அ.தி.மு.க. பொதுக்கூட்டம் என்றாலும் சரி, இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்றாலும் சரி, யாராவது ஒரு அமைச்சர், இசகுபிசகாகவும் ஏடாகூடமாகவும் பேசி புதுப்புது குண்டுகளை வீசி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். அதில் முக்கியமானது, தங்கள் தலைவி ஜெ.வின் மரண சர்ச்சை பற்றிய அதிர்ச்சியை சில தினங்களுக்கு முன்பு உண்மையைச் சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
நிலக்கோட்டை இடைத் தேர்தல் சம்பந்தமாக நடந்த அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சீனி, “""மெதுவாக கொல்லும் விஷம் (ஸ்லோபாய்சன்) கொடுத்து ஜெயலலிதாவை ஒரு கும்பல் கொன்றுவிட்டது. சர்க்கரை நோயாளியான ஜெயலலிதா வுக்கு வேண்டாத உணவுகளை கொடுத்திருக்கிறார்கள்'' என போட்டுத் தாக்கிவிட்டார் சீனிவாசன்.
வேலூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீர மணி, ""சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கிட்னி பாதிக்கப்பட்ட போது, எவ்வளவு வேகமாக ஆக்ஷன் எடுத்து காப்பாற்றினார்கள். அதுபோல் ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு சென்றிருந்தால் காப்பாத்தி இருக்கலாமே'' என சிகிச்சையில் சந்தேகம் இருப் பதை தன் பங்குக்கு பற்ற வைத்தார்.
அக்டோபர் 06-ஆம் தேதி அப்பல்லோவில் கண் ணாடி வழியாக ஜெ.வைப் பார்த்த போது "கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்' என அப்போது அறிக்கை விட்டார் தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ். அப்பல்லோ வெளியிட்ட மருத்துவ அறிக்கையும் ஜெ.வுக்கு காய்ச்சல்தான் என்றது. ஆனால் அதே கவர்னரே ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதே அக்.06-ஆம் தேதி "ஜெ. சுயநினைவிழந்த நிலையில் இருந்தார்' என்று குறிப் பிட்டிருக்கிறார்.
ஜெ. சிகிச்சை குறித்து இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள். ஜெ., சிகிச்சையில் இருந்த 75 நாட்களும் இந்த உண்மைகளை அப்போதே சொன்னது நக்கீரன்தான். இந்த நிலையில்தான் தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன். இதுவரை 120-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்துள்ளார் நீதிபதி ஆறுமுகசாமி. மாஜி தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் உட்பட அப்பல்லோ டாக்டர்கள், நர்ஸ்கள் என அத்தனை பேரின் வாக்குமூலங்களும் ஏறுக்குமாறாகவே இருக் கின்றன.
கடந்த 12-ஆம் தேதி அப்பல்லோ டாக்டரான இதயவியல் நிபுணர் கார்த்திகேசனை குறுக்கு விசாரணை செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி. இதற்கடுத்ததாக அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், ரேமெண்ட் டோமினிக் சேவியோ, செந்தில் குமார், நுரையீரல் நோய்த் தடுப்பு சிறப்பு மருத்துவர் நரசிம்மன், அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா ஆகியோர் ஆணையத் தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது கமிஷன்.
ஜெ.வின் சிகிச் சையில் அப்பல்லோ மருத்துவமனை நடந்து கொண்ட விவகாரம் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.
முதலில் வெளி வந்திருப்பது ஜெ. சிகிச்சை பெற்ற நேரத்தில் அங்கிருந்த சி.சி.டி.வி.க்களை அகற்றச் சொன்னது யார் என்கிற கேள்வி. ""ஜெ. சிகிச்சை பெறுவது தொடர்பான தகவல்கள் எல்லாம் விலை மதிக்க முடியாதவை. அந்தத் தகவல்களை வெளியே சொல்லக்கூடாது என தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த முதல் வரே எடுத்தார். அவரது பாதுகாப்பு அதிகாரி களாக இருந்த பெருமாள்சாமி ஆகியோர் அதை நிறைவேற்றி னார்கள்.
இதற்கான பிரமாணப் பத்திரத்தை அப்போதைய சட்டப் பிரிவு மேலாளர் மோகன்குமார் தாக்கல் செய்தார்'' என்கிறது அப்பல்லோ வட்டாரம்.
"இதில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது தளத்தில் இருந்த எம்.டி.சி.சி.யு அறையிலிருந்து பிற அறைகளுக்கு கொண்டு செல்லும் போது ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த மாநில உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் அப் பல்லோவில் அதுவரை ஜெ. பயணித்த இடங்களில் வெற்றிகரமாக இயங்கி வந்த சி.சி.டி.வி.க்களை நிறுத்தச் சொன்னார்கள்' என அப்பல்லோவின் அதிகாரி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக் கிறார்.
