மிழகத்தில் பசுமையான விளை நிலங்களை எல்லாம் கன்னங்கரேலென தார்ச்சாலையாக ஆக்க வேண்டும் என கங்கணம் கட்டி, கமிஷன் பார்க்கிறது எடப்பாடி அரசு. சேலத்தைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலும் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன.

agri-land

தமிழகத்தின் இரண்டாவது பெரிய காய்கறி சந்தையான இங்கு விளையக்கூடிய காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒட்டன் சத்திரம் தொகுதியில் தாராபுரம், திருப்பூர் வழியாக அவினாசி பாளையம்வரை 70 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.713.45 கோடி செலவில் நான்கு வழிச் சாலை திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால், இந்த வழித் தடத்தில் இருபுறங்களிலும் ஊர்களும், விவசாய நிலங்களும் பெருமளவில் இருப்பதால் அங்குள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலங்களைக் கையகப் படுத்தும் பணியில் அரசு மும்முரம் காட்டிவரு கிறது. இதில் தங்கச்சியம்மாள்பட்டி, காப்பிளி யபட்டி உள்பட சில ஊர்களில் சாலையை பைபாஸ் மூலமாக அமைக்க மக்களே ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதற்கடுத்த படியாக இருக்கும் பெரிய நகரமான கள்ளிமந்தையத்தில் ஊருக்குள்ளேயே நான்கு வழிச்சாலை அமைக்குமாறு மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுக்க, பைபாஸ் வழியாகவே அமைப்போம் என விவசாயிகளை மிரட்டி விளை நிலங்களை கையகப்படுத்தி வருகிறது அரசு.

agri-land""கடந்த 2016-ல் இத்திட்டம் அறிமுக மானபோதே விவசாயிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்திலும் முறையிட்டோம். நீதிமன்றமும் மக்களின் கருத்துகளைக் கேட்டு செயல்பட அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த தனி மாவட்ட வருவாய் அதிகாரிகளான அருமை நாயகம், வரகுணராஜ் மற்றும் ஏ.டி. ராணி தலைமையில் வந்த அதிகாரிகளிடம், ‘கள்ளிமந்தையம் ஊருக் குள்ளேயே பிரதான சாலையின் இரண்டு பக்கமும் அரசு புறம் போக்கு நிலத்தை விரிவுபடுத்தினால், நான்கு வழிச்சாலைக்கு போதுமானதாக இருக்கும். விவசாய நிலங்களுக்கு பாதிப்பின்றி, செலவும் ரூ.10 கோடியில் முடியும். ஆனால், விளைநிலங்களைக் கையகப்படுத்தி, புறவழிச்சாலை அமைக்க ரூ.50 கோடி வரை செல வாகும் என்கிறீர்கள். மக்களின் வரிப்பணத்தை ஏன் வீணாக்குகிறீர்கள்?’ என்று அறிவுறுத்தினோம். ஆனாலும், விவசாயிகளை மிரட்டி நிலங்களை கையகப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது’'' என்கிறார் தமிழக விவசாய சங்கத்தின் மாநில செயலாளரான சத்தியமூர்த்தி.

Advertisment

agri-land""எனக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் மூன்று ஏக்கரை அளந்துவிட்டு சென்றார்கள். என்னைப் போன்ற பலருக்கும் இதுதான் நிலைமை. ‘அரசு நிர்ணயம் செய்திருக்கும் பணத்தைத் தருவோம். அதை வாங்கிக்கொள்ள மறுத்தால் கோர்ட்டுக்கு போக வேண்டியதுதான். நாங்கள் எங்களுக்குத் தேவையான நிலத்தை பயன்படுத்திக் கொள்வோம்'’என அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். செய்வதறியாமல் விவசாய சங்கத்தில் முறையிட்டி ருக்கிறோம்''’என உடைந்த குரலில் பேசுகிறார் விவசாயி ரங்கசாமி. இது பற்றி சேலம் நெடுஞ்சாலைத்துறை சூப்பிரண்டான அருள்மொழியை தொடர்பு கொண்டோம். “""கள்ளிமந்தையம் அருகே புறவழிச்சாலை அமைப்பதற்காக டெண்டரெல்லாம் விட்டாச்சுங்க’என்றவரிடம், ""அப்பகுதி மக்கள் ஊருக்குள் சாலை அமைக்கக் கோரியும் புறவழிச்சாலை அமைக்க டெண்டர் விட்டிருக்கிறீர்களே? என்று கேட்டபோது, “கொஞ்ச நேரம் கழித்து பேசுங்க. நான் இப்போ பிஸியாக இருக்கிறேன்'' என்று கூறி லைனை கட் செய்தவரை லைனில் பிடிக்க முடியவில்லை.

இந்த திட்டத்திற்கான காண்ட்ராக்ட்டை என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் எடப்பாடி மகன் சகலையின் அப்பா ராமலிங்கம் எடுத்திருப்பது பற்றி விசாரித்தபோது தெரிய வந்தது. ஊர்வழியாக சாலை அமைப்பதைவிட, புறவழிச் சாலையில் கூடுதலாக செலவாகும். அதோடு விவசாயமும் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியும், ‘"அப்படியெல்லாம் வேண்டாம். புறவழிச் சாலையே அமைங்க'’என எடப்பாடியின் சொந்தம் என்ற கோதாவில் ராமலிங் கம் உறுதிகாட்டுகிறாராம். மக்களின் வாழ்வாதாரமும், வரிப்பணமும் யாரோ ஒருவரின் கணிசமான ஆதாயத்திற்காக வீணடிக்கப்படுகிறது. ஒட்டன்சத்திர மக் கள் உரிமைமீட்புக்காக போராட தயாராகி வரு கிறார்கள்.

Advertisment

-சக்தி