சோம்பல் வேறு. தூக்கம் வேறு..!
சோம்பல் புலன்களைக் தூண்டுவதில்லை. ஆனால் உறக்கம் புலன்களைக் தூங்க வைக்கிறது. மனதைத் தவிர.
புலன்கள் வசப்பட்டு நிலையாக நிற்கின்றன. அந்த யோகம், ஒரு தனி யோகமாகக் கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன் தன் உணர்வு உடையவனாக மாறுகிறான். யோக நிலையில் உறுதியாக இருப்பது இதற்கு அவசியம்.
புலன்கள் என்பது மனதின் வாசல்கள் இவ்வாறு அடைபட்டு விட்ட இந்த நிலையில், மனதை எங்கு செலுத்தினாலும் ஆழமாக செலுத்த முடியும் இந்த நிலையில்தான் ஆன்மிக சாதனைகளைத் தொடரமுடியும்.
மனதாலோ வாக்கினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடையமுடியாது. அடைய இயலாது. இருக்கிறது என்று சொல்பவனைத் தவிர வேறு யார் அதனைப் பெற முடியும்..?
அன்பையும் பாசத்தையும் கைகளால் எடுத்து காட்டமுடியுமா..? அவற்றை உணரத் தான் முடியும்.
அதுபோல, ஆன்மா, இறைவன் போன்றவற்றை உணரத்தான் முடியும். இந்த உணர்வு வெற்றிக்கு வழிவகுக்கும்.
பிரம்மத்தை இல்லை என்று கருதுகின்றவன், அவன் இல்லாதவனாகவே ஆகிவிடுகி றான்.
இறைவனை சிலர் வெளியில் இல்லை என்பர். தனிமையில் பயவுணர்வு பெற்று மனதார அதே இறைவனிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.
பிரம்மம் இருக்கிறது என்ற உண்மையை முதலில் அறியவேண்டும். பிறகு அதன் உண்மை நிலையை அறியவேண்டும். "இருக்கிறது' என்ற நினைவே இறையனுபவம். ஆன்ம அனுபவம் தானாகவே வருகிறது நுனியில் பிளவை உடைய நூல் ஊசியின் காது வழியே செல்லாது. அதைப்போலவே ஆசைகளில் சிறியது, பெரியது என்ற பேதமில்லாமல் இருந்தாலும், ஒருவன் இறைவனின் சந்நிதானத்தை அடையமாட்டான். மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும், விலகும்போது, மனிதன் மரணமற்றவன் ஆகின்றான். இங்கேயே இறைநிலையை அடைகிறான். புலன்களிலிருந்து விடுபட்ட மனம், அனைத்துத் தீபங்களைப் போலிருக்கிறது. பந்தங்கள் தானே அறுபடுகின்றன. அவன் பிரம்மத்தை அடைகிறான். அதாவது- பிரம்மமாகவே ஆகிறான். மனதின் எல்லாப் பந்தங்களும் அவிழும் பொழுதே மனிதன் மரணமற்றவன் ஆகின்றான்.
மனதில் எத்தனோயோ உணர்ச்சிச் சிக்கல்கள் உள்ளன. எத்தனையோ உணர்ச்சிப் போராட்டங்கள் உள்ளன. அவற்றிலிருந்து மீண்டு, மனத்தூய்மை பெறுவதே ஆன்ம வாழ்வின் அடிப்படை. உனக்கு உபதேசம் இனி இவ்வளவுதான்.
மன முடிச்சுக்கள் அகங்காரத்தாலும். அவித்யையாலும் ஏற்படும் ஒரு உணர்வுபூர்வமான போராட்டங்கள் இதயத்தின் நாடிகள் 101. அவற்றுள் ஒன்று உச்சந் தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியே வெளியேறுகிறவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்.
இந்த இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப் படுகின்றன. இவற்றின் மூலமே கட்டளைகள் இடம் பெறுகின்றன. அனுபவங்கள் பெறப் படுகின்றன.
இந்த நாடிகள் சாதாரண கண்களுக்குப் புலனாகாதவை. உச்சந்தலையிலுள்ள பிரம்மரந்திரம் உட்பட உடம்பில் 11, துவாரங்கள் இந்த பிரம்மரந்திரத்தின் வழியே ஒரு நாடி செல்கிறது.
இதன் வழியே உயிரை விடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். 100 நாடிகளும் மீதி உள்ள 10 வாசல்களும் ஏதாவது- ஒன்றில் நிலைபெறுகின்றன.
இவற்றின் வழியாக உயிர் வெளியேறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது.
உயிர் பிரம்மரந்திரத்தின் வழியே வெளி யேற்ற முடியுமா என்றால்..? முடியும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
உடம்பில் உறையும் ஆன்மா பெருவிரல் அளவுடையது. மக்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. முஞ்சைப் புல்களிலிருந்து ஈர்க்குச்சியைப் பிரிப்பதுபோல் அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்கவேண்டும்.
அந்த ஆன்மா தூய்மையானது. அழிவில்லாதது என்று அறிந்து கொள். பெருவிரல் அளவுடைய ஒளிப்பொருள் ஒன்று நம்முள் இதயக் குகையில் உள்ளது. அதனை உடம்பிலிருந்து பிரித்தறிய வேண்டும்.
அந்த ஆன்மாவே எங்கும் நிறைந்த பரம்பொருள் என்று அறியவேண்டும்.
ஆன்மா, அதனை உணர்பவை போன்றவை அவ்வளவு சாதாரணமானதல்ல.
இது உடனே பலன் தெரியாத நிலையில் சாதனைகளில் பொறுமையும் கைகூடப் பலர் இதனைச் சாதித்திருக்கிறார்கள்'
"என்னால் முடியும்' என்ற தன்னம் பிக்கையே இதன் ஆணிவேர்இந்த வித்யையை அறிந்து பின்பற்றும் பொழுது இறவா நிலையை அடைகின்றனர்.
இந்த பேறு நசிகேதனுக்கு மட்டும் சொந்தமல்ல.! பின்பற்றுகின்ற யாரும் இதனைச் செய்யலாம். கட உபநிஷதம் அங்குஷ்ட மாத்திரப் புருஷ வித்யை நாசிகேத வித்யை என்று இரண்டு முறைகளை யமதர்மன் நசிகேதனுக்கு உபதேசித்தார்.
இந்த சரிதத்தை உணர்ந்து படித்தவன் புண்ணிய லோகத்தை அடைவான் என்று சாஸ்திரம் கூறுகிறது.
உலகங்கள் - படைப்புகள்
பிரம்மம், கடவுள், உலகம், படைப்பு, இவற்றின் அடிப்படை எவ்வாறு அறிவது..?
மகீதாச ஐதரேயர் என்ற முனிவர் பூமி தேவியை வழிபட்டு, ஞானம் பெற்று இதனைப் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளார்.
இந்த விஷயங்கள் பற்றி ருக்வேதத்தில் ஐதரேய உபநிஷதம் என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்படுகிறது.
பேச்சு- மனம்
முதலில் அவர் கூறுவது- எனது பேச்சு மனதில் நிலைபெறட்டும். மனம் பேச்சில் நிலைபெறட்டும். ஒளிமயமான பரம்பொருளே! நீ என்னுள் ஒளிர்வாயாக.
மனமே... பேச்சே... நீங்கள் இருவரும் சேர்ந்து வேதங்களின் உண்மையை எனக்கு கொண்டு வருவீர்களாக.
என்னால் கேட்கப்படுகின்றவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். நான் கற்றவற்றை பகலும் இரவும் சிந்திப்பேனாக. நான் உலகியல் உண்மைகளை சொல்வேனாக.
பிரம்மத்தைப் பற்றின உண்மையைச் சொல்வேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும். என் குருவைக் காக்கட்டும்.
அதாவது- உயர் வாழ்க்கையை நாடுபவர் களுக்கு சிந்தனையும் பேச்சும் ஒன்றாக இருப்பது மிகவும் அவசியம்.
இராமலிங்க வள்ளலார் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார். உறவு கலவாமை வேண்டும் என்று பாடினார்.
ஆகவே, மனிதன் உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று முதலில் ஐதரேய உபநிஷதம் சொல்கிறது.
படைப்பு
படைப்பு பற்றி- அதாவது இறைவனின் படைப்பு பற்றி எல்லோருமே ஆராய்கிறார்கள்.
மேலை நாட்டவர்களும் ஆராய்கிறார்கள்.
அவர்கள் எங்கெல்லாமோ தேடி எதை எதையோ (எர்ள்ள்ண்ப்ள்) பாறையுடன் ஒட்டிப் போயிருக்கும் பல விலங்கினங்களின் உருவங்களையும் பூமியில் புதைந்து போயிருக்கும்.
மனித எலும்புக் கூடுகளையும் வைத்துக் கொண்டு இதுதான் பரிணாம வளர்ச்சி என்கிறார்கள். இதுதான் மனிதன் தோன்றிய வரலாறு என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அதை அறுதியிட்டு கூற முடிவதில்லை. இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏனெனில் ஒருசில மேலைநாடுகளைத் தவிர வேறு எங்கும் உபநிஷத் இல்லை, வேதங்கள் இல்லை, ஆரண்யகங்கள் இல்லை.
நம் நாட்டில் படைப்பு பற்றி எல்லா உபநிஷ தங்களும் ஆராய்கின்றன. பஞ்சபூதங்களை முதலில் கண்டறிந்து ஆகாயம். காற்று, நெருப்பு.
நீர். பூமி. இவற்றை படைப்பிற்கு அடிப்படை யானவை எனக் கூறிவிட்டனர்.
உதாரணமாக- நன்றாக மடித்துப் போன சாக்கின் கிழிந்து போன பகுதிகளுடன் கொஞ்சம் சாணத்தை சேர்த்து ஒரு மூலையில் வைத்து சில நாட்களில் அங்கே அந்த சாக்கினை கண்டால் அதனுள் தேள். பூரான். தேரை. கரையான். என்று பல உயிரினங்கள் தோன்றி விடுகின்றன.
இவை எப்படி தோன்றின..? அங்கு அவற்றுக்கு தாயாக இருந்தது எது..? சொல்ல முடியுமா..? விஞ்ஞானிகள் இதுதான் பரிணாம வளர்ச்சி என்கிறார்கள். தேள் உற்பத்தியானது பரிணாம வளர்ச்சியா..? இல்லையே..!
உபநிஷதங்களோ படைப்பு என்பது பற்றி ஒவ்வொரு கோணத்திலும் ஆராய்கின்றன.
ஐதரேய மகரிஷி தனது உபநிஷத்தில் இந்த படைப்பைப் பற்றி என்னவெல்லாம் சொல்கிறார் என்பது பற்றி மேலும் பார்ப்போம்...
உலக படைப்பு
துவக்கத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார்.
மகாபிரளய காலத்தில் எல்லா உயிர் களும் அழிந்தபிறகு ஒரு ஆலம் இலையில் கண்ணன் மட்டுமே படுத்திருந்த நிலையில் மிதந்ததாக வேதம் கூறுகிறது.
அதேசமயம் புராணங்களில் கூறப் படுவது.
மகாபிரளயம் என்பது ஒருசில கோடி ஆண்டு காலங்களில் ஒவ்வொரு முறையும் நடைபெறும் என்பதாகும். மீண்டும் மீண்டும் இந்த உலகம் படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையாக படைக்கப்படுகிறது. ஆனாலும் படைப்பின் அடிப்படையானது. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தோற்றுவாயாக முதலில் பிரம்மனே படைக்கப்படுகிறார்.
அவரைத் தொடர்ந்து பஞ்சபூதங்களும் மஹத்லிதத்வம் மற்றும் உலகங்கள் படைக்கப் படுகிறது.
இமைக்கின்ற வேறு எதுவும் அப்போது இல்லை. நான் உலகங்களை படைப்பேன் என்று ஸ்ரீவிஷ்ணு நினைத்தார். அதாவது- இங்கு இமைப்பவை என்பன உயிரினங்களைக் குறிக்கிறது. அதற்காக அவர் பல வெவ்வேறான உலகங்களைப் படைத்திட் டார்.
1. அம்பலோகம்
"அம்பஸ்' என்றால் தண்ணீர் உலகம். இது சொர்க்கத்திற்கு மேலே உள்ள உலகம். அம்பலோகத்திற்கு ஆதாரமாகக் சொர்க்கம் உள்ளது. வானம் தொலைவிலிருந்து பார்க்கப்படும்பொழுது நீலக் கடலைப் போல் தெரிகிறது. மழை கருமேகக் கூட்டங்களான வானிலிருந்து வருகிறது. அந்த நம்பிக்கையின் காரணமாக மிக உயர்ந்ததான லோகம் அம்பஸ் என்று கருதப்படுகிறது,
2. மரீசி லோகம்
மரீசி என்றால் ஒளி! ஒளியுலகங்கள் நிறைந்த இடைவெளியாகும். பூமிக்கு மேலுள்ள இடைவெளி சூரிய கிரகணங்களால் ஒளிமயமாக இருப்பதால் இந்த பெயரில் அழைக்கப்படுவதாகும்.
"மரீசிகா' என்றால் காணல் நீர்.
3. சொர்க்க லோகம்
இது தேவர்கள் வாழும் உலகம். பலர் இங்கு செல்ல ஆசைப்பட்டாலும் சிலர் இது பொய்யாக இருக்கலாம் என்று அங்கு சொல்லப்படும் வர்ணனைகளைப்போலவே இந்த பூமியையே சொர்க்கமாக மாற்றிக் கொள்கின்றனர்.
அங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழும் தேவசரீரம் கிடைக்கும். ஆனால் இந்த பூமியில் ஒருசில ஆண்டுகளில் அழியும் ஸ்தூல உடலில் சிற்றின்பங்களை அனுபவம் செய்கின்றனர்.
4. மர லோகம் (அ) மர்த்தய லோகம்
மரம் என்றால் மரிப்பவர்கள் மரணம் என்ற சொல் அதிலிருந்துதான் வந்தது என கருதப்படுகிறது. மர்த்தய லோகம் என்பது பூமி. "மர்த்தய' என்றால் இறக்கும் குணம் இங்கே பிறப்பவை. இறக்கவேண்டிய நிலை இருப்பதால் இதற்கு மர்த்தயலோகம் என பெயர்.
அதனால் மரலோகம் என்பது யாருமே நிலையாக இருக்க முடியாது உலகம் என பொருள்படும்.
5. ஆப லோகம்
ஆப என்றால் தண்ணீர். ஆபலோகம் என்பது பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் பாதாள லோகம் இருப்பதாகக் கூறப் படுகிறது.
ஸ்ரீவிஷ்ணுவின் படைப்பில் பிரம்மன் கடவுள் நினைக்கிறார் நான் உலகங்களை படைத்துவிட்டேன். இனி உலகின் காவலர் களைப் படைப்பேன் என்று நினைத்தார். பிறகு தன் முன்னே தெரிந்த தண்ணீரிலிருந்து பிரம்ம தேவனை உருவாக்கினார்.
இங்கு சிவன் விஷ்ணுபோல ஒருவரே பிரம்மனாக அவதாரம் செய்வதில்லை. ஒவ்வொரு மகாபிரயத்திற்கு பின்னர் வெவ்வேறு சிறந்த ஆன்மாவானதே பிரம்மன் என்ற பதவிக்கு அவதாரம் செய்கின்றனர். பிரம்ம தேவன் அனைத்து உயிரினங்களின் மொத்தத் தொகுதி படைப்பு அல்லது சிருஷ்டி அவரிடமிருந்து ஆரம்பமாகிறது.
தண்ணீர் என்பது ஐந்து அடிப்படை மூலகங்களை குறிப்பது இதில் நிலமும் அடங்கும். இந்த அடிப்படை மூலகங்களிலிருந்து பிரம்மதேவன் உருவாக்கப்பட்டார்.!
அதனால் மனிதனும் மற்ற மற்ற உயிரினங்களும் ஐந்து அடிப்படை மூலகங்களிலிருந்து உருவாகியவர்கள்.
-தொடர்ந்து பார்ப்போம்!
செல்: 96599 69723
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/jothidam-2026-01-22-11-33-54.jpg)