ருவரின் திருமண காலத்தை நிர்ணயம் செய்வதில்  தசாபுக்தி மட்டும் கோட்சார கிரகங்களுக்கு அதிக பங்குள்ளது. ஒரு ஜாதகத்தில் வினைப்படி- விதிப்படி நடக்க வேண்டிய சம்பவங்களை நடத்தித் தருபவர்கள் கோட்சார கிரகங்களாகும். ஒருவரின் சுய ஜாதகரீதியாக நடக்க வேண்டிய சம்பவங்களை கோட்சார கிரகங்களே நடத்தி தருவார்கள். வெகுசிலருக்கு தசாபுக்தி சாதகமாக இல்லாத நிலையில் கூட கோட்சார கிரகங்கள் திருமணத்தை நடத்திக் கொடுக்கும்.

Advertisment

அந்தவகையில் கோட்சார கிரகங்களான குரு, சனி, ராகு- கேதுக்கள் 2026-ல் எந்த ராசியினருக்கு திருமணத்தை நடத்திக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

Advertisment

குருபகவான் நடத்திக் கொடுக்கும் திருமணம்ஒரு ஜாதகம் எவ்வளவு வினைப்பதிவை தாங்கி இருந்தாலும் அந்த வினைப் பதிவில் இருந்து ஜாதகரை விடுவித்து அவருக்கு பாக்கிய பலன்களை வழங்கக்கூடிய சக்தி படைத்தவர் குருபகவான்.

கோட்சார கிரகங்களில் குருபகவான் நடத்திக் கொடுக்கக்கூடிய திருமணம் பெற்றோர்களின் நல்லாசிகளும், தெய்வ அனுகூலமும் நிறைந்ததாக இருக்கும். ஒருவர் தனது திருமண வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று  விரும்பினாரோ அதேபோன்ற திருமண வாழ்க்கை அமையும். திருமண வாழ்க்கை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும். 

Advertisment

ஜனனகால ஜாதக அடிப்படையில் குரு ஜாதகருக்கு மாரகராகவோ, பாதகராகவோ, அஷ்டமாதிபதியாக இருந்தால்கூட கோட்சாரத்தில் 2, 5, 7, 9, 11-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும்போதும் 5, 7, 9 பார்வை யால் பார்க்கும் பாவகத்தையும், அந்த பாவகத் திலுள்ள கிரகத்தின்மூலமும் சுபப் பலனே கிடைக்க செய்வார். பலமிழந்து அமையப்பெற்ற கிரகங்களுக்கு குரு பார்வை இருந்தால், அதிலுள்ள தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். குரு தனித்து இருப்பது நல்லதல்ல. குரு நின்ற இடம் பாழ் என்பார்கள். அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால் அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகி றது.

ஒருவருக்கு திருமணம் நடக்கும்போது கோட்சார குருவானவர் ஜென்ம ராசிக்கு 2, 5 ,7 9 , 11 சஞ்சரித்தால் அந்த நபருக்கு தெய்வ அனுக்கிரகம் கிடைத்து எந்த தடையும் இல்லாமல் திருமணம் நடக்கும்.ஒரு ஜாதகத்தில் எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் தடை, தாமதம் ஏற்படுவதற்கு தோஷங்களும் சாபங்களும் காரணமாகும்.குருவின் பார்வை தோஷம் சாபமுள்ள இடங்களுக்கு கிடைக்கும் போது தோஷங்களும் சாபங்களும் வலு இழந்த தடை, தாமதங்கள் அகலும்.

கோட்சாரமும் குருபலமும்

2026-ஆம் ஆண்டில் ஜூன் 2 வரை குருபகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதன்பிறகு கடக ராசிக்கு சென்று உச்சம் அடைவார். 2026-ஆம் ஆண்டு குருப்பெயர்ச்சிக்கு முன் குருப்பெயர்ச்சிக்கு பின்  என இரண்டு விதமான அமைப்பில் திருமண தடைகள் விலகும்.

ஜூன் 2 வரை துலாம், தனுசு கும்பம்ராசியை பார்க்கும் குரு பகவனால்  திருமணம் தொடர்பான தோஷங்கள் விலகும். ஜூன் 2-க்குப்பிறகு விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு திருமண பாதிப்புகள் அகலும்.

மாங்கல்ய தோஷம்: எட்டாமிடம் என்பது பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம் ஆணுக்கு ஆயுள் ஸ்தானம் .

ஒருவரின் சுய ஜாதகத்தில் 8-ஆமிடம் அசுப கிரக தாக்கத்தால் பலம் குறைந்தால் திருமணம் தடைபடலாம். மிதுன குருவின் பார்வையால் ஜூன் 2 வரை ரிஷபம், கடகம், மீனம் ராசிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விலகி திருமணம் நடைபெறும். ஜூன் 2-க்குபிறகு மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கு மாங்கல்ய தோஷம் அகலும். சிம்ம ராசிக்கு இது அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதகரீதியாக தசாபுக்தி சாதகமாக இருந்தாலும் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

களத்திர தோஷம்: சுய ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது களத்திர தோஷம். 

ஒருவரின் சுய ஜாதகத்தில் 7-ஆமிடம் அசுப கிரக தாக்கத்தால் பலம் குறைந்தால் திருமணம் தடைபடலாம்.

மிதுன குருவின் பார்வையால் ஜூன் 2 வரை மேஷம், மிதுனம், சிம்மம் ராசியினருக்கு களத்திர தோஷம் விலகி திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது. ஜூன் 2-க்குப்பிறகு ரிஷபம், கடகம், கன்னி ராசியினருக்கு களத்திர தோஷ பாதிப்புகள் குறையும்.

குடும்ப தோஷம்: ஒருவரின் ஜாதகத்தில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பாவ கிரக சம்பந்தம் இருந்தால் குடும்பம் அமைய காலதாமதமாகும். மிதுன ராசியில் நிற்கும் குரு பார்வையால் ஜூன் 2 வரை கன்னி, விருச்சகம், மகர ராசியினருக்கு குடும்ப ஸ்தானம் பலம் பெற்று திருமணம் கூடிவரும் சாத்தியம் உள்ளது. ஜூன் 2-க்குபிறகு கடக ராசியில் உச்சம்பெறும் குரு பகவானால் துலாம், தனுசு, கும்ப ராசிக்கு குடும்ப ஸ்தான பாதிப்புகள் அகன்று திருமணம் நடக்கும்.

காதல் திருமணம்: தற்போது பெற்றோர்கள் நிச்சய திருமணத்தைவிட பலருக்கு காதல் திருமணத்தில் ஆர்வம் அதிகம் உள்ளது. மிதுன குருவின் பார்வை பலத்தால் ஜூன் 2 வரை  மிதுனம், சிம்மம், துலா ராசியினருக்கு காதல் திருமணம் நடைபெறலாம். 

சில சிம்ம ராசி இளம் பருவத்தினர் அவசரத்தனத்தால் காதல் திருமணம் செய்து அவஸ்தையை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் தேவை.

ஜூன் 2-க்குபிறகு கடகம், கன்னி, விருச்சிக ராசியினருக்கு காதல் திருமணம் நடக்கும் அமைப்பு உள்ளது

சனிபகவான் நடத்திக் கொடுக்கும் திருமணம்

பலருக்கு குருபகவான் மட்டுமே திருமணத்தை நடத்திக் கொடுப்பார். சனிபகவான் நடத்தி தர மாட்டார் என்ற அவநம்பிக்கை உள்ளது. பொதுவாக சனிபகவான் நடத்திக் கொடுக்கும் திருமணம் பல வருடமாக திருமணத் தடையை சந்தித்து மனம் நொந்து கிடைத்ததை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்தி திருமணம் நடக்கும். அதன்படி 2026-ல் மீன ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் ஏழரைச்சனியால் பாதிக்கப்பட்டுள்ள கும்பம், மீனம் மற்றும் மேஷ ராசியினருக்கு சுய ஜாதகத்தில் எவ்வளவு தோஷம் இருந்தாலும் இந்த காலகட்டத்தில் திருமணம் நிச்சயமாக நடக்கும்.

ராகு கேதுவினால் நடக்கும் திருமணம் 

2026-ஆம் ஆண்டு கால கட்டத்தில் சிம்மம் மற்றும் கும்ப ராசியினருக்கு குலத்திற்கு மாறான திருமணம் நடைபெற்று பல இன்னல்களை அனுபவிக்க நேரும் வாய்ப்பு உள்ளது என்பதால் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

"பாலஜோதிட' வாசகர்களுக்கு 2026-ஆம் ஆண்டு எண்ணங்களும் லட்சியங்களும் விருப்பங்களும் நிறைவேறக்கூடிய ஆண்டாக அமைய நல்வாழ்த்துகள்.

செல்: 98652 20406