Advertisment

அ.தி.மு.க. ஒப்பந்ததாரருக்கு அதிகாரம்!  -புதுக்கோட்டையில் தி.மு.க. குமுறல்!

pudukottai

டந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், சுமார் 10 வருடங்களாக ஒப்பந்தப் பணிகள்  பெரிதாகக் கிடைக்காமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்த தி.மு.க. ஒப்பந்தக்காரர்கள், தி.மு.க. ஆட்சி வந்ததும், இனி நமக்கு நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்குமென்று ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள். அதிகாரிகள் ஆசியில் வழக்கம்போல அத்தனை பணிகளையும் பழைய அ.தி.மு.க. ஒப்பந்தக்காரர்களே கைப்பற்றிக் கொள்வதால், எங்களுக்கு ஒரு வேலை கொடுங்கள் என்று அவர்களிடம் கேட்டுப்பெறவேண்டிய அவல நிலைதான் உள்ளது என்று முதலமைச்சர் வரை தி.மு.க முதல்நிலை ஒப்பந்தக்காரர்கள் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

Advertisment

அதேபோல தற்போது, சுமார் ரூ.200 கோடிக்கான ஒப்பந்தப்பணிகள் வந்தபோது, தி.மு.க ஒப்பந்தக்காரர்களுக்கு சரியான நேரத்தில் சரியான சான்றுகள் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து, கடைசி நேரத்தில் முழு கமிசனை அ.தி.மு.க. ஒப்பந்தக்காரர் சோத்துப்பாளை முருகேசனிடம் கொடுத்துவிட்டு, சான்றுகளை அவரிடம் வாங்கி டெண்டரில் கலந்துகொள்ளுங்

டந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், சுமார் 10 வருடங்களாக ஒப்பந்தப் பணிகள்  பெரிதாகக் கிடைக்காமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்த தி.மு.க. ஒப்பந்தக்காரர்கள், தி.மு.க. ஆட்சி வந்ததும், இனி நமக்கு நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்குமென்று ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள். அதிகாரிகள் ஆசியில் வழக்கம்போல அத்தனை பணிகளையும் பழைய அ.தி.மு.க. ஒப்பந்தக்காரர்களே கைப்பற்றிக் கொள்வதால், எங்களுக்கு ஒரு வேலை கொடுங்கள் என்று அவர்களிடம் கேட்டுப்பெறவேண்டிய அவல நிலைதான் உள்ளது என்று முதலமைச்சர் வரை தி.மு.க முதல்நிலை ஒப்பந்தக்காரர்கள் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

Advertisment

அதேபோல தற்போது, சுமார் ரூ.200 கோடிக்கான ஒப்பந்தப்பணிகள் வந்தபோது, தி.மு.க ஒப்பந்தக்காரர்களுக்கு சரியான நேரத்தில் சரியான சான்றுகள் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து, கடைசி நேரத்தில் முழு கமிசனை அ.தி.மு.க. ஒப்பந்தக்காரர் சோத்துப்பாளை முருகேசனிடம் கொடுத்துவிட்டு, சான்றுகளை அவரிடம் வாங்கி டெண்டரில் கலந்துகொள்ளுங்கள் என்று சொன்னதால் கடுப்பான தி.மு.க ஒப்பந்தக்காரர்கள் பலர், நீதிமன்றத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறைக் கும், முதலமைச்சருக்கும் மனு போட்டுள்ளனர். கடைசி நேரத்தில் முழுக்கமிசன் கொடுத்த ஒப்பந்தக்காரர்களுக்கு அ.தி.மு.க ஒப்பந்தக்காரர் முருகேசன் தனது வீட்டில் வைத்து அதிகாரிகள் கையெழுத்துப் போட்ட சான்றுகளை வழங்கி யுள்ளார். 

Advertisment

இதுசம்பந்தமாக, பாதிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள், "நெடுஞ்சாலைப் பணியில்  ரூ.200 கோடியில் 20 சதவீதம் கமிசன், ரூ.40 கோடி கமிசன்' என்று போஸ்டர் அடித்து நகர் முழுவதும் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தி யுள்ளனர்.

இதுகுறித்து நீதிமன்றம் சென்றுள்ள ஒப்பந்தக்காரர்கள் நம்மிடம் கூறும்போது, "தற்போது நெடுஞ்சாலை மற்றும் கட்டுமானப் பிரிவின் கீழ் ரூ.200 கோடிக்கு சுமார் 40 வேலைகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. 

அந்த விளம்பரத்தைப் பார்த்து கோட்டப் பொறியாளரிடம் குறிப்பிட்ட தேதிக்குள், தளப்பார்வை சான்று மற்றும் இயந்திரப்பயன்பாடு சான்று கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் கோட்டப் பொறியாளர் வேண்டுமென்றே காலதாமதம் செய்தார். பலமுறை கேட்ட பிறகு "நீங்க முருகேசனைப் பாருங்க'ன்னு சொன்னார். நாங்க அவரை ஏன் சார் பார்க்கணும்? என்று கேட்டோம். ஆனால் ஒப்பந்தக்காலம் முடியும் வரை கொடுக்கவில்லை. அதனால தான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். 

ஏற்கெனவே இருந்த கோட்டப் பொறியாளர் பரவாயில்லை. ஆனால் அவரை கட்டாய  விடுப்பில் போகச்சொல்லிட்டு அறந்தாங்கி கோட்டப்பொறியாளர் புதுக்கோட்டை பொறுப்பு எடுத்துகிட்டு இப்படி எங்களை பழிவாங்கிட்டார். மேலும், ஒரு பணிக்கு எவ்வளவு கமிசன் என்பதை பட்டியல் போட்டுக் கொடுத்து, 18.65 சதவீதம் கமிசனை இ-டெண்டரில் கலந்துகொள்வதற்கு முன்பே கொடுக்கணும் என்று சொல்றாங்க. அந்த கமிசனை கொடுக்க முன்வந்தவர்களுக்கு முருகேசன், அவர் வீட்டில் வைத்தும், தனியார் விடுதி, நெடுஞ்சாலை விருந்தினர் மாளிகையில் வைத்தும் சான்று வழங்கியிருக்கிறார்'' என்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ள மூத்த வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் நம்மிடம், "புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் டெண்டரில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாகப் புகார்கள் வருகிறது. பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று, தீர்ப்பு பெற்று, பணிகளைப் பெறவேண்டியிருக்கிறது. இவ் விவகாரத்திலும், சான்றுகள் வழங்காமல் காலதாமதம் செய்து, டெண்டர் காலம் முடிந்த பிறகு சான்றுகளை வழங்குகிறார்கள். அதிகாரிகளின் மெத்தனத்தால் ஒப்பந்தக்காரர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், ஏற்கெனவே பல பணிகளை செய்தவர்களிடம் பிளாண்ட், இயந்திரங்கள் இருப்பது தெரிந்தும்கூட வேண்டுமென்றே தாமதம் செய்வதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால்தான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறோம்'' என்றார்.

pudukottai1

முதல்நிலை ஒப்பந்தக்காரர் முத்துக்குமார், "கடந்த ஆட்சிக்காலத்தில் தி.மு.க. ஒப்பந்தக்காரர்கள் பாதிக்கப்பட்டோம். இப்ப அதைவிட ரொம்ப பாதிக்கப்படுகிறோம். ரூ.70 லட்சம் பணிக்கு ரூ.3 கோடிக்கான இயந்திரம்  இல்லையென்று காரணம் சொல்லி புறக்க ணிக்கிறார்கள். 20 சதவீதம் கமிசன் கொடுத்து விட்டு தரமான வேலையை எப்படி செய்ய முடியுமென்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு அனுப்பியிருக்கிறோம். நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர்'' என்றார். இந்த புகார்கள் குறித்து விளக்கம்பெற கோட்டப் பொறியாளர் மாதேஷ்வரனை தொடர்புகொண்டபோது நமது அழைப்பை துண்டித்தார்.

திருச்சி மேற்பார்வைப் பொறியாளர் இளம்வழுதியிடம் கேட்டபோது, "ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு ஒப்பந்தக் காரர்கள் கோட்டப் பொறியாளரிடம் விண்ணப்பம் செய்வதுடன் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால் சான்று வழங்கப்படும். குறைபாடுகள் இருந்தால் சான்று கிடைக்காது. நாங்க வேறு ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்தும் சான்று   வழங்க சொல்வதில்லை. தற்போது ஒப்பந்தக் காரர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றம் சொல்றபடி செயல்படுத்துவோம்''  என்றார்.

கோட்டப் பொறியாளர் கையெழுத்திட்ட சான்றுகளை 20 சதவீதம் கமிசன் பெற்றுக் கொண்டு தனது வீட்டிலும், தனியார் ஓட்டல், பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் வைத்துக் கொடுத்ததாக கூறப்பட்ட அ.தி.மு.க ஒப்பந்தக்காரர் முருகேசன் நம்மிடம், "நான் அ.தி.மு.க.காரன், நடக்கிறது தி.மு.க. ஆட்சி. நான் எப்படி டெண்டர்களில் ஆதிக்கம் செலுத்த முடியும்? தகுதியானவர்களுக்கு சான்றும், டெண்டரும் கிடைக்கும். முறைப்படி தான் டெண்டர் நடக்கிறது'' என்று தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார். தமிழ்நாடு அரசு இதனை கவனிக்குமா?

nkn251025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe