சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக ‘கேடட்’ செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்தது.
ஓபன், பெண்கள், 12, 10 வ
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக ‘கேடட்’ செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்தது.
ஓபன், பெண்கள், 12, 10 வயது உட்பட 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
88 நாடுகளில் இருந்து 842 பேர் பங்கேற்றனர்.
இதில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஷர்வானிகா, கியானா, திவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் அரியலூரை சேர்ந்த ஷர்வானிகா, முதல் போட்டியில் கஜகஸ்தானின் அடெலினாவிடம் தோல்வியடைந்தார்.
பின் சுதாரித்துக் கொண்ட ஷர் வானிகா, தொடர்ந்து 9 போட்டியில் வெற்றி பெற்றார்.
கடைசி போட்டியில் தோற்ற போதும் 9.0 புள்ளி பெற்றார். மங்கோலியாவின் சின்ஜோரிக், சீனாவின் ஜிஜின் தலா 9.0 புள்ளி பெற்றனர்.
இருப்பினும் டை பிரேக்கர் புள்ளியில் முந்திய ஷர்வானிகா, முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் ஆனார்.
கடந்த 2024-இல் அல்பேனியாவில் நடந்த உலக ‘கேடட்’ தொடரில் ரேபிட் பிரிவில் தங்கம், ‘பிளிட்ஸ்’ பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us