ந்தியாவின் ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழ் நாட்டின் பங்கு முக்கிய மானது. ஏனென்றால் இங்கே தொழில் கட்டமைப்பு வலுவானது. கடந்த சில ஆண்டுகளாக அதில் ஏற்பட்டிருந்த சுணக் கத்தாலும், அதிகப்படியான லஞ்சத்தாலும், தொழில் முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களுக்கு ஓட்டம் எடுத்தனர். அதனைத் தடுத்து, மீண்டும் தமிழகத் தில் முதலீடு செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 20-ம் தேதி, "முதலீட்டாளர்களின் முதல் முகவரி -தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பு மேற்கொள் ளப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்க 35 நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

ii

கூடுதலாக, 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் 5 நிறுவனங்களில் வணிக உற்பத்தி தொடங்கப் பட்டுள்ளது. இந்த 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடும், 83,482 பேர் களுக்கு வேலைவாய்ப் பும் கிடைக்கும். இந்த முதலீடுகள், மின் ஆலைகள், மின்னணு வியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப சேவை, உணவு பதப் படுத்துதல், ஜவுளி, காலணி, மருத்துவப் பொருட்கள் போன்ற துறைகளில் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க. ஸ்டா-ன், "தெற்காசியா விலேயே தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ் நாட்டை உயர்த்துவதே எங்களது லட்சியம்'' என்றார். மேலும், 2030-ம் ஆண்டுக்குள் தமி ழகத்தின் ஜி.டி.பி. பொருளாதார வளர்ச்சியை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக உயர்த்தும் இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்றார் முதல்வர். ஜெயலலிதா ஆட்சியில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் இப்ப டித்தான் எதிர்பார்க்கப் பட்டது. எடப்பாடி பழனிசாமியும் ஏதேதோ சொன்னார். வெளிநாடுகளுக்கே நேரடியாக சென்றார். ஸ்டாலினும் அதைத்தான் சொல்கிறாரா?

Advertisment

dd

இந்தமுறை முதலீடு சார்ந்த முன்னெடுப்புகள் வித்தியாசமாக உள்ளன. மு.க.ஸ்டா-னின் வழி காட்டுதல்படி புதிய தொழில் நிறுவனங்களை தமிழ் நாடு முழுக்க பரவலாகக் கொண்டுவர தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறார். சென்னை மற்றும் சென்னை புறநகர் என்றில்லாமல், தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர் பகுதிகளில் மின்சக்தித் துறை சார்ந்த நிறுவனங்கள், மதுரை, ஓசூர், கோவை மற்றும் செங்கல்பட்டில் தொழில் பூங்கா, திருநெல் வேலி மாவட்டம் வடுகம்பட்டி கிராமத்தில் எஃப்.எம்.சி.ஜி. தொழில் நிறுவனம், கரூர், நாமக்கல், கடலூர், சிவகாசி, புதுக்கோட்டை, சேலம் மற்றும் கோவை சூலூரில் ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங் கள், மொடக்குறிச்சி காற்றாலை மின்சக்தி எனத் தமிழ்நாடு முழுவதும் பரவலாகத் தொழில் வளர்ச்சி யைக் கொண்டுசெல்ல முயற்சி எடுத்துள்ளனர். இதனால் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி காண்பதுடன், இளைஞர்களுக்கு அவர்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே வேலை பார்க்கும் வாய்ப்பு அமையக்கூடும்.

தமிழ்நாடு அரசின் இந்த தொழில் முன்னெடுப்புகள் குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், "தமிழ்நாடு அரசு, இதே வேகத்தில் செயல்படும்பட்சத்தில், 1 டிரில்லியன் (1 லட்சம் கோடி) டாலர் என்ற பொரு ளாதார இலக்கை எட்ட முடியும். கடந்த காலங் களைப் போலவே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள் ளது. இதனால் சிறு குறு தொழில்கள் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். எனவே தொழில்துறையில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு வருவது சாத்தியமே.

Advertisment

dd

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதில், கோவைக்கு சற்று கூடுதல் கவனம் தரப்பட வேண்டும். இங்கு பெரிய தொழிற்சாலைகள் இருக்கின்றன. அனைத்தும் சொந்த முயற்சியில் உருவாக்கப் பட்டவை. அரசு -பொதுத்துறை சார்ந்த தொழிற் சாலைகள் எதுவுமே கிடையாது. வெளியிலிருந்து கோவைக்குள் வந்த பெரிய தொழிற்சாலைகள் என்று பார்த்தால், எல்&டி, சுஷ்லான் ஆகிய இரண்டு நிறுவனங்களைச் சொல்லலாம். இதிலும் சுஷ்லானைப் பொறுத்தவரை விண்ட்மில் இண்டஸ்ட்ரி நலிவடைந்ததால் பெரிய வளர்ச்சி ஏற்படவில்லை. எல்&டியைப் பொறுத்தவரை, ஏற்கனவே அவர்கள் குறிப்பிட்ட முதலீட்டையும், விரிவாக்கத்தையும் இப்போதுவரை செயல்படுத்த வில்லை. அதற்கு என்ன காரணம், தேவையான பணியாளர்கள் கிடைக்கவில்லையா, அரசாங்கத் தின் உதவி போதியமட்டும் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை. எனவே மிகப்பெரிய முதலீட்டிலான பெரிய தொழிற்சாலைகளை கோவைக்கு கொண்டுவர வேண்டும்.

அதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பது, இங்கே போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததுதான். இங்குள்ள விமான நிலைய விரிவாக்கம் குறித்து கடந்த 20 ஆண்டுகளா கப் பேசப்பட்டபோதும் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. இங்கே தொழில் தொடங்க வரு பவர்கள், இதைத்தான் முக்கியமாகப் பார்க்கிறார்கள். எவ்வளவு விமானங்கள் கோவைக்கு வந்து செல்கின்றன, ரயில் போக்குவரத்து எப்படி உள்ளது, சாலைப்போக்கு வரத்துத் தொடர்பு எப்படி உள்ளது, என்பது குறித்து தான் முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதுதான் கோவையின் தொழில் வளர்ச்சிக்குப் பின்னடைவாக உள்ளது.

dd

உள்கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதில் தமிழ்நாடு அரசு கவனம்கொள்ள வேண்டும். அதைச் சரிசெய்துவிட்டால், பெரிய முதலீட்டாளர்கள் கோவையை நாடி வரத்தொடங்கிவிடுவார்கள். மற்றபடி, இங்கே திறன்வாய்ந்த தொழிலாளர்கள், அதிக அளவிலான சிறுகுறு தொழில் நிறுவனங்கள், இயந்திர உற்பத்திகள் மிகுதியாக இருப்பதால் பெரிய தொழிற்சாலைகளை இங்கே கொண்டு வந்தால், கோவையின் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரித்து தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி உச்சத்தைத் தொடுவது உறுதி'' என்றார். இதுபோலவே, தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்குமான ஒருங்கிணைந்த கட்டமைப்பு வளர்ச்சியை உருவாக்க வேண்டிய தேவையை மற்ற மாவட்ட தொழில் முனைவோரும் முன்னிறுத்து கின்றனர்.

2015-ம் ஆண்டில், ஜெயலலிதா ஆட்சிக்காலத் தில் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற்றது. அம்மாநாட்டில், 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகள் கழிந்த நிலையில், 2020-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பேச்சில், இம்மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 72 சதவீத திட்டங்களில் மட்டுமே உற்பத்தி தொடங்கப்பட்டதாகக் கூறினார்.

dd

2019-ம் ஆண் டில், தமிழ்நாடு அரசின் இரண்டா வது உலக முதலீட்டாளர்கள் மாநாட் டில், 304 புரிந் துணர்வு ஒப்பந்தங் கள் மூலமாக ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடு திரட்டப் பட்டது. அதுமட்டுமின்றி, 2019 ஆகஸ்ட் மாதத்தில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக எடப்பாடி பழனிசாமியுடன் அவரது அமைச்சரவை சகாக்களும் இணைந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ததில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 8,835 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் திரட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.

தேர்தல் நெருங்குவதற்கு சில மாதங்கள் முன்பாக, அவசர அவசரமாக, கடிதங்களின் வாயிலாகவும், முதலீட்டாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இவற்றை யெல்லாம் வாய்பிளந்து ஆச்சர்யத்தோடு பார்க்கும்போதுதான், நம் தலையில் நங்கென்று கொட்டியதுபோல மதுரை எய்ம்ஸ் நினைவுக்கு வருகிறது! 2018-ம் ஆண்டில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு, இன்றுவரை அங்கே மருத்துவ மனை கட்டுவதற்கு இடம்கூட உறுதி செய்யப் படாமல், கட்டாந்தரையாகக் காட்சியளிக்கிறது. அதேவேளை, மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கட்டுமானப் பணிகளும், மாணவர் சேர்க்கையும் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.

ff

இதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், முந்தைய ஆட்சியில் தமிழ்நாட்டில் திரட்டப் பட்ட முதலீடுகள், உண்மையிலேயே தொழில் தொடங்கத்தானா அல்லது தேர்தல் செலவுகளுக்கான முன்னேற்பாடு மட்டும்தானா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழாமல் இல்லை.

இச்சூழலில், தற்போதைய ஆட்சியாளர்கள், முதலீடுகளைத் திரட்டுவதோடு, தேவையான உள்கட்டமைப்பு வசதி களைத் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கு வதில் முனைப்பு காட்டினால், உண்மையி லேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக உருவெடுப்பது உறுதி.