ப்போது நந்துவிற்கு இப்படிப்பட்ட எண்ணம்.... அல்லது... நீங்கள் நினைத்தால்.... கனவு... பழைய சேவாய் மதுக்கூடத்திற்கு "எழுத்தாளர்களின் மதுக்கூடம்' என்று பெயர் வைப்பது....

Advertisment

"ஆனால், அதைச் செய்ய 
வேண்டுமென்றால்...''- நான் கூறினேன்: 
"இங்கு சில எழுத்தாளர்கள் வரும்படி 
நீ செய்யவேண்டும். உன்னால் 
அது முடியுமா? "

Advertisment

"நல்லது.... முதல் ஆள் நீ.... சரியா? 

உனக்கு ஏதாவது எழுத்தாளர்கள் நண்பர்களாக இருக்கிறார்களா?''

"அப்படி யாரேனும் இருப்பது அரிது. 

எனக்குத்தெரிந்த சிலரும் மது வாசனையே அறியாதவர்கள். ஹெமிங்வே டைப்பில் இருப்பது என்பது இப்போது வழக்கத்தில் இல்லை.''

"சென்ற வருடம் நான் சிங்கப்பூரில் இருந்தபோது....''- நந்து கூறினான்: 

"புகழ் பெற்ற ரேஃபில்ஸ் ஹோட்டலுக்கு நான் சென்றிருந்தேன். சேவாயின் வயதுதான் அதற்கும் இருக்கும். அவர்கள் "எழுத்தாளர்களின் மதுக்கூடம்' என்ற ஒன்றை வைத்திருந்தார்கள். சுவரிலிருந்த பித்தளைத் தகட்டில் சோமர்ஸெட் மாம், ஜோஸஃப் கான்ராட், க்ரஹாம் க்ரீன் ஆகியோர்  வந்திருந்ததாக பதித்து வைத்திருந்தார்கள்.''

Advertisment

"அனைவருமே மென்மையான ஆட்கள்...''- நான் கூறினேன்.

"ஆமாம்... ஆனால், அவர்கள் அங்கு தங்கியிருக்கின்றனர். மதுக்கூடத்தில் எப்போதாவது வந்து குடித்திருக்கலாம். அது எலுமிச்சம்பழ ஜூஸாகக் கூட இருக்கலாம்.''

"சரி... அந்த அருமையான பழைய நாட்களில்... சேவாயிலும் எப்போதாவது எழுத்தாளர்கள் வந்து தங்கியிருக்கலாம்.''

"பியர்ல் பக் வந்து தங்கியிருக்கிறார். 

அவரின் புத்தகங்களில் ஒன்றில் அவருடைய கையெழுத்தை இட்டிருக்கிறார். அந்த புத்தகம் என்னிடம் இருக்கிறது. அவர் நோபல் விருதை வென்றார். இல்லையா?''

"அவர் வாங்கியிருக்கிறார். ஆனால், அவர் மதுக்கூடத்திற்கு வந்திருப்பாரா என்பது குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. அவர் கிறிஸ்தவ மத பிரச்சாரகர்களின் மகள் என்று நான் நினைக்கிறேன்.''

"மது அருந்துவதற்குக் காரணம் வேண்டுமா? எது எப்படியோ... அவர் இந்த பக்கம் அவ்வப்போது வந்து தலையைக் காட்டியிருக்கலாம். நாம் அவரின் பெயரைத்  தகட்டில் பதித்துவிடுவோம்.''

"சரி... பியர்ல் பக் நமக்குக் கிடைத்துவிட்டார்.''

"ருட்யார்ட் கிப்ளிங் விஷயம் எப்படி? அவர் இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும்.''

"என் அன்பு நண்பனே...'' -நான் கூறினேன்: " இந்த ஹோட்டல் 1905 ஆம் வருடத்தில் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் கிப்ளிங் இந்தியாவிலிருந்து கிளம்பிவிட்டார். அதற்குப் பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.''

"நீ மிகவும் உதவியாகவே இல்லை.'' - நந்து கூறினான்: "ஜான் மாஸ்டர்ஸ் விஷயம் எப்படி?''

"இருக்க வாய்ப்பிருக்கு....''-  நான் கூறினேன்:

 "அவர் டேராடூனிலிருந்த ஒரு கூர்க்கா படையில் இருந்திருக்கிறார். மலைப் பகுதிக்கு அவ்வப்போது வந்திருக்கலாம். 

மது அருந்துவதற்குக் கூட வந்திருக்கலாம். இங்கோ.... அல்லது..... சார்லேவில்லே மதுக்கூடத்திலோ....''

"சார்லேவில்லே மதுக்கூடத்தை மறந்துவிடு. 

பல வருடங்களுக்கு முன்பே அது எரிந்துவிட்டது. நாம் தகட்டில் ஜான் மாஸ்டர்ஸின் பெயரைப் பதிப்போம். நமக்கு இரண்டு பேர் கிடைத்துவிட்டார்கள்.''

"நாம் ஏன் ஹோட்டலின் பழைய பதிவேட்டைப் பார்க்கக்கூடாது?''- நான் கேட்டேன்.

"முன்பு பணியாற்றிய மேனேஜர் அதை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.''- நந்து கவலையுடன் கூறினான்.

"பியர்ல் பக்கின் கையெழுத்தை விரும்பியது காரணமாக இருக்கலாம்.''

"பிரிக்கக்கூடிய மணியைப் பற்றி எழுத்தாளர் யார்? உனக்குத் தெரியுமா? ஒவ்வொரு நாளும் நான்கு மணிக்கு அவர்கள் மணியை அடிப்பார்கள். அதைத் தொடர்ந்து ஆட்கள் தங்களுடைய அறைகளுக்குத் திரும்ப சென்று விட வேண்டும்".

"மணியைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக் கிறேன்.''- நான் கூறினேன்:

"ஆனால், எனக்கு எழுத்தாளரின் பெயர் ஞாபகத்தில் வரவில்லை.''

"சோமர்ஸேட் மாம்?''

"அவர் முஸூரிக்கு வந்திருப்பார் என்று நினைக்கவில்லை. அவர் ஒரு பயணிக்கும் எழுத்தாளர்.''

"தி கான்ட்ஸர்ஸ்? பில் எயிட்கென்?''

"அவர்கள் இப்போதும் உயிருடன் இருக்கிறார்கள். நீ அவர்களை மது அருந்துவதற்காக அழைத்தால், தங்களின் பெயர்களைப் பதிப்பதற்கு உனக்கு அனுமதி தருவார்கள்.''

" நீ கூறுவது.... ஓசி மது! அப்படித்தானே?'' நந்து மிகவும் சந்தோஷப்பட்டதைப் போல தெரியவில்லை.

"உண்மையைக் கூறுகிறேன்.''

"நாம் இறந்தவர்களைப் பற்றி மட்டும் நினைப்போம். பண்டிட் நேரு இங்கு தங்கியிருக்கிறார். அவர் ஒரு எழுத்தாளராக இருந்தவர்.''

"சரி... நந்து. ஆனால், அவரை நீ மதுக்கூடத்தில் பார்த்திருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.''

"சர் எட்மண்ட் ஹில்லாரி?''

"சரி... அவர் தன் சுயசரிதையை எழுதியிருக்கி றார். எவரெஸ்ட்டை ஏறி முடித்த பிறகு, மது அருந்துவதற்காக வந்திருக்கலாம்.''

"சரி.... நான் புரிந்து கொள்கிறேன். ஜிம் கார்பெட்?''

"ஆனால், அவர் நைனிதாலில் வாழ்ந்திருக்கி றார்.''- நான் மறுத்தேன்: "அவர் எப்போதாவது இங்கு வந்திருப்பாரா என்று நான் சந்தேகப் படுகிறேன்.''

"அவருடைய பெற்றோர் முஸூரியில் திருமணம் செய்துகொண்டவர்கள். நீதான் இதை என்னிடம் கூறினாய். அவர் "மேன் ஈட்டர் ஆஃப் ருத்ரப்ரயாக்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இங்கிருந்து ருத்ரப்ரயாக்கிற்கு எண்பது மைல் தூரம்தான். காகம் பறக்கும் தூரம்...''

"சரி.... சரி... புலியைச் சுட்ட பிறகு, கார்பெட் சேவாயில் புத்துணர்ச்சி அளிக்கும் பீரைப் பருகுவதற்காக இந்த தூரத்தைக்கடந்து பயணித்து முஸூரிக்கு வந்திருப்பார். அப்போது வாகனங்கள் பயணிக்கும் சாலை இல்லை, நந்து. அவருக்கு மது தேவைப்பட்டிருக்க வாய்ப்பில்லை.''

"அதற்கு வாய்ப்பிருக்கிறது. அவர் நீண்ட தூரம் நடக்கும் வழக்கம் உள்ளவர்.''

"புலிகளைச் சுடுவதற்கு, பீர் பருகக் கூடாது. எனினும், அவரின் பெயரை நாம் தகட்டில் பதிப்போம். அவரின் பெற்றோர் முஸூரியில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற தகவலை மனதில் வைத்துக்கொண்டு... இப்போது நமக்கு யாரெல்லாம் இருக்கிறார்கள்?''

"பியர்ல் பக், ஜான் மாஸ்டர்ஸ், ஜிம் கார்பெட்.''தகடுகள் தயாராகி விட்டன.

"எழுத்தாளர்களின் மதுக்கூடம்' வசந்த காலத்தில் திறக்கப்பட இருக்கிறது.இதில் பொருத்தமான நபரைச் சேர்க்கவேண்டும் என்ற தகவலுடன் ஏதாவது வாசகர் வருவதாக இருந்தால், அவருக்கு இலவசமாக மது வழங்கப்படும்.

நேற்று சாயங்காலம் மூன்றாவது முறையாக நான் விஸ்கி அருந்திக் கொண்டிருந்தபோது, ருட்யார்ட் கிப்ளிங்கைப் போலவே இருந்த ஒரு மனிதர் மதுக்கூடத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மனிதரிடம் கேட்டார்: "இங்கு மது பரிமாறுகிறீர்களா?''

அவரை எங்களுடன் இணையும்படி கேட்பதற்கு முன்பே, அவர் மறைந்து சென்றுவிட்டார்.