ஆதர்புக்த் யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன் இருந்தால், மூன்று கேந்திரங்களில் சுப கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள். அனைவரிடமும் தைரியமாக பேசி, பணத்தைச் சம்பாதிப்பார்கள். வீரமாக இருப்பார்கள். பலரையும் வெற்றி பெறுவார்கள்.
சாகர யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 7-ஆம் பாவத்தில் சனி அல்லது 1
ஆதர்புக்த் யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன் இருந்தால், மூன்று கேந்திரங்களில் சுப கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள். அனைவரிடமும் தைரியமாக பேசி, பணத்தைச் சம்பாதிப்பார்கள். வீரமாக இருப்பார்கள். பலரையும் வெற்றி பெறுவார்கள்.
சாகர யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 7-ஆம் பாவத்தில் சனி அல்லது 10-ஆம் பாவத்தில் சனி இருந்து, அதற்கு கேந்திர ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் 44 வயதுவரை நல்ல பண வசதியுடன் இருப்பார்கள்.
விசாக யோகம்
ஒரு ஜாதகத்தில் கேந்திர ஸ்தானத்தில் எந்த கிரகங்களும் இல்லாமலிருந்து 5, 8, 9 ஆகிய பாவங்களில் பாவ கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்குப் பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆட்சியாளர்களால் எப்போதும் பிரச்சினை இருக்கும்.
வாத யோகம்
ஒரு ஜாதகத்தில் 6-ஆம் பாவத்தில் அல்லது 8-ஆம் பாவத்தில் சனி, ராகு, செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்குப் பண இழப்பு உண்டாகும். வீட்டிலிருக்கும் பொருட்களை இழக்க வேண்டியதிருக்கும். தொழிலில் நஷ்டம் உண்டாகும்.
நந்த யோகம்
ஒரு ஜாதகங்கள் இரண்டு... இரண்டு கிரகங்கள் சேர்ந்து மூன்று பாவங்களில் இருந்து, மீதி மூன்று கிரகங்களும் ஒரே பாவத்தில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். அரசரைப்போல வாழ்வார்கள். சிலர் ஆட்சி செய்பவர்களிடம் பரிசோ, விருதோ வாங்குவார்கள்.
ஏந்திரபாகு யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 4-ஆம் பாவத்தில் எட்டு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். பெயர், புகழுடன் இருப்பார்கள். தைரியசாலியாக இருப்பார்கள். வீரத்தனமாக செயல்படுவார்கள். நல்ல யோகத்துடன் வாழ்வார்கள்.
ஸ்ரீ நந்த யோகம்
ஒரு ஜாதகத்தில் மீன ராசியில் சந்திரன், சுக்கிரன் இருந்து, கடக ராசியில் குரு இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் சந்தோஷமாக வாழ்வார்கள். நல்ல மனிதர்களாக இருப்பார்கள். நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.
செல்: 98401 11534
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us