Advertisment

புதையல் யோகம் எனும் நிஷ்கல யோகம் யாருக்குக் கிடைக்கும்? - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

yogam

புதையல் என்பது பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம், வெள்ளி, ரத்தின கற்கள், உலோகங்கள் போன்ற விலை உயர்ந்த, மதிப்புமிகுந்த பொருட்களாகும். சமீபகாலமாக புதையல் சார்ந்த அதிர்ஷ்டம் சார்ந்த எண்ணங்கள் சமுதாயத்தில் அதிகமாக உலாவருகிறது.

Advertisment

பொதுவாக கோட்சாரத்தில் எட்டாம் இடங்களில் ராகு, குரு, சனி போன்ற கிரகங்கள் சஞ்சரிக்கும்போது வெகு சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். அந்த அதிர்ஷ்ட பலன்களை ஜாதகர் அடையும் அமைப்பு இருக்கிறதா என்பது அவருடைய ஜாதகமும் தசாபுக்தியே நிர்ணயிக்கிறது. இதுபோல் எட்டாமிடம் பலம்பெறும் காலத்தில் ராசிபலன் பக்கத்தில் அதிர்ஷ்ட பணம், பொருள் புதையல் கிடைக்க வாய்ப்புள்ளது என்று எழுதுவோம். சில மாதங்களுக்குமுன்பு ராசிபலன் பகுதியில் லாட்டரி, திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று ஒரு ராசிக்கு பலன் எழுதி இருந்தேன். அந்த ராசியை சேர்ந்த ஒரு முப்பதுக்கு மேற்பட்ட நபர்கள் தனது சொத்தில் புதையல் இருக்கிறதா, தனக்கு லாட்டரி பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று ஜாதகத்தை அனுப்பி பலன் கேட்டார்கள்.

Advertisment

புதையல் யோகம் என்பதை நிஷ்கல யோகம் என்றும் கூறலாம்.

ஒருவருக்கு புதையல் கிட

ஒருவருக்கு புதையல் கிடைக்கும் வேண்டுமென்றால் அவருக்கு  சொத்து இருக்க வேண்டும். அதேபோல் பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்படும் எந்த பொருளாக இருந்தாலும் அது அரசாங்கத்திற்கே சொந்தம் என்று சட்டமும் உண்டு என்பது நாம் அறிந்ததே. 

விபரீத ராஜயோகத்தை கொடுப்பதில் அஷ்டமாதிபதிக்கு இணையாக வேறு எந்த கிரகமும் இருக்க முடியாது.

அஷ்டமாதிபதியும் அஷ்டம ஸ்தானத்தில் நின்ற கிரகமும் ஒருவருக்கு நல்ல பலனை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு முன் நிச்சயமாக ஒரு விபரீதத்தை ஏற்படுத்தும். அல்லது அதிர்ஷ்டம் கிடைத்ததற்கு பிறகு அதை பயன்படுத்த முடியாமல் வில்லங்கம், சட்ட சிக்கல் இருக்கும். எது எப்படி இருந்தால் என்ன எனக்கு புதையல் யோகம் உள்ளதா என்பதுதான் சமீபத்திய பலரின்  எண்ணங்களாக உள்ளது.

ஒரு நான்கு ஆண்டுகளுக்குமுன்பு என்னை சந்தித்த "பால ஜோதிட' வாசகர் ஒருவர் தான் மிகுந்த வறிய நிலையில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் எப்போதாவது வசந்தம் வருமா என்று கேட்டார்.

உங்களால் உழைத்துப் பெரிய பணக்காரனாகவும் அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இல்லை. ஆனால் உங்களுக்கு பெரிய பூர்வீக சொத்து இருப்பது போல் காட்டுகிறது என்று கூறினேன்.  பாட்டன் சொத்து இருக்கிறது என்று எனது அப்பா கூறியுள்ளார்.  ஆனால் அதை நான் அறிந்துகொள்ள இதுவரை முயன்றது இல்லை என்று சொன் னார். அதை கண்டுபிடித்து உரிய முறையில் உங்களுக்கு சொந்தமாக்கும் முயற்சி செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. சில மாதங்களுக்குமுன்பு அந்த வாசகர் நம்மை மீண்டும் சந்தித்தார். சில உறவுகளின் உதவி யோடு தனது பாட்டன் சொத்தை கண்டுபிடித்து அதற்கான ஆவணங்களை முறைப்படுத்தி அதை விற்க முயற்சி செய்தபோது அவருக்கு ஐந்து கோடி ரூபாய் பணம் கிடைத்தது. ஆனால் உரிய வயதில் வாழ்க்கையில் எந்த இன்பங்களையும் அனுபவிக்காமல் அடிப்படை தேவைக்குகூட போராடிய காலங்களில் கிடைக்காத பணம் வயது முதிர்ந்த காலத்தில் கிடைத்ததால் பெரிய நற்பலன்களை அடைய முடியவில்லை. நோயின் காரணமாக நல்ல உணவுகூட சாப்பிட முடியவில்லை. தான் அனுபவிக்காததை தன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் அனுபவிப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்றார். பெற்றோர்கள். பெரியோர்கள் விட்டுச் சென்ற ஒரு பொருளினால் பெரும் பணம் கிடைப்பதும்,  புதையல் யோகம் என்ற நிஷ்கல யோகமாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல் மற்றொரு வாடிக்கை யாளருக்கு பெரிய வகையில் வாழ்வாதாரம் உயரப் போகிறது என்று கூறியிருந்தேன். அவர் சென்ற வாரம் எனக்கு போன் செய்து தாங்கள் கூறியதுபோல் எனக்கு பெரிய பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். அவரின் ஜாதகத்தை மீண்டும் ஆய்வு செய்தபிறகு அவரிடம் தற்போது உங்களுடைய சொத்து மதிப்பு உயர்ந்திருக்க வேண்டும் என்றேன்.

அதற்கு அவர் ஆமாம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. சொத்துகளோட மதிப்பு, நகை மதிப்பு உயர்ந்ததாலும் இப்பொழுது நானும் கோடீஸ்வரர் பட்டியலில் சேரலாம் என்றார். ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் தேடிவரலாம். பூமியை பிளந்து தான் அதிர்ஷ்டத்தை எடுக்க வேண்டும் என்ற கணக்கு இல்லை.

தொழில்ரீதியான அதிர்ஷ்ட லாபமும் புதையல் யோகமே. முற்காலத்தில் நமது முன்னோர்கள் தங்களது விலை உயர்ந்த பொருட்களை பெட்டகங்களில் இட்டு பூமியில் மறைத்து வைத்திருந்தார்கள். அது பூமியை தோண்டும் சிலருக்கு கிடைத்தது அந்தக் காலம். தற்போது புதையல் என்பது மிக அரிதாகிவிட்டது என்பதால் அதைப் பற்றிய கற்பனை உணர்வை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவி செய்யும்.

புதையல் என்ற எண்ணம் ஒருவருக்கு வரவேண்டும் என்றால் 8, 11-ஆம் அதிபதிகள் பலம் பெற வேண்டும் அல்லது 8, 11-ஆம் அதிபதிகள் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருக்கவேண்டும். அதேபோல் அவருடைய ஜாதகத்தில் 2, 4, 8, 11-ஆம் பாவகம் சம்பந்தம் பெறவேண்டும். 

அதன் தசாபுக்தி நடப்பில் வந்தால் மட்டுமே அந்த புதையலை அடைய முடியும்.குரு மங்கள யோகம் இருப்பவர்களுக்கு புதையல் மேல் ஆர்வம் அதிகமாக இருக்கும். தனது சொத்தில் புதையல் இருப்பதுபோல் பகல் கனவு காண்பார்கள். இங்கே 12 லக்னத்திற்கும் எந்த கிரக அமைப்பு புதையல் ஆர்வத்தை தூண்டும் என்பதை கொடுத்திருக்கிறேன். இது ஒரு அறிந்து கொள்ளக்கூடிய தகவலாக மட்டுமே இருக்க வேண்டும். மற்றபடி புதையலுக்காக முயற்சிசெய்து வீண் வம்பு, வழக்கை வர வழைக்கக் கூடாது.

மேஷம்- சனி, செவ்வாய்.

ரிஷபம்- குரு.

மிதுனம்- சனி, செவ்வாய்.

கடகம்- சனி, சுக்கிரன்.

சிம்மம்- குரு, புதன்.

கன்னி- செவ்வாய், சந்திரன்

துலாம்- சுக்கிரன், சூரியன்.

விருச்சிகம்- புதன்.

தனுசு- சந்திரன், சுக்கிரன்.

மகரம்- சூரியன், செவ்வாய்.

கும்பம்- புதன், குரு.

மீனம்- சுக்கிரன், சனி.

நிற்கும் குதிரைக்கு மதிப்பு இல்லை. ஓடும் குதிரைக்கு மட்டுமே மதிப்பு. வெற்றியை நோக்கி ஓடுபவர்களுக்கு தோல்வி இல்லை. வெற்றி புதையலாக மாறும். புதையலை நோக்கி ஓடி காலத்தை நகர்த்துவதைவிட உழைப்பை நோக்கி ஓடினால் ஏராளமான தனவரவும் வாய்ப்புகளும் உண்டாகுவது உறுதி.கற்பனையில் புதையலை நம்பினால் வாழ்க்கை கெட்டுவிடும் என்பது முன்னோர்களின் அனுபவ உண்மை.

செல்: 98652 20406

bala070226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe