Advertisment

அஷ்டமாதிபதி அதிர்ஷடம் தருவாரா? லலிதா சரஸ்வதி

luck

னிதர்கள் வெகு துயரம் கொள்ளும்போது, ரொம்பவும் நொந்து போய், என்ன செய்றது, எனக்கு அஷ்டம சனி நடக்கிறது என்றோ அல்லது அஷ்டமத்தில் ராகு ஓடிக்கொண்டிருக்கிறது என்றோ மிக வருந்துவர். இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறதுதான்.

அஷ்டம் என்றால் எட்டு என்று அர்த்தம். 

Advertisment

ஜோதிடம் 6, 8, 12-ஆமிடங்களை மறைவு ஸ்தானமென்று அழைக்கிறது. சரி மறைவு ஸ்தானமெனில் எவ்விதம் வேலை செய்யும்.

ஒரு விளக்கை ஏற்றிவைத்து, நல்ல பெரிய கூடை, சாக்கு போன்றவற்றால் மூடி வைத்துவிட்டால், அதன் ஒளி வெளியே தெரியாது. சிலசமயம் விளக்கு அனைந்துவிடவும் வாய்ப்புள்ளது. 

இதுபோல், ஒரு மனிதனை, நல்ல இருட்டான இடத்தில் கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டால் அவன் நிலை என்னாகும். இதுதான் 6, 8, 12-ஆமிடத்தின் வேலையாகும். 

Advertisment

மேற்கண்ட 6, 8, 12-ஆமிடங்களில் 8-ஆமிடமும், 8-ஆம் அதிபதியுமே ரொம்ப கொடுமையான தீவிர ஸ்தான கிரகமாகும். இதனால்தான் அஷ்டம சனி, அஷ்டம ராகு என்றாலே மக்கள் மிக அச்சம் கொள்கிறார்கள். 

இது தர்ம, அதிர்ஷ்ட ஸ்தானத்திற்கு விரயமாக, அதற்கு 12-ஆமிடமாக வருகிறது. எனவே ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல், ஆக்குவதற்கு, 8-ஆமிட அதிபதியே முழுக் காரணமாவார். மனிதன் அனுபவிக்கும் துக்கம், அழுகை, விபத்து, பிரிவு என அனைத்துக்கும் 8-ஆமிட அதிபதியே அத்தாரிட்டி ஆவார். எனவே இவர்மூலம் ஏற்படும் அதிர்ஷ்டமும், எதிர்மறையாக, ஒருவித தீவிரவாதமாக பிறர் அஞ்சும்படியாகவே அமையும்.

ஒரு விஷயத்திற்கு நல்லது- கெட்டது என இரு பக்கங்கள் உண்டு. 8-ஆம் அதிபதி 12 பாவங்களில் நின்றால் சமாளிப்பது எப்படி மற்றும் 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்ட யோக நிகழ்வுகளும் கவனிக்கத் தக்கதுதான். 

8-ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் சமாளிக்கும் விதம்

இந்த ஜாதகர் எதை தொட்டாலும் விருத்தி அடையாது. எனில் இவர்கள் என்ன செய்தல் தகும். எந்த விஷயத்தையும் தான் முன்னின்று செய்யாமல், வீட்டிலுள்ள பிறரை வைத்து அவரை முன்னிறுத்தி தொழில், வேலையை செய்யவேண்டும். இல்லத்தரசிகளும், எங்க வீட்ல எங்க மாமியார்தான் எல்லாம் என்று, மாமியாரை பெருமைப்படுத்தி அவர்பின் நீங்கள் நின்றுகொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு பெருமை கிடைக்காததுதான். ஆனால் என்ன. வாழ்க்கை வண்டி சீராக ஓடுமே. அது போதுமே. நீங்கள் எந்த தெய்வத்தை இஷ்டமாக வணங்கினாலும், அந்த தெய்வம் சற்று இடுக்கில் அல்லது குகையில் இருக்குமாறு உள்ள தெய்வத்தை வணங்குங்கள். மறைவான உழைப்பும், வெற்றி தேடித்தரும். பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கவும். 

8-ஆம் அதிபதி 2-ல் இருந்தா

8-ஆம் அதிபதி 2-ல் இருந்தால்...

இந்த அமைப்புள்ள ஜாதகர்கள் பலருக்கு திக்குவாய் அல்லது ஒன்றரைக் கண் அல்லது துருத்தி நிற்கும் பல் இவை இருக்கக்கூடும். குடும்ப அமைப்பு சற்று உன்னைப்புடி என்னைப்புடி என்ற அளவில் இருக்கும். எனவே இந்தமாதிரி அமைப்புக் கொண்டவர்கள் ரொம்பவும் விட்டுக் கொடுத்து, அதிக அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்தால் மட்டுமே குடும்ப அமைப்பிற்குள் வாழமுடியும். இல்லை யெனில் குடும்ப பிரிவினையை சந்திக்க வேண்டியிருக்கும். மௌனம் கலக நாஸ்தி என்பர். 

அதாவது கூடியமட்டும் பேசாமல் இருந்தால், சண்டை குறையும். பிறகு, பண விஷயமும் ரொம்ப சீராக இருக்காது. இருட்டில் பணத்தை ஒளித்து வைத்துவிட்டால், பிறகு அதை பயன் படுத்துவது எங்ஙனம். 

எனவே வாழ்வை ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் ஓட்டினால், சமாளித்துக் கொள்ளலாம். துர்க் கையை அதுவும் அமைதியான துர்க்கையை பட்டீஸ்வரம் துர்க்கைபோன்று, வணங்க, அதுவும் நிறைய வெல்லம் போட்டு, சர்க்கரைப் பொங்கல், நிறைய இனிப்புபோட்டு பாயசம் வைத்து வணங்கவேண்டும். 

8-ஆம் அதிபதி 3-ல் இருந்தால்... 

8-ஆம் அதிபதி 3-ல் இருந்தால், உங்கள் செவித்திறன் அல்லது தோள்பட்டை வலி இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் ஆரம்பத்திலேயே, அது சார்ந்த மருத்துவ உதவி பெற்றுகொள்வது நல்லது. இந்தமாதிரி அமைப்புள்ள குழந்தைகள் மிகுந்த பயந்த சுபாவமாக இருப்பர். எனவே இவர்களுக்கு, சிறு வயதிலேயே கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை சொல்லிக்கொடுத்துவிட வேண்டும். இளைய சகோதரத்திடம், சீரான நட்பு பாராட்ட இயலாது. அதனால் விட்டுக்கொடுத்து பழக செய்யவும். பெரியவர்கள் இளைய சகோதர, அனுசர ணையை ரொம்ப எதிர்பார்க்கக்கூடாது. ஒப்பந்தம், ஏஜென்சி, குத்தகை முடிப்பது என இவை சரிப்படாது. அதனால் இந்த வேலைகளை உங்கள் பெயரில் எடுக்க முயலாதீர்கள். அதுபோல், வேலை செய்யும் பணியாளர்களை கவனிக்கும் மேற்பார்வை பார்க்கும் பணியில் நீங்கள் ஈடுபடவேண்டாம். லாட்டரி சீட்டு வாங்கக்கூடாது.  சுப்பிரமணியரை வணங்க வும்.

8-ஆம் அதிபதி 4-ல் இருந்தால்...

8-ஆம் அதிபதி, 4-ல் இருப்பின், முதலில் உங்கள் தாயாருடன் மென்மையான போக்கை கடைபிடியுங்கள். வாகனங்களை அவ்வப்போது பழுதுபார்த்து, செம்மையாக வைத்துக்கொள்ளவும். நீண்ட தூரப் பயணத்தில், நீங்கள் கார் ஓட்டாதீர்கள். வீட்டில் சின்ன விரிசல் என்றாலும் உடனே செப்பனிட்டுக் கொள்ளவும். சின்ன புண், காயம் என்றாலும், உடனே வைத்தியரிடம் ஆலோசனை கேட்டுகொள்ளவும். வயலில் சிறு அளவில் பூச்சி வெட்டு காணப்பட்டாலும், உடனே அதற்குரிய மருந்தை தெளித்து விடவும். படகில் சிறு பிரச்சினை தென்பட்டாலும், அது சார்ந்த நிவாரணம் செய்துவிடவும். மாடுகள் இருந்தால், நீங்கள் பால் கறக்க வேண்டாம். ஒன்று பால் கறவை கம்மியாகும். அல்லது மாடு உங்களை உதைத்துவிடும். இந்த அமைப்புள்ள குழந்தைகள், படிப்பில் ரொம்ப சுமாராகத்தான் இருப்பர். அதனால் ஒரு தொழில் சார்ந்த இனத்தை, கற்று கொடுத்துவிடுங்கள். திங்கட்கிழமைகளில் சிவனுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிகொடுங்கள். 

8-ஆம் அதிபதி 5-ல் இருந்தால்...

8-ஆம் அதிபதி 5-ல் இருப்பின், முதலில் உங்கள் வாரிசுகளை சற்று கட்டுக் கோப்பாக வளர்க்கவேண்டும். இம்மாதிரி அமைப்புள்ள பெண்கள், கர்ப்பம் தரித்த காலத்தில், வெகு வெகு கவனமாக இருப்பது அவசியம். காதல் என்ற வார்த்தையை, வாயால் உச்சரிப்பதும் ஆகாது. கலைத்துறையை கூடியமட்டும் தவிர்ப்பது நல்லது. பங்குவர்த்தகம் பக்கம்கூட போகாதீர்கள். உங்களுக்கு பங்குவர்த்தக ஆர்வம் வந்தால், வீட்டில் வேறு யார் பெயரிலாவது முதலீடு செய்துகொள்ளுங்கள். விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க ரொம்ப யோசியுங்கள். மந்திரிகள் சகவாசம் வேண்டவே வேண்டாம். உங்களின் யோசிக்கும் திறன் மிக மெதுவாக குறைந்த அளவில் இருக்கும். எனவே கற்பூர புத்திகொண்டு பணியாற்றும் வேலைகளை கூடியமட்டும் தவிர்த்துவிடுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல; சுற்றி உள்ளவர்களுக்கு நல்லது. இம்மாதிரி அமைப்புள்ளவர்கள் ஆஞ்சனேயரை வணங்குவது சிறப்பு. 

8-ஆம் அதிபதி 6-ல் இருந்தால்...

8-ஆம் அதிபதி 6-ல் மறைந்தால் நன்மை கிடைக்கும். சமாளிக்கும் அளவு தேவையில்லை. இவ்வமைப்பில், முதலில் நீங்கள் கடன் வாங்க மாட்டீர்கள். அப்படியே கடன் வாங்கினாலும், சீக்கிரமே அடைத்து விடுவீர்கள். உங்கள் எதிரிகள் உங்கள் பக்கம்கூட வரமாட்டார்கள் ஏனெனில் உங்களுக்கு எதிரிகள் என யாரும் இருக்க மாட்டார்கள். உங்களுக்கு அடாவடியாக, திமிராக எதுவும் பேசத் தெரியாது. எல்லாரிடமும் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். நோய் வந்தாலும் சிறு அளவு மருந்துகளால் குணமாகிவிடும். உங்கள்மீது வழக்குகள் இருப்பினும் அது வெற்றியடையும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்தாலும், வீட்டு உரிமையாளர் தொந்தரவு இல்லாமல் இருக்க இயலும். சிறைக்கு போவது தடுக்கப்படும். எனவே 8-ஆம் அதிபதி 6-ஆமிடத்தில் மறைந்து நல்ல பலன்களைத் தருவார். விநாயகரை வணங்கவும். 

8-ஆம் அதிபதி 7-ல் இருந்தால்... 

