Advertisment

ஜாதகத்தில் எத்தனை பொருத்தம் இருந்தாலும் பிரிவு ஏன்? - ஜோதிட அலசல் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி (சென்ற இதழ் தொடர்ச்சி...)

jathagam

ரு ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்களான  3, 6, 8, 12-ஆம் அதிபதிகள் 2, 7-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் வரும்போது வழக்குகள் பிரிவினைகள் ஏற்படுகிறது. ஜனனகால ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2-ஆமிடத்திற்கும், களத்திர ஸ்தானம் எனும் 7-ஆமிடத்திற்கு எத்தனை கிரகங்கள் சம்பந்தம் உள்ளதோ அத்தனை நபர்கள் திருமண வாழ்வில் சம்பந்தம் பெறுவார்கள்.

Advertisment

3, 7-ஆம் பாவக அதிபதிகள் சம்பந்தம் இருந்தால் காதல் திருமணம் அல்லது பதிவு திருமணம் நடக்கும். இந்த அமைப்பு உள்ள தம்பதிகள் மனம் ஒத்து- அதாவது மியூச்சுவல் ஆக பிரிய முடிவு செய்கிறார்கள்.

Advertisment

6, 7-ஆம் பாவக அதிபதிகள் சம்பந்தம் இருந்தால் கடன், நோய் காரணத்தால் தம்பதிகள் எதிரிகளாக மாறுகிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு உருவாகி பிரிவினை ஏற்படுகிறது. அதாவது கணவருக்கு நிலையற்ற உத்தியோகமிருந்தால் கடன் சுமை அதிகமாகும். கணவருக்கு முன்னேற்றம் இல்லை என்பதை நினைத்து மனைவிக்கு நோய் வந்துவிடுகிறது. 

7, 8-ஆம் அதிபதிகள் சம்பந்தம் வரும் போது கணவன் அல்லது மனைவி இவர்களில் யாராவது ஒருவர் திருமணத்தின் போது நல்ல பொருளாதார வசதியுடன் இருக்கிறார்கள். 

அதனால் வாழ்க்கைத் துணையை தனக்கு அடிமையாக நடத்துகிறார்கள். இதனால் தம்பதிகளிடம் கருத்து ஒற்றுமை குறைகிறது. இன்னும் சில இடங்களில் வரதட்சணை கொடுமை அதிகரிக்கிறது. இதற்கு முன்னு தாரணமாக திருப்பூர் ரிதன்யா அவர்களின் வாழ்க்கையாகும்.

ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்க்கை, பெண்கள் ஜாதகத்தில் செ

ரு ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்களான  3, 6, 8, 12-ஆம் அதிபதிகள் 2, 7-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் வரும்போது வழக்குகள் பிரிவினைகள் ஏற்படுகிறது. ஜனனகால ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2-ஆமிடத்திற்கும், களத்திர ஸ்தானம் எனும் 7-ஆமிடத்திற்கு எத்தனை கிரகங்கள் சம்பந்தம் உள்ளதோ அத்தனை நபர்கள் திருமண வாழ்வில் சம்பந்தம் பெறுவார்கள்.

Advertisment

3, 7-ஆம் பாவக அதிபதிகள் சம்பந்தம் இருந்தால் காதல் திருமணம் அல்லது பதிவு திருமணம் நடக்கும். இந்த அமைப்பு உள்ள தம்பதிகள் மனம் ஒத்து- அதாவது மியூச்சுவல் ஆக பிரிய முடிவு செய்கிறார்கள்.

Advertisment

6, 7-ஆம் பாவக அதிபதிகள் சம்பந்தம் இருந்தால் கடன், நோய் காரணத்தால் தம்பதிகள் எதிரிகளாக மாறுகிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு உருவாகி பிரிவினை ஏற்படுகிறது. அதாவது கணவருக்கு நிலையற்ற உத்தியோகமிருந்தால் கடன் சுமை அதிகமாகும். கணவருக்கு முன்னேற்றம் இல்லை என்பதை நினைத்து மனைவிக்கு நோய் வந்துவிடுகிறது. 

7, 8-ஆம் அதிபதிகள் சம்பந்தம் வரும் போது கணவன் அல்லது மனைவி இவர்களில் யாராவது ஒருவர் திருமணத்தின் போது நல்ல பொருளாதார வசதியுடன் இருக்கிறார்கள். 

அதனால் வாழ்க்கைத் துணையை தனக்கு அடிமையாக நடத்துகிறார்கள். இதனால் தம்பதிகளிடம் கருத்து ஒற்றுமை குறைகிறது. இன்னும் சில இடங்களில் வரதட்சணை கொடுமை அதிகரிக்கிறது. இதற்கு முன்னு தாரணமாக திருப்பூர் ரிதன்யா அவர்களின் வாழ்க்கையாகும்.

ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்க்கை, பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய், கேது சம்பந்தம் இருந்தால் முதல் திருமணத்தில் தேவையற்ற வம்பு, வழக்கு அல்லது பிரிவினையை ஏற்படுத்துகிறது.  இரு ஜாதகக்கூட்டு விளைவு அடிப்படையில் பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய்க்கு ஆண் ஜாதகத்திலுள்ள சுக்கிரனுக்கும் சம்பந்தமிருந்தாலும் ஆண் ஜாதகத்திலுள்ள சுக்கிரனுக்கு பெண் ஜாதகத்திலுள்ள செவ்வாய்க்கும் சம்பந்தமிருந்தால் கருத்து வேறுபாடு இருந்தாலும்  பிரிவினைகள் ஏற்படாது.

காலபுருஷ தத்துவப்படி காலபுருஷ ஏழாம் இடமான துலா ராசியில் எந்த கிரகம் நின்றாலும் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை குறைகிறது.

குறிப்பாக சுவாதி நட்சத்திர சாரத்தில் ஏதேனும் கிரகம் நின்றால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை மன உளைச்சலை தருகிறது.

7, 9, 11-ஆம் பாவகத் தொடர்பு வலுவான தார தோஷமாகும். சிலர் குடும்பத்தில் இருந்துகொண்டு ஒரு மறைவு வாழ்க்கையையும் நடத்துகிறார்கள். சிலருக்கு திருமணத்திற்குமுன்பு ஒரு தவறான களவியல் வாழ்க்கை உண்டு

7-ஆம் அதிபதி 2-ல் நின்று பாவ கிரக சம்பந்தம் பெற்றால் வலுவான தார தோஷம் ஆகும்.

2, 7-ல் நீச அல்லது வக்ர கிரகம் நின்றால் முதல் திருமணத்தில்  பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்தால் பெரிய பிரச்சினை வராது.

மரபணு ஜோதிட விதியில் பூசம், ஆயில்யம், பூரட்டாதி நட்சத்திரங்களில் ஏதேனும் கிரகம் என்றால் அந்த ஜாதகர் குடும்பத்தில் நிச்சயம் ஒரு விவாகரத்தானவர் இருப்பார். அல்லது அவர்களின் வாரிசுகள் விவாகரத்தை சந்திப்பார்கள்.

திருமணப் பொருத்தத்தின்போது  6, 8, 12-ஆமிடங்கள் சம்பந்தப்பட்ட தசை புக்தி நடந்தால் அம்சத்தில் ஏழாம் அதிபதியின் நிலைக்கு ஏற்ப திருமணத்தை நடத்தலாம். 

அல்லது 6, 8, 12-ஆம் அதிபதிகளின் நட்சத்திர சாரம் பெற்ற கிரகம் நல்ல நிலையில் இருந்தாலும் திருமண வாழ்க்கை பிரிவினை வராது.

அதேபோல் தம்பதிகளில் ஒருவருக்கு சாதகமான தசை நடந்தாலும் மற்றவருக்கு சாதகமற்ற தசை நடந்தாலும் கருத்து வேறுபாடு பிரிவினைவரை கொண்டு செல்லாது.

7, 12-ஆம் பாவகங்கள் சம்பந்தம் பெற்றால் எளிதில் திருமணம் நடக்காது. அல்லது தம்பதிகள் தொழில், உத்தியோகரீதியாக பிரிந்து வாழ்கிறார்கள். மனைவி உள்நாட்டிலும் கணவர் வெளிநாட்டிலும் வாழ்பவர் களின் ஜாதகத்தில் இந்த கிரக அமைப்பு நிச்சயம் இருக்கும்.

ரிஷப மற்றும் விருச்சிக லக்னத்திற்கு ஏழாம் அதிபதியே 12-ஆம் அதிபதியாக வருவார்கள். ரிஷபம், "விருச்சிகமும் சம சப்தம ராசி லக்னமாக இருப்பது தம்பதிகளுக்குள் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு பிரிவினையை உண்டாக்கும்.

சுக்கிரன் சந்திரன் சேர்க்கை மாமியார்- மருமகள் கொடுமையால் பிரியும் குடும்பமாகும். 

7, 11-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.

7-ஆம் அதிபதி பலம் குறைந்து 11-ஆம் அதிபதி வலுப்பெறும் போது வெகு சுலபமாக மறு திருமணத்திற்கு அழைத்துச் செல்லும். 

