ராகு + செவ்வாய் சேர்க்கை
ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பை உறுதியாகத் தந்து விடும் ராகு + செவ்வாய் கிரக சேர்க்கை பற்றி இந்தக் கட்டுரையில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் ரொம்ப கெடுபிடி ஆகவும் பிடிவாதம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இந்த கிரக சேர்க்கை அதிகப்படியான நல்ல பலனை தருவதில்லை. இவர்கள் கொஞ்சம் கரடுமுரடான ஆளாகவே இருப்பார்கள். இலக்கணம் சிறப்பாக இருக்கும்போது அதன் தன்மை மற்றும் கெடுபிடி அளவு மாறுகின்றது தவிர இந்த கிரக சேர்க்கைக்கு உரிய கெடுபிடியும் பிடிவாதமும் நிச்சயம் இவர்களிடம் இருக்கின்றது. இந்தக் கெடுபிடியினால் இவர்கள் சமுதாயத்தில் சிலரிடம் கெட்ட பெயர் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கும் போட்டி யாளர்களுக்கும் ஊக்கத்தைத் தரும். விளையாட்டுத் துறையில் வெற்றிவாகை சூடிபெயர், புகழ் அடையலாம்.
இவர்கள் மற்றவர்களிடம் எளிதில் குறை குற்றங்களை கண்டுபிடித்த
ராகு + செவ்வாய் சேர்க்கை
ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பை உறுதியாகத் தந்து விடும் ராகு + செவ்வாய் கிரக சேர்க்கை பற்றி இந்தக் கட்டுரையில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் ரொம்ப கெடுபிடி ஆகவும் பிடிவாதம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இந்த கிரக சேர்க்கை அதிகப்படியான நல்ல பலனை தருவதில்லை. இவர்கள் கொஞ்சம் கரடுமுரடான ஆளாகவே இருப்பார்கள். இலக்கணம் சிறப்பாக இருக்கும்போது அதன் தன்மை மற்றும் கெடுபிடி அளவு மாறுகின்றது தவிர இந்த கிரக சேர்க்கைக்கு உரிய கெடுபிடியும் பிடிவாதமும் நிச்சயம் இவர்களிடம் இருக்கின்றது. இந்தக் கெடுபிடியினால் இவர்கள் சமுதாயத்தில் சிலரிடம் கெட்ட பெயர் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கும் போட்டி யாளர்களுக்கும் ஊக்கத்தைத் தரும். விளையாட்டுத் துறையில் வெற்றிவாகை சூடிபெயர், புகழ் அடையலாம்.
இவர்கள் மற்றவர்களிடம் எளிதில் குறை குற்றங்களை கண்டுபிடித்து கொண்டிருப்பார்கள். இவர்களைச் சார்ந்தவர்கள் எதை செய்தாலும் சொல்லிவிட்டு செய்யவேண்டும் என்பதும் சொன்னவர் சொன்னபடியே நடந்துகொள்ளவேண்டும் என்பதும் இவர்களது பிரச்சினையாக இருக்கும்.
அவர் சொன்னபடி நடந்து கொள்ளாதபோது இவர்களுக்கு கொலை வெறியே ஏற்பட்டது போல் கோபத்தில் கொந்தளித்து நடந்துகொள்வார்கள். எந்த செயலிலும் பர்ஃபெக்ஷனை விரும்புவார்கள். ஒரு காலகட்டத்தில் இந்த பர்ஃபெக்ஷன் இவருக்கு தொந்தரவாகும். இவர்களுக்கு வீடும், நிலம், கட்டடங்கள், இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றில் அடிக்கடி பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். பெற்றோருக்கு பின் குடும்ப பொருளாதாரநிலை உயரும். பூர்வீக சொத்துகள் சிறப்புகள் இல்லை. இவர்கள் புதிதாக இடம், வீடு வாங்கினாலும் வில்லங்கம் இல்லாமல் வாங்குவது கடினம். வாங்கினாலும் அந்த சொத்துகளை பாதுகாப்பதும் செல்வங்களை சேமிப்பதும் கடினம். பலருக்கு சேமிக்கமுடியாத நிலை ஏற்படுகிறது. இடங்கள் வீடு, நிலம், கட்டடங்கள் போன்றவை கையை விட்டு போகும் நிலை ஏற்படும். வாஸ்து கோளாறு இல்லாத வீடு, அலுவலகம், நிலங்கள் எளிதில் அமையாது. பலருக்கு பூர்வீக சொத்து துளிகூட பயன்படாது. சொத்துகளை அனுபவிக்கின்ற யோகமும் இவர்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும். பூர்வீகத்தை விட்டு வெளியே இருந்தால் இவர்களை பெரிய அளவில் பாதிக்காது. சகோதர உறவுகள் பாதிக்கப்படும்.
