விபத்தி யோகம்
ஒரு ஜாதகத்தில் 11-ஆம் பாவத்தில் ராகு, 5-ஆம் பாவத்தில் சனி, 10-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், அவற்றின்மீது சுக்கிரனின் பார்வை இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். பல விபத்துகள் உண்டாகும்.
சக்ரடாமினி யோகம்
ஒரு ஜாதகத்தில் புதன் வீட்டில் குரு, சுக்கிரன் வீட்டில் சந்திரன் இருந்த
விபத்தி யோகம்
ஒரு ஜாதகத்தில் 11-ஆம் பாவத்தில் ராகு, 5-ஆம் பாவத்தில் சனி, 10-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், அவற்றின்மீது சுக்கிரனின் பார்வை இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். பல விபத்துகள் உண்டாகும்.
சக்ரடாமினி யோகம்
ஒரு ஜாதகத்தில் புதன் வீட்டில் குரு, சுக்கிரன் வீட்டில் சந்திரன் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களின் கண்கள் அழகாக இருக்கும். பெரிதாக இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். அறிவாளியாக இருப்பார்கள். காம சிந்தனை குறைவாக இருக்கும்.
சந்தான நாச யோகம்
ஒரு ஜாதகத்தில் 4-ஆம் பாவத்தில் ராகுவுடன், 5-ஆம் பாவத்திற்கு அதிபதியான சனிபகவான் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெண் குழந்தை களுக்குப் பிறகுதான் ஆண் குழந்தை பிறக்கும்.
விபரீத யோகம்
ஒரு ஜாதகத்தில் குருவின் வீட்டில் சூரியன், சூரியன் வீட்டில் சுக்கிரன் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பலருக்குக் குழந்தைகள் இருக்காது. பலருக்குப் பல பரிகாரங்களைச் செய்த பிறகுதான் குழந்தை பிறக்கும்.
கூட்ட யோகம்
ஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவத்திற்கு அதிபதியான செவ்வாய், 6, 8, 12-ஆம் பாவங்களில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களின் ஆண் குழந்தைக்கு சிறு வயதிலேயே கண்டம் இருக்கும்.
ராஜ் யோகம்
ஒரு ஜாதகத்தில் கடக ராசியில் குருபகவான், 9-ஆம் பாவத்தில் சுக்கிரன், 7-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் அரசரைப்போல வாழ்வார்கள். பணக்காரராக இருப்பார்கள். சந்தோஷமாக வாழ்வார்கள்.
அனுபாவ யோகம்
ஒரு ஜாதகத்தில் 11-ஆம் பாவத்தில் ராகு, 5-ஆம் பாவத்தில் சனி, 10-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களின் மனைவிக்கு அடிக்கடி கர்ப்பச் சிதைவு உண்டாகும்.
ஸ்ரீமுக யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் குரு, 9-ஆம் பாவத்தில் சுக்கிரன், 10-ஆம் பாவத்தில் சூரியன் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் 20 வயதிலேயே அரசரைப்போல வாழ்வார்கள். ராஜ வாழ்க்கை இருக்கும்.
செல்: 98401 11534
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us