சமீபகாலமாக விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. இதற்கு ஜாதகம் காரணமா; ஜாதகர் காரணமா? என்று பட்டிமன்றம் வைத்து விவாதிக்கும் வகையில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
சுய ஜாதகரீதியான காரணம் ஒரு பக்கம் இருந்தாலும் சுய சிந்தனை மனிதனுக்கு மிக அவசியம். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் உறுதுணையாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
ஒரு 28 வயது பெண் சமீபமாக என்னிடம் ஜாதகம் பார்த்தார்.
தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆனால் கணவரை பிடிக்கவில்லை. கணவர் விவாகரத்து தர மறுக்கிறார் என்று கூறுகிறார். என் மனதிற்கு பிடித்தார்போல் நடந்துகொள்ளும் ஒரு நபரை எனக்குப் பிடிக்கிறது. என் கணவர் விவாகரத்து தரவில்லை என்றால் நாங்கள் வேறு மாநிலத்திற்கு சென்று தம்பதிகளாக வாழ விரும்புகிறோம். கணவர் விவாகரத்து தருவாரா அல்லது நான் எனது காதலருடன் வேறு மாநிலம் சென்று வசிக்கலாமா என்று பகிரங்கமாக கேட்கிறார்.
ஒரு 45 வயது பெண்மணி 25 வருடங்களாக எனக்கு கணவருடன் வாழ முடியவில்லை. 16 வயதில் பெற்றோர்களையும் குடும்பத்தையும் எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டேன். அதன் பலன்களை நன்றாக அனுபவித்துவிட்டேன். எனக்கு 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு குடும்ப நபருடன் நட்பு உள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். ஒர
சமீபகாலமாக விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. இதற்கு ஜாதகம் காரணமா; ஜாதகர் காரணமா? என்று பட்டிமன்றம் வைத்து விவாதிக்கும் வகையில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
சுய ஜாதகரீதியான காரணம் ஒரு பக்கம் இருந்தாலும் சுய சிந்தனை மனிதனுக்கு மிக அவசியம். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் உறுதுணையாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
ஒரு 28 வயது பெண் சமீபமாக என்னிடம் ஜாதகம் பார்த்தார்.
தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆனால் கணவரை பிடிக்கவில்லை. கணவர் விவாகரத்து தர மறுக்கிறார் என்று கூறுகிறார். என் மனதிற்கு பிடித்தார்போல் நடந்துகொள்ளும் ஒரு நபரை எனக்குப் பிடிக்கிறது. என் கணவர் விவாகரத்து தரவில்லை என்றால் நாங்கள் வேறு மாநிலத்திற்கு சென்று தம்பதிகளாக வாழ விரும்புகிறோம். கணவர் விவாகரத்து தருவாரா அல்லது நான் எனது காதலருடன் வேறு மாநிலம் சென்று வசிக்கலாமா என்று பகிரங்கமாக கேட்கிறார்.
ஒரு 45 வயது பெண்மணி 25 வருடங்களாக எனக்கு கணவருடன் வாழ முடியவில்லை. 16 வயதில் பெற்றோர்களையும் குடும்பத்தையும் எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டேன். அதன் பலன்களை நன்றாக அனுபவித்துவிட்டேன். எனக்கு 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு குடும்ப நபருடன் நட்பு உள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் முடிந்துவிட்டது. அடுத்த பெண்ணிற்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அந்த திருமணம் முடித்தவுடன் நான் மறுவிவாகம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்கிறார். இது எல்லாம் எனக்கு மன வருத்தத்தை தரவில்லை. அவர் விரும்பும் நபரின் வயது 35. அந்த நபரும் இவரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். கடந்த வாரத்தில் அதிக வயதுள்ள பெண் குறைந்த வயது ஆணுடன் வாழ விரும்பும் ஜாதகங்கள் மூன்று பார்த்துவிட்டேன். உலகம் எங்கே செல்கிறது.
மற்றொரு விசித்திரமான தம்பதிகளையும் சமீபத்தில் சந்தித்தேன். ஒரு தம்பதிகள் தங்களது எதிர்கால வாழ்க்கை எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள நேரில் வந்தார்கள். இந்த இரு ஜாதகத்திற்கும் எதிர்காலம் எப்படி உள்ளது என்று கேட்டார்கள். வந்து உட்கார்ந்தது முதல் நான் ஜாதகத்தை கணிக்க எடுத்துக்கொண்ட அந்த 15 நிமிட நேர காலம் வரை இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஆனந்த மாக பேசினார்கள்.
ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள காதல் உணர்வு அதிகமாக வெளிபட்டது. அவர்கள் எதிரில் உட்கார்ந்து ஜாதகம் பார்க்க எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. உண்மையில் இவ்வளவு நெருக்கமான தம்பதிகளை பார்ப்பது கடினமே. இதில் இன்னும் ஒரு ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நான் அவர்களை தம்பதிகளாக பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆணின் வயது 35 பெண்ணின் வயது 31. இந்த இரு ஜாதகமும் சேர்ந்து வாழாது என்று நான் ஆணித்தரமாக கூறினேன்.
விவாகரத்து வழக்கு நடக்கும். ஆனால் விவாகரத்து ஆகாது. விவாகரத்து நடந்தாலும் தம்பதிகளுக்குள் பேச்சுவார்த்தை இருக்கும் என்று பலன் கூறினேன். ஆனால் தம்பதிகள் காலம் முழுவதும் பிரிந்தே வாழ்வார்கள் என்று கூறினேன்.
அதற்கு அந்த தம்பதிகள் நாங்கள் இருவரும் ஜோடியாக வந்து உங்கள்முன் உட்கார்ந்திருக்கிறோம். எங்களைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்ல உங்களுக்கு எப்படி மனது வந்தது என்று ஆண் கேட்டார்கள். உங்களைப் பற்றி நாங்கள் நிறைய கேள்விப்பட்டு தான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தோம் என்றும் கூறினார்கள். எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனாலும் நான் கூறிய பலனில் இருந்து மாறவில்லை. என் கணிப்பு இதுவாகவே உள்ளது. இதுவரைக்கும் உங்களுக்குள் பிரிவினை வரவில்லை என்றால் இனிமேல் பிரிவினை வரப்போகிறது என்று கூறினேன். அதற்கு அந்தப் பெண் கூறினார் எங்கள் இருவருக்கும் ஈகோ அதிகமாக உள்ளது. ஆனால் கடந்த ஏழு வருடமாக எனது கணவர் தனது தாயாருடன் வசிக்கிறார். நான் எனது தாயாருடன் வசிக்கிறேன்.
தற்போது விவாகரத்து வழக்கு பதிவு செய்து உள்ளேன். வாழ்க்கைக்கு துணை என்ற ஒரு உறவு வேண்டும். நான் விவாகரத்து கொடுத்தால் மட்டுமே என் கணவருக்கு மறுவிவாகம் நடக்கும் என்று கூறினார்.
இரண்டு நாட்களுக்குமேல் எங்களால் பார்க்காமல் இருக்க முடியவில்லை பேசாமல் இருக்க முடியவில்லை. அவர் தினமும் என்னை பார்க்க என்னுடன் பேச எனது நிறுவனத்திற்கு ஒரு இரண்டு மணி நேரம் வருவார். அவர் வர முடியவில்லை என்றால் அவருடைய தொழில் நிறுவனத்திற்கு நான் சென்றுவிடுவேன் என்றார்.
நானும் என் கணவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை. பிரிந்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒரே வீட்டில் இருந்தால் இருவருக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவால் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது என்று கூறினார்கள். இதுவே அவர்களின் தலைவிதி. விதியை யாராலும் வெல்ல முடியாது. அவர்கள் பிரிந்து வாழ்வார்கள். ஆனால் விவாகரத்துவரை செல்ல மாட்டார்கள். விவாகரத்து ஆனாலும் மறுவிவாகம் நடக்காது. இந்த இருவரின் ஜாதகத்தையும் பதிவுசெய்து அதற்குள்ள பலனும் இந்த கட்டுரையில் கூறுவேன். நான் அவர்கள் தம்பதிகள் என்று தெரிந்து நீங்கள் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ்வீர்கள் என்று கூறியிருந்தால் எனது கணிப்பு தவறு என்று என்னை ஏளனம் செய்திருப்பார்கள்.
எனக்கு சரியான கணிப்பினை உணர்த்திய பிரபஞ்ச சக்திக்கும் ஜோதிடத்திற்கும் என்றும் நான் நன்றியுடன் இருப்பேன். நமது "பாலஜோதிட'த்தில் இருதார யோகம் பற்றி நான் எழுதிய கட்டுரை வெளிவந்துள் ளது. இது நமது வாசகர்கள் அனைவருக்கும் தெரியும். மீண்டும் புதிய பொலிவுடன் புதிய கருத்துக்களுடன் புதிய ஜோதிட விதிமுறைகளுடன் இந்த கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
திருமணமாகிய உடன் குறுகிய காலத்தில் பிரிவினை என்பது கருத்து வேறுபாடு மற்றும் ஈகோ காரணத்தினால் வருகிறது. ஆனால் பல வருடங்கள் வாழ்ந்தும் விவாகரத்தினை விரும்பும் ஜாதகங்களை பார்க்கும்போது மனம் ஏற்றுக்கொள்ள விரும்ப வில்லை.
இதில் பருவ வயதுள்ள குழந்தைகளின் வாழ்க்கைதான் கேள்விக்குறியாக உள்ளது. எனது அனுபவத்தில் கீழ்காணும் விதிமுறைகள் திருமண பிரிவினைக்கு மிகவும் காரணமாக உள்ளது.
ஒரு ஜாதகத்தில் ஏழாம் இடமே களத்திரத்தை பற்றி கூறும் ஸ்தானமாகும். ஏழாம் அதிபதியின் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருக்கவேண்டும் அப்படி இல்லாதவர்கள் கருத்து வேறுபாட்டால் காலம் தாழ்ந்தாலும் விவாகரத்தை நோக்கி செல்கிறார்கள். அல்லது பிரிந்து வாழ்கிறார்கள். 60 வயதானாலும் எனக்கு கணவர் வேண்டாம், எனக்கு மனைவி வேண்டாம் என்று சொல்பவர்களே அதிகமாக உள்ளார்கள்.
லக்னத்திற்கு அல்லது லக்னாதிபதிக்கு ஏழாம் அதிபதியுடன் சம்பந்தம் இருந்தால் எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவினையை நோக்கி செல்வதில்லை. லக்னத்திற்கு அல்லது லக்னாதிபதிக்கு ஏழாம் அதிபதியுடன் தொடர்பு இல்லாமல் வாழ்பவர்கள் நிச்சயம் விவாகரத்தாகிப் பிரிவினையை சந்திக்கிறார்கள் அல்லது பிரிந்தே வாழ்கிறார்கள்.
லக்னத்திற்கு ஏழாமிடம் திதி சூனிய பாதிப்பில் இருந்தால் அவர்கள் ஜாதகத்தில் எவ்வளவு ஒற்றுமை இருந்தாலும் எவ்வளவு பொருத்தம் இருந்தாலும் பிரிந்துவிடுகிறார்கள்.
இதுபோல் இன்னும் பல ஜோதிட விதிகள் உள்ளன.