பூமியில் மனிதர்கள் எப்படி எப்படியோ வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதேபோல நன்மைகள் பல செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு அரசனுக்கு நல்லது- கெட்டது எடுத்துச்சொல்ல நான்கு மந்திரிகள் இருப்பார்கள். அதேபோல அரசனுக்குத் தெரியாமல் நடக்கும் விஷயங்களைக்கொண்டு வந்து தெரிவிக்க நான்கு தூதுவர்கள் இருப்பார்கள். இப்படி மனிதர்கள் செய்யும் நல்லது- கெட்டதை கடவுளிடத்திலே கொண்டுசேர்க்கும் வேலையைச் செய்பவர்களே தேவர்கள் எனப்படும் தூதுவர்கள்.
தேவர்கள் என்று அழைக்கக்கூடிய இவர்கள் கடவுள் அல்ல. இவர்கள் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர் கள் போன்ற உயர்நிலை உயிரினங்கள் ஆவார்கள். ஆனால் இந்த தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. அந்த வேறுபாடுகளில் முதன்மையானது உருவம் சம்பந்தப்பட்டது. மனிதர்களுக்கு உருவம் உண்டு. ஆனால் தேவர்களுக்கு உருவமும் உண்டு. உருவம் இல்லாமல் அருருவமாக அலைவதும் உண
பூமியில் மனிதர்கள் எப்படி எப்படியோ வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதேபோல நன்மைகள் பல செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு அரசனுக்கு நல்லது- கெட்டது எடுத்துச்சொல்ல நான்கு மந்திரிகள் இருப்பார்கள். அதேபோல அரசனுக்குத் தெரியாமல் நடக்கும் விஷயங்களைக்கொண்டு வந்து தெரிவிக்க நான்கு தூதுவர்கள் இருப்பார்கள். இப்படி மனிதர்கள் செய்யும் நல்லது- கெட்டதை கடவுளிடத்திலே கொண்டுசேர்க்கும் வேலையைச் செய்பவர்களே தேவர்கள் எனப்படும் தூதுவர்கள்.
தேவர்கள் என்று அழைக்கக்கூடிய இவர்கள் கடவுள் அல்ல. இவர்கள் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர் கள் போன்ற உயர்நிலை உயிரினங்கள் ஆவார்கள். ஆனால் இந்த தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. அந்த வேறுபாடுகளில் முதன்மையானது உருவம் சம்பந்தப்பட்டது. மனிதர்களுக்கு உருவம் உண்டு. ஆனால் தேவர்களுக்கு உருவமும் உண்டு. உருவம் இல்லாமல் அருருவமாக அலைவதும் உண்டு.
கடவுள் உருவாக்கிய இந்த உலகத்தில் அடங்கியுள்ள உயிர்களை அவரவர்கள், அதனதன் வாழ்க்கைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொடுப்பது தேவர்களின் வேலையாகும். தேவர்களது செயலுக்கு ஏற்ப "கின்னர்', "கிம்புருஷர்' "யட்சர்கள்', "சித்தர்கள்', "சாரணர்', "கந்தர்வர்' என்று அவர்களை அழைக்கின்றனர்.
தேவர்களுக்கு மூன்றுவிதமான வடிவங்கள் இருப்பதாக வேதம் கூறுகிறது. தேவலோகத்தில் அவர்கள் இருப்பதை "ஆதி தெய்வீகம்' என்று அழைக்கின்றனர். பூமியில் பஞ்சபூதங்களோடு கலந்து உருவம் எதுவும் இல்லாமல் இருக்கும் அவர்களது நிலையை "ஆதி பவுதிகம்' என்றும் அழைக்கின்றனர்.
தேவர்களது எண்ணிக்கை "முப்பது முக்கோடி' என்று சொல்லப்படுகிறது. "தேவேந்திரன்' கீழ்தான் இந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் வருகின்றனர்.
இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது ஆதித்தர்கள்- 12 பேர்; ருத்ரர்கள்- 11 பேர்; வசுக்கள் 8 பேர்; அஸ்வினி
குமாரர்கள் 2 பேர்.
ஆதித்தர்கள்- 12
ருத்ரர்கள்- 11
வசுக்கள்- 8
அஸ்வினி குமாரர்கள்- 2
மொத்தம்- 33 பேர்கள்.
இவர்களின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது
ஆதித்தர்கள்:
1. வைகத்தன்.
2. விபஸ்துதன்.
3. வாசன்.
4. மார்த்தாண்டன்.
5. பாஸ்கரன்.
6. ரவி.
7. லோக பிரகாசன்
8. லோகசாட்சி.
9. திருவிக்ரமன்.
10. ஆதித்தன்.
11. திவாகரன்.
12. அங்கிமா-.
ருத்ரர்கள்- 11 பேர்
1. மகாதேவன்
2. ருத்ரன் (ருத்ரன்).
3. சங்கரன்.
4. நீலலோகிதன்.
5. ஈசானன்.
6. விஜயன்.
7. வீமதேவன்.
8. சவுயம்மதேவன்.
9. பலோத்பவன்.
10. கபா-கன்.
11. ஹரன்.
வசுக்கள்- 8 பேர்
1. அனலன்.
2. அனிலன்.
3. ஆபத்சைவன்.
4. சோமன்.
5. தரன்.
6. துருவன்.
7. பிரத்யுஷன்.
8. பிரபாசன்.
அஸ்வினி குமாரர்கள்- 2 பேர்
1. நாசத்யன்.
2. தசரன்.
ஆக, மொத்தம் 12+11+8+2=33 பேர் ஆவார்கள். இந்த 33 பேர்களுக்கும், தலா ஒரு கோடி உதவியாளர்களும், பணியாளர்களும், தேவதைப் பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவியாளர்கள், பணியாளர்கள், தேவதைப் பெண்கள் அனைத்தும் அடிங்கியதே ஒரு கோடியாகும்.
எனவே மொத்தம் 33 ல 1 கோடி= 33 கோடி தேவர்கள் என்பது கணக்காகும்.
தேவர்கள் வாழும் உலகத்தின் ஒரு பகுதி தேவலோகம் என்றழைக்கப்படுகிறது. இதன் தலைநகரம் "அமராவதிப்' பட்டணம் என்பதாகும். இங்குதான் தேவர்களின் தலைவன் "தேவேந்திரன்' ஆட்சி செய்கிறான்.
இவருடைய அதிகாரத்தில்தான் இந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் பணியாற்றுகின்றனர்.
இந்த தேவர்களுக்குப் பசி என்பதும், வியாதி, முதுமை, மரணம் என்பவையும் கிடையாது. இவர்கள் தேவைப்பட்டபோது அமுதை மட்டுமே உட்கொள்பவர்கள். பூலோகத்தில் ஒரு வருடகாலம் என்பது இவர்களுக்கு ஒரு நாளாகும். மனிதர்கள் கற்றபிறகே வேதத்தை அறியமுடியும். ஆனால் தேவர்கள் பிறவியிலேயே வேதம் பற்றிய அறிவோடு பிறக்கிறார்கள். மனிதர்கள் செய்கின்ற நல்லது- கெட்டது என்ற இரண்டு செயல்களையும் கடவுளிடம் கொண்டு சேர்ப்பது இவர்களுடைய வேலையாகும். கடவுளுக்குத் துணையாக பல கோடி உயிர்களின் செயல்களைக் கண்காணித்து அதுபற்றிய தகவல்களை கடவுளுக்குத் தெரிவிப்பது என்பது பல யுகங்களாக நடந்துவருகின்றது.
கடவுள் படைத்த தேவர்கள் தவிர, மனித வாழ்க்கையில் உயர்ந்த தவத்தையும் மிக உயர்ந்த ஞானத்தையும் சிறந்த தியாகத்தையும் புரிந்தவர்கள் ஆத்மபரிமானத்தின்மூலம் தேவர்களது இயற்கை நியதியாக உள்ளது.
தேவர்களுக்கு இறைவனடியை அடையும் பாக்கியமில்லை. அதாவது "முக்தி' பெறும் வாய்ப்பு இல்லை. ஆனால் மனிதர்கள் பூமியில் நல்ல செயல்களில் ஈடுபட்டு அதையே தொடர்ந்து தேவர்கள் ஆகலாம். ஆனால் தேவர்கள் மீண்டும் பூமியில் பிறந்து வாழ்ந்து பிறகுதான் "முக்தி' அடையமுடியும் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முப்பது முக்கோடி தேவ- தேவதைகள் அனைவரும் பசுவின் உட-ல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே பசுவை வணங்கினால் இறைவன், தேவர்கள் உட்பட அனைவரையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
தேவேந்திரன் பல தீமைகளைச் செய்திருக்கிறான். அதேசமயம் பல நல்ல செயல்களையும் செய்திருக்கிறான். தேவேந்திரன் இல்லாவிட்டால் பூமியில் மழை பொழியாது. எனவே பூமியில் மழை பெய்யவும், பூமி செழிப்புடன் இருக்கவும், தேவேந்திரனை வணங்குவோம். தேவ- தேவதைகளை மதித்து நடப்போம்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us