8-ஆம் அதிபதி 7-ல் இருப்பின், நீங்கள் யாரை சந்தித்தாலும். அதில் ஒரு வில்லங்கம் வந்துவிடும். எனவே யாரை தொடர்புகொண்டாலும், எந்த ஒரு வாக்குறுதியும் கொடுத்துவிடாதீர்கள். இது வெளியே மட்டுமல்ல; வாழ்க்கைத் துணைக்கும் பொருந்தும். இவ்வமைப்பு, வீட்டில் எந்த நேரத்திலும், எவ்வகையிலும் மோதல் உண்டாக்கும். எனவே வாழ்க்கைத் துணையுடன், சமரசமாக எப்போதும் சமாதானக் கொடியை கையில் பிடித்தபடி, வளைய வந்தால், இல்வாழ்வை தரமாக கொண்டுசெல்லலாம். இல்லாவிடில், நைய புடைத்து விடுவர்; ஜாக்கிரதை. வியாபாரத்திலும், பங்குதாரர்களிடமும் ரொம்ப நீக்கு போக்காக இருக்கவேண்டும். அதனால் குறைவாக ஏமாறலாம். நீங்கள் கூட்டணி கட்சி ஆளாக இருப்பின், ஆளும் கட்சிக்கு, ஆமாம் சாமி போட்டு கொள்வதுதான் சரியாக இருக்கும்.  வள்ளி- தெய்வானை சமேதர முருகரை வணங்கவும். 

8-ஆம் அதிபதி 8-ல் இருந்தால்...

இந்த அமைப்பு ஒரேயொரு நன்மை தரும். ஆயுள் விருத்தி கொடுக்கும். மற்றபடி இவ்வமைப்பு, ஜாதகருக்கு வேறு நன்மை தராது. இது மட்டுமல்லாமல் ஜாதகரை வச்சுசெய்து, கும்மாங்குத்து குத்தும். எனவே, முக்கியமான முடிவு களை நீங்கள் எடுக்கக்கூடாது. புது முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. வீட்டில் நகை, பணம் போன்றவற்றை லாக்கரில் வைத்துவிட வேண்டும். வீட்டிற்கு கேமிரா பொருத்திவிட வேண்டும். சிறு வியாதியை உணர்ந்தாலும், உடனே மருத்துவரிடம் சென்றுவிடவேண்டும். கண்டிப்பாக இன்ஷூயூரன்ஸ் எனும் காப்பீடு எடுத்துக் கொள்வது அவசியம். கூடியமட்டும் பயணங்களைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். 

நீங்கள் வெளிநாட்டில் இருந்து, அங்கு போர் ஏற்படக்கூடிய சூழ்நிலை தெரிந்தால், உடனே அந்நாட்டைவிட்டு தாய்நாடு திரும்பவிட வேண்டும். பைரவரை கண்டிப் பாக வணங்கவேண்டும். 

8-ஆம் அதிபதி 9-ஆம் வீட்டில் இருந்தால்...

8-ஆம் அதிபதி 9-ஆம் வீட்டில் நின்றால் 

உங்கள் தந்தையை, நன்கு கவனித்துக் கொள்ளவேண்டும். நீங்கள் ஆய்வுக் கல்வி மேற்கொண்டிருந்தால், அதில் மிக கவனமாக இருக்கவேண்டும். மேலும் உங்கள் ஆராய்ச்சியை அடுத்தவர் திருடிவிட வாய்ப்புண்டு. வெளிநாட்டு பயணங்களில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளில், மறைவுத்தன்மையை விலக்கிவிடுங்கள். சட்டத்துறை சம்பந்தமான விஷயங்களில், உண்மையாக இருப்பது அவசியம். ஆன்மிக யாத்திரையில், நன்றாக விசாரித்து தெரிந்து பின் தொடரவும். வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபடுபவர்கள், உங்கள் வணிகத் தரவுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். கைபேசியின் முக்கிய செய்திகள், டெலிட் ஆக வாய்ப்பு வரும். உங்கள் முதலாளிகளை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். உங்கள் அளவில் தெளிவாக இருப்பது அவசியம்.  தட்சிணாமூர்த்தியை வணங்கவும். 

8-ஆம் அதிபதி 10-ல் இருந்தால்... 

8-ஆம் அதிபதி 10-ல் இருந்தால், இவ்வமைப்பு தொழிலில் கள்ளத்தனத்தை புகுத்தும். கூடியமட்டும். தொழில் நேர்மை யைக் கடைபிடியுங்கள். திருட்டுத்தனமாக டாக்டர் பட்டம், கௌரவ பட்டம் வாங்கவேண்டாம். மரியாதை கௌரவத்தை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வராதீர்கள். யாராவது புதையல் எடுத்து தருகிறேன் என்றால், பணத்தை எடுத்துக்கொண்டு பின்னாலேயே போகக்கூடாது. இந்தமைப்பு இருந்தால், கூடியமட்டும் உங்கள் பெயரில் புது தொழில் ஆரம்பிக்காமல் இருப்பது சாலச்சிறந்தது. நீதிமன்றம் பக்கம் அதிகமாக தலைகாட்டாமல் இருப்பது உத்தமம். நீங்கள் தொடர்புகொள்ளும் ஆட்கள் நல்லவர்களா என நன்கு யோசித்து பழகவும். அரசாங்க விஷயங்களில் மிக தெளிவாக இருப்பது அவசியம். தொழிலில் பணியாளர்கள் மற்றும் வாகன பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும் வராஹியை வழிபடவும்.

8-ஆம் அதிபதி 11-ல் இருந்தால்... 

8-ஆம் அதிபதி 11-ல் இருந்தால் உங்கள் மூத்த சகோதரனுடன் ரொம்ப கவனமாக பழகவேண்டும். அதுபோல் உங்கள் மருமகன்- மருமகளிடமும் கொஞ்சம் இடைவெளியுடன் காலம் தள்ளுவது உங்களுக்கு நல்லது. ரொம்ப லட்சியம், எதிர்பார்ப்பு, ஆசை இந்த கண்ராவி எல்லாம் வேண்டாவே வேண்டாம். எந்த பகுதி தேர்தலிலும் நிற்கக்கூடாது. அரசியல் சார்பு வாழ்க்கை இருந்தாலும், அதில் முன்னிலை வகிக்காமல், பின்புறமாக, மறைவாக அரசியலில் ஈடுபட்டால் தப்பிக்கலாம்; பிழைக்கலாம். பதவி உயர்வு என்பது சற்று சிரமம்தான். குறுக்குவழியில் முயன்றால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு, நீதிமன்றம் எல்லாம் ஆகவே ஆகாது. உங்களின் நலன் விரும்பிகள் என்றோ, ஆதரவாளர்கள் என்றோ நண்பேண்டா என்று யார் கூறினாலும் தயவுசெய்து நம்பிவிடாதீர்கள். உங்களை அழிக்க வழி பண்ணுகிறார்கள் என்பதை முதலிலியே புரிந்துகொள்ளுங்கள். ஸ்ரீ ஹயக்கீரிவரை வணங்கவும்.

8-ஆம் அதிபதி 12-ல் இருந்தால்...

8-ஆம் அதிபதி 12-ல் இருந்தால், சமாளிக்கும் அளவிற்கு பிரச்சினை வராது. ஒருவிதத்தில் உங்களுக்கு நன்மையே தரும். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற கணக்கில், நன்மையே நடக்கும். உங்களுக்கு வரவேண்டிய இன்னல், அடி, மிதி, சிறை என இவை போன்றவை அகன்று மறைந்துவிடும். எதிர்பாராத நன்மை கிடைக்கும். 8-ஆம் அதிபதி எந்தக் கிரகமோ, அவை சார்ந்த நன்மை கிடைக்கும். உங்களுக்கு ஏற்படக்கூடிய தீமை, அவமானம், நஷ்டம், விபத்து இவை நீங்கிவிடும். உங்கள்மீதும் போடப்பட்ட வழக்குகள், வாபஸ் பெறப்படும். மருத்துவ செலவுகள் பயமுறுத்தும் அளவிற்கு ஏற்பட்டாலும் அவை பின் சரியாகிவிடும். ஆஞ்சனேயரை வணங்கவும்.

bala060925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe