எண் கணிதத்தில் உலக அற்புதங்கள்

numbers

 

2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள்.

அதிகமாக சிந்தனை செய்வார்கள்‌. எந்த காரியத்தையும் நல்லதா அல்லது கெட்டதா என்று அலசிப் பார்ப்பார்கள்.

எப்போதும் குழப்பமான மனதுடன் இருப்பார்கள்.

நமக்கு 2 கண்கள், 2 காதுகள், 2 கைகள், 2 கால்கள் இருப்பதைப்போல, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இரண்டு வகை மனநிலையுடனே எப்போதும் இருப்பார்கள்.

ஒரு செயலில் இறங்கும்போதே, அதைச் செய்யலாமா அல்லது வேண்டாமா என்ற தவிப்புடனே எப்போதும் இருப்பார்கள்.

எந்த விஷயத்தையும் சந்தேகத்துடனே பார்ப்பார்கள்.

எதையும் அவ்வளவு எளிதாக  நம்பிவிட மாட்டார்கள்.

எதையும் எடை போட்டுப் பார்த்த பிறகு தான், ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்ற தீர்மானத்திற்கே வருவார்கள்.

நியூமராலஜி பார்த்து பெயரை நன்கு அமைத்
துக்கொண்டால், பெயர், புகழுடன் வாழலாம்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பொதுவாகவே கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

மனதில் தாங்கள் எப்போதும் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற நினைப் புடனே இருப்பார்கள்.

நடந்த விஷயங்களை நினைத்துப் பார்த்து... அதே நேரத்தில் நடக்கப் போகும் விஷயங்களையும் நினைத்துப் பார்த்து... இப்போது என்ன செய்தால் சரியாக இருக்குமென்று மனதிற்குள் திட்டமிடுவார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தனியாக இருக்கும்போது, ஆழமான சிந்தனைகளில் மூழ்கி விடுவார்கள். 

அதன்காரணமாக பலருக்கு மனநோய் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தைரியம் இருக்காது.

மனதில் இருப்பதை துணிச்சலாக பேசக்கூடிய பழக்கம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இருக்காது. எனினும், தாங்கள் மிகவும் தைரிய குணம் கொண்டவர்கள் என்பதைப்போல வெளியே காட்டிக் கொள்வார்கள்.

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்.

தன்னம்பிக்கை, கடவுளின் அருள் ஆகியவற்றால் முன்னுக்கு வருவார்கள்.

சூரியனின் ஒளி பட்டு, சந்திரன் பிரகாசிப்பதைப்போல, இந்த தேதி களில் பிறந்தவர்களைப் பலரும் உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பார்கள்.

அதன்மூலம் வாழ்க்கையில் வளர்ச்சி யைக் காண்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களில் சிலர் பெரிய பேச்சாளராக இருப் பார்கள். சிலர் வழக்கறிஞராக இருப்பார்கள். சிலர் வர்த்தகராக இருப் பார்கள். சிலர் ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்பவர்களாக இருப்பார்கள். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரிய பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தால், குழம்பி விடுவார்கள். மனதில் பயம் வந்துவிடும். அந்தச் சமயத்தில் மனதில் துணிச்சல் என்பதே சிறிதும் இருக்காது.

இவர்களுக்கு ஒத்து வராதவர்கள் 4, 8, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல தோற்றம் இருக்கும்.

சிலர் அரசு பதவிகளில் இருப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்த வர்கள் வசீகரிக்கும் ஆடைகளை அணிய விரும்புவார்கள். தன் வயதைவிட இளமையாக மற்றவர்களுக்கு முன்னால் இருப்பதற்கு ஆசைப்படு வார்கள்.

தன் காரியங்கள் நல்ல முறையில் நடக்கவேண்டும் என்பதற் காக, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் பணிவாக மற்றவர்களிடம் நடந்துகொள்வார்கள்.

மாதத்தின் வளர்பிறை நாட்களில் இவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஒத்து வரக்கூடிய எண்கள் 3, 5, 6.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே விவாதம் இருக்கும்.

இவர்களுடைய பெயர்களின் கூட்டு எண் 3 அல்லது 5 ஆக இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினங்கள் மூன் ஸ்டோன் அல்லது முத்து.

முத்தை அணிந்தால் பெயர், புகழ் கிடைக்கும்.

இவர்களுக்குச் சாதகமான வர்ணங்கள் மஞ்சள், லைட் ப்ளூ, லைட் க்ரீன். ஒத்து வராத வர்ணங்கள் கருப்பு, சிவப்பு. இந்த வர்ணங்கள்கொண்ட ஆடைகளை இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அணியக் கூடாது.

OM010725
இதையும் படியுங்கள்
Subscribe