ரசியலுக்கு கடகம், சிம்மம், மேஷ ராசிகள் முதல்தரமானதாகவும் மகரம், துலா ராசிகள் இரண்டாம் தரமாகவும். சூரியன், செவ்வாய், குரு, சனி கிரகங்களும் காரகம் வகிக்கும். சிம்ம ராசியும், ஜீவன ஸ்தானமும் வலுப்பெற வேண்டும்.

Advertisment

செவ்வாய் ஆட்சி, உச்சம் (அ) சுயசாரத்திலிருந்து குரு (அ) சந்திரனின் சேர்க்கை- பார்வை இருந்து, சூரியனும் வலுபெற்றால் அரசியலினால் உயர்வும், லாபமும் உண்டு.

Advertisment

சூரியனுக்கோ (அ) சந்திரனுக்கோ ஏழில் குரு வலு வுடன்- இருப்பின், அரசியலில் சிறப்பான இடமுண்டு.

லக்னாதிபதி, பாக்கியாதிபதி, ஜீவனஸ்தானாதிபதி (அ) இவர்கள் நின்ற நட்சத்திராதிபதிகள் மூவரும் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர் பிருந்தால், அரசியல் லாபம் உண்டு.

Advertisment

பொதுஜன தொடர்புக்கு, "சனி' காரகத்துவமுடைய வர் என்பதனால், பூரணமாக ஆய்வு செய்யப்படவேண்டும். சனி 2, 3, 5, 6, 7, 9, 10, 11-ஆமிடங்களில் வலுவுடன் இருப்பது நல்லது.

லக்னாதிபதி, பாபகிரக வீடுகளிலிருந்து, அந்த இடம் 3, 4, 6, 7, 10, 11-ஆமிடமாக இருப்பின் அரசியல் ஆதாயம் உண்டு.

இரண்டாமதிபதி மறைவு ஸ்தானங்களில் இல்லாமல், சந்திரன், சுக்கிரன் (அ) சாயா கிரகத்துடன் எவ்விதத்திலாவது தொடர்பில் இருந்தால் அரசியல் ஆதாயம் உண்டு.

லக்னாதிபதியும் ஆட்சிபெறுவது (அ) லக்னத்தில் திக்பலம் பெறுவது (அ) கேந்திரங்களில் இருப்பதுபோன்ற அமைப்பு இருந்தாலும், அரசியலினால் ஆதாயம் உண்டு.

லக்னாதிபதியும் ஐந்தாம் அதிபதியும் கெடாமல், எவ்விதத்திலாவது, தொடர்பிலிருந்து, இதிலும் ஐந்தாமதிபதி, 5, 9, 10, 11-ஆமிடங்களில் வலுவுடன் இருப்பின், அரசியலில் வெற்றி, ஆதாயம் உண்டு.

அரசியலில் உயர்வு, தாழ்வு காண, ஐந்தாமிட ஆய்வு அவசியம் தேவை. அரசியலில் வெற்றியைபெற, களத்திர ஸ்தானாதிபதி கெடவேண்டும்.

சூரியனுக்கு, சந்திரன் கேந்திரங்களிலிருந்து, ஜீவனஸ்தானத்தோடு, சூரியனுக்கு எவ்விதத்திலேனும் தொடர்பிருந்தால் அரசியல் ஆதாயம் உண்டு.

தர்மகர்மாதிபதிகள் ஒன்றுகூடி 1, 4, 5, 9, 10-ல் இருப்பது அரசியலுக்கு உகந்ததே. ஆனால், கண்டிப்பாக சப்தமத்தில் இருக்கக் கூடாது.

லக்னாதிபதி, 5, 9, 10-க்குடையவரின் சேர்க்கை (அ) சாரநிலையில் இருப்பினும், அரசியலினால் ஆதாயம் உண்டு.

ஆறாமிடத்தில் சூரியன் (அ) செவ்வாய் இருப்பதும், விரயஸ்தானத்தில் ராகு இருப்பதும்கூட, சில காலமாவது அரசியல் ஆதாயத்தை அடைய செய்யும்.

மக நட்சத்திரத்தில் பிறந்து, சந்திரன் மற்றும் சூரியன் இருவருக்கும், 6 (அ) 8-ல், கிரகம் இல்லாமலிருந்தால் அரசியலில் பிரகாசமான வாழ்வு உண்டு.

தேர்தல்

பத்தாமிடம் தேர்தலைக் குறிக்கும். அரசியலில் உயர்வு, தாழ்வு காண ஐந்தாமிட ஆய்வும் தேவை.

தேர்தலில் வெற்றிபெற, தர்மகர்மாதிபதிகள் கூடியிருந்து, (அ) ஆறாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் கூடியிருந்து (அ) மூன்றாம் அதிபதியும் நான்காம் அதிபதியும் கூடியிருந்து, இவர்களில் யார் ஒருவர் தசை புக்தி நடைபெற்றாலும், தேர்தலில் வெற்றிபெற முடியும். ஆனாலும், ஏழாம் வீட்டிற்கோ (அ) எட்டாம் வீட்டிற்கோ, எட்டுக்குடைய வன், தசாபுக்தி- அந்தரம் தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடாது. மேற்கூறியவற்றில் கோட்சாரமும் காண வேண்டும். எனினும், கோட்சாரத்தினால் மட்டுமே பாதிப்பு என்பது கிடையாது.

தேர்தலில் வெற்றிபெற தசாபுக்தி- அந்தர- கோட்சாரத்துடன், 1, 5, 9, 10- க்குடையவரின் தசாபுக்தியா என்பதனையும், இவர்களின் சாரம் பெற்றவர்களின் தசாபுக்தியா (அ) பாதகாதிபதியின் தசாபுக்தியா (அ) தசாநாதனுக்கு புக்திநாதன் வேதகனாக இருக்கிறாரா என்பதனையும் ஆய்வு செய்யவேண்டும்.

தேர்தல் நேரத்தில் சனி, ராகு, கேது, ராசிக்கு 3, 6, 11-ல் இருத்து, தசாபுக்தியும் சாதகமாக இருப்பின், தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புண்டு.