"சி.சி.டி.வி. காட்சிகள், பத்திரிகை அறிக்கைகள் போன்ற வற்றை பற்றி அப்பல்லோவின் நிர்வாக அதிகாரியான எம்.சுப்பையா விசுவநாதன் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஆறுமுகசாமி உத்தர விட்ட நிலையில், மோகன் குமார் என்பவரை அப்பல்லோ அனுப்பி வைத்தது பலத்த சந்தேகங்களை உருவாக்குகிறது. எனவே மோகன்குமார் சமர்ப்பித்த வாக்குமூலத்தை ஆணையம் நிராகரிக்கிறது. மறுபடியும் சுப்பையாவின் வாக்குமூலத்திற்காக ஆணையம் காத்திருக்கிறது' என்கிறது ஆணைய வட்டாரம்.
"இதில்தான் உண்மை யான ஆடு, புலி ஆட்டம் உள்ளது. அப்பல்லோவை சசிகலாவும் ஆணையமும் சேர்ந்து பாதுகாக்க நினைக்கிறார்கள். அதனால்தான் மோகன்குமார் அறிக்கையை விசாரணைக் கமிஷன் ஏற்கவில்லை' என்கிறார்கள் ஆணையத்திற்கு தினமும் வந்து செல்லும் தினகரனின் வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டிக்கு நெருக்கமான வர்கள்.
ஜெ. சிகிச்சை பெற்ற அறையை அவரது காலுடன் வீடியோ எடுத்த சசிகலா தரப்பு ஆர்.கே.நகர் தேர்தலில் அதை பயன்படுத்தி வெற்றி பெற்றது. ஆனால் ஜெ. தங்கியிருந்த அறை மாற்றப்பட்டது. எப்படி அதை மாற்ற முடியும். அவ்வளவு பெரிய அறையை மாற்றுவது என்றால் யார் அப்பல்லோவிற்கு அனுமதி தந்தது என ஆணையத் தரப்பில் வந்த கேள்விகளுக்கு உரிய விளக்கமும் இல்லை.
மேலும் மருத்துவ மனைக்கு ஜெ. கொண்டு வரப்பட்டபோது அவர் என்ன நிலையில் இருந்தார் என்பதைப் பதிவு செய்த சி.சி. டி.வி. ஃபுட் டேஜ்கள் வெறும் 30 நாட்களுக்கு மட்டுமே இருந் தன என்றும், ஜெ.வுக்கு அப் போது தரப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ அறிக் கைகள் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். ஜெய லலிதா குறித்து வெளியிடப்படும் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சிகிச்சை அளித்த குழுவில் இருந்த டாக்டர் செந்தில், டாக்டர் பாபு ஆப்ரகாம், டாக்டர் சத்திய பாமா ஆகியோர் தயார் செய்வார்கள். அவை அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோ ருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அவர்கள் இறுதி செய்த அறிக்கையை அப்பல்லோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா கையெழுத்திட்ட பிறகு செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியான எழிலிடம் "உண்மையான டாக்குமெண்டு என்னவென' கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப் பினார். அதற்கு பதிலளித்த அப்பல்லோ "நாங்கள் பெரிய இண்டர்நேஷனல் ஆஸ்பத்திரி என்கிறோம். அதற்கான எந்த அனுமதியும் எங்களிடம் கிடையாது. அப்பல்லோ முன்பு இருந்தபோது இரண்டு மாடி களுக்கான அனுமதியைத்தான் பெற்றிருக்கிறது. அதன்பிறகு பல மாடிகள் கட்டப்பட்டன. கூவம் ஆற்றை மறித்து ஷாப் பிங் காம்ப்ளக்ஸ் கட்டப்பட் டது. எல்லாம் அனுமதி பெறாமல் கட்டிய விவகாரம்' என அப்பல்லோ டாக்டர் மோகன் குமார் மூலம் வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. அப்பல் லோவின் விதிமீறல்களையும் அப்போதே அம்பலப்படுத்தி யிருக்கிறது நக்கீரன்.
அப்பல்லோவுக்கு எதி ரான மிகப்பெரிய வாக்கு மூலத்தை விசாரணைக் கமி ஷன் கண்டு கொள்ளவில்லை. அதைப் பற்றி எதுவும் பேசா மல் ஜெ.வின் மரண சர்ச்சை குறித்த விசாரணை போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
-தாமோதரன் பிரகாஷ்
-ஈ.பா.பரமேஷ்வரன்
______________
இறுதிச்சுற்று!
ரஜினி பார்வையில் பா.ஜ.க.!
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட ரஜினி, அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ராஜீவ் கொலைவழக்கில் சிறையிலிருக்கும் 7 பேர் தொடர்பான கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப் பினர். அதற்கு, "எந்த ஏழு பேர்' என பதில் கேள்வி எழுப்பினார் ரஜினி. "ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு' என்ன' என்ற அடுத்த கேள்விக்கும், "இப்பதான் இந்த விஷயத்தையே கேள்விப்படுறேன்' என இயல்பாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார். "பா.ஜ.க. ஆபத்தான கட்சியா' என்ற கேள்விக்கு, ""அப்படியென்று மற்ற கட்சிகள் எல்லாம் நினைத்துக் கொண்டி ருக்கின்றன. அப்ப நிச்சயமா அப்படித்தானே இருக்கமுடியும்'' என தன் ஸ்டைலில் பதிலளித்து திகைக்கவைத்திருக்கிறார்.
-க.சுப்பிரமணியன்