குலம் காக்கும் தெய்வம்,
குலதெய்வ வரலாறு..
அவசியம்,
அனைவரும் அறிந்து
வைத்திருக்க வேண்டிய
பால பாடம்..
குழுக்களாக வாழ்ந்த நம் முன்னோர்கள்..
ஒத்த குணம்கொண்ட
ஒத்துப் போகும் மனம்கொண்ட
மனிதர்கள் இணைந்து குழுக்களாக..
தனித் தனி குலமாக வாழ்ந்திருக்கிறார்கள்..
"ஒன்றே குலம்
ஒருவனே தேவன்'' என்கிற
மனித குலத்திற்கான
பொது தத்துவம்..
நடைமுறை கலாசார நாகரீகத்திற்கு
பொருந்தாது..
தன் குலத்தில் இருப்பவர்களை காக்க தன் உயிரைக் கொடுத்தவர்களை
தெய்வமாக்கி..
அவர்களுக்கு நன்றி செலுத்தும்
வழிபாட்டுக்கு முறையை
குலதெய்வ வழிபாடாக உருவாக்கினார்கள்...
தங்களைத் தாக்கவரும்
விலங்குகளைத் தடுக்கும்
காவல்காரனாக..
போர் தொடுத்துவரும்
எதிரிகளைத் தடுக்க
உயிர் கொடுத்த
போர் வீரனாக..
கொல்லை நோயிலிருந்து
காக்கும் மருத்துவராக..
வாழும் கலையை சொல்லும்
ஆன்மிக குருக்களாக..
தக்கசமயத்தில் உதவிய
தாராள வள்ளலாக..
நம்முடன் வாழ்ந்த,
நம் குலத்தை
ஏதோ ஒன்றிலிருந்து காத்தவரை..
கடவுளாக வழிபட தொடங்கியதே
குலதெய்வ வரலாறு..
நம்மை இந்த பூமிக்கு தந்து
நாம் நன்றாக இருக்க வேண்டுமென
நினைக்கும் ஒரே ஜீவன்
நம் பெற்றோர் மட்டுமே..
அவர்கள்தான் நம் தலைமுறையின்
குலதெய்வம்...
எந்த இடர்கள் வந்தாலும்
எத்தனை துன்பம் வந்தாலும்
நம்மை கைவிடாத சொந்தம்,
சொத்து சுகம் குலதெய்வம்தான்..
இந்த பூவுலகை
வீட்டுச் சென்றாலும்
பூத உடலை
விட்டுச் சென்றாலும்
அவர்களின் புண்ணியத்தை
தான் பெற்ற பிள்ளைகளுக்கே
விட்டுச் செல்பவர்கள்..
இறந்த பின்பும், இறவா சிந்தனையுடன்
சந்ததியின் முன்னேற்றத்திற்கு
உறுதுணையாய் நிற்பது குலதெய்வம்தான்...
இறந்த பின்னும்கூட
நல்லெண்ணம் கொண்டவர்கள்
நல்லது செய்வதை நிறுத்துவதில்லை..
தூய ஆத்மாவிற்கு அழிவென்பதில்லை..
பிறர் துயர் கண்டு
அழும்போது தலைவன்
ஆகிறான்..
துயர்துடைக்கும்போது
இறையாகிறான்..
குலம் காத்த மனிதரை
புனிதராக்கி புதைத்த இடத்தில்
வேல்கம்பை ஊன்றி வருடந்தோறும்
மகா அமாவாசையில் சிவராத்திரி
அன்று வழிபடும் வழக்கத்தை
நம் முன்னோர்கள்
உருவாக்க காரணம் உண்டு..
குலதெய்வத்தை கும்பிட உகந்தநாள்..
மாசியில் வரும்
மகா சிவராத்திரி..
ஏனென்றால்..
இறைவன் அன்றைய தினம்
புனித ஆத்மாக்களுக்கு
புனர் ஜென்ம ஞாபகத்தை புத்துயிர் ஊட்ட..
புனித ஆத்மாக்கள்
தாங்கள் புதைக்கப்பட்ட இடத்தை,
வாழ்ந்த இடத்தைக் காண..
தம் வாரிசுகள்
வருவார்கள்
என்பது ஐதீகம்..
அன்றையநாள் குலதெய்வம்
கும்பிட நாமும் அங்குசென்று
நம் கஷ்டங்களை
சொல்லி அழுதால்..
"நான் இருக்கேன்
உன்னைக் காப்பாற்ற
கலங்காமல் நீ சென்றுவா- வென்று வா''...
அடுத்த வருடத்திற்குள்
காரிய வெற்றியோடு மகிழ்ச்சியோடு
என்னைக் காண வருவாய் என நம்பிக்கை கொடுத்து
நல்லாசி கொடுத்து
தன்னுடைய புண்ணியத்தைக் கொடுத்து..
அவர்களின்
நல் ஆத்ம சிந்தனை
நம்முடன் இருந்து
அருள் வழங்குவர்..
அதனால்தான்
குலதெய்வத்தை வழிபட்டு வந்தவுடன்
வெற்றிமேல் வெற்றி
உடனே கிடைக்கிறது..
நம்மை நேசிக்கும் குலசாமியை
கும்பிட்டு வருபவனுக்கு
குறைகளின்றி
குலவிருத்தி நிச்சயமுண்டு...
குலதெய்வத்தின் மகிமையை
பல குடும்பங்களில்
சொல்லித் தருவதை நிறுத்தியதால்
அத்தோடு அந்த குலம் நசிந்துவிடுகிறது
குலம் நாசமாகிறது..
குலப் பெருமை என்பது,
கூட்டுக் குடும்ப
அன்யோன்யமான
வாழ்க்கையை வாழ
சொல்லிக்கொடுக்கும்
அடிப்படை கலாசாரம்..
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை..
வருடம் ஒருமுறை சொந்தங்கள்கூடி
குலசாமி கும்பிடும் முறை எதற்கு?!..
ஒருவருக்கொருவர் மனரீதியாக
ஆறுதல் சொல்ல...
பொருளாதாரரீதியாக உதவிகள்செய்து
ஒருவொருக்கொருவர்
முன்னேற்ற வழியை பகிர்ந்துகொள்ளத்தான்..
இன்று தன் பிள்ளைகளுக்கு
நல்ல வரன் கிடைக்க..
வரம் வேண்டி நிற்பதை தடுக்கத்தான்
வரப் பிரசாதமாக வழி செய்தது
நம் முன்னோர்களின்
குலதெய்வக்கோவில் கும்பிடு...
ஒரே பழக்கவழக்கம் எல்லாருக்கும் இல்லை..
ஆணும் பெண்ணும் இணைசேர
ஒத்த பழக்கவழக்கம் வேண்டும்..
சாதியும் இல்லை,
மதமும் இல்லை..
ஆனால் நல்ல வாழ்க்கை வாழ
மனிதனின் பழக்கவழக்கம்
அவசியம்தானே...
கடந்த நூற்றாண்டுகளில்
எதிரியை அழிக்க வேண்டுமென்றால்
முதலில் குலதெய்வத்தை
கும்பிடவிடாமல் தடுப்பார்கள்..
நம் முன்னோர்களின்
குடும்ப வளர்ச்சியைக் கண்டு
பொறுக்க முடியாதவர்கள்
போட்டி, பொறாமை, வன்மத்தால்..
குலத்தையே நாசம் செய்ய
ஏடாகூடமான செய்வினை,
பில்லி, சூன்யம் வைத்து
சந்ததிகளை காக்கும்
குலதெய்வத்தையே முதலில்
கட்டிப் போட்டுவிடுவார்கள்..
அதனால்தான் இன்றும் சிலர்
குலதெய்வத்தைக்
கும்பிட்டும் எனக்கு
பலனில்லை என்கிறார்கள்..
செயலிழந்து நிற்கும் குலதெய்வத்தால்
எப்படி நல்லாசி வழங்க முடியும்?!...
செய்வினை தோஷத்தை
நீக்காவிடில்..
அறிவு வளர்ச்சியற்ற வாரிசுகள்,
ஊனமுற்று பிறத்தல்,
புத்தி பேதலித்து போவது,
இளமையில் அகால மரணம்,
திருமணம் தடை,
சுகமற்று வாழ்வது,
புத்திர தோஷம், சோகம்,
இளமையில் வறுமை
இருந்தும் வாழ முடியாமை,
உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லாமை,
தொழில் தடை,
தொழில் நஷ்டம்,
சொல்ல முடியா கஷ்டங்கள்
மீள முடியா துயரம்
என குடும்பத்தில்
தொடர்ந்து கெடுதல் நடந்துகொண்டே இருக்கும்...
இந்த அறிகுறிகள்மூலம் குலதெய்வத்தை
முடக்கி விட்டார்கள் என்பதை
புரிந்து கொள்ளவேண்டும்...
வாழ முடியாமல்
வாழ வழியின்றி
வாழ வேண்டுமே என்பதால்..
சொந்த ஊரை விட்டு
சொந்தங்களை விட்டு
சொந்தங்களால் விரட்டப்பட்டு
சொந்தங்களை வெறுத்து
சொந்தங்களை ஏமாற்றிவிட்டு
வெளியூர், வெளிமாநிலம்
வெளிநாட்டிற்கு
ஓடி ஒளிந்து வாழ்பவர்கள்..
தங்களின் தலைமுறைக்கு
குலதெய்வத்தை சொல்லாததால்
சொல்ல முடியாததால்
சொல்லத் தவறுவதால்
எதிரியின் வஞ்சக சூழ்ச்சியால்
குலதெய்வமே தெரியாமல்
சொந்தங்களை இழந்து
அனாதையாகி
அவதிப்படுபவர்கள்
இன்று ஏராளம்...
சிலர் குலதெய்வத்தை
தேடி பிடிக்கிறார்கள்..
இன்னும் சிலர்
தேடிக்கொண்டே
இருக்கிறார்கள்..
குலதெய்வம் அறியாதவர்கள்
ஆதி சிவனை
மனதார வேண்டுகிறார்கள்..
பொது தெய்வங்கள் வழிபடுவதற்கும்
குலதெய்வத்தை வழிபடுவதற்கும்
பலன் பெறுவதில்
பல வித்தியாசங்கள் உண்டு..
பழகியவர்கள்
பக்கத்து வீட்டுக்காரர்கள்
நம் தாய்- தந்தை
ஆகிவிட முடியாது..
எல்லாம் இறைவனே
என்றாலும்
எல்லாம் வல்ல இறைவன்
குலதெய்வம்..
குலதெய்வத்தை கும்பிட்டு
குலம் காத்துக்கொள்...
குலம் காத்தவர்களை நன்றியோடு
மறக்காமல் நாம் வழிபடுதல் நம் கடமை...
செல்: 96003 53748