ஒற்றுமைகள் இருக்காது. மைத்துனர் உறவுகளும் சிறப்பாக இருக்காது. இந்த கிரக சேர்க்கை எந்த ராசியில் இருந்தாலும் அது தோஷத்தை அதிகப்படுத்தி விடுகிறது. ராகு முன்னோர்களை குறிக்கின்ற கிரகமாக இருப்பதால் ஜாதகருக்கு பரம்பரை வியாதிகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது. ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளிடமும் பகைகளை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படும் ரத்த சம்பந்தமான வியாதிகள் வரும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இவர்களுக்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படும் கூர்மையான ஆயுதத்தால் அல்லது வாகனத்தில் செல்லும்பொழுது விஷக்கடி, கீழே விழுதல், அடிபடுதல் அல்லது மிருகங்களால் காயம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. உடலில் கால்சியம் சத்து வேகமாக குறைந்து பற்கள், எலும்புகள் எல்லாம் பாதிப்படையும். பங்காளிகளிடம் சொத்து பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு திருமணம் நடந்ததை ஒரு கதையாகவே சொல்கிறார்கள். இந்த கிரக சேர்க்கை உள்ள பெண்களுக்கு அதிகப்படியான பாதிப்புகளை தருகிறது. மனம் ஒத்த தம்பதிகளாக இவர்கள் வாழமுடியாது. கணவரால் புரிந்து கொள்ளப்படாமலே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் அல்லது இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
சில பேர் அவசரப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை தேர்வு செய்துவிட்டு பிற்காலத்தில் தனக்கு பொருந்தாத வாழ்க்கைத் துணையை தேர்வு செய்துவிட்டோம் என்று கலங்கி போய் நிற்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு நோயின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் தம்பதிளுக்குள் அதிக பிரச்சினைகள் வருவதில்லை.
செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு 1, 5, 9 இருப்பவர்களுக்கும் கிரக சேர்க்கையின் குணத்தை வெளிப்படுத் தாமல் இருக்க மாட்டார்கள். இது எப்பொழுது அதிக அளவில் பாதிப்பைத் தரும் என்றால் இந்த கிரக சேர்க்கைகளின்மீது கோட்சார செவ்வாய், ராகு வரும்போதோ, அல்லது உங்கள் ஜாதகத்தில் ராகு தசையோ அல்லது செவ்வாய் தசையோ நடக்கும்போதோ பாதிப்பை அதிக அளவு தருகிறது. உங்கள் ஜாதகத்திலுள்ள குருவோ அல்லது கோட்சார குருவோ இந்த கிரக சேர்க்கைகளை பார்க்கும்பொழுது இந்த தோஷத்தின் அளவு குறையும்.
பரிகாரம்: கடலூர் மாவட்டம் சிங்கிரிக்குடி 16 திருக்கரங்களுடைய நரசிம்மர் வழிபாடு நல்ல பலனைத் தரும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, ராகுகால வேளையில் ஒன்பது தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யவேண்டும் . துவரம் பருப்பு, உளுந்து இரண்டு தானியங்களை பிராமணர்களுக்கு தானம் கொடுக்கவேண்டும்.