10 ஆண்டுப் போராட்டம்! நிரபராதி என தீர்ப்பு! -நேர்மையான அதிகாரியின் துயரம்!

ff

கிட்டத்தட்ட நம்பி நாராயண ணின் கதைதான். ராக்கெட் விஞ் ஞானியான நம்பி நாராயணன் தேசத் துரோக முத்திரை குத்தப்பட்டு, இறுதியில் நிரபராதி என நிரூ பிக்கப்பட்டாரே அதேபோல, லஞ்சம் வாங்கினார் என சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப் பட்டு 43 நாள் சிறை, பத்தாண்டு விசாரணைக்குப் பின் குற்றச்சாட்டு களிலிருந்து விடுவிக்கப்பட் டிருக்கிறார் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூடுதல் டி.ஜி.யான சி. ராஜன்.

இந்த வழக்கின் விவரங்களைத் தெரிந்துகொள்ள நாம் 2010-க்குப் போகவேண்டும். சென்னையிலுள்ள "ஹன்சம் இந்தியா எலெக்ட் ரானிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட்' வளாகத்தில் டி.ஆர்.ஐ. நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங் களும், போனஸாக மியான்மர் நாட்டின் மிட்ஸின் என்பவர் கையெழுத்திட்ட செக் புத்தகமும் ஒரு ஐபேடும் கிடைத்தது.

இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இந்த சோதனைக்குக் காரணமான மூத்த அதிகாரி ராஜன், மார்ச் 6, 2012-ல் இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்க

கிட்டத்தட்ட நம்பி நாராயண ணின் கதைதான். ராக்கெட் விஞ் ஞானியான நம்பி நாராயணன் தேசத் துரோக முத்திரை குத்தப்பட்டு, இறுதியில் நிரபராதி என நிரூ பிக்கப்பட்டாரே அதேபோல, லஞ்சம் வாங்கினார் என சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப் பட்டு 43 நாள் சிறை, பத்தாண்டு விசாரணைக்குப் பின் குற்றச்சாட்டு களிலிருந்து விடுவிக்கப்பட் டிருக்கிறார் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூடுதல் டி.ஜி.யான சி. ராஜன்.

இந்த வழக்கின் விவரங்களைத் தெரிந்துகொள்ள நாம் 2010-க்குப் போகவேண்டும். சென்னையிலுள்ள "ஹன்சம் இந்தியா எலெக்ட் ரானிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட்' வளாகத்தில் டி.ஆர்.ஐ. நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங் களும், போனஸாக மியான்மர் நாட்டின் மிட்ஸின் என்பவர் கையெழுத்திட்ட செக் புத்தகமும் ஒரு ஐபேடும் கிடைத்தது.

இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இந்த சோதனைக்குக் காரணமான மூத்த அதிகாரி ராஜன், மார்ச் 6, 2012-ல் இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சி.பி.ஐ. யால் கைது செய்யப்பட்டார்.

f

அவரது பணிக்காலம் முடிய இரண்டரை ஆண்டுகள் இருந்த நிலையில் இந்த நடவடிக்கை. அத்தோடு எல்லாம் தலை கீழாக மாறின. அம்மா, மாமியார் மரணம், இளைய மகள் திருமணம் நின்றுபோனது, சமூகத்தின் ஏளனப் பார்வை என மொத்தத்தில் ஹீரோவிலிருந்து ஜீரோவாக மாறிவிட்டார் ராஜன்.

2010-ல் மிட்ஸினின் வங்கிக் கணக்கை ப்ரீஸ் செய்ததை நீக்குவதற்கு 10 லட்ச ரூபாய் ராஜன் லஞ்சம் கேட்டதாக புகார் சொல்கிறது சி.பி.ஐ. மிட்ஸின், ராஜன் இரு தரப்புக்கும் இடையில் குருவியான உபய துல்லா பேரம் பேசி 8 லட்சத்துக்குக் கொண்டுவந்ததாகவும், அதில் அட்வான் ஸாக கொடுக்கப்பட்டதுதான் ராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 2 லட்சம் எனவும், ராஜன் லஞ்சம் கேட்டதை சி.பி.ஐ.யில் உபயதுல்லா புகார் செய்ததையடுத்து அவரை கையும் களவுமாகப் பிடிக்கும் முயற்சியில் வெற்றிபெற்றதாக சொல்கிறது சி.பி.ஐ.

மாறாக ராஜனோ, மூத்த அதிகாரி களின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாததால், தான் பழிவாங்கப்பட்டு இந்தச் சதிவலையில் சிக்கவைக்கப்பட்டதாகக் கூறுகிறார். இரு பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கான கஸ் டம் டூட்டி கட்டாமல் ஏய்த்ததைத் தொடர்ந்து அவற்றுக்கு நோட்டீஸ் அனுப் பியதாகவும், அதைத் திரும்பப்பெற மூத்த அதிகாரிகள் சொல்லியபோது மறுத்ததால் பழிவாங்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

"மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு போன்கால் வந்தது. போன் செய்தவர், என்னைச் சந்திக்கவேண்டுமென கூறினார். அவரை எனது இளைய அதிகாரி ஒருவரைச் சந்தித்துப் பேசுமாறு கூறினேன்.

ஆனால் அவரோ என்னைச் சந்தித்தே ஆகவேண்டுமென வலியுறுத்தியதோடு, அலுவலகத்துக்கே வந்துவிட்டார். பிறகுதான் அவர் பிரபல குருவியான உபயதுல்லா எனத் தெரிந்தது.

அவரை நான் சந்திக்க மறுத்ததும், சி.பி.ஐ.யிடம் போய் நான் லஞ்சம் கேட்டதாகப் புகார் செய்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு நான் வீட்டுக்கு ஏழரை மணியளவில் வந்தேன்.

எனது டிரைவர் முருகேசன் கையில் ஒரு பிளாஸ்டிக் கவர், டிபன் பாக்ஸுடன் வந்தார். அது என்னவென்று கேட்க, ஒரு அண்ணன் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்ததாகச் சொல்ல, "எந்த அண்ணன்?' என்று கேட்டேன், பதிலில்லாமல் நின்றார். உடனே, "இதை அந்த அண்ணனிடமே திரும்பக் கொடு' என்றேன். அவர் அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

டிரைவர் முருகேசன் கவருடன் திரும்ப வருவதைப் பார்த்த சி.பி.ஐ. அதிகாரிகள், திரும்பவும் அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். அன்று நள்ளிரவுவரை என் வீட்டைச் சோதனை யிட்டனர். அன்று அதிகாலையே என்னைச் சிறையில் அடைத்துவிட்டனர். மூன்று நாள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அந்த மூன்று நாட்களிலும் அவர்கள் மொத்தத்தில் மூன்றே மூன்று கேள்விகள்தான் கேட்டனர்'' என்கிறார்.

நீதிமன்றத்தில் சி.பி.ஐ. 32 சாட்சிகளையும் 85 ஆவணங்களையும் முன்வைத்தது. ஆனால் அனைத் தையும் ராஜன் தரப்பு வழக்கறிஞர் முறியடித் திருக்கிறார்.

"லஞ்சப் பணம் காரில் பிடிபட்டதால் ராஜன் கார் சீட் சோடியம் கார்பனேட் சொல்யூஷன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாஸிட்டிவ் ரிசல்ட் வந்தது' என்றது அரசுத் தரப்பு.

"பணக்கட்டு பிரிக்கப்படவே இல்லை என்கிறபோது லஞ்சப் பணத்தை வாங்குபவர்களை பிடிக்கப் பயன்படுத்தப்படும் பௌடர் ராஜனின் கார் சீட்டில் எப்படி வந்தது, ஏனெனில் அது சி.பி.ஐ.யால் ஜோடிக்கப்பட்டது' என ராஜன் தரப்பு வாதாடியது. அதேபோல் "சி.பி.ஐ.யைப் பார்த்ததும் தனது டிரைவரிடம் பணத்தை காருக்குள் வீசும்படி ராஜன் ஏன் கூறவேண்டும்? மேலும் பாஸ்போர்ட் போர்ஜரி உள்ளிட்ட பல வழக்குகளில் உபயதுல்லா மேல் நடவடிக்கை எடுத்திருக்கிறார் ராஜன். அப்படியிருக்க அவரிடமிருந்து ஏன் லஞ்சப் பணத்தைப் பெற ராஜன் ஒப்புக்கொள்ளவேண்டும்' என பல கேள்விகளை எழுப்பியது சி.பி.ஐ. நீதிமன்றம். முடிவில்... "இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு' என கூறி ராஜனை விடுவித்திருக்கிறது.

nkn270523
இதையும் படியுங்கள்
Subscribe