Advertisment

காட்டுக் கிளிகள் - உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

ss3

 


விஷு பண்டிகை விரைவில் வர இருக்கிறது.

வேலிக்கு அருகில் கணிக்கொன்றை மரம் பூக்க ஆரம்பித்துவிட்டது. பொன் முத்துகளைக் கோர்த்து கட்டியதைப்போல காட்சியளிக்கும் கொன்றைப் பூங்குலை...

Advertisment

விஷுக்கணியைத் தயார் பண்ண வேண்டியது அவர்தான். இந்தமுறை விஷுவைக் கொண்டாடுவதற்கு வீட்டில் இல்லை.

மருத்துவ மனையில்தான் விஷு. இனிமேலும் நீடித்துக்கொண்டு போவதில் அர்த்தமில்லை.

உடனடியாக ஒரு ஆப்பரேஷனைச் செய்தே ஆகவேண்டும். பெரிய ஆப்பரேஷன் அல்ல. சிறியதுதான். சிறிய ஆப்பரேஷன் என்றுதான் டாக்டர் கூறுகிறார். அறுவை சிகிச்சை. 

Advertisment

அறுத்து அகற்றவேண்டும். அறுத்து நீக்குவதற்கு முன்பு வேதனை தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மயக்க நிலையை உண்டாக்குவார்கள். சுய உணர்வு இல்லாமலிருக்கும் நிமிடங்கள்....

ஒருவேளை மணிக்கணக்கில் படுத்திருக்க வேண்டிய சூழல் உண்டாகலாம்.

அனைத்தும் கடவுளின் விருப்பப்படிதான் நடக்கும்.

ஆப்பரேஷனுக்குப் போய்ச் சேர்வதற்கு முன்னால் மருத்துவமனையில் படுக்க வேண்டியதிருக்கும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையவேண்டும். இந்த நிலையில் யாருமே ஆப்பரேஷன் செய்யமாட்டார்கள்.

சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு நானூற்று பத்து. இது மிகவும் அதிகம். குறைத்துக்கொண்டு வரவேண்டும். டயோனில் போதாது. இப்போது ஒவ்வொரு நாளும் மூன்று மாத்திரைகள் வீதம் உட்கொள்கிறார்.

எனினும், பெரிய அளவிற்கு குறைவு உண்டாக வில்லை.

இதை இரண்டு மாதங்களாக செய்து கொண்டி ருக்கிறார். ஆரம்பத்தில் அரை மாத்திரையை உட் கொண்டார்.

உணவு சாப்பிடுவதற்கு முன்னால் அரை மாத்திரை. அப்படி இல்லாமல் இப்போது சாப்பாட் டிற்குப் பிறகு காலையிலும் மதியத்திலும் இரவிலும் ஒவ்வொரு மாத்திரை வீதம் உட்கொள்ளவேண்டும். இதற்கு மேலும் சர்க்கரையின் அளவு குறையாதிருக்கும் பட்சம், இன்சுலின் ஊசி போட வேண்டியதிருக்கும். காலையிலும் மாலையிலும்.

மருத்துவமனைதான் கதி. சர்க்கரையின் அளவு இயல்பு நிலைக்கு

 


விஷு பண்டிகை விரைவில் வர இருக்கிறது.

வேலிக்கு அருகில் கணிக்கொன்றை மரம் பூக்க ஆரம்பித்துவிட்டது. பொன் முத்துகளைக் கோர்த்து கட்டியதைப்போல காட்சியளிக்கும் கொன்றைப் பூங்குலை...

Advertisment

விஷுக்கணியைத் தயார் பண்ண வேண்டியது அவர்தான். இந்தமுறை விஷுவைக் கொண்டாடுவதற்கு வீட்டில் இல்லை.

மருத்துவ மனையில்தான் விஷு. இனிமேலும் நீடித்துக்கொண்டு போவதில் அர்த்தமில்லை.

உடனடியாக ஒரு ஆப்பரேஷனைச் செய்தே ஆகவேண்டும். பெரிய ஆப்பரேஷன் அல்ல. சிறியதுதான். சிறிய ஆப்பரேஷன் என்றுதான் டாக்டர் கூறுகிறார். அறுவை சிகிச்சை. 

Advertisment

அறுத்து அகற்றவேண்டும். அறுத்து நீக்குவதற்கு முன்பு வேதனை தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மயக்க நிலையை உண்டாக்குவார்கள். சுய உணர்வு இல்லாமலிருக்கும் நிமிடங்கள்....

ஒருவேளை மணிக்கணக்கில் படுத்திருக்க வேண்டிய சூழல் உண்டாகலாம்.

அனைத்தும் கடவுளின் விருப்பப்படிதான் நடக்கும்.

ஆப்பரேஷனுக்குப் போய்ச் சேர்வதற்கு முன்னால் மருத்துவமனையில் படுக்க வேண்டியதிருக்கும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையவேண்டும். இந்த நிலையில் யாருமே ஆப்பரேஷன் செய்யமாட்டார்கள்.

சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு நானூற்று பத்து. இது மிகவும் அதிகம். குறைத்துக்கொண்டு வரவேண்டும். டயோனில் போதாது. இப்போது ஒவ்வொரு நாளும் மூன்று மாத்திரைகள் வீதம் உட்கொள்கிறார்.

எனினும், பெரிய அளவிற்கு குறைவு உண்டாக வில்லை.

இதை இரண்டு மாதங்களாக செய்து கொண்டி ருக்கிறார். ஆரம்பத்தில் அரை மாத்திரையை உட் கொண்டார்.

உணவு சாப்பிடுவதற்கு முன்னால் அரை மாத்திரை. அப்படி இல்லாமல் இப்போது சாப்பாட் டிற்குப் பிறகு காலையிலும் மதியத்திலும் இரவிலும் ஒவ்வொரு மாத்திரை வீதம் உட்கொள்ளவேண்டும். இதற்கு மேலும் சர்க்கரையின் அளவு குறையாதிருக்கும் பட்சம், இன்சுலின் ஊசி போட வேண்டியதிருக்கும். காலையிலும் மாலையிலும்.

மருத்துவமனைதான் கதி. சர்க்கரையின் அளவு இயல்பு நிலைக்கு வந்த பிறகு தான் ஆப்பரேஷனைச் செய்யமுடியும். பலமுறைகள் மருத்துவமனைக்குச் சென்று விட்டார். 

டாக்டரைப் பார்த்தார். இதுவரை அட்மிட் ஆகவில்லை. இந்த நோய் சரீரத்திலிருந்து முழுமை யாக நீங்கப் போவதில்லை.

மரணத்திற்குக் கூட ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம். எதை நினைத்தும் பயமில்லை.

பயப்பட்டு என்ன பயன்? அதே நேரத்தில் கவலைகள் இல்லை என்று கூறுவதற்கில்லை. மனதில் பதை பதைப்பு இல்லாவிட்டாலும், மனதில் வேதனைகள் இருக்கின்றன.

எஞ்சியிருக்கும் எதிர் பார்ப்புகள்... சில காரியங்கள் நடக்கவேண்டும்.

இரண்டாவது மகனின் திருமணம். முப்பது வயது தாண்டிவிட்டது. பல ஜாதகங்களைப் பார்த்துவிட்டார்கள். பல இளம் பெண்களைச் சென்று பார்த்து விட்டார்கள். ஏதோ ஒரு குறை இருக்கிறது. என்ன என்று தெரியவில்லை.

திருமணம் வேண்டுமென்றோ வேண்டா மென்றோ உறுதிப்படுத்திக் கூறவில்லை. கூறக் கூடிய அளவிற்கு பொறுப்புகள் எதுவும் இல்லை. எனினும், இனம் புரியாத ஒரு வேதனை.... கவலை... பதைபதைப்பு.... மன அமைதியற்ற நிலை.... 

பல நாட்களாகவே உடல் நலமில்லாமல் இருக்கிறார்.

எதையுமே சரியாகச் செய்ய முடியவில்லை.

உணவும் உறக்கமும் உரிய நேரம் தவறியே நடக்கிறது. நேரத்தை ஒழுங்கு படுத்தி நடத்த முடியவில்லை. ஒரு ரெடிமேட் படைப்பாக இருப்பதை விரும்பாத புதுமை...

கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படிய தயாராக இல்லாமலிருக்கும் மனநிலை...வந்த அளவிற்குச் சரி என்றுதான் நேற்றுவரை வாழ்ந்தார்.

இனிமேலும் அதுவே தொடர்ந்து நடக்கலாம். இறக்க வேண்டியவர்கள் இறப்பார்கள்.

உயிருடன் இருக்க வேண்டியவர்கள் இருப்பார்கள். இந்த மனவோட்டத்தில் சமீப காலமாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் சற்று வாழ்ந்தால் நல்லது என்று தோன்றுகிறது. வயது கூடிக்கொண்டு வருகிறது. எழுபதை நெருங்கிவிட்டது. மனம் பயணிக்கக் கூடிய இடத்திற்கு சரீரம் நகர மறுக்கிறது. மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்தால்தான் சரீரத்தை முன்னோக்கிக் கொண்டுபோகமுடியும். ஆர்ட் ஆஃப் லிவிங் நல்லதுதான்.

பெங்களூரில் ஒரு வாரம் தங்கி, யோகாவிலும் தியானத்திலும் கலந்து கொள்ளும்படி வேண்டிய ஒரு நண்பர் பல நாட்களாகவே கூறிக் கொண்டிருக்கிறார்.

ஒரு வார காலம் வீட்டை விட்டு வேறு இடத்தில் மாறி தங்கக்கூடிய சூழல் ஒத்து வரவில்லை. செல்லவேண்டும்! ஒரு வார பயிற்சியின்மூலம் உடல் நலத்தைப் திரும்பவும் பெற முடியுமென்றால், நல்ல விஷயம்தான்.

ஒழுங்கான நேரத்தில் அனைத்தையும் செய்வதற்கு அது உதவும். சலவை செய்வதை நிறுத்திவிட்டு, வண்ணானால் காசிக்கு என்று செல்ல இயலும்? சலவை செய்வதை நிறுத்த முடியுமா? நிறுத்தினால், கஞ்சி குடிப்பதில் பிரச்சினை உண்டாகும். தன் தொழிலின் மீது எப்போதும் ஈடுபாடு உள்ளவன்...

இவ்வளவு காலம் முழுவதும் செயல்பட்டார்.

வெறுமனே இருக்கவில்லை. 

எப்படிப்பட்ட இயலாத நிலையில் இருந்தாலும், வாசிக்காமலும் எழுதாமலும் இருக்கக்கூடாது.

எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் முடியாத சூழல்கள் உண்டானால், வாழ்க்கையே வெறுத்து விடும். பிறகு... 

இறப்பதே நல்லது.

முன்பெல்லாம் எவ்வளவோ பயணங்களைச் செய்திருக்கிறார்.

அப்போதைப் போல இப்போது பயணம் செய்ய முடியவில்லை.

மிகவும் சோர்வு... களைப்பு... வியர்வை...

கால் பாதங்களில் அதிகரித்து வரும் வேதனை...

ஹைட்ரோஸலும் ஹெர்னியாவும் சேர்ந்து ஒருவனின் ஆரோக்கியத்தை நாசமாக்கி விடுமோ? சர்க்கரையும் ரத்த அழுத்தமும் இல்லாதவர்கள் மிகவும் குறைவு. நல்ல உடல்நலத்துடன் இருக்கக் கூடிய சரீரம்தான் ஒருவனின் மூலதனம். நோயற்ற நிலை! இது இந்த மண்ணில் யாருக்காவது இருக்கிறதா? ஏதாவது நோய் இல்லாதவரைச் சுட்டிக்காட்டுவதற்கு....

"ஒவ்வொன்றையும் சிந்தித்துக் கொண்டு இப்படி கூரையின் மேற்பகுதியைப் பார்த்தவாறு படுத்திருங்க....

"இப்படி படுத்திருப்பது சரியல்ல என்று எனக்குத் தோணுது.''- மனைவி கவலையுடன் குறைப் பட்டுக் கொண்டாள்.

"உன் கவலையும் குறைபாடும் தீரப் போகின்றன''

-மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்தில் கூறினாலும், அவளுடைய மனதின் ஆழத்தில் காயத்தை உண்டாக்கிவிட்டோமோ என்பதை அவள் கண்களைத் துடைத்ததிலிருந்து புரிந்து கொள்ளமுடிந்தது.

"எனக்கு இன்னைக்கு வயிறு நிறைய சாப்பிடணும் போல இருக்கு. நான் சாப்பிட்டு சில நாட்களாச்சு. உப்பு போடாத இந்த கோதுமை கஞ்சியைக் குடிச்சு வெறுப்பு உண்டாயிடுச்சு. எனக்கு ஒரு குவளை பால் கிடைச்சா, நான் அதை ஒரே இருப்பில் குடிப்பேன். என்னுடைய ஒரு இறுதி ஆசைன்னு நினைச்சுக்கோ.''

சாதாரண ஒரு குழந்தையைப்போல, எதுவுமே தெரியாததைப் போல பேசினார்.

அனைத்தையும் அறிந்திருந்தும், இப்படி யெல்லாம் பேசுவது கஷ்டமானது.

டாக்டர்கள் கூறுவதைக் கேட்பதில்லை. 

அதைப் பின்பற்றி நடப்பதில்லை.

அனைத்தையும் அறிந்திருக்கும் ஒரு ஆளைப்போலத்தான் பேச்சு.... ஆனால், எதுவுமே தெரியாது.

மனைவியின் புலம்பல்களைக் கேட்க நேரும்போது, கணவரை வசீகரித்து மாற்றுவதற்காக மனைவி பலவற்றையும் கூறுவதாக மனதில் நினைத்தார்.

அவற்றையெல்லாம் கவனம் செலுத்தி கேட்டுக்கொண்டிருந்தால், பிறகு எதுவுமே நடக்காது. விலக்க வேண்டிய விஷயங்கள்தான் பெரும்பாலும்..‌.

"வேண்டாம்.... வேண்டாம்....'' என்ற வார்த்தை மழை... "யார் என்ன கூறினாலும், நான் என்னுடைய வழியில் செல்வேன்.''

"நீ ஒரு சுத்த சிந்தனை கொண்டவள். இந்த உலகத்தைப் பற்றி உனக்குச் சிறிது கூட தெரியாது. ஒரு மனிதன் இறந்துவிடுவான் என்று முன்கூட்டியே நினைத்து அழ ஆரம்பித்தால், அதைப்பற்றி எதுவுமே கூறுவதற்கில்லை.

விரும்பக்கூடியவை அனைத்தையும் விலக்கி விடுவதாலோ, சில கட்டுப்பாடுகளை விதிப்பதாலோ இங்கு இருக்கக்கூடிய மனிதன் பிழைத்து விடப்போவதில்லை.

இன்று இல்லாவிட்டாலும் நாளை நான் உண்மையாகவே இறக்கப் போகிறவன்தான். நீ தைரியமாக இருக்கவேண்டும். கசப்பு நிறைந்த வாழ்க்கையைச் சந்திப்பதற்கு கற்றுக்கொள்ளவேண்டும். கணவன் இறந் தாலும், வாழ்ந்தாக வேண்டும்.'' கடுமையான வார்த்தைகளாக இருந்தாலும், அவர் அவை எதையும் மனப்பூர்வமாக முன்கூட்டியே திட்ட மிட்டுக் கூறவில்லை.

அறியாமலே வாயிலிருந்து உதிர்ந்து விழுந்தவை அவை என்பதே உண்மை.இனிப்பான, உள்ளே வெறுமையாக இருக்கும் வசனங்களைக் கூறி யாரையும் சமாதானப்படுத்தும் கலை அவருக்குத் தெரியாது.

"நான் எதற்குமே லாயக்கு இல்லாதவளாச்சே! என்னை எது வேண்டுமானாலும், சொல்லுங்க. என் தந்தையும் தாயும் உயிருடன் இல்லையே...!- வழக்கமான பாணியில் மனைவி கூறியபோது, ஆணைத் தோல்வியடையச் செய்வதற்காக பெண் பயன்படுத்தும் தந்திரச்செயலைப் பற்றி நினைத் துப் பார்த்தார்.

"நீ பதைபதைப்பு அடைவதாலோ, புகார் கூறுவதாலோ பயனில்லை. நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்தே தீரும்.''

"கவனமாக இருந்தால், கவலைப்பட வேண்டிய நிலை உண்டாகாது என்று கேள்விப்பட்டது இல்லையா?''

"நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.''

மனைவியும் கணவரும் அறையில் தனியாக இருந்தபோது, ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டிருந்தார்கள். வயதான தம்பதிகள்.....

துணைக்கு அருகில் பிள்ளைகள் இல்லை.

"குருவாயூரப்பனின் பால் பாயாசத்தைச் சாப்பிடுவதால், யாருக்கும் நீரிழிவு நோய் வந்ததாக கேள்விப்பட்டதே இல்லை என்று நீ என்னிடம் கூறி, நம்ப வைத்தாய் அல்லவா? எத்தனை குவளை பால் பாயாசத்தை நீ என்னைக் குடிக்க வைத்தாய்? திருமண விருந்தைச் சாப்பிடும்போது, வெண்ணெய்யையும் பழ அவியலையும் சாப்பிடக் கூடாது என்று நீ எப்போதாவது விலக்கியிருக்கியா? இப்போது எனக்கு நீ அறிவுரை சொல்றே... 

அன்பை வெளிப்படுத்துறே...

பதைபதைப்பு அடையுறே... குறை சொல்றே....''

"அரிசியைச் சாப்பிட்டு விட்டு, ஆசாரி பெண்ணைக் கடித்துவிட்டு, அதற்குப் பிறகும் நாய் குரைக்கிறது.''

அவள் அந்த பழைய பல்லவியை மீண்டும் திரும்ப கூறினாள்.

"அளவற்ற அன்பால் என்னை நோயாளியாக ஆக்கியவள் நீ. இப்போது நான் தனியாக அமர்ந்து ஒவ்வொன்றையும் நினைத்து வேதனைப்படுகிறேன்.வழி தெரியாத பிரேதத்தைப் போல...காட்டுக் கிளி சத்தம் எழுப்புவதைப் போல...'' பதைபதைப்பு நிறைந்த தேன்முட்களும், மனக்குறைகள் நிறைந்த கூர்மையான முட்களும் ஒன்றோடொன்று பிணைந்த....

வயதான தம்பதிகளின் ஆறுதல் வார்த்தைகள் சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைத்தன.

அவருடைய கை விரல்கள் அவரே அறியாமல், மனைவியின் நீல நரம்புகள் எழுந்து நிற்கும் கையைத் தழுவின.... உணர்ச்சிவசப்பட்டு.....

 

uday010925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe