும் இப்பிரச்சனையை சுமுகமாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்''’ என விவரித்தனர்.
இது குறித்து ஆவின் நிறுவன வட் டாரங்களில் விசாரித்தபோது, ""பிரமாண்டமான ஒரு ஷாப்பிங் மால் கட்டலாம் என்கிற நோக்கத்தில்தான் அந்த 13 ஏக்கர் நிலத்தையும் 99 வருட குத்தகைக்கு அமைச்சரிடம் பேரம் பேசினர். அவர் ஒத்துழைக்க மறுக்கவே, அட்லீஸ்ட் 25 வருட குத்தகைக்காவது கொடுக்கலாமே என எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்திய போதும் பிடிகொடுக்க மறுத்த ராஜேந்திரபாலாஜி, "உங்க யோசனைக்கு நான் சம்மதிக்க மாட்டேன். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களாக இருந்துகொண்டே நாமளே அரசு சொத்தை எடுக்க நினைப்பது சரி அல்ல. இதில் என்னை சமாதானப்படுத்த முடியாது. என்ன சொன்னாலும் நான் ஏற்கமாட்டேன்.
நான் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் போது, ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பிடி மண் கூட களவாடப்படக்கூடாது என நினைக்கிறேன். ஏன்னா, இந்த சொத்துக்கள் எல்லாமே பால் உற்பத்தியாளர்களுக்கு உரிமையானது. உண்மையைச் சொல்லணும்னா அவர்கள்தான் ஆவினுக்கே எஜமானர்கள். அதனால் என்னை கட்டாயப்படுத்தாதீர்கள்' என அழுத்தமாகச் சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார் அமைச்சர். மூடு அவுட்டான எம்.எல்.ஏ.க்கள் இருவரும் அமைச்சர் வேலுமணியிடம் இதனை விவாதித்திருப்பார்கள் போல. இதனையடுத்து வேலுமணி சிபாரிசு செய்தபோதும், எம்.எல்.ஏ.க்களுக்கு நிலத்தை தாரை வார்க்க மறுத்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது ஆவினுக்கு சொந்தமான திருச்சியிலுள்ள 4 ஏக்கர் நிலத்தை தி.மு.க.வினர் கையகப்படுத்த முயற்சித்தபோது இதனையறிந்த ஜெயலலிதா, பி.ஹெச்.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இதனையடுத்து, கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டனர் தி.மு.க.வினர். இதனை உணர்ந்துள்ளதால்தான் தற்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அபிலாஷைகளுக்கு ராஜேந்திரபாலாஜி ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையில், நிலத்தை காலியாகவே வைத்திருப்பதால்தான் அதன் மீது எல்லோருக்கும் ஆர்வம் வருகிறது என நினைத்து, ஆவின் உயரதிகாரிகளுடன் ஆலோசித்த ராஜேந்திர பாலாஜி, காலியாக உள்ள அந்த நிலத்தை மிக பயனுள்ளதாக மாற்ற என்ன செய்யலாம் என ஒரு ரிப்போர்ட் கேட்டுள்ளார்''’ என்கின்றனர் ஆவின் பணியாளர்கள்.
மேலும் இது குறித்து விசாரித்தபோது, ""ஒரு ஏக்கர் நிலம் என்பது 18 கிரவுண்ட் ! அந்த வகையில் 13 ஏக்கர் நிலமும் 234 கிரவுண்ட் என கணக்கிடப் படுகிறது. அந்த பகுதியில் வெளிச்சந்தையின் மதிப்பு சராசரியாக ஒரு கிரவுண்ட் நிலம் 5 கோடி ரூபாய் . அந்த வகையில் ஆயிரத்து 170 கோடி ரூபாய் மதிப்புமிக்க நிலத்தைத்தான் 99 வருட குத்தகை என்கிற பேரில் அபகரிக்கத் துடிக்கின்றனர். தற்போதைக்கு இதனை தடுத்து நிறுத்தியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இதற்கிடையே, வேலூர் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பிசியாக இருப்பதால் தேர்தல் முடிந்ததும் அவரிடம் பஞ்சாயத்தைக் கூட்டவும் திட்டமிட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் வலியுறுத்தலுக்கு உடன்படாத அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முதல்வர் எடப்பாடி வலியுறுத்தினாலும் அதே நிலையில் இருப்பாரா? என்பது அப்போதுதான் தெரியும்'' என்கின்றனர் ஆவின் அதிகாரிகள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தி.நகர் சத்யாவிடம் கேட்டபோது, ""அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நாங்கள் சந்திக்கவே இல்லை. எனக்கு பிஸ்னெஸ் மூடே கிடையாது. நான் எதற்கு ஷாப்பிங் மால் கட்டப்போகிறேன்? சம்பந்தப்பட்ட நிலத்தை இலவசமாக கொடுத் தால் கூட எனக்கு வேண்டாம். அதை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்? நிலத்தின் மீது எனக்கு ஆசையே கிடையாது. அப்படியிருக்க அந்த நிலத்தை எதற்கு அபகரிக்க வேண்டும்? அதனால் என்னைப் பிடிக்காதவர்கள் கிளப்பும் வதந்தி இது. என் மீதான குற்றச்சாட்டு அபத்தமானது; தவறானது'' என்கிறார் மிக அழுத்தமாக.
எம்.எல்.ஏ. விருகை ரவியின் கருத்தையறிய பல முறை முயன்றும் அவரது லைன் நமக்கு கிடைக்கவே இல்லை. நாட் ரீச்சபிள் நிலையிலேயே இருந்தது அவரது போன்.
தங்களுக்கு உரிமையுள்ள நிலத்தை அ.தி.மு.க.வினர் அபகரிக்க துடிப்பதையறிந்து கொந்தளித்துக் கிடக்கிறார்கள் காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர். அவர்களில் சிலரிடம் பேசியபோது, ""சென்னை நகரத்துக்குள் ஆவினுக்கு பால் பண்ணையே கிடையாது. அதனால் இந்த 13 ஏக்கர் நிலத்தில் புதியதாக ஒரு பிரமாண்டமான டைரியை கட்டலாம்.
அதன்மூலம் சென்னை மக்களுக்கு எளிதாக பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க முடியும். ஆவினுக்கும் போக்குவரத்து செலவு மிச்சமாகும். போக்குவரத்து செலவினங்களில் மட்டுமே மாதத்திற்கு பல கோடி ஆவினுக்கு லாபம் கிடைக்கும். அதனால், புதிதாக மில்க் டைரி அமைக்க அதிகாரிகள் முயற்சிப்பது நல்லது'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
-இரா.இளையசெல்வன்
படங்கள்: அசோக்