இன்றைய அவசர உலகில் ஒருவர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்கின்றபொழுது வண்டி, வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி பயணங்கள் மேற்கொள்கின்றபொழுது பெரும்பாலும் ஒரு நிம்மதியான பயணங்கள் ஏற்பட்டாலும் ஒருசிலருக்கு பயணங்களில் விபத்துக்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை அதன்மூலமாக ஏதாவது இழப்புகளை சந்திக்கக்கூடிய நிலையும், உடல்ரீதியாக பாதிப்புகளை எதிர் கொள்ளக்கூடிய சூழ்நிலையும் உண்டாகிறது. அதற்கும் ஜோதிடரீதியாக காரணங்களை பார்க்கின்றபொழுது அவர்கள் பிறக்கின்ற நேரத்தை பொருத்தும் நடக்கின்ற தசை புக்தியும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
நவகிரகங்களில் ரத்தக்காரகன் என வர்ணிக்கக்கூடிய கிரகம் செவ்வாய் ஆகும். செவ்வாய் ஒருவருக்கு ரத்த ஓட்டத்திற்கும், உட-ல் ஏற்படும் வெட்டுக் காயத்திற்கும், ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புக்கும் காரகனாகிறார். நவகிரகங்களில் சனிபகவான் ஒருவருக்கு ஆரோக்கியத்திற்கும், உடல் உறுப்புக்கும், உடல் உறுப்பில் ஏற்படக்கூடிய குறைபாடுக்கும் காரகனாக விளங்குகிறார்.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் செவ்வாய்- சனி சேர்க்கை பெறுவது அவ்வளவு சிறப்பு என கூறமுடியாது. அதுபோல சனி- செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதும் அவ்வளவு சிறப்பு என சொல்ல முடியாது.
செவ்வாய்க்கு 7-ல் சனி அமையப்பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், செவ்வாய்க்கு 4-ல் சனி அமையப்பெற்று செவ்வாய் தனது 4-ஆவது பார்வையாக சனியை பார்த்து, சனி தனது 10-ஆவது பார்வையாக செவ்வாயை பார்ப்பதும் அவ்வளவு சிறப்பு என கூறமுடியாது.
ஒருவர் ஜாதகத்தில் சனி- செவ்வாய் சேர்க்கை, சனி- செவ்வாய் தொடர்பு லக்ன பாவத்திற்கு 8-ஆம் வீட்டில் இருப்பதும், 8-ஆம் அதிபதி சேர்க்கைபெற்று சனி- செவ்வாய் அமைவதும் அவ்வளவு சிறப்பல்ல. 8-ல் அமையக்கூடிய ஒரு கிரகத்தை மற்றொரு கிரகம் பார்ப்பதும் அவ்வளவு சிறப்பு என கூறமுடியாது. இப்படிப்பட்ட அமைப்பு இருப்பவர்கள் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தோடும் பொறுமையோடும் செல்வது மிகமிக நல்லது. அதிலும் குறிப்பாக சனி- செவ்வாய் லக்ன பாவத்திற்கு 6, 8-ல் அமையப்பெற்று, 6, 8-ஆம் அதிபதி சேர்க்கை பெற்றாலும் இத்துடன் ராகு சேர்க்கை பெற்றாலும் அது அவ்வளவு சிறப்பு என கூற முடியாது.
ஒருவர் ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களில் இருவர் 6, 8-ல் அமையப்பெற்று அதன் தசை புக்தி நடைபெறுகின்றபொழுது விபத்துகளை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். 8-ஆம் வீட்டில் அதிக பாவ கிரகங்கள் அமையப்பெற்று அதன் தசை புக்தி நடைபெறுகின்ற காலங்களில் அசம்பாவிதம்மூலமாக விபத்துகளை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும்.
மிதுன லக்னத்திற்கு 8-ல் அமையப் பெறக்கூடிய செவ்வாய்- சூரியன் சேர்க்கை பெற்றிருந்தால் நெருப்பால் கண்டம், உஷ்ணத்தால் பாதிப்பு, இடி, மின்னல் போன்றவை மூலமாகக்கூட பாதிப்புகள் ஏற்படும்.
ஒருவருக்கு வாகன யோகத்தை குறிக்கக்கூடிய பாவம் 4-ஆம் பாவமாகும். 4-ஆம் அதிபதி சனி, செவ்வாய், ராகு சேர்க்கைபெற்று 8-ஆம் வீட்டில் அமையப்பெற்று இருந்தால் வாகனங்கள்மூலமாக கூட விபத்துகளை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும்.
காலபுருஷபடி 6, 8-ஆம் வீடு என வர்ணிக்கக்கூடிய கன்னி ராசி, விருச்சிக ராசிகளில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் இருவர் அமையப்பெற்று அதன் தசை புக்தி நடைபெற்றாலும் அவர்களுக்கு அந்த நேரங்களில் விபத்துகளை சந்திக்கக்கூடிய ஒரு அனுகூலமற்ற நிலை உண்டாகும்.
சனி, செவ்வாய், ராகுவுடன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருந்து, இந்த அமைப்பு 8-ல் இருந்தால் வாகனத்தின்மூலம் விபத்துகளையும், ஜலகாரகன் சந்திரன்- சனி, செவ்வாய், ராகு சேர்க்கைப்பெற்று 8-ல் அமையப்பெற்றால் நீரினால் கண்டத்தை சந்திக்கக்கூடிய ஒரு அமைப்புகளும் உண்டாகும்.
சந்திரன், சனி, ராகு, செவ்வாய் சேர்க்கை பெற்று 8-ல் இருந்தால் அவர்கள் ஜல சம்பந்தப்பட்ட பகுதிகள், நீச்சல் குளம், கடல் பகுதியில் செல்கின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது.
லக்னாதிபதி 8-ல் அமையப்பெற்று பாவ கிரக சேர்க்கையோடு இருந்தால் அதன் தசை புக்தி காலத்தில் வாகனங்களில் செல்கின்ற பொழுது கவனமாக இருக்கவேண்டும். பொதுவாக லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 6, 8-ஆம் வீட்டுகளில் அதிக பாவ கிரகம் இருந்து சுபர் பார்வையின்றி இருந்தால் அவர்கள் வாகனங்களில் செல்கின்ற பொழுது சற்று கவனத்தோடும் நிதானத்தோடும் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட அமைப்புகள் இருந்து செவ்வாய் தசையில் சனி அல்லது ராகு புக்தி நடந்தாலும் சனி தசையில் செவ்வாய் அல்லது ராகு புக்தி நடந்தாலும், ராகு தசையில் சனி அல்லது செவ்வாய் புக்தி நடந்தாலும் மிகவும் கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது.
செல்: 7200163001
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-08/murugu.balamurugan_3.jpg)
/nakkheeran/media/media_files/2025/10/24/money-2025-10-24-15-45-01.jpg)