கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் 100 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி 23-ஆவது வேலை வாய்ப்பு முகாம் கடந
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் 100 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி 23-ஆவது வேலை வாய்ப்பு முகாம் கடந்த 26-ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்... சென்னை, ஓசூர், கோயமுத்தூர், திருப்பூர் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரபலமான நிறுவனங்கள் முதல் 220 நிறுவனங் களைச் சேர்ந்தவர்கள் முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை பணிக்கு எடுத்துக்கொண்டனர்.
இந்த முகாமை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற கு.நல்லூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி லோகநாயகி, "நான் கால் ஊனமுற்றவள். பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். குடும்பத்தை நடத்து வதற்கே கஷ்டப்பட்டு, கவலையில் இருந்தேன். எனக்கு ஓசூரிலுள்ள ஒரு கம்பெனியில் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள் ளது. இது என்னுடைய வாழ்க் கைக்கு உதவிகரமாக இருக்கும். என்னைப் போன்ற பலரது வாழ்க் கையிலும் வெளிச்சத்தை ஏற்றியுள் ளது இந்த முகாம்'' என்றார் நிறை வுடன். இதுபற்றி அமைச்சர் சி.வெ.கணேசன் கூறுகையில், "முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும்வகையில் வரும் டிசம்பருக்குள் 100 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2 லட்சம் பேருக்கு வேலைகளைப் பெற்றுத்தரத் திட்டமிட்டு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடந்த முகாம்களின் மூலம் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் தொடர்புப் பாலமாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. தமிழ்நாட்டில் வேலை இல்லாதவர்களே இல்லை என்கிற நிலையை உருவாக்க முதலமைச்சர் பாடுபட்டு வருகிறார். கலை அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்களுக்குக்கூட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது'' என்றார்.
வேலையற்றோருக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி!