பொதுவாக ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, நடப்பு சனி தசை காலங்கள் போன்றவற்றை பார்த்து பயப்படுகிறார்கள். 

Advertisment

தசாநாதன் வலிமையாக இருந்தால் பயப்பட தேவையில்லை என்பதற்காக புகழ்பெற்றவர்கள் ஜாதகத்திலுள்ள சில நிலைகளையும் கடந்துவந்த பாதைகளையும் தற்போது பார்ப்போம்.

உதாரணமாக...

இந்தியா சுதந்திரம் பெற்றபோது மகாத்மா காந்தி அவர்களுக்கும் முதல் பிரதமராக பொறுப்பேற்ற திரு. ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும் ஏழரைச்சனி.

அடுத்து திரு. அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றபோது அஷ்டமச்சனி நடந்துகொண்டு இருந்தது.

Advertisment

திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள் முதன்முறையாக முதல்வர் பதவி ஏற்றபோது அவருக்கு சனி தசை மற்றும் ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தது.

தொழில் துறையில் திருபாய் அம்பானி அவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தபோது அவருக்கு ராகு தசை, ஏழரைச்சனி நடப்பில் இருந்தது.

அடுத்தாக, தற்போது இந்தியாவில் முதல் மூன்று இடத்தில் உள்ள பணக்காரர்கள் முறையே முகேஷ் அம்பானி, அஷிம் பிரேம்ஜி ஆகியோருக்கு ஏழரைச்சனியும் மூன்றாவதாக லட்சுமி மிட்டல் அவர்களுக்கு அஷ்டமச்சனியும் நடப்பில் உள்ளது.

Advertisment

இந்தியா முதன்முறையாக 1983-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றபோது இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் அவர்களுக்கு ஏழரைச்சனி.

அடுத்து மகேந்திரசிங் தோனி அவர்கள் 20 ஓவர்கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கோப்பை ஆகியவை வென்றபோது ராகு தசையில் ஏழரைச்சனி நடந்துகொண்டிருந்தது.

saturnp1

இதேபோல் இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்.

அப்படிச் சொல்ல ஆரம்பித்தால், கன்னித் தீவு தொடர்போல் நீண்டு கொண்டேயிருக்கும்.

ஆகவே, ஒரு ஜாதகத்திலுள்ள அமைப்பிற்கு ஏற்றபடிதான் நன்மை- தீமை நடக்கும்.

அனைத்து கிரகங்களுக்கும் நன்மை செய்யும் அதிகாரமும் உண்டு.

தீமை செய்யும் அதிகாரமும் உண்டு.

எனவே, சனிபகவான் நமக்கு தீமை மட்டுமே செய்வார் என்ற நிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை தீமை மட்டுமே செய்வார் என்றால் நான் மேலே குறிப்பிட்ட பிரபலங்களின் ஜாதகத்தில் சனிபகவான் என்ற கிரகம் இல்லாமல் மீதியுள்ள எட்டு கிரகங்கள்தான் அவர்கள் ஜாதகத்தில் இருந்திருக்க வேண்டும்.

நான் சனி பகவான் தீமை செய்யமாட்டார் என்று சொல்லவில்லை. தீமை மட்டுமே செய்வார் என்பதைதான் மறுக்கிறேன்.

சனிபகவான் ஜாதத்தில் அமரும் நிலையை வைத்துதான் அவர்நல்லவரா? கெட்டவரா என்று முடிவு செய்யவேண்டும்.