2, 7-ஆம் அதிபதிகள் 11-ஆம் பாவத்தோடு சம்பந்தம் பெறுதல், 11-ஆம் அதிபதி 2, 7-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுவது, பொதுவாக 7-ஆம் அதிபதி அல்லது 7-ல் நின்ற கிரகம் புதன், ராகு, கேதுக்களின் நட்சத்திர சாரங்களைப் பெறக்கூடாது. இதில் புதன் இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம் என்பதால் இரண்டாவது வாழ்க் கையை ஏற்படுத்தும். குரு, செவ்வாய், சூரியன் உடைபட்ட நட்சத்திரங்கள். இவற்றின் நான்கு பாதங்களும் இரண்டு ராசிகளுக்கு சம்பந்தம் பெறுவதால் திருமண வாழ்க்கையும் உடையும் வாய்ப்பு அதிகம். 

லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சூனியமாகும் திதியில் பிறந்தவர்களை  திருமணம் செய்தால் திருமண வாழ்க்கையில் மன நிம்மதியுடன் வாழ முடிவதில்லை. கீழே கொடுக்கப்பட்ட லக்னத்தில் பிறந்தவர்கள் அதற்கு நேர் எதிரே கொடுக்கப்பட்ட திதியில் பிறந்தவர்களை திருமணம் செய்வதை தவிர்த்தால் திருமணம் வாழ்க்கை பாதிக்காது. உதாரணமாக மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் துலா லக்னத்தில் சூனியமாகும். பிரதமை, துவாதசி திதியில் பிறந்தவர்களை திருமணம் செய்யக்கூடாது. லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சூனியமாகும் திதியில் பிறந்தவர்களை திருமணம் செய்யும்போது ஊர் உலகத்திற்காக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் பல வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள்.

லக்னம்-  திதி

மேஷம்- பிரதமை, துவாதசி.

ரிஷபம்- தசமி.

மிதுனம்- துவிதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி.

கடகம்- திருதியை, துவாதசி, பிரதமை.

சிம்மம்- சதுர்த்தி.

கன்னி- துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி.

துலாம்- சஷ்டி.

விருச்சிகம்- சதுர்த்தி, திரியோதசி.

தனுசு- பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி.

மகரம்- சப்தமி. 

கும்பம்- திருதியை, சஷ்டி, நவமி, திரயோதசி.

மீனம்- பஞ்சமி, கன்னி, சதுர்த்தசி.

ஆண் ஜாதகத்தில் களத்திரகார கிரகமான சுக்கிரனையும், பெண் ஜாதகத்தின் களத்திரகாரக கிரகமான செவ்வாயும் சூரியனால் அஸ்தமனப்படுத்தப்பட்டால்  திருமணம் காலதாமதமாக நடக்கும். அல்லது திருமணத்திற்குப்பிறகு தம்பதிகளுக்குள் நெருக்கம் இருக்காது அல்லது குழந்தை பிறப்பில் தடை இருக்கும்.

களத்திரகாரக கிரகங்கள் பலவீனமடைவதால்  சிலருக்கு மறுமணம் நடக்கும்.

திருமணம் தொடர்பான பாவங்களான 1, 2, 7, 8-ஆமிடத்துடன் சம்பந்தம் பெரும் ராகு- கேதுக்கள் திருமணத்தடையைத் தருவார்களா அல்லது திருமணத்திற்குப்பிறகு பிரிவினையைத் தருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அனுபவத்தில் ராகு- கேதுக்கள் பிரிவினையை ஊக்குவிக்கும் கிரகங்களாகும். திருமணத்தடையை விட மன வாழ்க்கை பிரிவிûயை அதிகம் தருகிறார்கள்.

நானும் இந்த பாவங்களுடன் சம்பந்தம் பெறும் ராகு- கேதுகள் திருமணத்தடையை ஏற்படுத்துவதுடன் திருமணப் பிரிவினையும் தருகிறது என்று நம்பினேன். இதில் ஒரு 30 சதவிகிதம் மட்டுமே உண்மை உள்ளது. 1, 2, 7, 8-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் ராகு- கேதுக்களும், சுக்கிரன் செவ்வாயுடன் சம்பந்தம் பெறும் ராகு கேதுக்களும் பிரிவினையைத் தரும்.

அல்லது லக்னத்திற்கு 6, 8, 12-ஆம் அதிபதியின் சாரத்தில் நிற்கும் ராகு- கேதுக்களின் தசாபுக்தி காலங்களில் திருமணப் பிரிவினையை உண்டாக்குகிறது. ராகு- கேதுக்கள் 1, 2, 7, 8-ஆம் பாவகங் களுடன் சம்பந்த பெறாமல் வேறு எந்த கட்டத்தில் நின்று தசை நடத்தினாலும்  விவாகரத்து வழக்கு ஏற்படுகிறது.

-ஜோதிட அலசல் வரும்  இதழிலும் தொடரும்...

செல்: 98652 20406

bala111025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe