தமிழ்நாடு முழுவதும் மணல் மாபியாக்கள் கடந்த இரண்டரை வருடத்தில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் இயற்கை வளங்களை கொள்ளையடித்துள்ளனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இவர்கள் ஒரு குழுவாக இணைந்து, தமிழ்நாட்டில் நடக்கும் இயற்கை வளக் கொள்ளையில் யார் யார் ஈடுபடுகிறார்கள், எப்படியெல் லாம் இயற்கை வளம் கடத்தப்படுகிறது என்று ஒரு பெரிய ஆவணத்தை தயாரித்திருக்கிறார்கள். அந்த ஆவணத்தை ஒன்றிய அமலாக்கத்துறைக்கும் அனுப்பி யிருக்கிறார்கள்.
அந்த ஆவணத்தில், ஒரு லட்சம் கோடி இயற்கை வளக் கொள்ளையில் மாநில அரசு மட்டுமல்ல, ஒன்றிய அரசும் சேர்ந்து பங்கெடுக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள் ளனர். பா.ஜ.க.வின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணா மலைக்கு இந்த மணல் மாபியா மாதந்தோறும் கட்டிங் அனுப்பி விடுகின்றது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் இதில் பங்கு போய்ச் சேருகிறது. நாங்கள் தயாரித்த இந்த ஆவணத்தை ஒன்றிய அமலாக்கத்துறைக்கும் அனுப்பிவிட்டோம். வெறும் லட்சக் கணக் கில் ஊழல் செய்ததற்காக செந்தில் பாலாஜியை சிறையில் தள்ளிய அமலாக்கத் துறை, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்த இந்த மணல் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. சமீபத்தில் லண்டன் சென்ற அண்ணாமலை, மணல் மாபியாக்களுக்கு தலைமை தாங்கும் கரிகாலன் என்பவரை அவர் நடத்தும் லண்டன் ஹோட்டலில் சந்தித்தார். அங்கு தமிழ்நாட்டின் முக்கியமான அமைச்சர் துரைமுருகனையும் சந்தித்தார். ஐரோப்பிய நாடுகளில் ஓய்வெடுக்கச் சென்ற துரைமுரு கன் லண்டன் வழியாக திரும்பி வந்தார். அப்பொழுது லண்டனில் பா.ஜ.க.வின் அண்ணாமலையை சந்தித்தார். லம்பாக அண்ணா மலைக்கு கொடுக்கப்பட்டது. கரூரில் இருந்து ஆப்பரேட் செய்யும் ஹவாலா ஆப்பரேட்டர்கள் மூலமாக அண்ணாமலை பெற்றுக் கொண்டார். லண்டனில் உள்ள கரிகாலனின் ஹோட்டலில் மேனேஜராக இருக்கும் லண்டன் துரை என்பவர் இந்த ஆப்பரேஷன்களை ஒருங்கிணைத்தார் என்று கூறியதோடு, லண்டனில் துரைமுருகன், கரிகாலன், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் லண்டன் துரையுடன் இருக்கும் புகைப்படங் களைக் கொடுத்தார்கள்.’’
மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆற்று மணல், கிராவல் மணல், மற்றும் மலைக் கற்கள் உடைப்பது, வைகுண்டராஜன் செய்துவந்த தாதுமணல் வியாபாரம் இவற்றில், இப்பொழுது கரிகாலன்தான் நம்பர் ஒன் ஆக கோலோச்சுகிறார். ஒவ்வொரு குவாரியிலும் ரூபாய் நானூறு ஒவ்வொரு யூனிட்டுக் கும் விலையாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கனி மங்களை கொண்டு செல்வதற்காக போலியான போக்குவரத்து கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்த போலியான செயல்களுக்கு ஒத்துவராத குவாரி அதிபர்கள் மற்றும் லாரி ஓனர்கள் குண்டர் களால் மிரட்டப்படுகிறார்கள். குண்டர்களின் மிரட்டல்களுக்கு அவர்கள் அடிபணியாவிட்டால் அரசு அலுவலர்களான கனிமவளத் துறை அதிகாரி கள், குவாரி அதிபர்களையும், லாரி ஓனர்களையும் மிரட்டுகிறார்கள். கிராவல் எனப்படும் சவுடு வியாபாரத்தில் மட்டும் மாதம் 1389 கோடி ரூபாய் கிடைக்கின்றது. மலைக்கற்களை உடைப்பது அதிலிருந்து ‘எம்’ சேண்டு எடுப்பது போன்ற வகையில் மாதம் 298 கோடி ரூபாய் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் வெறும் பத்து மாவட்டங் களில் ஓடும் ஆறுகளிலிருந்து ஆற்று மணலைக் கடத்துவதன் மூலம் மாதம் 709 கோடி ரூபாய் கிடைக்கின்றது. இப்படி தமிழ்நாட்டில் 2396 கோடி ரூபாய்க்கு கிராவல், கல், ஆற்றுமணல் கொள்ளை நடக்கின்றது. இதில் லாரிச் செலவுகள் உட்பட மொத்தச் செலவு 300 கோடி ரூபாய்தான். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் உட்பட அனைவருக்கும் 500 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத் தில் மட்டும் மலைகள் அதிகமாக இருக்கின்றது. அது கர்நாடக மாநிலத்துக்குப் பக்கத்தில் இருக்கும் மாவட்டம். அங்கு கிரானைட் கற்கள் வியாபாரம் மட்டும் மாதம் 35 கோடியைத் தாண்டுகிறது. கிராவல் எனப்படும் சாதாரண மண் வியாபாரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாதம் நூற்றி ஐந்து கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. சென்னைக்குப் பக்கத்தில் உள்ள செங்கல்பட்டில் மாதம் 105 கோடி ரூபாய் வியாபாரம் நடக்க கர் நாடக மாநிலத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணகிரியில் 102 கோடி ரூபாய்க்கு மாதாமாதம் கொள்ளை நடக்கிறது. ஆற்று மணல் கொள்ளையில் காவிரி பாயும் திருச்சியில் 166 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்க, அதே காவிரி பாயும் கரூரில் 122 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கின்றது. பல ஆறுகள் பாயும் விழுப்புரத்தில் 133 கோடி ரூபாய்க்கு கொள்ளை நடக்கின்றது.
இந்தக் கொள்ளைகளை நடத்தும் கரிகாலன் தலைமையிலான கும்பல் பல பினாமி கம்பெனி களை நடத்துகின்றது. எஸ்.ஆர்.மைனிங், எஸ்.ஆர். கிரஸ்ஸர், எஸ்.ஆர். டிரான்ஸ்போர்ட், ஸ்டாண்ட் அலோன் பிருவரீஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற சாராயக் கம்பெனி, மைல்ஸ்டோன் டாக்கீஸ் என்கிற சினிமாக் கம்பெனி, ஜி.பி.என்.காலேஜ், புஷ்கரன் காலேஜ் ஆப் அக்ரி கல்சுரல் சயன்ஸ் என்கிற கல்லூரிகள், வேதா பவர் பிரைவேட் லிமிடெட் என் கிற மின்சார உற்பத்தி கம் பெனி இது தவிர ஏகப்பட்ட வீடு கட்டும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் கம்பெனிகள் என இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கம்பெனிகளை வெளிப்படையாகவே கரிகாலன் தலைமையிலான இந்த மணல் மாபியா கும்பல் நடத்தி வருகின்றது.
இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் குவாரி களை இவர்களே பினாமி பெயர்களில் விலைக்கு வாங்கி நடத்துகிறார்கள். நிறைய டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள், மணல் அள்ளும் ஜே.சி.பி. இயந்திரங் கள், கல் உடைக்கும் மிஷின்கள் என பெரிய இயந் திரங்கள் கொண்ட படையே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இவர்கள் வசம் இருக்கிறது. இவர்களது சென்னை டீலிங்குகளை முடிப்பதற்காக "செக் மே' என்கிற ஐந்து நட்சத்திர பார் ஒன்றை அமைச்சர் ஒருவருடனும், தனியார் தொலைக் காட்சியின் முக்கிய பிரமுகர் ஆகியோருடனும் இணைந்து கரிகாலன் நடத்துகிறார். இவர்களைப் பற்றிய புகார்கள் சமீப காலமாக ஊடகங்களில் பெரிதாக எழுந்தாலும், அதை மத்திய -மாநில அரசு கள் கண்டுகொள்வதில்லை. இவர்களுக்கு சப்- கான்ட்ராக்டர்களாக வேலை செய்பவர்களிடமே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முன்பணமாக வாங்கி அவர்களை ஏமாற்றிய புகார்களும் இருக் கின்றது. இப்படி ஒரு பெரிய ஆவணத்தை உருவாக்கி யுள்ள சமூக ஆர்வலர்கள், அதை நக்கீரனுக்கும், அமலாக்கத்துறைக்கும் அனுப்பி வைத்திருக் கிறார்கள்.
______________
இறுதிச் சுற்று!
தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்! -முதல்வர் அறிவிப்பு
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் செப்டம்பர் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்துக் கட்சி தலைவர்களும், இம்மானுவேல் சேகரனுக்கு நினைவஞ்சலி செலுத்துவது வழக்கமம்.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று (11-9-2023) சுமார் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் திருவுருவசு சிலையுடன் அவருக்கு மணி மண்டபம் அமைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், ""தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தியதன் அடிப்படையில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று மணிமண்டப அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.''
முன்னதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-நாகேந்திரன்